search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடத்துனர்"

    • ஓட்டுநர் மாரடைப்பு ஏற்பட்டு பேருந்து இருக்கையில் இருந்து சரிந்து விழுகிறார்.
    • ஓட்டுநர் இருக்கையில் அமரும் நடத்துனர் பேருந்தை நிறுத்தி பயணிகளை உயிரை காப்பாற்றினார்.

    கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூருவில் பேருந்தை ஒட்டிக்கொண்டிருந்த போதே ஓட்டுநர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்ட உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இன்று காலை 11 மணியளவில் நெலமங்கலவில் இருந்து தசனபுரா நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்த போது ஓட்டுநர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

    இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அந்த வீடியோவில், ஓட்டுநர் மாரடைப்பு ஏற்பட்டு இருக்கையில் இருந்து சரிந்து விழுகிறார். ஓட்டுநர் இல்லாமல் பேருந்து தடுமாறுகிறது. அப்போது உடனடியாக ஓட்டுநர் இருக்கையில் அமரும் நடத்துநர் பேருந்தை லாவகமாக நிறுத்தி பயணிகளின் உயிரை காப்பாற்றியுள்ளார்.

    உயிரிழந்த ஓட்டுநர் பெயர் கிரண் குமார் என்று தெரியவந்துள்ளது. துணிச்சலாக செயல்பட்டு பலரின் உயிரை காப்பாற்றிய நடத்துநர் ஓபலேஷ்க்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    • ஓட்டுநரும் நடத்துனரும் அவரை பேருந்தில் ஏற அனுமதிக்க வில்லை.
    • கதவின் அருகே தொங்கியபடி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் அவர் பயணித்துள்ளார்.

    சண்டிகர் நகரில் ஓடும் பேருந்தின் கதவில் தொங்கியபடி ஒருவர் பயணித்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பாதிக்கப்பட்ட நபர் அலுவலகம் செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்துள்ளார். அப்போது அவ்வழியே பேருந்து வந்துள்ளது. ஆனால் ஓட்டுநரும் நடத்துநரும் அவரை பேருந்தில் ஏற அனுமதிக்கவில்லை. இதனால் பேருந்தின் கதவின் அருகே தொங்கியபடி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் அவர் பயணித்துள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர் புகார் அளித்ததன் அடிப்படையில், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 

    • தான் வைத்திருந்த கத்தியை உருவி கண்டக்டர் யோகேஷின் அடிவயிற்றில் குத்தியுள்ளார்.
    • பஸ்சில் பயணித்த மற்ற பயணிகளையும் அவர் கத்தியால் தாக்க முற்பட்டுள்ளார்.

    கண்டக்டருக்குபடிக்கட்டில் நிற்க வேண்டாம் என்று அறிவுரை வழங்கிய பஸ் கண்டக்டரை பயணி கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரில் நேற்று [செவ்வாய்க்கிழமை] மாலை அரசு [BMTC] பஸ்ஸில் ஏறிய ஹர்ஷ் சின்ஹா [Harsh Sinha] என்ற 25 வயது இளைஞர் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்துள்ளார். இதனைக் கவனித்த பஸ் கண்டக்டர் யோகேஷ் [45 வயது] படிக்கட்டில் நிற்காமல் உள் வரும்படி அறிவுறுத்தியுள்ளார்.

    ஆனால் கண்டக்டர் சொல்வதைக் கேட்காமல் அவருடன் இளைஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் தான் வைத்திருந்த கத்தியை உருவி கண்டக்டர் யோகேஷின் அடிவயிற்றில் குத்தியுள்ளார். மேலும் பஸ்சில் பயணித்த மற்ற பயணிகளையும் அவர் கத்தியால் தாக்க முற்பட்டுள்ளார். கத்தியைக் காட்டி மிரட்டி அனைவரையும் பஸ்சில் இருந்து இறங்கவைத்துவிட்டு அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார்.

    பஸ் ஓட்டுநர் சம்யோஜித்தாக பஸ்சின் ஆட்டோமேட்டிக் கதவை லாக் செய்துவிட்டு வெளியே குதித்த பின்னர் உள்ளே மாட்டிக்கொண்ட அந்த இளைஞர் கோடரியால் பஸ்சை சேதப்படுத்தியுள்ளார். ஒயிட்பீல்டு பகுதியில் உள்ள வைதேகி சர்க்கிள் என்ற இடத்தில் நேற்று இரவு 7 மணி அளவில் இந்த சம்பவம் நடந்த நிலையில் உடனே அங்கு விரைந்த போலீசார் அந்த இளைஞரை கைது செய்தனர்.

    மேலும் கத்தியால் தாக்கப்பட்ட கண்டக்டர் ரத்தம் ஒழுகிய நிலையில் அங்கிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். போலீஸ் விசாரணையில் இளைஞர் ஹர்ஸ் சின்ஹா ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் பெங்களூரில் கால் சென்டரில் வேலை பார்ப்பவர் என்பதும் தெரியவந்துள்ளது. 

    • மாணவர்கள் படிகளின் அருகே உள்ள ஜன்னல் கம்பியை பிடித்து தொங்கியபடி பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
    • அறிவுரைக்கு பின்னும் ஆபத்தான பயணம் மேற்கொண்டால், அருகே உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும்.

    சென்னை:

    பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் அறிவுரை வழங்கி உள்ளார். மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    * மாநகர பேருந்துகளை பாதுகாப்பாக இயக்க வேண்டும்.

    * அரசு பேருந்துகளில் பயணிகள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

    * மாணவர்கள் படிகளின் அருகே உள்ள ஜன்னல் கம்பியை பிடித்து தொங்கியபடி பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

    * முன் மற்றும் பின் பக்கங்களில் உள்ள படிக்கட்டுகளின் அருகே உள்ள ஜன்னல்களுக்கு கண்ணாடி நிரந்தரமாக பொருத்த வேண்டும்.

    * ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தக்க அறிவுரை வழங்க வேண்டும்.

    * அறிவுரைக்கு பின்னும் ஆபத்தான பயணம் மேற்கொண்டால், அருகே உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும்.

    * பேருந்து சாலை சந்திப்பு, கூட்ட நெரிசல் பகுதிகளில் மெதுவாக செல்லும்போது இறங்க முயற்சிக்கும் பயணிகளுக்கு நடத்துநர் எச்சரிக்கை செய்ய வேண்டும்.

    * பேருந்து நிறுத்தம் வருவதை நடத்துநர் குரல் மூலம் முன் கூட்டியே தெரிவித்து பயணிகளை இறக்க தயார்ப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • குலசேகரம், மார்த்தாண்டம், தக்கலை, நாகர்கோவில், மதுரை, சென்னை, திருவனந்தபுரம் என பல்வேறு வழித்தடங்களில் 80 பஸ்கள் இயக்கப் படுகிறது
    • இரவு நேர கடைசி டிரிப் பஸ்கள் திருவட்டார் பஸ் நிலையத்திற்கு வராமல் சுமார் ½ கிலோமீட்டர் தொலைவில் உள்ள காங்கரையில் பயணிகளை இறக்கி விட்டு விட்டு பணிமனைக்குச்சென்று விடுகின்றன

    கன்னியாகுமரி :

    1971-ம் ஆண்டு திருவட்டாரில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை திறக்கப்பட்டது. பின்னர் பஸ்கள் நிறுத்த போதிய இடம் இல்லாததால் 35 ஆண்டுகளுக்கு முன்பு திருவட்டார் கேசவபுரம் ரோட்டில் ஸ்ரீராமன்கோணம் என்ற இடத்தில் புதியதாக பணிமனை மாற்றப்பட்டதை அடுத்து பணி மனை பஸ் நிலையமாக மாற்றப்பட்டது.

    திருவட்டார் பணிமனையில் இருந்து குலசேகரம், மார்த்தாண்டம், தக்கலை, நாகர்கோவில், மதுரை, சென்னை, திருவனந்தபுரம் என பல்வேறு வழித்தடங்களில் 80 பஸ்கள் இயக்கப்படுகிறது. கன்னியா குமரி மாவட்ட மலையோரப் பகுதிகளில் அதிகமான பஸ்கள் இயக்கப்படுவதும் இங்கிருந்துதான்.

    சமீப காலங்களில் இரவு நேரம் குலசேகரம், பேச்சிப்பாறை, கடையாலு மூடு, குற்றியார் ஆகிய இடங்களுக்குச்சென்று திரும்பும் இரவு நேர கடைசி டிரிப் பஸ்கள் திருவட்டார் பஸ் நிலையத்திற்கு வராமல் சுமார் ½ கிலோமீட்டர் தொலைவில் உள்ள காங்கரையில் பயணிகளை இறக்கி விட்டு விட்டு பணிமனைக்குச்சென்று விடுகின்றன.

    உதாரணமாக இரவு நேர கடைசி டிரிப் பஸ்சில் குலசேகரத்தில் இருந்து திருவட்டார் பஸ்ஸ்டாண்ட் பகுதிக்கு வருபவர் பஸ்சில் திருவட்டார் என்ற பெயர் பலகையைப்பார்த்து பஸ்சில் ஏறுவார். திருவட்டாருக்கு டிக்கெட்டும் எடுப்பார். ஆனால் பஸ் காங்கரை சந்திப்பு வந்ததும் கண்டக்டர் திருவட்டார் பஸ் நிலையத்திற்கு பஸ் போகாது இறங்குங்க என்றவாறு பயணிகளை கீழே இறங்க வற்புறுத்துவார்.

    வேறு வழியின்றி பயணிகள் பஸ்சிலிருந்து இறங்குவர். அவர்கள் வேறு ஆட்டோ பிடித்தோ, நடந்தோ தான் பஸ்ஸ்டாண்ட் அருகில் உள்ள வீட்டுக்கு செல்ல முடியும். இது தொடர்பாக இரவு நேர கடைசி டிரிப் காங்கரை சந்திப்பில் வரும்போது அடிக்கடி டிரைவர், கண்டக்டர்களுக்கும் பஸ் பயணிகளுக்கும் தகராறு ஏற்படுகிறது.

    நேற்று முன் தினம் இரவில் திருவட்டார் பஸ் ஸ்டாண்ட் அருகில் வசிக்கும் வயதான தம்பதியை குலசேகரத்தில் இருந்து வந்த திருவட்டார் பெயர்பலகை போட்ட பஸ்சில் இருந்து வலுக்கட்டாயமாக காங்கரையில் வைத்து கீழே இறங்குமாறு கூற, அவர்கள் வேறு வழியின்றி அழுதுகொண்டே வண்டியில் இருந்து இறங்கி சிரமப்பட்டு நடந்து திருவட்டாருக்கு சென்று சேர்ந்தனர். இவ்வாறு அடிக்கடி நடப்பதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே இரவு நேரம் குலசேகரம் பகுதியில் இருந்து திருவட்டார் வரும் அனைத்து பஸ்களும் திருவட்டார் பஸ் ஸ்டாண்டுக்கு வந்த பின்பு, பணிமனைக்குச்செல்ல நடவடிக்கை மேற்கொள்ள அரசு போக்குவரத்துக்கழக நிர்வாகம் முன்வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×