என் மலர்
நீங்கள் தேடியது "பப்பாளி"
- தீர்த்தம் கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவரது பப்பாளி தோட்டத்தில் பப்பாளி பழங்கள் கொத்து, கொத்தாக காய்த்து மரத்தில் தொங்குகின்றன.
- இந்த காட்சி அவ்வழியாக செல்லும் பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள தீர்த்தம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் அதிக அளவில் பப்பாளி விளைச்சல் செய்யப்பட்டு வருகிறது.
இப்பகுதியில் பப்பாளி சாகுபடி செய்யப்பட்டு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கும் மற்றும் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த வருடம் நீர் வளம் நன்றாக இருப்பதால் கடந்த 6 மாதங்களாக இப்பகுதியில் விவசாயிகள் பப்பாளி விளைச்சலில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது ஒரு கிலோ பப்பாளி 20 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்க்கப்பட்டு வருவதால் பப்பாளி நல்ல லாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தீர்த்தம் கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவரது பப்பாளி தோட்டத்தில் பப்பாளி பழங்கள் கொத்து, கொத்தாக காய்த்து மரத்தில் தொங்குகின்றன.
இந்த காட்சி அவ்வழியாக செல்லும் பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.
தற்போது பப்பாளி பழங்களை பல்வேறு மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- 1 ஏக்கருக்கு 900 பப்பாளி நாற்றுகள் நடலாம்.
- நாற்று நட்ட 6 மாதத்தில் இருந்து பப்பாளி பழம் அறுவடை செய்யலாம்.
பல்லடம் :
பல்லடம் பகுதியில், பப்பாளி செடியில் வைரஸ் நோய் தாக்குதல் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
வைட்டமின் ஏ அதிகம் உள்ள பப்பாளிபழம், வெப்பமான நிலப்பரப்பில் அதிக அளவில் வளர்கிறது. இதனால் பப்பாளி விவசாயத்தில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பப்பாளியில் ரெட்லேடி, ஜிண்டா என இருவகைகள் உண்டு. ரெட்லேடி பழத்திற்காகவும், ஜிண்டா பப்பாளிப் பால் உற்பத்திக்காகவும் சாகுபடி செய்யப்படுகிறது. பல்லடம் பகுதி விவசாயிகள் ரெட்லேடி பப்பாளி விவசாயத்தில் ஈடுபடுகின்றனர்.
இது குறித்து அவரப்பாளையத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறியதாவது:- கடந்த சில வருடமாக பப்பாளி விவசாயம் செய்து வருகிறோம். தண்ணீர் தேவை குறைவு, பராமரிப்பு செலவு குறைவு என்பதால், பப்பாளி விவசாயம் செய்கிறோம். 1 ஏக்கருக்கு 900 பப்பாளி நாற்றுகள் நடலாம், நாற்று நட்ட 6 மாதத்தில் இருந்து பப்பாளி பழம் அறுவடை செய்யலாம்.
வாரந்தோறும் ஏக்கருக்கு சுமார் 4 டன் வரை விளைச்சல் இருக்கும். 2 ஆண்டுகள் வரை பப்பாளி பழம் அறுவடை செய்யலாம். பின்னர் பப்பாளி மரம் அதிக உயரம் வளர்ந்து விடுவதால், பறிக்க முடியாத நிலை ஏற்படும். அதனால் 2 வருடங்களுக்கு பப்பாளி விளைச்சல் எடுத்துவிட்டு மீண்டும் அவற்றை அழித்து புதிய நாற்றுகள் நட்டு விடுவோம்.
தற்போது பப்பாளியில் வைரஸ் நோய் தாக்குதல் அதிகரித்துள்ளதால் செடிகளின் இலைகள் பழுத்து காய்ந்து வருகின்றன. நோய் தாக்கிய செடிகள் விரைவில் பட்டு போவதால், எங்களது உழைப்பு வீணாகி நஷ்டம் ஏற்படுகிறது. இந்த சீசனில் பப்பாளிக்கு ஓரளவு விலை கிடைக்கிறது. ஆனால் வைரஸ் தாக்குதலால் மகசூல் இழப்பு ஏற்படுவதுடன், நோய் முற்றிய செடிகள் வறண்டு விடுகின்றன. இதனை கட்டுப்படுத்த வழியின்றி தவித்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- வயதைக் குறைத்துக் காட்டக் கூடிய தன்மை பப்பாளிக்கு உண்டு.
- நோய் ஏற்படுத்தக் கூடிய நச்சுக் கிருமிகளை முற்றிலும் அகற்றும்.
பரபரப்பான வாழ்க்கை சூழலால் பலருக்கு உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க முடிவதில்லை. கவலை வேண்டாம். காய்கறி, பழங்கள் மூலமாகவும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள முடியும். இந்த பட்டியலில் முதலில் இருப்பது பப்பாளி. வைட்டமின்கள், இரும்பு சத்து, கால்சியம், ரிபோபிளாவின் உள்ளிட்டவை நிறைந்திருக்கும் ஒரு 'ஆல் ரவுண்டர்' பழம் பப்பாளி. உணவில் தினமும் பப்பாளி சேர்த்துக் கொண்டால் கழிவுகளை சரியான முறையில் வெளியேற்றி செரிமானத்தை சீராக்கும், கொழுப்பை எரித்துவிடும். பப்பாளியில் உள்ள பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து இதயத்தை பாதுகாக்கும். எனவே உங்கள் டயட்டில் பப்பாளியை மிஸ் பண்ண வேண்டாம்.
பப்பாளியில் ஆண்டி ஆக்சிடண்ட் இருக்கிறது. இதனால் நோய் ஏற்படுத்தக் கூடிய நச்சுக் கிருமிகளை முற்றிலும் அகற்றும். இதில் வைட்டமின் சி, ஏ, இ சத்துகள் நிறைந்திருப்பதால் கண் பார்வை தெளிவாக இருக்கும். கண்களுக்கு நல்லது.
வயதைக் குறைத்துக் காட்டக் கூடிய தன்மை பப்பாளிக்கு உண்டு. எனவே அதிகமாக பப்பாளி உண்பதால் செல்கள் வயதாவதைக் கட்டுப்படுத்தும்.
ஆஸ்துமா நோய் கொண்டவர்கள் பப்பாளியை தொடர்ந்து சாப்பிடுவதால் அதன் அளவு குறைந்து கட்டுப்பாடாக இருக்கும். பப்பாளி உண்பதால் புற்றுநோய் இல்லா ஆரோக்கிய உடலைப் பெறலாம். புற்று நோய்க் கிருமிகள் வரக்கூடிய அறிகுறிகள் தெரிந்தாலே பப்பாளி அதை முற்றிலும் அகற்றும்.
வைட்டமின் கே மற்றும் வைட்டமின்சி சத்துக் குறைபாடுக் காரணமாகத்தான் எலும்பு முறிவு பிரச்சனைகள் அதிகமாக ஏற்படுகிறது. இந்த இரண்டு சத்துகளும் பப்பாளியில் அதிகமாக இருக்கிறது. நீரிழிவு நோய் இருப்போரும் பப்பாளியை உண்ணலாம். இதில் சர்க்கரையின் அளவும் குறைவு என்பதால் பயமின்றி தாராளமாக உண்ணலாம். சர்க்கரை அளவும் கட்டுப்பாடாக இருக்கும்.
அஜீரணக் கோளாறு சரிசெய்யப்படும். என்சமைன் பப்பாளியில் அதிகம் இருப்பதால் அது உணவை எளிதில் ஜீரணித்துவிடும். நார்ச் சத்தும் பப்பாளியில் இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனையும் வராது. பப்பாளி நீர் நிறைந்த பழம் என்பதால் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளும்.
ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும் தன்மை பப்பாளியில் இருக்கிறது. நார்சத்து, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் ஆகியவை அதிக அளவில் இருப்பதால் இதயக் கோளாறுகள் ஏற்படாது. பொட்டாசியம் சத்து அதிகம் உட்கொள்ளப்பட்டால் உடலுக்கு தீங்கான சோடியத்தின் அளவைக் குறைக்கும். இதனால் உணவு ஜீரண சக்தி சீராகி மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படாது.
- ஊட்டச்சத்துகளை குடல் உடனடியாக உறிஞ்சிவிடும்.
- வாழைப்பழத்தில் பொட்டாசியமும் அதிகம் நிறைந்திருக்கும்.
காலையில் வயிறு காலியாக இருக்கும்போது உண்ணும் உணவுகளில் இருக்கும் ஊட்டச்சத்துகள் துரிதமாக உறிஞ்சப்பட்டுவிடும். குறிப்பாக பழங்களை வெறும் வயிற்றில் உட்கொள்ளும்போது அதில் இருக்கும் ஊட்டச்சத்துகளை குடல் உடனடியாக உறிஞ்சிவிடும். உடலின் அனைத்து உள் உறுப்புகளுக்கும் சத்துகளை கடத்தி உடலுக்கு தேவையான ஆற்றலை உடனடியாக கொடுப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவிடும். காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய 10 பழங்கள் குறித்து பார்ப்போம்.

1. வாழைப்பழம்:
வாழைப்பழம் எளிதில் ஜீரணமாகக்கூடியது. மேலும் இதிலிருக்கும் இயற்கையான சர்க்கரை, உடலுக்கு விரைவான ஆற்றலை அளிக்கும். வாழைப்பழத்தில் பொட்டாசியமும் அதிகம் நிறைந்திருக்கும். அது இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

2. தர்பூசணி:
தர்பூசணி அதிக நீர்ச்சத்து கொண்டது. கலோரிகளும் குறைவாகவே இருக்கும். வளர்சிதை மாற்றத்துக்கும் வித்திடும்.

3. பப்பாளி:
பப்பாளியில் பப்பைன் போன்ற நொதிகள் நிறைந்துள்ளன. அவை செரிமானத்திற்கு உதவும். மலச்சிக்கல் பிரச்சினைக்கும் நிவாரணம் தரும். அத்துடன் வைட்டமின்கள் ஏ, சி போன்ற ஆன்டி ஆக்சிடென்டுகளும் பப்பாளியில் உள்ளன. அவை ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் வலு சேர்க்கக்கூடியவை.

4. ஆரஞ்சு:
வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துக்கள் ஆரஞ்சு பழத்தில் மிகுந்திருக்கும். அவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், செரிமான செயல்பாடுகளை மேம்படுத்தவும் உதவிடும். வளர்சிதை மாற்ற செயல்பாடுகளையும் துரிதப்படுத்தும்.

5. ஆப்பிள்:
ஆப்பிளில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவி செய்யும். செரிமானம் சீராக நடைபெறவும் துணை புரியும். மேலும் ஆப்பிளில் இருக்கும் இயற்கை சர்க்கரை, உடலுக்கு தேவையான ஆற்றலை வெளியிடவும் உதவிடும்.

6. அன்னாசி:
அன்னாசி பழத்தில் புரோமெலைன் என்னும் நொதி உள்ளது. இது செரிமானத்திற்கு உதவும். வீக்கத்தையும் குறைக்கும்.

7. மாம்பழம்:
வைட்டமின்கள், நார்ச்சத்துகள் மாம்பழத்தில் மிகுந்திருக்கும். அவை அன்றைய நாளை உற்சாகத்துடன் தொடங்குவதற்கு உதவி செய்யும்.

8. பெர்ரி:
ஸ்ட்ராபெர்ரி, புளூபெர்ரி போன்ற பெர்ரி வகை பழங்களில் ஆன்டி ஆக்சிடென்டுகள் அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் இருக்கின்றன. வைட்டமின்களும், நார்ச்சத்துகளும் அதிகம் நிரம்பியுள்ளன. அறிவாற்றல் திறனுக்கும், இதய நலனுக்கும் வலு சேர்க்கும்.

9. கிவி:
கிவி பழத்தில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளன. இவை செரிமானத்திற்கும் நலம் பயக்கும்.

10. திராட்சை:
திராட்சையில் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளன. உடலுக்கு உடனடி ஆற்றலை கொடுக்கக்கூடியது.
- சரும வறட்சி அனைத்து வயதினரும் எதிர்கொள்ளும் பிரச்சினையாகும்.
- சீமை சாமந்திப்பூ இயற்கையான மாய்ஸ்சரைசராக செயல்படும்.
சரும வறட்சி அனைத்து வயதினரும் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினையாகும். வறட்சியை தவிர்த்து சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைப்பதற்கு பல்வேறு இயற்கையான வழிகள் உள்ளன. அவற்றில் இந்தியாவின் பழமையான மருத்துவ முறைகளில் ஒன்றான ஆயுர்வேதத்தில் கூறப்பட்டிருக்கும் அழகு குறிப்புகள் பற்றி பார்ப்போம்...

மஞ்சள் சாமந்திப்பூ:
சாமந்திப்பூவில் இயற்கையான பிளேவனாய்டுகள் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய எண்ணெய்கள் உள்ளன. சாமந்திப்பூவின் இதழ்களை சிறிதளவு தண்ணீர் ஊற்றி பசைபோல அரைத்துக்கொள்ளவும். அதை சருமத்தில் பூசவும். அது நன்றாக உலர்ந்தவுடன் வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தைக் கழுவவும். இவ்வாறு தொடர்ச்சியாக செய்துவந்தால் சருமம் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

சீமை சாமந்திப்பூ:
சீமை சாமந்திப்பூ இயற்கையான மாய்ஸ்சரைசராக செயல்படும். இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் பல்வேறு சருமப்பிரச்சினைகளுக்கு தீர்வாக இருக்கின்றன. சீமை சாமந்திப்பூவை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். அந்த தண்ணீரை வடிகட்டி, குளிக்கும் தண்ணீரில் கலந்து பயன்படுத்தவும். சீமை சாமந்திப்பூ உங்கள் சருமத்தை மென்மையாகவும், பொலிவாகவும் மாற்றும்.

பப்பாளி:
பப்பாளியில் வைட்டமின் 'ஏ' சத்து அதிக அளவில் உள்ளது. இது சருமத்தை வறட்சி அடையாமல் பாதுகாக்கும். நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தை ஸ்கிரப்பராக சருமத்துக்கு பயன்படுத்தலாம். பப்பாளிப் பழத்தை கூழாக அரைத்து சருமத்தில் பூசி வட்ட இயக்கத்தில் மென்மையாக தேய்த்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி சருமம் பளிச்சிடும்.

கற்றாழை:
சருமம் மற்றும் தலைமுடி தொடர்பான பிரச்சினைகளுக்கு கற்றாழை சிறந்த தீர்வாக இருக்கும். இதில் உள்ள ஈரப்பதமூட்டும் பண்புகள் சரும வறட்சியைத் தடுத்து இயற்கையான ஈரப்பதத்தை அளிக்கும். தூங்கச் செல்வதற்கு முன்பு கற்றாழை ஜெல்லை சருமத்தில் பூசிக்கொள்வது சருமப் பொலிவை மேம்படுத்தும்.

வாழைப்பழம் மற்றும் தேன்:
வாழைப்பழத்துடன் தேன் சேர்த்து பசை போல கலந்து சருமத்தில் பூசவும். அது நன்றாக உலர்ந்தவுடன் வெதுவெதுப்பான தண்ணில் கழுவவும். இந்த சிகிச்சை முறை பல நூற்றாண்டுகளாக வழக்கத்தில் உள்ளது.

பார்லி:
பார்லி மாவுடன் மஞ்சள்தூள் மற்றும் கடுகு எண்ணெய் கலந்து சருமத்தில் பூசவும். இது சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் வறட்சியை நீக்கி சருமத்தை பொலிவோடும், மென்மையாகவும் மாற்றும்.

சந்தனம்:
சந்தனம் இயற்கையாகவே எண்ணெய்ப்பசை கொண்டது. இதை ரோஜா பன்னீருடன் சேர்த்து பசை போல தயாரித்து சருமத்தில் பூசினால் சரும வறட்சி நீங்கும். சருமம் பளபளப்பாகும்.

மூலிகைத் தேநீர்:
சீரகம், தனியா விதைகள் மற்றும் சோம்பு இவை மூன்றையும் சமஅளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும். பின்னர் அதை வடிகட்டி ஆறவைத்து அந்த தண்ணீரை சருமத்தில் பூசவும். இது சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்கி ஈரப்பதத்தை தக்கவைக்கும்.
- காய்கறி-பழங்கள் மூலமாகவும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள முடியும்.
- பப்பாளியில் உள்ள பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து இதயத்தை பாதுகாக்கும்.
பரபரப்பான வாழ்க்கை சூழலால் பலருக்கு உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க முடிவதில்லை. கவலை வேண்டாம், காய்கறி-பழங்கள் மூலமாகவும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள முடியும். இந்த பட்டியலில் முதலில் இருப்பது பப்பாளி.
வைட்டமின்கள், இரும்புச்சத்து, கால்சியம், ரிபோபிளோவின் உள்ளிட்டவை நிறைந்திருக்கும் ஒரு 'ஆல் ரவுண்டர்' பழம் பப்பாளி. உணவில் தினமும் பப்பாளி சேர்த்துக்கொண்டால் கழிவுகளை சரியான முறையில் வெளியேற்றி செரிமானத்தை சீராக்கும், கொழுப்பை எரித்துவிடும். பப்பாளியில் உள்ள பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து இதயத்தை பாதுகாக்கும். எனவே உங்கள் டயட்டில் பப்பாளியை `மிஸ்' பண்ண வேண்டாம்.
- காலையில் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிடுவது செரிமானம் வேகமாக நடைபெற உதவும்.
- நோய் எதிர்ப்பு சக்தி, இதய ஆரோக்கியம், கொழுப்பு கட்டுப்பாடு, எலும்பு ஆரோக்கியம் போன்றவற்றுக்கும் வலு சேர்க்கும்.
காலையில் உண்ணும் உணவு எளிதில் ஜீரணமாகும்படி இருப்பது சிறப்பானது. அப்படி சாப்பிடுவது செரிமான மண்டலம் தனது செயல்பாட்டை மென்மையாக தொடங்குவதற்கு வழிவகுக்கும். அதன் இயக்கமும் சுறுசுறுப்பாக நடைபெறும். உடலுக்கு தேவையான ஆற்றலையும் உடனடியாக கிடைக்கச் செய்யும். மேலும் எளிதாக ஜீரணமாகும் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் இரைப்பை குடல் அசவுகரியத்திற்கு ஆளாகுவதை தவிர்க்கவும் முடியும். காலை உணவுடன் சில வகை பழங்கள், காய்கறிகளை சேர்த்துக்கொள்வது நலம் பயக்கும்.
பப்பாளி:
பப்பாளியில் புரோட்டியோலிடிக் என்சைம்கள், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், வைட்டமின்கள் ஏ, பி, சி அதிகமாக இருப்பதால் செரிமானம் துரிதமாக நடைபெறவும், உடலில் உள்ள நச்சுக்களை நீக்கவும் வழிவகை செய்யும். குறிப்பாக செரிமான பிரச்சனை உள்ளவர்கள் பப்பாளி ஜூஸ் பருகுவது வீக்கம், மலச்சிக்கல் மற்றும் நெஞ்செரிச்சலை தடுக்க உதவி புரியும்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு:
காலையில் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிடுவது செரிமானம் வேகமாக நடைபெற உதவும். ஊட்டச்சத்து உறிஞ்சுதலையும் ஊக்குவிக்கும். இது நார்ச்சத்துமிக்க உணவுப்பொருளாக இருப்பதால் உடலுக்கு தேவையான ஆற்றலையும் வழங்கும்.
வாழைப்பழம்:
வாழைப்பழங்களிலும் நார்ச்சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. அதனை சாப்பிடுவது குடல் இயக்கம் எளிமையாக நடைபெறுவதற்கு உதவும். கார்போஹைட்ரேட்டை சிதைக்கும் செயல்முறையையும் எளிமையாக்கும்.
பீட்ரூட்:
இதிலும் அதிக நார்ச்சத்து இருப்பதால் செரிமானம் மற்றும் குடல் இயக்கம் எளிதாக நடைபெறுவதற்கு உதவிடும்.
ஆப்பிள்:
இதில் நார்ச்சத்துடன் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகமாக இருப்பதால், இரைப்பை, குடல் நலனுக்கு உகந்தது. இதிலிருக்கும் பெக்டின் குடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு செரிமானத்தையும் மேம்படுத்தும்.
புரோக்கோலி:
புரோக்கோலியில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகமாக இருப்பதால், குடல் இயக்கம் சீராக நடைபெறவும், செரிமான பாதையை பராமரிக்கவும் உதவி புரியும். நோய் எதிர்ப்பு சக்தி, இதய ஆரோக்கியம், கொழுப்பு கட்டுப்பாடு, எலும்பு ஆரோக்கியம் போன்றவற்றுக்கும் வலு சேர்க்கும்.