search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அய்யப்ப"

    • கோவில்களில் ஒலித்த சரணகோஷம்
    • கன்னி சாமிகளும் ஏராளமானோர் மாலை அணிந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி, நவ.17-

    சபரிமலைக்கு மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்திற்காக செல்லும் பக்தர்கள் கார்த்திகை மாதம் முதல் தேதி மாலை அணிந்து விரதம் தொடங்குவார்கள். கார்த்திகை 1-ம் தேதியான இன்று சபரி மலைக்கு செல் லும் பக்தர் கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கி னார்கள். இதையடுத்து முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடலில் பக்தர்கள் புனித நீராடி னார்கள். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் கடலில் புனித நீராடினார்கள். பின்னர் கடற்கரையில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார்கள். குருசாமிகள் மற்ற சாமி களுக்கு மாலை அணிவித்தனர். கன்னி சாமிகளும் ஏராளமானோர் மாலை அணிந்து கொண்டனர். சிறுமிகளும் தங்களது பெற்றோருடன் வந்து மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார் கள். சாமியே சரணம் அய்யப்பா என்ற பக்தி கோஷம் கடற்கரையில் எதிரொலித்தது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலிலும் இன்று காலை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அங்கும் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங் கினார்கள். கடற்க ரையில் புனித நீராடிய பக்தர்கள் பகவதி அம்மனை வழிபட்டு சென்றனர். நாகர்கோவில் நாகராஜா கோவிலிலும் இன்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கருப்பு மற்றும் நீல உடை அணிந்து அய்யப்ப பக்தர்கள் விரதத்தை தொடங்கினார்கள். குருசாமிகள் கன்னிசாமிகளுக்கு மாலை அணிவித்தனர். துளசி மாலை அணிந்து பக்தர்கள் விரதம் தொடங்கினார்கள். கன்னிசாமிகள் குருசாமிகள் காலை தொட்டு வணங்கி மாலை அணிந்து கொண்டனர். சுசீந்திரம் தாணுமாலயன் சாமி கோவில், பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், குமார கோவில், வேளிமலை முருகன் கோவில், பார்வதி புரம் அய்யப்பன் கோவில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கி உள்ளனர். அனைத்து கோவில்களிலும் சாமியே சரணம் அய்யப்பா என்ற பக்தி கோஷம் எதிரொலித்தது. மாலை அணிந்து விரதம் தொடங்கிய பக்தர்கள் தினமும் காலை, மாலை கோவில்களில் வழிபட்டு சபரிமலை கோவில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்திற்கு இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்வார்கள்.

    கார்த்திகை மாதம் தொடங்கியதையடுத்து குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். தினமும் கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு பூஜைகள் செய்யப்படும். கோவில்களில் அய்யப்ப பக்தர்கள் பஜனை பாடி வழிபடுவார்கள். பெண்கள் வீடுகளில் விளக்கேற்றியும், வழிபாடு நடத்துவார்கள்.

    • அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கியனர்
    • கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி

    அரியலூர்:

    கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி அரியலூர் மாவட்ட த்திலுள்ள பல்வேறு கோயிலி களில் ஆயிரம்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

    கேரளம் மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் மண்டல பூஜை, மகர விளக்குப் பூஜை நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது.

    இதையடுத்து கார்த்திகை மாதம் முதல் நாளில் இருந்து அரியலூர் பால பிரசன்ன விநாயகர் கோயிலில் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

    இதை போல் மாவட்டத்திலுள்ள பெரும்பாலன கோயிலில்களில் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். அவர்களுக்கு குருசாமிகள் சந்தன மாலை அணிவித்தனர்.கார்த்திகை மாதப்பிறப்பை முன்னிட்டு அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜைகளும், வழிபாடும் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • அய்யப்பன் கோவிலுக்கு, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கார்த்திகை மாதத்தில் மாலை அணிந்து, சாமியை தரிசனம் செய்ய செல்வார்கள்.
    • இதன்படி மேட்டூரில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் புது ஆடை அணிந்து, மாலை அணிந்தனர்.

    மேட்டூர்:

    கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலையில் அமைந்துள்ள அய்யப்பன் கோவிலுக்கு, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கார்த்திகை மாதத்தில் மாலை அணிந்து, விரதம் மேற்கொண்டு சாமியை தரிசனம் செய்ய செல்வார்கள். கடந்த 2 ஆண்டாக கொரோனா பெருந்தொற்று காரணமாக சபரி மலை கோவிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று தாக்கம் குறைந்துள்ளதால், கார்த்திகை மாத பிறப்பான இன்று, மேட்டூரில் ஏராளமான பக்தர்கள் அய்யப்பனுக்கு மாலை அணிந்து கொண்டனர். இதன்படி மேட்டூரில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் புது ஆடை அணிந்து, மாலை அணிந்தனர். இவர்கள் கடுமையான விரதம் மேற்கொண்டு உள்ளனர். அவரவர் வசதிக்கு ஏற்ப 48 நாட்கள் அல்லது 2 வாரம் என்ற கணக்கில் விரதத்தை மேற்கொள்வார்கள். விரத காலம் முடிந்ததும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு நேரில் சென்று தரிசனம் செய்ய உள்ளனர். 

    • ேசலம் மாவட்டத்தில் இருந்து சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏராளமானவர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து கோவிலுக்கு செல்வது வழக்கம்.
    • ஒருசில குருசாமிகள் தங்களது வீடுகளில் சிறப்பு பூஜை நடத்தி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

    சேலம்:

    சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் ேசலம் மாவட்டத்தில் இருந்து ஏராளமானவர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து கோவிலுக்கு செல்வது வழக்கம்.

    பக்தர்கள் விரதம் தொடங்கினர்

    அந்த வகையில் இன்று கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி சேலம் மாவட்டத்தில் வசிக்கும் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். பலமுறை விரதமிருந்து சபரிமலை சென்று வந்து பக்குவமடைந்த பழமலை ஐயப்பன்மார் ஒருவரைக் குருவாக ஏற்று திருவிளக்கு முன்பாகவோ, கோவில்களிலோ குருநா தரை வணங்கி அவர் திருக்கரங்களால் மாலை அணிந்து ெகாண்டனர். மாலை அணிந்து கொண்ட வுடன், குருநாதருக்குத் தங்களால் இயன்ற தட்சி ணையைக் கொடுத்து அடி வணங்கி ஆசிபெற பெற்றனர்.

    சில அய்யப்ப பக்தர்கள் தாய், தந்தையர்மூலமாகவோ, இறைவன் திருவடிகளில் வைத்து எடுக்கப்பெற்ற மாலை யினை அணிந்து கொண்ட னர். ஒருசில குருசாமிகள் தங்களது வீடுகளில் சிறப்பு பூஜை நடத்தி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

    சிறப்பு பூஜை

    கார்த்திகை மாத பிறப்பையொட்டி அய்யப்பன் கோவில்களில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சேலம் குரங்குச்சாவடியில் சாஸ்தா நகர் அய்யப்பன் கோவிலில் அதிகாலை முதல் அய்யப்ப பக்தர்கள் ஏராளமானோர் வரத்தொடங்கினர். அவர்கள் மூலவர் அய்யப்பனை வணங்கி கோவில் குருசாமி மூல மாக மாலை அணிந்து கொண்டனர். கோவிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து ஆராதனை நடந்தது. இதில் அய்யப்ப பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

    இதேபோல் சேலம் டவுன் ரெயில் நிலையம் அருகே உள்ள அய்யப்பன் கோவில், சேலம் சுகவனேசுவரர் கோவில், ராஜகணபதி கோவில், அம்மாப்பேட்டை செங்குந்தர் குமரகுரு சுப்பிரமணிய சாமி கோவில், ஊத்துமலை முருகன் கோவில் உள்பட மாநகரில் உள்ள பல்வேறு சிவன், விநாயகர், முருகன் மற்றும் அய்யப்பன் கோவில்களிலும் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது.

    காவிரி வேஷ்டி விற்பனை அமோகம்

    கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு இன்று சேலம் சின்னக்கடைவீதியில் உள்ள கடைகளில் துளசி மாலை, சந்தனம், ஜவ்வாது, இருமுடி பூஜை பொருட்களும், காவி, கறுப்பு நிற வேட்டி, சட்டை, துண்டுகள், பூ தேங்காய், பழம் உள்ளிட்டவைகளும் அதிக அளவில் விற்பனை ஆகின.

    • சேலத்தில் கார்த்திகை மாதம் நாளை ெதாடங்குவதால் சபரிமலை யாத்திரைக்குரிய பொருட்கள், விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
    • ஒரு மண்டலம் (48 நாள்) விரதம் இருந்து, சபரிமலைக்கு சென்று மகரஜோதி தரிசனம் செய்த பின், விரதத்தை முடிக்கின்றனர்.

    சேலம்:

    கார்த்திகை மாதம் நாளை ெதாடங்குவதால் சேலம் மாநகரில் உள்ள கடைகளில், சபரிமலை யாத்திரைக்குரிய பொருட்கள், விரதத்துக்கு தேவையான பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    கார்த்திகையில் தொடங்கி தை மாதம் வரை, தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள பக்தர்கள், துளசிமணி மாலை அணிந்து, சபரிமலைக்கு யாத்திரை செல்கின்றனர். கார்த்திகை மாதம் மாலை அணியும் பக்தர்கள், ஒரு மண்டலம் (48 நாள்) விரதம் இருந்து, சபரிமலைக்கு சென்று மகரஜோதி தரிசனம் செய்த பின், விரதத்தை முடிக்கின்றனர்.

    சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்காக, ஐப்பசி மாதத்தின் கடைசி வாரத்திலேயே காவி வேஷ்டிகள், துண்டுகள், துளசிமணி மாலைகள், பூஜை பொருட்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டது. வழக்கமான பூஜை பொருள் விற்பனை கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. சபரிமலை யாத்திரைக்கு மாலை அணியும் பக்தர்களுக்காக, சேலம் கந்தாஸ்ரமம், பெங்களூரு பைபாஸ் அய்யப்பா ஆஸ்ரமம் ஆகிய இடங்களிலும் மாலை அணிவதற்கு தேவையான பொருட்கள் விற்பனை செய்யும் ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    காவி வேஷ்டி, துண்டு, சட்டை அடங்கிய செட் (ஒன்று), ரூ.350 முதல் 650 வரையிலும், வேஷ்டி மட்டும் ரூ. 150 முதல் 285 வரையிலும், துண்டு மட்டும் ரூ. 60 முதல், 125 வரையில் விற்பனை செய்யப்படுகிறது. இருமுடி பை, ரூ. 100 முதல் 175 வரையிலும், பூஜை பொருட்கள் அடங்கிய பாக்கெட் ரூ. 100 முதல் 120 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. தேங்காய், பழம் போன்றவையும் விற்பனை செய்யப்படுகிறது.

    பூஜை பொருட்கள் விற்பனை செய்யும், சேலம் சின்னக்கடை வீதியை சேர்ந்த வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

    சபரிமலைக்கு வழக்கமாக செல்லும் பக்தர்களுக்கு மட்டுமின்றி, புதிதாக மாலை அணியும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் விற்பனை செய்கிறோம். கோவில் நிர்வாகங்களும், பூஜை பொருட்களை மொத்தமாக வாங்கிச் சென்று, பக்தர்களுக்கு வழங்கி வருகின்றன. துளசி, படிகம், வெட்டிவேர் என தனித்தனியாகவும், கலந்தும் தயாரித்த மாலைகளையும் விற்பனைக்கு வைத்துள்ளோம். இருமுடி கட்டும் பைகள், போர்வை, இருமுடி கட்ட தேவையான பூஜை பொருட்கள் அடங்கிய பாக்கெட் ஆகியவற்றையும் விற்பனை செய்கிறோம். நெய் உட்பட அனைத்து பொருட்களையும், தரமானதாகவும், வழங்கி இறை பணியில் எங்களையும் இணைத்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

    ×