search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாவட்ட செயலாளர்கள்"

    • பாராளுமன்ற தேர்தல் தோல்வி குறித்து நிர்வாகிகளுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஆலோசித்தார்.
    • அப்போது பேசிய அவர், 2026 சட்டசபை பொதுத்தேர்தலில் வலுவான கூட்டணி அமைக்கப்படும் என்றார்.

    சென்னை:

    சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் தோல்வி குறித்து மாவட்ட வாரியாக நிர்வாகிகளுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

    அப்போது பேசிய அவர், 2026 சட்டசபை பொதுத்தேர்தலில் வலுவான கூட்டணி அமைக்கப்படும். தேர்தலுக்காக பணியாற்ற வேண்டும் என கட்சியினருக்கு அறிவுறுத்தினார். இதற்கிடையே, தேர்தல் தோல்வி குறித்து மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனை முடிந்துள்ளது.

    இந்நிலையில், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 9-ம் தேதி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறவுள்ளது.

    ஆகஸ்ட் 9-ம் தேதி காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலாளர் கூட்டம் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது.

    இந்தக் கூட்டத்தில் தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இந்தக் கூட்டத்தில் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை நடத்துவது, மாவட்ட அளவில் கட்சியை பலப்படுத்துவது, சட்டசபை தேர்தலுக்கு தயாராகுவது, தேவையான குழுக்களை அமைப்பது, சசிகலா, ஓபிஎஸ் குறித்த விஷயங்களை விவாதிப்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படலாம் என தெரிகிறது.

    • தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தி.நகரில் இன்று நடைபெற்றது.
    • இதில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின், நாம் கை காட்டுபவரே பிரதமராக வேண்டும் என்றார்.

    சென்னை:

    தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தி,நகரில் இன்று நடைபெற்றது. இதில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    பாராளுமன்ற தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீட்டை திமுக தலைமை பார்த்துக் கொள்ளும். யார் வெற்றி பெறுவார்களோ அவர் தான் வேட்பாளராக இருப்பார். இந்தத் தொகுதிக்கு இவர் தான் வேட்பாளர் என்ற உறுதி எதுவுமில்லை.

    நாம் கை காட்டுபவரே பிரதமராக வேண்டும். 40 தொகுதிகளில் வென்றால் மட்டுமே அது சாத்தியம்.

    சேலத்தில் அடுத்த மாதம் 17-ம் தேதி நடைபெற உள்ள இளைஞரணி மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராக கே.என்.நேரு நியமனம் செய்யப்பட்டுள்ளார். 5 லட்சம் பேர் கலந்து கொள்ளும் பிரமாண்ட மாநாடாக இருக்க வேண்டும்.

    மகளிர் உரிமைத்தொகை போன்ற திட்டங்கள் பெண்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

    இனி எந்த காலத்திலும் மகளிர் வாக்குகள் நமக்குத்தான் என்பதில் எள் முனையளவும் சந்தேகம் வேண்டியதில்லை.

    தேர்தல் பணிகளை முன்னெடுத்துச் செல்லுங்கள் என தெரிவித்தார்.

    • பொதுச்செயலாளர் தேர்தலை எப்போது நடத்தலாம் என்பது பற்றி முக்கிய நிர்வாகிகள் கருத்துக்களை தெரிவித்தனர்
    • கூட்டணி கட்சியான பாரதிய ஜனதாவுடன் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாகவும், இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    சென்னை:

    கட்சியில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் பற்றியும் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.

    ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த எடப்பாடி பழனிசாமிக்கு நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதன் பின்னர் கூட்டம் தொடங்கியது.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலை விரைவில் நடத்தி அதில் எடப்பாடி பழனிசாமியை முறைப்படி தேர்வு செய்வது தொடர்பாக இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பொதுச்செயலாளர் தேர்தலை எப்போது நடத்தலாம் என்பது பற்றி முக்கிய நிர்வாகிகள் கருத்துக்களை தெரிவித்தனர்

    கூட்டணி கட்சியான பாரதிய ஜனதாவுடன் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாகவும், இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    அ.தி.மு.க.வுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வரும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை எதிர்கொள்வது குறித்தும் எடப்பாடி பழனிசாமி கருத்துக்களை கேட்டறிந்தார். ஈரோடு இடைத்தேர்தல் தோல்வி குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    இந்நிலையில் பொதுச்செயலாளர் தேர்தலை விரைவில் நடத்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. கட்டமைப்பை வலுப்படுத்தவும், பாராளுமன்ற தேர்தலுக்காக பூத் கமிட்டி அமைக்கவும் நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார்.

    • ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த எடப்பாடி பழனிசாமிக்கு நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    • கூட்டணி கட்சியான பாரதிய ஜனதாவுடன் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    சென்னை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

    இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதுதொடர்பாக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் உத்தரவிட்டது.

    இதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் மிகுந்த உற்சாகத்தோடு பணியாற்றி வருகிறார்கள். அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமியை தேர்தல் மூலமாக முறைப்படி தேர்வு செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

    இதுதொடர்பாகவும், கட்சியில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் பற்றியும் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.

    ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த எடப்பாடி பழனிசாமிக்கு நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதன் பின்னர் கூட்டம் தொடங்கியது.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலை விரைவில் நடத்தி அதில் எடப்பாடி பழனிசாமியை முறைப்படி தேர்வு செய்வது தொடர்பாக இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பொதுச்செயலாளர் தேர்தலை எப்போது நடத்தலாம் என்பது பற்றி முக்கிய நிர்வாகிகள் கருத்துக்களை தெரிவித்தனர்.

    அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக்கோரி ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ.வான மனோஜ் பாண்டியன் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு விசாரணை 17-ந்தேதி நடைபெற உள்ளது.

    இந்த வழக்கில் உரிய பதில் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாகவும் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    கூட்டணி கட்சியான பாரதிய ஜனதாவுடன் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாகவும், இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தற்போதைய சூழலில் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி விவகாரத்தை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெரிதுபடுத்தாமல் அமைதி காக்க வேண்டும் என்று நிர்வாகிகள் சிலர் வலியுறுத்தினர்.

    அ.தி.மு.க.வுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வரும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை எதிர்கொள்வது குறித்தும் எடப்பாடி பழனிசாமி கருத்துக்களை கேட்டறிந்தார். ஈரோடு இடைத்தேர்தல் தோல்வி குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    இந்த கூட்டத்துக்கு பிறகு அ.தி.மு.க. சார்பில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • சென்னை வேப்பேரியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
    • பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் கூட்டம் நடைபெறும் என தகவல்.

    அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் அதிமுக பொருளாளர் என்ற பெயரில் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், சென்னை வேப்பேரி, ரிதர்ட்டன் சாலையில் அமைந்துள்ள ஒய்.எம்.சி.ஏ திருமண மண்டபத்தில் வரும் 21-ம் தேதி (புதன்கிழமை) காலை 10.00 மணியளவில் நடைபெறவுள்ளது. அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • மாவட்ட செயலாளராக எ.ம். சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • புறநகர் சாலையில் உள்ள தனியார் கல்லூரி முன்பு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தாராபுரம் : 

    அ.தி.மு.க., ஓபிஎஸ் அணியில் தாராபுரத்தை சேர்ந்த டி. டி. காமராஜ் திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தாராபுரம், உடுமலை மடத்துக்குளம் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கு இவர் பொறுப்பளாராக செயல்படுவார். மற்றொரு மாவட்ட செயலாளராக எ.ம். சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இவர் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவிநாசி, காங்கேயம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு இவர் மாவட்ட செயலாளராக செயல்படுவார் என அ.தி.மு.க. ஓபிஎஸ். அணியின் தலைமை அறிவித்து உள்ளது. புறநகர் மாவட்ட செயலாளர் பதவி ஏற்று கொண்ட பின் டி.டி. காமராஜ் தாராபுரம் வந்தபோது புறநகர் சாலையில் உள்ள தனியார் கல்லூரி முன்பு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    • ஒருங்கிணைந்த தென்காசி மாவட்ட செயற்குழு கூட்டம் சங்கரன்கோவில் நடைபெற உள்ளது.
    • கூட்டத்திற்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமை தாங்குகிறார்.

    தென்காசி:

    தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவ பத்மநாதன், வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ள தாவது:-

    தென்காசி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஒருங்கிணைந்த தென்காசி மாவட்ட செயற்குழு கூட்டம் வருகிற 23-ந் தேதி (புதன்கிழமை) சங்கரன்கோவில் ரெயில்வே பீடர் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்ட பத்தில் நடைபெற உள்ளது.

    கூட்டத்திற்கு வரு வாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் டிசம்பர் 5-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசி வேல்ஸ் மெட்ரிக் பள்ளியில் நடைபெறும் அரசு விழா வில் கலந்து கொள்ள வருகிறார். அந்த விழாவினை சிறப்பாக நடத்துவது தொடர்பான ஆலோ சனைகள் நடைபெற உள்ளது.

    எனவே இந்த கூட்டத்தில் தலைமை நிலைய நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், பிற அணி அமைப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    ×