search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார் தீவிபத்து"

    • சம்பந்தப்பட்ட கார் ஓட்டுனரிடம் சந்தேகத்தின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • தேசிய நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த காரால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே வெலக்கல்நாத்தம் தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று தீப்பிடித்து எரிந்தது.

    இந்நிலையில், அந்த காரில் கட்டுக்கட்டாக இருந்த ரூ.2,000 நோட்டுகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இதைதொடர்ந்து, சம்பந்தப்பட்ட கார் ஓட்டுனரிடம் சந்தேகத்தின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், காரில் கட்டுக்கட்டாக இருந்தது போலி ரூ.2000 நோட்டுகள் என தெரியவந்துள்ளது.

    மேலும், தான் சினிமா தயாரிப்பாளர் எனவும், படப்பிடிப்பிற்காக கொண்டு சென்றதாகவும் வாகன ஓட்டி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே, தேசிய நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த காரால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    • முன்னெச்சரிக்கையாக அனைவரும் காரில் இருந்து கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
    • தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து கீழ் திருப்பதிக்கு கார் ஒன்று வந்தது. அப்போது காரில் திடீரென புகை வரவே, டிரைவர் காரை ஓரங்கட்டியதால் அனைவரும் கீழே இறங்கினர். கண்ணிமைக்கும் நேரத்தில் கார் முழுவதும் தீ பிடித்து எரிந்தது. முன்னெச்சரிக்கையாக அனைவரும் காரில் இருந்து கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அதிகாரி இளங்கோ தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
    • பெரியகடை போலீசார் விசாரணை நடத்தியதில், காரின் ஏ.சி.யில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டது என தெரியவந்தது.

    புதுச்சேரி:

    கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் குணாளன். இவர் தனது மனைவியுடன் சென்னைக்கு சுற்றுலா சென்றிருந்தார். அங்கிருந்து அவரது நண்பரின் காரை எடுத்துக் கொண்டு புதுவைக்கு வந்தார்.

    புதுவையில் பல்வேறு இடங்களை பார்வையிட்ட அவர்கள் ரோமன் ரோலண்ட் வீதியில் உள்ள கப்ஸ் தேவாலயம் அருகில் காரை நிறுத்தி இறங்கினர். அப்போது காரின் முன்பகுதி திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

    இதனை பார்த்த பொதுமக்கள் அருகில் உள்ள கடைகளில் இருந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ மேலும் கொளுந்து விட்டு எரியத்தொடங்கியது.

    தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அதிகாரி இளங்கோ தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் அந்த காரின் உட்புறம் முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது.

    இதுகுறித்து பெரியகடை போலீசார் விசாரணை நடத்தியதில், காரின் ஏ.சி.யில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டது என தெரியவந்தது. தீ விபத்து ஏற்பட்டபோது குணாளனும் அவரது மனைவியும் காரை விட்டு இறங்கியதால் அதிஷ்டவசமாக உயிர்தப்பினர்.

    • கார் தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மற்றும் கூம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
    • வேடசந்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் தீயை அணைத்தனர்.

    வேடசந்தூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்(46). வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது மாமனாரான பொன்னம்பலம்(78) என்பவரின் கண் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு ஒரு காரில் வந்து கொண்டிருந்தார். இவர்களுடன் மாமியார் கீதா(66) என்பவரும் வந்தார்.

    காரை சாந்தப்பன்(33) என்பவர் ஓட்டிவந்தார். இன்று காலை திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகில் உள்ள ரெங்கநாதபுரம் மின்வாரிய அலுவலகம் அருகே கார் வந்து கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் தலைகுப்புற கவிழ்ந்த கார் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதைபார்த்ததும் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். காரில் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டவர்களை மீட்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர். பொன்னம்பலம் இடுப்பிற்கு கீழே பலத்த தீக்காயமடைந்து அவரது 2 கால்களும் கருகியது. டிரைவர் சாந்தப்பனுக்கும் முழங்காலுக்கு கீழே தீக்காயம் ஏற்பட்டது.

    சந்தோஷ்குமார் மற்றும் கீதா லேசான காயங்களுடன் மீட்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மற்றும் கூம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வேடசந்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் அங்கு வந்து தீயை அணைத்தனர்.

    மேலும் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு காயமடைந்த 4 பேரும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அசோக் நகர் தீயணைப்பு படையினர் போராடி தீயை அணைத்தனர்.
    • தீ விபத்தில் 2 கார்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. தீவிபத்துக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை.

    போரூர்:

    சென்னை வடபழனி கங்கையம்மன் கோவில் தெருவில் உள்ள தனியார் நிறுவனம் முன்பு சாலையோரம் கார்கள் அடுத்தடுத்து வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் அங்கிருந்த ஒரு காரில் இருந்து திடீரென கரும்புகை கிளம்பியது. சிறிது நேரத்தில் தீப்பிடித்து மளமளவென எரிய தொடங்கியது. அப்போது காற்றின் வேகம் காரணமாக அருகில் இருந்த மற்றொரு காருக்கும் தீ பரவியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அசோக் நகர் தீயணைப்பு படையினர் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 2 கார்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. தீவிபத்துக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை.

    இது குறித்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து வடபழனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×