என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ."
- வடக்கு ரத வீதியில் உள்ள மண்டகப்படியில் இருந்து மண்டகப்படிதாரர்கள் கிளம்பி கோவிலுக்கு சென்றனர்.
- விழாவை முன்னிட்டு கோவிலில் கோமதி அம்மனுக்கு அனுக்ஞை பூஜை நடந்தது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் பிரசித்தி பெற்ற ஆடித்தபசு திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக மண்டகப்படி தாரர்களான கம்மவார் நாயுடு மகாஜன சங்கம் சார்பில் கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று சுருள் அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. வடக்கு ரத வீதியில் உள்ள மண்டகப்படியில் இருந்து கிளம்பி கோவிலுக்கு சென்றனர்.
பின்னர் கோவிலில் கோமதி அம்மனுக்கு அனுக்ஞை பூஜை நடந்தது. இதில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி எம்.எல்.ஏ.வுமான கடம்பூர் ராஜூ, கம்மவார் நாயுடு மகாஜன சங்க மண்டல தலைவர் சரஸ்வதி ஓட்டல் சின்னசாமி, நகர தலைவர் பொறியாளர் அசோக்குமார், செயலாளர் வெங்கடபதி, பொருளாளர் சங்கரநாராயணன், ஆர்.வி.எஸ். துரைராஜ், டாக்டர்கள் சுப்பாராஜ், போத்திராஜ், சாந்தி, அம்சவேணி, வக்கீல்கள் மாதவரம், புஷ்பராஜ், பிரதாப் மற்றும் வக்கீல்கள், சமுதாய நிர்வாகிகள் மற்றும் பல்வேறு கிராமங்களை சேர்ந்த சமுதாய மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
- அ.தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார்.
கோவில்பட்டி:
தி.மு.க. அரசை கண்டித்து கோவில்பட்டியில் அ.தி.மு.க. சார்பில் நாளை (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதுதொடர்பான அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
அ.தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில், நகர செயலாளர் விஜயபாண்டியன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சத்யா, பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பன், மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை தி.மு.க நிறைவேற்றவில்லை. மேலும், மின் கட்டணம், சொத்து வரி, தொழில் வரி, மறைமுகமாக பஸ் கட்டணம் உயர்த்தி மக்கள் மீது சுமையை திணித்துள்ளனர். சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது.
திறமையான காவல்துறை இருந்தாலும், அந்த துறையை பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் கண்டு காணாததும் போல் இருப்பதால் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது.
கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் அதிகமாக மக்கள் நடமாடும் இடங் ளில் தாராளமாக கிடைக்கின்றன. மாணவர்களை குறி வைத்தே பொருட்கள் விற்பனை நடக்கின்றன. இதனை தடுக்க இந்த அரசு திராணியற்று இருக்கிறது.
கோடை காலமான தற்போது அறிவிக்கப்படாத கடுமையான மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இவற்றையெல்லாம் மக்களுக்கு எடுத்துக்கூறும் வகையில் அ.தி.மு.க. சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
வருமான வரித்துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தன்னிச்சையான அமைப்பு. வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு யாரை வேண்டுமென்றாலும் சோதனையிட உரிமை உள்ளது. அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இதுதான் மரபு.
இதையெல்லாம் பின்பற்றும் வழக்கம் தி.மு.க.வு.க்கு கிடையாது. அதனால் வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- குளத்தூர் பேருந்து நிலையம் முன்பு முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன் தலைமையில் பொதுக்கூட்டம் நடை பெற்றது.
- 50-க்கும் மேற்பட்டோர் கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூரில் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு குளத்தூர் பேருந்து நிலையம் முன்பு முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன் தலைமையில் பொதுக்கூட்டம் நடை பெற்றது.
பொதுக்கூட்டத்தில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசுகையில், ஒரு தொண்டன் கூட முதல்-அமைச்சராக முடியும் என ஒரு இயக்கம் உண்டு என்றால் அது அ.தி.மு.க.தான்.
ஈரோடு கிழக்குத் தொகுதி எடுத்துக் கொண்டால் முதல் முதலில் போட்டியிட போவதாக அறிவித்த கட்சி அ.தி.மு.க.தான். இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும் என்றார்.
நிகழ்ச்சியின் முடிவில் மாற்றுக்கட்சியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
நிகழ்ச்சியில் எட்டயபுரம் நகர செயலாளர் ராஜ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. என்.கே.பெரு மாள், விளாத்திகுளம் ஒன்றிய தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன், புதூர் ஒன்றிய தலைவர் சுசிலா தனஞ்ஜெயன், ஒன்றிய செயலாளர்கள் விளாத்திகுளம் மேற்கு ஒன்றியம் மகேஷ், கிழக்கு ஒன்றியம் பால்ராஜ், புதூர் மேற்கு ஒன்றியம் தனவதி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட இலக்கிய அணி பேச்சாளர் இளங்கோ, மகளிர் அணி சாந்தி, வார்டு கவுன்சிலர் பிரியா, குளத்தூர் கிளைக் செயலாளர்கள் வேல் மயில், செல்லையா, சந்திரசேகரன், ஜோதிமணி உட்பட 300- க்கும் மேற்பட்ட அ.தி.மு.க தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- உதயநிதி ஸ்டாலினை தி.மு.க. முன்னிலைப்படுத்த தொடங்கியதும் அவர் எம்.எல்.ஏ., அமைச்சர் பதவிகளுக்கு வருவார் என்று நாங்கள் எதிர்பார்த்தோம்
- மாற்றம் என்று சொல்லிய தி.மு.க. இன்றைக்கு மக்களுக்கு ஏமாற்றத்தினை பரிசாக தந்துள்ளது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலையில் சட்டமன்ற உறுப்பினர் நிதயின் கீழ் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ரேசன் கடை திறப்பு விழா நடைபெற்றது.
ரேசன்கடை திறப்பு
முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி எம்.எல்.ஏ.வுமான கடம்பூர். ராஜூ கலந்து கொண்டு ரேசன் கடையை திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
உதயநிதி ஸ்டாலினை தி.மு.க. முன்னிலைப்படுத்த தொடங்கியதும் அவர் எம்.எல்.ஏ., அமைச்சர் பதவிகளுக்கு வருவார் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். வேறு வழி இல்லாமல் தி.மு.க . முன்னணி தலைவர்கள் உதயநிதி ஸ்டாலினை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஆவின் விலை எற்றம்
வார்த்தைகளுக்காக உதயநிதி ஸ்டாலினை புகழந்து பேசினாலும், அவர்கள் உள்ளுக்குள் இருக்கும் புழுக்கம் எல்லோருக்கும் தெரியும். அது காலம் நேரம் வரும் போது தெரியும்.
தி.மு.க.வில் நிலை அப்படித்தான் உள்ளது. எங்கள் நிலை இப்படித்தான் என்று சொல்லாமல் சொல்கிறார் கே.என்.நேரு.
மாற்றம் என்று சொல்லிய தி.மு.க. இன்றைக்கு மக்களுக்கு ஏமாற்றத்தினை பரிசாக தந்துள்ளது. அனைத்து தரப்பு மக்களும் கொதித்து போய் உள்ளனர்.
தி.மு.க.விற்கு வாக்களிக்க மக்கள் தயாராக இல்லை, பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 40 தொகுதிகளிலும் மகாத்தான வெற்றி பெறும்.
எல்லா கட்சிகளும் தனியாக போட்டியிட தயராக இருந்தால், அ.தி.மு.க.வும் தனித்து நிற்க தயராக உள்ளது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில் ஆவினில் பால், ெநய், வெண்ணை உள்ளிட்ட வைகளின் விலைகளை உயர்த்தி உள்ளனர். மக்கள் மீது தி.மு.க. அரசு தொடர்ந்து சுமையை தான் சுமத்துகிறது என்பதை நிரூபித்துள்ளது .
இவ்வாறு அவர் கூறினார்.
- வில்லிசேரியில் இந்தியன் வங்கி கிளை அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது.
- வங்கியின் பணிகள் குறித்து கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கேட்டறிந்தார்.
கோவில்பட்டி:
வில்லிசேரியில் இந்தியன் வங்கி கிளை அமைப்ப தற்கான பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, இந்தியன் வங்கி பொதுமேலாளர் கணேஷ்ராம், மண்டல அலுவலர் ஜெயபாண்டியன் ஆகியோர் இருந்தனர். அவர்களிடம் வங்கியின் பணிகள் குறித்து எம்.எல்.ஏ., கேட்டறிந்தார். இந்த வங்கி சிறப்பாக செயல்பட வில்லிசேரி மற்றும் சுற்று வட்டாரப் பகுதி மக்கள் ஒத்துழைப்பார்கள் என எம்.எல்.ஏ., அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
அப்போது, அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பி னர் ராமச்சந்திரன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் செல்வகுமார், ஆவின் பால் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன், அ.தி.மு.க. நிர்வாகிகள் அழகர்சாமி, பழனிகுமார் உட்பட பலர் உடனிருந்தனர்.
- ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு விட்டார் என்று கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கூறினார்.
- கால்பந்து வீராங்கனை மரணத்தில் தவறு நடந்துள்ளதை அரசே ஒப்புக் கொண்டுள்ளது என்றார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
தீப்பெட்டி தொழில்
டெல்லியில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனிடம் தீப்பெட்டி தொழிலுக்கு பாதகமான லைட்டர்கள் இறக்குமதியை நிறுத்த வேண்டும். கோவில்பட்டி அருகே வில்லிசேரி கிராமத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அமைக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.
அதன்படி தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார். மேலும் வில்லிசேரி கிராமத்தில் இந்த மாதத்துக்குள் வங்கி கிளை திறக்க நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்த வங்கி திறப்பு விழாவுக்கு நிர்மலா சீதாராமன் வருவார் என்று எதிர்பார்க்கிறோம். அ.தி.மு.க. பொதுக்குழு ஏற்கனவே வெற்றிகரமாக முடிவடைந்து விட்டது. இதில் 99 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரையில் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு விட்டார். அதன் பின்னர் அவர் கூறும் கருத்துகள் அ.தி.மு.க.வுக்கு பொருந்தாது.
கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக தி.மு.க.வினர் யாரும் வாய் திறக்க மறுக்கின்றனர். இந்த சம்பவம் தமிழக முதல்வரின் தொகுதியில் நடந்துள்ளது. கால்பந்து வீராங்கனை மரணத்தில் தவறு நடந்துள்ளதை அரசே ஒப்புக் கொண்டுள்ளது. ஆகவே தமிழகத்தில் சிகிச்சை தேவைப்படும் நிலையில் சுகாதாரத்துறை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது நகர அ.தி.மு.க. செயலாளர் விஜயபாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாதுரை பாண்டியன், அன்புராஜ், பஞ்சாயத்து யூனியன் துணை தலைவர் பழனிச்சாமி உள்பட பலர் உடன் இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்