என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அதிவேகம்"
- கூட்டத்தில் மன்ற பொருள் படிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- புதிய பஸ் நிலைத்திற்குள் உள்ளே வரும் பஸ்கள் மிக வேகமாக வருவதால் காத்திருக்கும் பயணிகளின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.
அவினாசி
அவினாசி பேரூராட்சி கூட்டம் தலைவர் தனலட்சுமி பொன்னுசாமி தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு செயல் அலுவலர் ராமலிங்கம், துணைத் தலைவர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மன்ற பொருள் படிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசியதாவது:-
கோபாலகிருஷ்ணன் (16-வது வார்டு):-
அவினாசி பு பஸ் நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். வார்டு பகுதியில் குடிநீர் குழாய் விஸ்தரிப்பு செய்ய வேண்டும். அவினாசி முழுவதும் உள்ள ரோடு ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என்று பல கூட்டங்களில் வலியுறுத்தியும் பயனில்லை. பேரூராட்சி பகுதியில் நடைபெறும் வேலைகளை அதிகாரிகள் ஆய்வு செய்வதே கிடையாது.
தங்க வேல் (3-வது வார்டு):-
மாகாளியம்மன் கோவில் அருகில் தண்ணீர் தேங்கி நிற்பதால் மிகவும் இடையூறு ஏற்படுகிறது. எனவே அங்கு மண்கொட்டி அந்த இடத்தை சமன்படுத்த வேண்டும்.
கார்த்திகேயன் (11-வது வார்டு):-
சங்கமாங்குளம் வீதியில் பள்ளி, குடியிருப்புகள் நிறைய உள்ளது. இங்கு சாக்கடை கால்வாய் இல்லாமல் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே அங்கு வடிகால் அமைக்க வேண்டும். புதிய பஸ் நிலைத்திற்குள் வரும் பஸ்கள் மிக வேகமாக வருகின்றன. இதனால் அங்கு காத்திருக்கும் பஸ் பயணிகள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. எனவே பஸ் நிலைய நுழைவு வாயிலில் வேகத்தடை அமைக்க வேண்டும்.தலைவர்: வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சாக்கடை கால்வாய் அமைக்கப்படும்.
பருக்கதுல்லா (15-வது வார்டு):-
அவினாசி பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிவதால் ஆடு, கோழிகளை கடிப்பதுடன் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது.எனவே தெருநாய்களை பிடிக்க வேண்டும்.சுகாதார ஆய்வாளர் :தெருநாய்களை பிடிக்க அதற்கு வண்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வந்தவுடன பிடிக்கப்படும்.
இவ்வாறு வார்டு உறுப்பினர்கள் பேசினர்.
- அதிவேக வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது.
- வாக–னத்தை ஸ்கேன் செய்து வேகத்தை கம்பங்களில் அமைக்கப் பட்டுள்ள டிஜிட் டில் போர்டுகள் காட்டுகின்றன.
மதுரை
மதுரையில் இருந்து மற் றும் மதுரை வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்வ–தற்கு முக்கிய சந்திப்பு மைய–மாக திருமங்கலம் உள்ளது. இந்தியாவின் முதல் நான்கு வழிச்சாலையான காஷ்மீர்-கன்னியாகுமரி நெடுஞ் சாலை திருமங்கலம் வழி–யாக செல்கிறது.
சென்னை வழித்தடத்தில் இருந்து வரும் வாகனங்கள், மதுரையில் இருந்து செல் லும் வாகனங்கள் பெங்க–ளூரு, கோவை, கொடைக்கா–னல் வழித்தடங்களில் இருந்து வரும் வாகனங்கள் திருமங்கலம் வழியாக தான் கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், சிவகாசி, தென் காசி, செங்கோட்டை போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.
இதனால் வாகனப் போக் குவரத்து அதிகமுள்ள பகுதி–யாக திருமங்கலம் உள்ளது. மேலும் நான்கு வழிச் சாலை–யில் கப்பலூர் தொழிற் பேட்டை உள்ளது. இதனால் பயணிகளின் வாகனங்கள், சரக்கு வாகனங்கள் தொடர்ச்சியாக திருமங்கலம் பகுதியில் உள்ள நான்கு வழிச் சாலையில் வாகனங் கள் அதிவேகத்தில் சென்ற–படி இருக்கும்.
இந்த நிலையில் அஜாக்கி–ரதையாக கார்கள், இரு சக்கர வாகனங்களை இயக் குபவர்கள் விபத்தில் சிக்கு–வதும், உயிரிழப்புகள் ஏற்ப–டுவதும் தொடர் கதையாகி வருகிறது. கடந்த சில மாதங் களில் திரு மங்கலம் நான்கு வழிச் சாலை பகுதி–யில் நடந்த விபத்துகளில் பலர் இறந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம–டைந்து சிகிச்சை பெற்று வருகின்ற–னர். ஆனாலும் விபத்துகள் தொடர்ந்து வருகின்றன.
கடந்த சில மாதங்களில் தொடர்ச்சியாக நடந்த விபத்துகளில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரை இழந்துள்ளனர். இந்த நிலை–யில் இந்தப் பகுதியில் விபத் துகளை தடுக்க அரசும் தேசிய நெடுஞ்சாலைத் துறையும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
தற்போது கன்னியாகுமரி நான்கு வழிச் சாலையில் வேகக் கண்காணிப்பு கருவி–கள் பொருத்தப்பட்டு வரு–கின்றன. நாம் வாகனத்தில் செல்லும் போது வாக–னத்தை ஸ்கேன் செய்து வேகத்தை கம்பங்களில் அமைக்கப் பட்டுள்ள டிஜிட் டில் போர்டுகள் காட்டு–கின்றன.
திருமங்கலம் நான்கு வழிச்சாலை பகுதியில் இத்த–கைய வேகக் கண்காணிப்பு கருவிகளை அதிகமாக பொருத்த வேண்டும் என–வும், மேலும் அதிக வேகத் தில் செல்லும் வாகனங்க–ளுக்கு எச்சரிக்கை சமிக்ஞை–களை தரும் தொழில் நுட் பத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும், அதி வேகத்தில் செல்லும் வாகனங்களின் உரிமையாளர்களின் செல் போன்களுக்கு எச்சரிக்கை செய்தியை அனுப்பவும், உடனடி அபராதம் விதிக்க–வும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வ–லர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
- மதுரை அருகே பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 2 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
- படுகாயமடைந்த 16பேர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மதுரை
மதுரை ஆரப்பாளையத்தில் இருந்து 66 பயணிகளுடன் ஒரு தனியார் பஸ் நேற்று மதியம் போடிக்கு புறப்பட்டுச் சென்றது. அந்த பஸ்சை உசிலம்பட்டியை சேர்ந்த டிரைவர் பாலமுருகன் (வயது38) என்பவர் ஓட்டி சென்றார். பாண்டியராஜன் என்பவர் கண்டக்டராக இருந்தார்.
நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது அந்த பஸ், முன்னால் சென்ற ஒரு அரசு பஸ்சை முந்த முயன்றது. இதில் தனியார் பஸ் நிலைத்தடுமாறி கட்டுப்பாட்டை இழந்து 20அடி சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விழுந்தது. இதனைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து சமயநல்லூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுந்தரம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். தனியார் பஸ்சுக்குள் 60-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததால், அவர்களை மீட்பது பெரும் சிரமமாக இருந்தது.
எனவே போலீசார் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் தனியார் பஸ்சில் பயணம் செய்த பேரையூர் மேலத்தெருமாணிக்கம் பகுதியை சேர்ந்த குருசாமி(வயது72), டி.ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த பிச்சை(65) ஆகிய 2பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
மேலும் பஸ்சுக்குள் சிக்கியிருந்த பயணிகளில் 22பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவர்களில் 6 பேருக்கு லேசான காயங்கள் மட்டும் இருந்தன. அவர்கள் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர். மற்ற 16 பேருக்கும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து தொடர்பாக நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அதிவேகமாக சென்ற தனியார் பஸ், அரசு பஸ்சை முந்த முயன்றதால் இந்த விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. அதன் பேரில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அதிவேகமாக செல்வதால் அதிக அளவில் விபத்து ஏற்படுகின்றது.
- வாகனங்களின் பதிவு எண்களை படம் பிடித்து அவர்களுக்கு அபராத தொகை நகல் அவர்களின் செல்போனுக்கு அனுப்பப்படுகிறது.
நாகப்பட்டினம்:
சாலைகளில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அதிவேகமாக செல்வதால் அதிக அளவில் விபத்து ஏற்படுகின்றது.
இதனை தடுக்கும் பொருட்டு நாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களுக்கு ரூபாய் 7.05 லட்சம் மதிப்பிலான (நகரும் பொருட்களின் வேகத்தை அளவிட பயன்படும் கருவி) யை வழங்கினார்.
இதன் மூலம் அதிவேகமாக செல்லும் வாகனங்களின் பதிவு எண்களை படம் பிடித்து அவர்களுக்கு அபராத தொகை நகல் அவர்களின் செல்போனுக்கு அனுப்பப்படுகிறது.
இதன் மூலம் விபத்துக்கள் நடைபெறாமல் தடுக்க அதிக வாய்ப்பு உள்ளது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.
- இன்று காலையில் யாரும் நடமாட்டம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
- அதிவேகமாக கல், மண், எம் சான்ட், என் சான்ட் ஏற்றி வரும் கனரக வாகனங்களை போலிசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
கன்னியாகுமரி:
குலசேகரம் அருகே புலியிறங்கி பகுதியில் இன்று அதிகாலை கனரக வாகனம் ஒன்று எம்.சான்ட் ஏற்றிக்கொண்டு அதிவேக மாக நாகர்கோவிலில் இருந்து குலசேகரம் வழியாக மார்த்தாண்டம் நோக்கி செல்லும்போது புலியிறங்கி பகுதியில் டிரைவரின் கட்டுபாட்டை இழந்து வீட்டின் காம்பவுண்ட் சுவரில் மோதி நின்றது. எப்போதும் பரபரப்பாக மக்கள் சென்றுகொண்டு இருப்பார்கள். இன்று காலை யில் யாரும் நடமாட்டம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்தான் இந்த பகுதியில் சொகுசு கார் மோதியதில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். எனவே அதிவேகமாக கல், மண், எம் சான்ட், என் சான்ட் ஏற்றி வரும் கனரக வாகனங்களை போலிசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்