என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கண்காணிப்பு கேமராக்கள்"
- ஆடி கிருத்திகை திருவிழா 5 நாட்கள் விமரிசையாக நடைபெற உள்ளது.
- காவடிக்கான கட்டணத்தையும் ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருத்தணி:
திருத்தணி முருகன் கோயில் ஆடி கிருத்திகை திருவிழா வருகிற 27-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் விமரிசையாக நடைபெற உள்ளது. சுமார் 5 லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் திருத்தணி கோவிலில் ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் மலைக்கோவிலில் உள்ள காவடி மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, ஆர். காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர் பி.கே.சேகர் பாபு கூறியதாவது:-
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக 25 சதவீத பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பா ர்க்கப்படுகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பல்வேறு அடிப்படை வசதிகள் கூடுதலாக ஏற்படுத்தப்பட உள்ளன.
பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி 120 இடங்களிலும், கழிப்பிட வசதி 160 இடங்களிலும், தற்காலிக குளியலறை வசதி 60 இடங்களிலும், கண்காணிப்பு காமிராக்கள் 160 இடங்களிலும், பொதுதகவல் அறிவிப்பு மையம் 10 இடங்களிலும், கண்காணிப்பு கோபுரங்கள் 24 இடங்களிலும் அமைக்கப்பட உள்ளன.
கூடுதல் பஸ்கள் இயக்கவும், 4 தற்காலிக பஸ்நிலையங்களும், சிறப்பு ரெயில்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஆடிக்கிருத்திகை விழாவுக்கு வருகை தரும் 50 ஆயிரம் பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட உள்ளது.
திருவண்ணாமலையில் பவுர்ணமி தினத்தில் சிறப்பு தரிசன கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் இந்த ஆண்டு ஆடிக்கிருத்திகை விழாவுக்கு 200 ரூபாய் சிறப்பு தரிசன கட்டணத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனால் ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி 27-ந்தேதி முதல் 5 நாட்கள் சிறப்பு கட்டணம் இன்றி பக்தர்கள் தரிசனம் செய்யலாம். இதேபோல் பக்தர்கள் கொண்டு வரும் காவடிக்கான கட்டணத்தையும் ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை செயலாளர் சந்திரமோகன், ஆணையர் ஸ்ரீதர், மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், போலீஸ்சூப்பிரண்டு சீனிவாச பெருமாள், சந்திரன் எம்.எல்.ஏ., அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன் மற்றும் அறங்காவலர்கள் உஷா ரவி, மோகனன், சுரேஷ் பாபு, நாகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- மலை பாதையில் விபத்தை தடுக்க அங்குள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.
- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அலைமோதுகிறது.
திருப்பதி:
திருப்பதி மலைப்பாதையில் பக்தர்கள் செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. கடந்த 2 மாதங்களில் அதிக விபத்துக்கள் நடந்தது.
இதனால் நேற்று மலை பாதையில் விபத்தை தடுக்க அங்குள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டு வேண்டுதல் நடத்தினர்.
திருப்பதியில் சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில், போக்குவரத்து விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்த மாவட்ட காவல்துறை முடிவு செய்துள்ளது.
மலைப்பாதையில் விபத்துகள் அதிகம் நடைபெறும் வளைவுகளில் அதிக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த உள்ளனர். மேலும் இரவு நேரங்களில் சிக்னல் அளிக்கும் வகையில் சாலை வளைவுகளில் மிளிரும் விளக்குகள் பொருத்தப்பட உள்ளது.
கேமராக்கள் மூலம் அதிவேகமாக வாகன ஓட்டுபவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அலைமோதுகிறது. நேற்று 78,487 பேர் சாமி தரிசனம் செய்தனர். 38,213 பேர் முடிகாணிக்கை செலுத்தினர்.
நேரடி இலவச தரிசனத்தில் காத்திருப்பு அறைகளை தாண்டி ஒரு கிலோமீட்டர் மேல் பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். இன்று காலை சாமி தரிசனத்திற்கு 24 மணி நேரமானது.
- ஒகேனக்கல்லுக்கு தினமும் 1000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
- கேமராக்களை முறையாக பராமரிக்காததால் கேமராக்கள் பழுதாகி செயல்படாமல் உள்ளது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் நகர் பகுதியில் கடந்த காலங்களில் குற்ற சம்பவங்கள் அதிகரித்தது. இதனை தடுக்க பென்னாகரம் காவல்துறை சார்பில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் முதன்மையானது பென்னாகரம் நகர் பகுதியில், முக்கிய சாலை சந்திப்புகளிலும், கடைவீதிகளிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது.
அதற்காக பென்னாகரம் வர்த்தகர்கள் மற்றும் அரசு உதவியுடன் பென்னாகரத்தின் பிரதான பகுதிகளில், போலீசார் நவீன கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினர். இதனைத் தொடர்ந்து குற்ற சம்பவங்கள் படிப்படியாக குறைந்தது. மேலும் கண்காணிப்பு கேமராவை பயன்படுத்தி நிறைய குற்றவாளிகளும் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர். ஆனால் காலப்போக்கில் கண்காணிப்பு கேமராக்களை முறையாக பராமரிக்காமல் விட்டதன் காரணமாக, பெரும்பான்மையான கேமராக்கள் பழுதாகி செயல்படாமல் உள்ளது.
இந்நிலையில் பென்னாகரம் நகர் பகுதியில், தற்போது, சாலையோர கடைகள் முதல் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் தற்போது கோடை காலம் என்பதால் ஒகேனக்கல்லுக்கு தினமும் 1000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. உள்ளூர் வாகனங்கள் மட்டுமல்லாமல் அண்டை மாவட்ட மற்றும் அண்டை மாநில வாகனங்களும் ஒகேனக்கல் வந்து செல்வதால் சிறு சிறு விபத்துக்கள் நடந்த வண்ணம் உள்ளது. இந்த விபத்துக்களை கண்காணிக்கவும், தடுக்கவும், கண்காணிப்பு கேமராக்கள் மிகவும் அவசியமாகிறது.
இந்நிலையில் பென்னாகரம் பகுதியில் பெரும்பான்மையான கண்காணிப்பு கேமராக்கள் பெயரளவுக்கு மட்டுமே இருப்பதால் குற்றங்களை கண்டுபிடிக்கவும், தடுக்கவும் முடியாமல் பென்னாகரம் போலீசார் மெத்தன போக்குடன் உள்ளனர்.
இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் கேள்வி எழுப்பினால் பென்னாகரம் போலீசார் அலட்சியத்துடன் பதில் அளிக்கின்றனர்.
தற்போது பென்னாகரத்திற்கு புதிய டிஎஸ்பியாக மகாலெட்சுமி பதவியேற்றுள்ளார். இவரது முன்னெடுப்பில் மூலம் கண்காணிப்பு கேமராக்கள் சீரமைக்கப்படுமா? என்பது இப்பகுதி வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- ராணிப்பேட்டை போலீஸ் சூப்பிரண்டிடம் மனு
- மொத்தம் 21 மனுக்கள் பெறப்பட்டன
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட செயலாளர் மோகன் கொடுத்த மனுவில்,வாலாஜா அடுத்த வன்னிவேடு கிராமத்தில் புவனேஸ்வரி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது.இந்த கோவிலின் பூட்டை உடைத்து தொடர்ந்து திருட்டு சம்பவம் நடைபெற்று வருகிறது. இதற்காக கோவிலில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது, அவற்றையும் சேதப்படுத்தியும், திருடிச் சென்று விட்டனர்.
இந்த தொடர் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக வாலாஜா போலீசார் தீவிர விசாரணை நடத்தியோ, தனிப்படை அமைத்தோ திருட்டில் ஈடுபட்டவர்களை பிடித்து கோவிலுக்கு சொந்தமான பொருட்களை மீட்க வில்லை.
எனவே இனி வரும் காலங்களில் கோவிலில் திருட்டு சம்பவத்தை தடுக்க வேண்டும். கோவிலைச் சுற்றி உயர்கோபுரங்கள் அமைத்து அதில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். வாலாஜா போலீஸ் நிலையத்திலிருந்து நேரடியாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இது தவிர பொதுமக்களிடமிருந்து மொத்தம் 21 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்று கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மனுக்கள் மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
- அதிக குற்ற செயல்கள் நடப்பதாக புகார்
- சரி செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்
நெமிலி:
பாணாவரம் பகுதியில் தொடர்ந்து பைக் திருட்டுசம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் சுமாா் 6 பைக்குகள் திருடப்பட்டுள்ள தாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட வர்களிடமே சி.சி.டி.வி. கேமரா பதிவை கேட்பதாக கூறப்படுகின்றது.
பாணாவரத்தில் முக்கிய பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து சி.சி.டி.வி. கேமராக்களை முறையாக பராமரிக்காததால் பெயரளவிற்கு மட்டுமே உள்ளது. பல சி.சி.டி.வி. கேமராக்கள் காட்சி பொருளாகமட்டுமே காட்சியளிக்கின்றன.
தமிழக அரசால் பொது இடங்களிலும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
இதனால் பல குற்றச்செயல்களுக்கு மூன்றாவது கண்ணாடியாக இருந்து வரும் சி.சி.டி.வி. கேமராக்கள் பார்வைக்காக மட்டுமே சில இடங்களில் உள்ளதால் குற்ற செயல்கள் ஈடுபடுபவர்கள் எந்த ஒரு தயக்கம் பயமும் இன்றி தனது கைவரிசை காட்டுகின்றனர்.
இது குறித்து மாவட்ட நிர்வாக அலுவலர்கள் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டும் குற்ற செயல்களை தடுக்க செயல்படாமல் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை செயல்பட வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நல்லிபாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புறக்காவல் நிலையத்தை ஐ.ஜி. சுதாகர் திறந்து வைத்தார்.
- மாவட்டம் முழுவதும் 6627 கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாட்டில் உள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும், ஆயுதப்படை மைதா–னத்திலும் கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அங்குள்ள போலீசாரிடம் குறைகளை கேட்டு அறிந்தார். பின்னர் பள்ளிபாளையத்தில் கூட்டுக்கொள்ளை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை பாராட்டி அவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
நல்லிபாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புறக்காவல் நிலையத்தை ஐ.ஜி. சுதாகர் திறந்து வைத்து நிருபர்களிடம் கூறியதாவது,
நாமக்கல் மாவட்டத்தில் குற்றங்கள் வெகுவாக குறைந்து உள்ளது. கடந்த ஆண்டு 35 கொலை சம்ப–வங்கள் நிகழ்ந்த நிலையில் நடப்பாண்டில் 27 ஆக குறைந்து உள்ளது. மேற்கு மண்டலத்தில் தான் போக்சோ சட்டத்தின் கீழ் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
நாமக்கல் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது. விபத்துகளும் குறைவாகவே உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி நிருபர்களிடம் கூறுகையில், நாமக்கல் மாவட்டத்தில் குற்ற நடவடிக்கைகளை குறைக்கும் வகையிலும், குற்றவாளிகள் நடமாட்–டத்தை கண்கா–ணிக்கவும் நாமக்கல் நகரில் 283 கண்காணிப்பு கேமராக்கள், வாகன பதிவுகளை கண்டறியும் 6 அதி நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. மாவட்டம் முழுவதும் 6627 கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாட்டில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்