என் மலர்
நீங்கள் தேடியது "புகார் எண்கள்"
- மதுரை மாநகராட்சி புகார் எண்கள் இன்று முதல் செயல்பட தொடங்கியது.
- இதன் வாயிலாக பொதுமக்கள் ஆன்லைன் மூலம் புகாரின் நிலையை அறிந்து கொள்ளலாம்.
மதுரை
மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் வசிக்கும் பொதுமக்கள், குறைகளை தெரிவிக்க ஏதுவாக, 24 மணி நேர கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்காக, புதிய அலைபேசி மற்றும் வாட்ஸ்-அப் எண் (7871661787) அறிவிக்கப்பட்டு இருந்தது. அது இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்து உள்ளது. எனவே பொதுமக்கள் தொலைபேசி மற்றும் மதுரை மாநகராட்சியின் www.mducorpicts.com இணையதளம் மூலம் புகார் தெரிவிக்கலாம். அப்போது சம்பந்தப்பட்டவருக்கு புகார் ஒப்புகை எண், குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும். இதன் வாயிலாக பொதுமக்கள் ஆன்லைன் மூலம் புகாரின் நிலையை அறிந்து கொள்ளலாம். இந்த தகவலை மதுரை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- கடந்த 2 தினங்களாக வட மாநில தொழிலாளர்கள் அதிகளவில் சொந்த ஊருக்கு செல்வதை காண முடிகிறது.
- வட மாநிலத்தவர்களுக்கு அச்சத்தை போக்கும் விதமாக அவர்களுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.
நீலாம்பூர்,
தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பரவின.
அந்த வீடியோக்கள் போலி என அரசு தெரிவித்துள்ளது. இதுபோன்ற தகவல்களை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 2 தினங்களாக வட மாநில தொழிலாளர்கள் அதிகளவில் சொந்த ஊருக்கு செல்வதை காண முடிகிறது. வட மாநிலத்த வர்களுக்கு பாது காப்பில்லை என்ற கோணத்தில் அவர்கள் தங்கள் ஊர்களுக்கு செல்வதாக தகவல்களும் வெளி யாகியது.
இதை யடுத்து கோவை போலீசார் வட மாநில த்தவர்களுக்கு அச்சத்தை போக்கும் விதமாக அவர்களுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக புறநகர் பகுதியான கருமத்த ம்பட்டி உட்கோட்ட காவல்துறை சார்பில் டி.எஸ்.பி. ஆனந்த் ஆரோக்கி யராஜ் மற்றும் சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன் ஆகியோர் அரசூரில் உள்ள மில் ஒன்றில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு அறிவுரை வழங்கினர்.
அப்போது வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டாலோ, அச்சப்படும் வகையில் ஏதேனும் சம்பவம் நடந்தாலோ உடனடியாக காவல்துறையினரை அணுக வேண்டும். அதற்கான பிரத்தியேக எண்களும் அறிவிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்படும். 24 மணி நேரமும் நீங்கள் போலீசாரை தொடர்பு கொள்ளலாம். அதற்கு ஏற்ற வகையில் போலீசார் பணியாற்றி வருகின்றனர்.
தொடர்ந்து வட மாநில தொழிலாளர்கள் தங்கி இருக்கும் பகுதிகள், வேலை செய்யும் தொழிற்சாலைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
- ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பு என புகார்.
- பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி 9 நாட்கள் வரை தொடர் விடுமுறை கிடைத்ததால் சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் தென்மாவட்டங்களில் உள்ள தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.
இந்நிலையில் விடுமுறை முடிந்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் நேற்று முதல் சென்னை உள்ளிட்ட தாங்கள் பணிபுரியும் இடங்களுக்கு திரும்பி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் சிரமமின்றி செல்வதற்காக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
மேலும் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான பஸ்கள் மற்றும் ரெயில்கள் முன்பதிவு செய்யப்பட்டு விட்டது. ரெயில்களில் காத்திருப்பு பட்டியலில் ஏராளமான பயணிகள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் அரசு பஸ்கள் மற்றும் சிறப்பு ரெயில்கள் முழுவதுமாக நிரம்பிவிட்டதால் பொதுமக்கள் தனியார் பஸ்களில் முன்பதிவு செய்து வருகின்றனர். இதனை பயன்படுத்தி தனியார் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் டிக்கெட் விலையை கடுமையாக உயர்த்தி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, 1800 425 6151, 044- 24749002, 044-26280445, 044-26281611 என்ற எண்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.
- அரசு பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
- அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திமுக அரசை குற்றம்சாட்டி வருகின்றன.
தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சமீபத்தில், கிருஷ்ணகிரி, திருச்சி, திருப்பூர் மாவட்டங்களில் பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இந்த விவகாரத்தில் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திமுக அரசை குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், பள்ளிகளில் பாலியல் சார்ந்த துன்புறுத்தல்கள், தொல்லை இருந்தால் தெரிவிக்க வேண்டிய புகார் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பாலியல் தொடர்பாக புகார்கள் பள்ளி மாணவ, மாணவிகள் 14417 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
தயக்கமின்றி புகார் தெரிவித்தால் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது துறைசார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிகல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், பள்ளிகளில் பாதுகாப்பற்ற சூழல், தேர்வு, உயர்கல்வி வழிகாட்டுதலுக்கும் இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.