search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வருகை அதிகரிப்பு"

    • நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் வாகனங்களின் சூட்டை தணிக்க ஒதுங்கி நிற்கக்கூட இடம் இல்லாத நிலை உள்ளது.
    • கோடை சீசன் தொடங்கிய நிலையிலும் கடந்த சில தினங்களாக சுற்றுலாப்பயணிகள் வருகையின்றி காணப்பட்ட கொடைக்கானல் மலைப்பகுதி தற்போது சுற்றுலாப்பயணிகள் வருகையால் களைகட்ட துவங்கியுள்ளது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இ-பாஸ் நடைமுறை அமுல்படுத்தியதைத் தொடர்ந்து சுற்றுலாப்பயணிகளின் வருகை முற்றிலும் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் வார விடுமுறையான நேற்றும் இன்றும் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநில சுற்றுலாப்பயணிகளின் வருகை காலை முதலே அதிகரித்து காணப்பட்டது. உகார்த்தேநகர், சீனிவாசபுரம், மூஞ்சிக்கல், ஏரிச்சாலை, அப்சர்வேட்டரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றுலாப்பயணிகளின் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து சாலையில் காத்திருந்து தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் வாகனங்கள் ஊர்ந்தப்படி சென்றன.

    மேலும் இந்த போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கூடுதல் வாகனங்கள் நிறுத்தும் இடம், மற்றும் மாற்று சாலையை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் வாகனங்களின் சூட்டை தணிக்க ஒதுங்கி நிற்கக்கூட இடம் இல்லாத நிலை உள்ளது.

    வாகனங்கள் அதிக சூடாகி ரேடியேட்டர் பழுதானாலும் வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்தக்கூட இடமில்லாத நிலையும், ஒரே சீராக நெடுஞ்சாலையில் பயணிக்க முடியாத அளவில் நெடுஞ்சாலைகளில் ஆக்கிரமிப்பு நிலவி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோடை சீசன் தொடங்கிய நிலையிலும் கடந்த சில தினங்களாக சுற்றுலாப்பயணிகள் வருகையின்றி காணப்பட்ட கொடைக்கானல் மலைப்பகுதி தற்போது சுற்றுலாப்பயணிகள் வருகையால் களைகட்ட துவங்கியுள்ளது. ஆனால் கோடை சீசன் முடியும் காலம் நெருங்கி உள்ள நிலையில் இதுவரை அடிப்படை வசதிகளை மேம்படுத்தாமல் அலட்சியம் காட்டி வருவதும் வேதனைக்குரியதாக உள்ளதாக சுற்றுலா பயணிகள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.

    ஒவ்வொரு சீசன் காலங்களிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த தவறும் நிலையில் கொடைக்கானலுக்கு சுற்றுலா வருவதை எதிர்வரும் காலங்களில் சுற்றுலாப் பயணிகள் தவிர்க்கும் நிலை உருவாகி வருகிறது. கொடைக்கானல் சுற்றுலாவை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசின் சுற்றுலாத்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

    • தமிழகத்தில் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதிக்கு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
    • சுற்றுலா பயணிகள் பூலாம்பட்டி காவிரி கதவணை நீர்த்தேக்க பகுதியில் விசைப்படகு சவாரி செய்து பொழுதை கழித்தனர்.

    எடப்பாடி:

    தீபாவளி பண்டிகையை யொட்டி தமிழகத்தில் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதிக்கு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    குட்டி கேரளா என்று சுற்றுலா பயணிகளால் செல்லமாக அழைக்கப்படும் இயற்கை எழில் நிறைந்த பூலாம்பட்டி காவிரி கதவணை நீர் திறப்பு பகுதியில், திரண்டிருந்த சுற்றுலா பயணிகள் அங்குள்ள நீர் மின் உற்பத்தி நிலையம், அணைப் பாலம், நீர் உந்து நிலையம், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை கண்டு ரசித்தனர்.

    சுற்றுலா பயணிகள் பூலாம்பட்டி காவிரி கதவணை நீர்த்தேக்க பகுதியில் விசைப்படகு சவாரி செய்து பொழுதை கழித்தனர். மேலும் அங்கு கிடைக்கும் ருசி மிகுந்த மீன் உணவு வகைகளை வாங்கி உண்டு மகிழ்ந்தனர். திரளான சுற்றுலா பயணிகள் கரையோர பகுதியில் குடும்பத்துடன் பொழுதை கழித்தனர்.

    மேலும் பூலாம்பட்டி பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோவில், பிரம்மாண்ட நந்திகேஸ்வரர் சன்னதி, காவிரி தாய் சன்னதி, காவிரிக்கரை படித்துறை விநாயகர் கோவில் உள்ளிட்ட தலங்களிலும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது.

    வழக்கத்தை விட கூடுதலான சுற்றுலா பயணிகள் குவிந்ததால் இப்பகுதிகள் உள்ள வியாபா ரிகள் மற்றும் வாடகை வாகன ஓட்டுனர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இப்பகுதியில் கூடுதல் எண்ணிக்கையிலான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • கீழடி அருங்காட்சியகத்துக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
    • பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளை கல்வி சுற்றுலாவாக அழைத்து வர ஏற்பாடு செய்ய வேண்டும்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட இடங்களில் தொல்லியல் துறை சார்பில் அகழ் வாராய்ச்சி பணிகள் நடந்தன. கீழடியில் தமிழக அரசின் சார்பில் ரூ.18 கோடியே 40 லட்சத்தில் செட்டிநாட்டு கட்டிடக்கலை பாணியில் அருங்காட்சியம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.

    இந்த அருங்காட்சியத் தில் தொல்லியல்துறையின் சார்பில் அகழ்வாராய்ச்சி யில் கண்டெடுக்கப்பட்ட அரிய பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. கடந்த 6-ந்தேதி முதல் இங்கு வரும் சுற்றுலா பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், பேராசி ரியர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் என ஏராளமானோர் வந்த வண்ணம் உள்ளனர்.

    கீழடியில் உலகத்தரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தை பார்வையிடும் மாணவர்கள் தமிழர்களின் பண்டைய நாகரீகத்தை அறிந்து கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தமிழர்களின் பண்டைய கால நாகரீகம் வெளி உலகத்திற்கு அடையாளம் காட்டப்பட்டுள்ளது.

    இந்த அருங்காட்சிய கத்தில் பழங்கால மண்பானை, ஓடுகள், தமிழ் பிராமி எழுத்துக்கள், கருப்பு, சிவப்பு பானைகள், பண்டைய கால ஆயுத ங்கள். ஆபரணங்கள் என தமிழர்களின் வரலாற்றை அறிய கூடிய ஆயிரக் கணக்கான பொருட்களை சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவர்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

    வருகிற ஏப்ரல் 1-ந்தேதி முதல் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட வரும் அனைவருக்கும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தற்போது வரை அதிகளவில் ராமேசுவரம் வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் தொல்லி யல் ஆர்வலர்கள், பொது மக்கள் குடும்பத்துடன் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டு செல்கின்றனர்.

    கடந்த வாரம் மெக்சிகோ நாட்டின் இந்தியாவிற்கான தூதர் குழுவினரோடு வந்து பார்வையிட்டு வியந்தார். தற்போது பள்ளி, கல்லூரிகளில் பொது தேர்வுகள் நடைபெறுவதால் பள்ளி மாணவ-மாணவிகளின் வருகை குறைவாக உள்ளது. கோடைவிடுமுறை முடிந்த பிறகு தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளை கல்வி சுற்றுலாவாக அரசு செலவில் அழைத்து வர ஏற்பாடு செய்ய வேண்டும்.

    பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கீழடி அருங்காட்சியகத்தை பார்க்க கட்டண விலக்கு அளிக்க வேண்டும். மதுரையில் உள்ள விமான நிலையம், ெரயில் நிலையம் ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகள், வெளிநாடு, வெளிமாநில பயணிகளுக்கு கீழடி அருங்காட்சியகத்தின் பெருமைகளை விளக்கும் வகையில் பெரிய அளவிலான ஒளிரும் டிஜிட்டல் திரைகள் அமைக்க வேண்டும்.

    இதேபோல் மதுரை- விரகனூர் ரிங்ரோட்டில் இருந்து கீழடி அருங்காட்சிய கம் வரை அரசு பஸ் வசதி செய்து தர வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • சபரிமலை சீசனையொட்டி மதுரைக்கு அய்யப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.
    • கோவில்கள்-கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.



    மதுரை எல்லீஸ் நகரில் உள்ள மீனாட்சி அம்மன் கோவில் வாகன நிறுத்தும் இடத்தில் காணப்பட்ட பக்தர்கள் கூட்டம்.

     ....................

    மதுரை

    சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் முதல் நாளில் மாலை அணிந்து 48 நாட்கள் விரதத்தை தொடங்குவார்கள். விரதம் இருக்கும் பக்தர்கள் தினமும் ஏதாவது ஒரு கோவிலுக்கு செல்வார்கள். அதே போல் சபரிமலைக்கு செல்லும் போதும், சபரிமலையில் சாமி தரிசனம் செய்து விட்டு ஊருக்கு திரும்பும் போதும் வழியில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு செல்வார்கள். இதனால் சபரிமலை சீசன் தொடங்கியதில் இருந்தே பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ள ஊர்களில் அய்யப்ப பக்தர்கள் வருகை அதிகமாக காணப்படும்.

    மதுரைக்கும் அய்யப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. சபரிமலை சீசன் தொடங்கியதில் இருந்தே மதுரை மாவட்டம் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.

    இதன் காரணமாக மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை வீதி, மாசி வீதிகளில் காலை முதல் இரவு வரை அய்யப்ப பக்தர்களாக காட்சி அளிக்கின்றனர். அவர்கள் கோவிலை சுற்றியுள்ள கடைகளில் சுவாமி படங்கள், பூஜை பொருட்கள், ஆடைகள் மற்றும் பொருட்களை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இதனால் மதுரையில் உள்ள கடைகளில் சபரிமலை சீசன் விற்பனை அதிகரித்துள்ளது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பஸ், வேன், கார் உள்ளிட்ட கனரக வாகனங்களில் வரக்கூடிய பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தங்களின் வாகனங்களை எல்லீஸ் நகரில் உள்ள கோவில் வாகன காப்பகத்தில் நிறுத்தி விட்டு கோவிலுக்கு செல்ல வேண்டும்.

    தற்போது அய்யப்ப பக்தர்கள் அதிகளவில் வர தொடங்கி இருப்பதால் மீனாட்சி அம்மன் கோவில் வாகன காப்பகம் வாகனங்களால் நிரம்பி வழிகிறது. அந்த பகுதியில் உள்ள சாலையில் நாள் முழுவதும் அய்யப்ப பக்தர்களாக காட்சி அளிக்கின்றனர். இதனால் அந்த பகுதியில் சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான கடைகள் தோன்றி உள்ளன.

    இதே போன்று திருப்பரங்குன்றம் முருகன் கோவில், பழமுதிர்சோலை முருகன் கோவில், அழகர்கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கும் அய்யப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.

    ×