search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அவசர கூட்டம்"

    • கூட்டத்தில் தென்காசி மாவட்ட கூட்டமைப்பு தலைவர் டி.கே.பாண்டியன் கலந்து கொண்டு பேசினார்.
    • கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வருகிற 25-ந்தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

    கடையம்:

    கடையம் ஊராட்சி ஒன்றியத்தில் 23 ஊராட்சி மன்ற தலைவர்களின் அவசர கூட்டம் திருமலையப்பபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவர் மாரியப்பன் தலைமையில், கூட்டமைப்பு செயலாளர் பூமிநாத் முன்னிலையில் நடைபெற்றது.

    சிறப்பு அழைப்பாளராக தென்காசி மாவட்ட கூட்டமைப்பு தலைவர் டி.கே.பாண்டியன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் ஒற்றைத் தீர்மானமாக 23 ஊராட்சி மன்ற தலைவர்களும் ஒருங்கிணைந்து அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெறுகின்ற ஏ.ஜி.எம்.டி. வேலைகள் ஊராட்சி மன்ற தலைவர்களின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும், அதில் பிறர் தலையிட அனுமதிக்க மாட்டோம். இக்கோரிக்கையை 20 மாத காலமாக வலியுறுத்தி வருகிறோம். இது சம்பந்தமாக வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட கலெக்டர், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்-அமைச்சரிடம் பலமுறை எடுத்துரைத்தும் எந்த பயனும் கிடைக்கவில்லை.

    ஆகவே வருகிற 25-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலையில், கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தீர்மானிக்கப்பட்டது.

    கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் செண்பகவல்லி ஜெகநாதன், அழகுதுரை, முகைதீன் பீவி அசன், பிரேமராதா ஜெயம், ரவிச்சந்திரன், மாரி சுப்பு, முருகன், முகமது உசேன், பொன் ஷீலாபரமசிவன், முத்துலட்சுமி ராமதுரை, கல்யாணசுந்தரம், ஜீனத் பர்வீன் யாகூப், கணேசன், மதியழகன், முத்தமிழ் செல்வி ரஞ்சித், குயிலி லட்சுமணன், ஜன்னத் சதாம், மலர்மதி சங்கரபாண்டியன், சாருகலா ரவி, முப்புடாதி பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • சாக்கடை நீர் சுத்திகரிப்பு செய்ய சுமார் 2 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது.
    • வ .உ. சி. பூங்காவில் அமைக்கப்பட்டு வரும்டேங்க் பணி முடிய காலதாமதம் ஆகி வருகிறது

    அவினாசி :

    அவினாசி பேரூராட்சி மன்ற அவசர கூட்டம் கூட்ட அரங்கில் தலைவர் தனலட்சுமி தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல் படிநமக்கு நாமே திட்டம் அல்லது பொது நிதி மூலம் செப்டிக் டேங்க் வாகனம் வாங்கி சூளை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீர்மற்றும் பேரூராட்சி பகுதியில் கழிவறை கழிவுநீர் ஆகியவற்றை அப்புறப்படுத்தலாம். மேலும் அவினாசி பேரூராட்சி பொதுமக்கள்பயன்பாட்டில் இருந்து வெளியேறும் சாக்கடை நீர் சுத்திகரிப்பு செய்ய சுமார் 2 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. அந்த இடத்தை வருவாய் துறையிடம் கேட்டு பெறுவது என்று தலைவர் தனலட்சுமி கூறினார்.

    இதையடுத்துவார்டு உறுப்பினர்கள் கோபாலகிருஷ்ணன் பேசுகையில், சூளை பகுதி அடுக்குமாடி குடியிருப்பு கழிவுநீரை வெளியேற்றவேண்டியது குடிசை மாற்று வாரியத்தின் பணியாகும். நமது பேரூராட்சிக்கு தேவையான குப்பை வண்டி வாங்க சொல்லி பல கூட்டங்களில் வலியுறுத்தியும் அதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை என்றார்.

    திருமுருகநாதன் பேசுகையில்,அவினாசி வ .உ. சி. பூங்காவில் அமைக்கப்பட்டு வரும்டேங்க் பணி முடிய காலதாமதம் ஆகி வருகிறது. அந்த பணி எப்போது முடியும் என்றார். தலைவர் பேசுகையில், டேங்க் கட்டும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. சீக்கிரம் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வர உள்ளது என்றார்.

    • ராமநாதபுரம் நகர் மன்ற அவசர கூட்டம் தலைவர் கார்மேகம் தலைமையில் நடந்தது.
    • மேலும் அனைத்து கோரிக்கையை ஏற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகர் மன்ற தலைவர் கார்மேகம் கூறினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகராட்சி நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நகர்மன்ற தலைவர் கார்மேகம் தலைமையில் நகர்மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது. நகர்மன்ற துணைத் தலைவர் பிரவீன் தங்கம், கமிஷனர் (பொறுப்பு) சுரேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி அலுவலர் இசக்கி யம்மாள் அவசர தீர்மானங்களை வாசித்தார். ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு வராக தங்கள் பகுதியில் உள்ள குறைபாடுகள் மற்றும் நகராட்சி அலுவலர்களின் செயல்பாடுகள் குறித்து நகர்மன்ற தலைவர் கார் மேகத்திடம் எடுத்துரைத்த னர். அவர் சம்பந்தப்பட்ட அலுவலர் களிடம் உடனடி யாக குறைபாடு களை சரி செய்ய வேண்டுமாய் அறிவுறுத்தினார். மேலும் அனைத்து கோரிக்கையை ஏற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகர் மன்ற தலைவர் கார்மேகம் கூறினார்.

    • கவுன்சிலர்கள் வார்டுகளுக்கு தேவையான வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்வது தொடர்பான கோரிக்கைகளை முன் வைத்தனர்.
    • வளர்ச்சி திட்ட பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது என்றார்.

    அனுப்பர்பாளையம் :

    திருமுருகன்பூண்டி நகராட்சி அவசரக்கூட்டம் நடந்தது. நகராட்சித் தலைவர் குமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராஜேஸ்வரி, கமிஷனர் முகமது சம்சுதீன் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் வார்டுகளுக்கு தேவையான வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்வது தொடர்பான கோரிக்கைகளை முன் வைத்தனர். நகராட்சி தலைவர் பதில் அளித்து பேசிய போது, நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் நகராட்சிக்கு ஒதுக்கப்பட்ட பொது நிதியில் இருந்து 10 கோடி ரூபாய் மதிப்பில் சாலை மேம்பாட்டுப் பணிகள், சாக்கடை தெருவிளக்கு உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது என்றார்.

    • கப்பலூர் சுங்கச்சாவடியை எதிர்த்து போராட்டம் தொடரும் என ஒருங்கிணைப்பு போராட்ட குழுவினர் தெரிவித்தனர்.
    • உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரில் சுங்கச்சாவடி விதிமுறைக்கு புறம்பாக அமைக்கப்பட்டுள்ளது.

    திருமங்கலம் நகரில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியை கடக்க ஒவ்வொரு முறையும் உள்ளூர் வாகனங்கள் கட்டணம் செலுத்தும் முறை உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கும், சுங்கச்சாவடி நிர்வாகத்து க்கும் தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது.

    கப்பலூர் சுங்கச்சாவடியை கைப்பற்றிய புதிய ஒப்பந்த நிறுவனம் திருமங்கலம் வாகன உரிமையாளர்கள் மாதந்தோறும் ரூ.310 கட்ட வேண்டும். சுங்கச்சாவடியை கடக்கும் போது கட்டணம் செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியது. மேலும் சுங்கச்சாவடி பாக்கித் தொகை லட்சக்கணக்கில் இருப்பதாகவும், அதனை உடனே செலுத்தக்கோரி வாகன உரிமையாளருக்கு கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகம் தெரிவித்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கப்பலூர் சுங்கச்சா வடி ஒருங்கிணைப்பு போராட்ட குழுவினர் நேற்று திருமங்கலத்தில் கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இந்த நிலையில் நேற்று இரவு கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் மூர்த்தி தலைமையில் சுங்கச்சாவடி நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

    அமைச்சரின் அறிவிப்பை முன்னிட்டு போராட்ட குழுவின் அவசர கூட்டம் நடந்தது. இதில் அமைச்சரின் கருத்தில் முழு திருப்தி இல்லை. இந்த அறிவிப்பு தற்காலிகமானது தான். கப்பலூர் சுங்கச்சா வடிக்கு நிரந்தர தீர்வு எட்டும் வரை போராட்டம் தொடரும். விரைவில் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட போவதாக போராட்டக்குழு தெரிவித்தனர்.

    ×