search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனாட்சிபுரம்"

    • கடந்த 10 ஆண்டுகளாக கந்தசாமி தனியாக வசித்து வந்தார்.
    • கிராமத்தில் வாழ்ந்த கடைசி மனிதரான கந்தசாமியும் மரணமடைந்துவிட்டதால் மனிதர்கள் யாரும் வசிக்காத இடமாக மாறி உள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி பஞ்சாயத்தில் அமைந்து உள்ளது மீனாட்சிபுரம் கிராமம். இந்த கிராமம் நெல்லை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் மேல செக்காரக்குடிக்கு அடுத்து அமைந்துள்ளது.

    2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மீனாட்சிபுரத்தில் வாழ்ந்த மக்களின் எண்ணிக்கை 1,269 ஆகும். தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக விவசாயம் பொய்த்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. இதனால் மக்கள் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வந்து உள்ளனர்.

    இதனால் ஊரில் இருந்து மக்கள் ஒவ்வொருவராக, வீடு, விவசாய நிலம் அனைத்தையும் அப்படியே போட்டு விட்டு, ஊரை காலி செய்து வெளியூருக்கு சென்று குடியேறிவிட்டனர். ஆனால் கந்தசாமி (வயது 75) என்பவர் மட்டும் தொடர்ந்து அங்கேயே வசித்து வந்தார். கடந்த 10 ஆண்டுகளாக கந்தசாமி தனியாக வசித்து வந்தார்.

    மீனாட்சிபுரம் ஊரை காலி செய்துவிட்டு சென்ற மக்கள் மீண்டும் ஊருக்கு வர வேண்டும். ஊர் செழிக்க வேண்டும் என்ற ஆசையோடு இருந்த கந்தசாமி கடந்த 26-ந்தேதி உயிரிழந்தார்.

    இதைத்தொடர்ந்து அவரது உடலை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் மட்டுமின்றி, அந்த ஊரில் வாழ்ந்த மக்கள் பெரும்பாலானவர்கள் கிராமத்துக்கு வந்து கந்தசாமி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதிச்சடங்கு அருகில் உள்ள சிங்கத்தாகுறிச்சியில் நடத்தப்பட்டு, மீனாட்சிபுரம் கிராமத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    இவரது இறப்பு, இந்த ஊரை பூர்வீகமாக கொண்ட இளைஞர்களுக்கு, அவர்களது அப்பா, தாத்தா வாழ்ந்த ஊரை பார்க்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்து உள்ளது என்று மக்கள் நெகிழ்ச்சியுடன் கூறி உள்ளனர். அந்த கிராமத்தில் வாழ்ந்த கடைசி மனிதரான கந்தசாமியும் மரணமடைந்துவிட்டதால் மனிதர்கள் யாரும் வசிக்காத இடமாக மீனாட்சிபுரம் மாறி உள்ளது.

    • கழிவுநீர் ஓடைகள் சீரமைப்பு
    • கழிவுநீர் ஓடைக்கு மேல் போடப்பட்டிருந்த மேல் மூடிகள் இடித்து அகற்றப்பட்டது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநக ரப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மேயர் மகேஷ் அதிரடி நடவ டிக்கையை மேற்கொண்டு வருகிறார்.

    இதன் ஒரு பகுதியாக மாநகரப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர். கோட்டார் போலீஸ் நிலையம் முதல் ஒழுகினசேரி வரை உள்ள சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி இன்று காலை நடந்தது. மாநகராட்சி ஊழியர்கள் ஜே.சி.பி. என்ற மூலமாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை மேற்கொண்டனர். மீனாட்சிபுரம் பகுதியில் கடையின் முன் பகுதி ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்தது. அதை ஜே.சி.பி. எந்திரம் மூலமாக இடித்த அகற்றினார்கள்.கடைகள் முன்பு வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகளையும் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினார்கள். கடைகள் முன்பு போடப்பட்டிருந்த படிக்கட்டுகளும் இடித்து அகற்றப்பட்டது.

    மீனாட்சிபுரம் பகுதியில் கழிவு நீர் ஓடைகள் மணல் நிரம்பி காணப்பட்டது. இதையடுத்து ஜே.சி.பி. எந்திரம் மூலமாக கழிவுநீர் ஓடையில் கிடந்த மணல்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. கழிவுநீர் ஓடைக்கு மேல் போடப்பட்டிருந்த மேல் மூடிகள் இடித்து அகற்றப்பட்டது.

    இதை தொடர்ந்து கழிவு நீர் ஓடையில்கிடந்த மணல்கள் அகற்றப்பட்டது.ஆக்கிரமிப்பு கட்டப்பட்ட தையடுத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் மீனாட்சிபுரம் சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×