என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கலெக்டர் நேரில் ஆய்வு"
- கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.2 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள் கலெக்டர் சரயு நேரில் ஆய்வு செய்தார்.
- அரசு பள்ளியில், முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் சமைக்கப்பட்ட உணவு மாதிரிகளை பார்வையிட்டு, வழங்கப்படும் உணவுகள் குறித்து மாணவர்களிடம் கலெக்டர் சரயு கேட்டறிந்தார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், கல்லுக்குறுக்கி, பெரியகோட்டப்பள்ளி, மேகலசின்னம்பள்ளி, நாரலப்பள்ளி, தேவச முத்திரம் ஆகிய ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக ரூ.2 கோடியே 2 லட்சத்து 59 ஆயிரத்து 600 மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் சரயு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கல்லுகுறுக்கி கிராமத்தில் முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பி.ஜி.புதூர் சாலை முதல் கல்லுக்குறுக்கி வரை 350 மீட்டர் தூரத்திற்கு ரூ.11 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பில் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு சாலை அமைக்கும் பணிக ளையும், பெரியகோட்டப் பள்ளி ஊராட்சி, போத்திநா யனப்பள்ளி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் தொகுதி - 2 -ன் கீழ், ரூ.14 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிட கட்டுமான பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்.
மேலும் அங்கன்வாடி குழந்தைகளுக்கு சமைக்கப்பட்ட உணவுகள் மற்றும் சமையல் பொருட்களின் இருப்புகளை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். மேலும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் சமைக்கப்பட்ட உணவு மாதிரிகளை பார்வையிட்டு, வழங்கப்படும் உணவுகள் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார். மேலும், 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிககும மாணவ, மாணவிகளிடம் கணித வாய்ப்பாடு, ஆங்கிலம் மற்றும் தமிழ் எழுத்துக்கள் வாசிப்பு, எழுத்து திறன்களை ஆய்வு செய்தார்.
இதே போல பெரிய கோட்டப்பள்ளி ஊராட்சியில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ள பணிகளையும், கழிவுநீர் கால்வாய், சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டு பணிகள், அங்கன்வாடி மைய சமையல் கூடங்கள் ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டார். மேலும ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட பணிகள், கதிரடிக்கும் களம் கட்டுமான பணிகள், மாதிநாயனப் பள்ளியில் 7 இருளர் இன மக்களுக்கு புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டு பணிகள் ஆகியவற்றையும் கலெக்டர் பார்வையிட்டார்.
இதே போல நாரலப்பள்ளி, மேகலசின்னம்பள்ளி, தேவசமுத்திரம் ஊராட்சிகளில் பணிகளை பார்வையிட்ட கலெக்டர், பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வுகளின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், ராஜேஷ், உதவி பொறியாளர்கள் அன்புமணி, சத்யநாராய ணராவ், அந்தோணி ஆசைதம்பி, பணி மேற்பார்வையாளர்கள் கல்பனா, அம்பிகா, நாகூர் மீரான், செந்தில், தொழில்நுட்ப உதவியாளர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
- அதியமான் கோட்டம் புனரமைப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- அதியமான் மற்றும் அவ்வையார் உருவச் சிலைகளுக்கு மேற்கூரை அமைக்கும் பணி,
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள அதியமான் கோட்டை ஊராட்சியில் உள்ள வள்ளல் அதியமான் கோட்டம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வரும் பணிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி இன்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டை ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள வள்ளல் அதியமான் கோட்டம் ரூ. 1.00 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வரும் பணிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி இன்று (20.10.2023) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.
செய்தித்துறை அமைச்சர் சட்டமன்ற பேரவை–யின் மானிய கோரிக்கையில் தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அதியமான் கோட்டை ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள வள்ளல் அதியமான் கோட்டம் ரூ. 1 கோடி (ரூபாய் ஒரு கோடி) மதிப்பீட்டில் புனரமைக்கப்படும் என்று அறிவித்தார்கள்.
இதனை தொடர்ந்து, கடந்த 15.03.2023 முதல் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்புனரமைப்பு பணிகளை நேற்று தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
வள்ளல் அதியமான் மற்றும் அவ்வையார் உருவச் சிலைகளுக்கு மேற்கூரை அமைக்கும் பணி, வட்டமான அமைப்பில் ஆத்திச்சூடி அமைக்கும் பணி, வர்ணம் பூசும் பணி, புல்தரை அமைக்கும் பணி, சிறுவர் பூங்கா அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பணி கள் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, எஞ்சியுள்ள பணிகளை விரைவில் முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுப்பணித்துறை செயற்பொறியாளருக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் சிவக்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லோகநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.
- வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.59 லட்சத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
- பள்ளிகளில் ஆய்வு செய்த கலெக்டர் மாணவ, மாணவிகளுக்கு கற்றல் திறனை மேம்டுபடுத்த வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
வேப்பனப்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குந்தாரப்பள்ளி, சாமந்தமலை, பில்லனகுப்பம், கோடிப்பள்ளி, ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பாக நடைபெற்று வரும் திட்ட பணிகளை கலெக்டர் சரயு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
குந்தாரப்பள்ளி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி 2023-2024 நிதியாண்டின் கீழ் ரூ.5 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் குந்தாரப்பள்ளி தெற்கு தெரு பகுதியில் அமைக்கப்பட்டு வரும் பேவர்பிளாக் கற்கள் அமைக்கும் பணிகளையும், ஜெட்ஏரி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.16 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஏரி தூர் வாரும் பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து குந்தாரப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறனை பார்வையிட்டு ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட பாட திட்டங்கள் மாண வர்களுக்கு எளிதில் புரியும்படி கற்பித்தல் வேண்டும். மேலும் மாணவ மாணவியர்களின் கற்றல் திறனை மேம்படுத்த வேண்டும் என ஆசிரி யர்களுக்கு அறிவு றுத்தினார். தொடர்ந்து அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு குழந்தை களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும், குழந்தை களின் எடை, உயரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இதைத் தொடர்ந்து சாமந்தமலை ஊராட்சி, குட்டுர் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் புதியதாக கட்டப்பட்டு வரும் சமையலறை கட்டிடம் கட்டுமான பணிகளையும்,
பில்லனகுப்பம் ஊராட்சி பண்டப்பள்ளி கிராமத்தில், 15 வது நிதிகுழு மானிய திட்டத்தின் கீழ் ரூ. 1 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் புதியதாக பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணிகளையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதி திட்டத்தின் கீழ், ரூ. 5 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பில் பண்டப்பள்ளி ஏரி தூர் வாரும் பணிகளையும், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 6 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பில் விவசாயி கிருஷ்ணப்பா நிலத்தில் புதியதாக கட்டப்பட்டு வரும் பட்டு கூடு உற்பத்தி கொட்டகை கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
முடிவில் குந்தாரப்பள்ளி ஊராட்சியில் குந்தாரப்பள்ளி முதல் வேப்பனப்பள்ளி செல்லும் சாலை, நடுப்பட்டி கிராமத்தில் முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.16 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் சாலை பணிகள் என மொத்தம் ரூ.59 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான திட்ட பணிகளை கலெக்டர் பார்வையிட்டார். இந்த பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க வேண்டும் என ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர் வேடியப்பன், உதவி பொறியாளர்கள் தீபமணி, மணிவண்ணன், பணி மேற்பார்வையாளர்கள் மூர்த்தி, தேன்மொழி உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.
- ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
- மஞ்சள் வளாகத்தில் ஏலத்திற்காக வைக்கப்பட்டிருந்த மஞ்சள் மாதிரிகளையும் பார்வையிட்டார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம், பெருந்துறை கருமாண்டி செல்லிபாளையம் மற்றும் வில்லரசம்பட்டி ஆகிய பகுதிகளில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் செயல்படும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் தெரிவிக்கையில்,
பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடமானது 15200 மெ.டன் அளவுள்ள 5 கிட்டங்கிகள், 2 பரிவர்த்தனைக்கூடங்கள், 1 சூரிய உலர்களம் மற்றும் 4 உலர்களங்களுடன் செயல்பட்டு வருகிறது. அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் முழுமையான அளவில் பயன் படுத்தப்பட்டு வருகிறது.
பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனைக்கூட வளாகத்தில் உள்ள ஏலக்கூடத்தில் ஏலத்திற்காக வைக்கப்பட்டிருந்த மஞ்சள் மாதிரிகள் பார்வையி டப்பட்டது. யு.எம்.பி. மென்பொருள் மூலம் மஞ்சள் ஏலம் நடைபெறும் முறை பார்வையிடப்பட்டது.
விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடம் மறைமுக மஞ்சள் ஏலம் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உள்ள 10000 மெ.டன் ஊறுர் கிட்டங்கியில் விவசாயிகள் இருப்பு வைத்துள்ள மஞ்சள் மூட்டைகள் பார்வையிடப்பட்டது.
யு.எம்.பி. மென்பாருள் மூலம் மஞ்சள் ஏலம் நடைபெறும் செயல்முறை மற்றும் விவசாயிகளுக்கு பணப்பட்டுவாடா செய்யும் முறைகள் பார்வையிடப்பட்டன.
மேலும் விற்பனைக்கூட வளாகத்தினுள் பெரிய அளவிலான குப்பைத் தொட்டிகள் வைத்திட அறிவுறுத்தப்பட்டது. பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தினுள் உள்ள அக்மார்க் ஆய்வகம் பார்வையிடப்பட்டு அக்மார்க் தரச்சான்றிதழ் வழங்கிடும் நடைமுறை ஆய்வு செய்யப்பட்டது.
பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நடப்பு நிதியாண்டில் நாளது வரை தொகை ரூ.4249 லட்சம் மதிப்புள்ள 5761 மெ.டன் மஞ்சள் விளைபெருள் பரிவர்த்தனை செய்யப்பட்டு 2440 விவசாயிகள் பயனடைந்துள்ளனர் என தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் மஞ்சள் வளாகத்தில் ஏலத்தி ற்காக வைக்கப்பட்டிருந்த மஞ்சள் மாதிரிகளையும் பார்வையிட்டார்.
மேலும் ஆல்பா சாப்ட்வோ மூலம் மஞ்சள் ஏலம் நடைபெறும் செயல்முறை மற்றும் விவசாயிகளுக்கு பணப்பட்டுவாடா செய்யும் முறைகள் பற்றி விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடம் கலந்துரையாடப்பட்டது.
ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடப்பு நிதியாண்டில் நாளது வரை ரூ.131.27 கோடி மதிப்புள்ள 20830மெ.டன் மஞ்சள் விளைபொருள் பரிவர்த்தனை செய்யப்பட்டு 25,945 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
இந்த ஆய்வின்போது, செயலாளர், துணை இயக்குநர் ஈரோடு விற்பனைக்குழு சாவித்திரி, கண்காணிப்பாளர்கள் ராஜேஸ்வரி, சுரேஸ், மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- உருவச் சிலையுடன் கூடிய அரங்கம் அமைக்கப்படவுள்ள இடத்தினை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
- மேலும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
சென்னிமலை:
சென்னிமலை யூனியன், முருங்கத்தொழுவு ஊராட்சிக்குட்பட்ட சென்னிமலை- முருங்க த்தொழுவு ரோட்டில் குன்னி மரம் என்ற இடத்தில் சுதந்திர போராட்ட தியாகி குமரனுக்கு ரூ.3 கோடி மதிப்பீட்டில் உருவச் சிலையுடன் கூடிய அரங்கம் அமைக்கப்படவுள்ள இடத்தினை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக கலெக்டர் பெருந்துறை பகுதியில் கூட்டுறவுத்துறையின் கீழ் வேளாண்மை உற்பத்தியா ளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சார்பில் செயல்ப டும் பசுமை சமையல் எண்ணெய்கள் மற்றும் மங்களம் பொருட்கள் விற்பனை செய்யும் அங்காடியினை நேரில் சென்று பார்வையிட்டார்.
தொடர்ந்து சென்னிமலை யூனியன் அலுவலகத்தினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும் மற்றும் சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 22 கிராம ஊராட்சி பகுதிகளில் பொதுமக்கள் பயன்பா ட்டிற்காக நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளின் தற்போதைய நிலை குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து, சென்னிமலை பேரூராட்சிக் குட்பட்ட வார்டு எண்.5, அம்மாபாளையம், கே.வி.பி.நகர் பகுதியில் அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.18.50 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கப் பட்டுள்ளதையும்,
முகாசிபிடாரியூர் டி.எம்.எம்.புரம் பகுதியில் மகளிர் திட்டத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.1.10 லட்சம் சமுதாய முதலீட்டு நிதியுதவியுடன் கைத்தறி எந்திரம் மூலம் பெட்சீட் உற்பத்தி செய்யும் மையத்தினையும்,
குமாரவலசு ஊராட்சி, பாலாஜி கார்டன் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.2.23 லட்சம் மதிப்பீட்டில் சந்தன மரக்கன்றுகள் நடும் பணியினையும், வெள்ள முத்துக்கவுண்டன் வலசு பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ.482.36 கோடி மதிப்பீட்டில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் சென்னிமலை ஒன்றியத்தில் உள்ள 22 ஊராட்சிகளை சேர்ந்த 434 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக கட்டப்பட்டு வரும் நீர் சுத்திகரிப்பு நிலையத்தி னையும் நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக பெருந்துறை அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் 623 மதிப்பெண்கள் பெற்ற மாணவன் கமல்நா த்தை கலெக்டர் ராஜகோ பால் சுன்கரா பாராட்டினார்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் ச.சந்தோஷினிசந்திரா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜ்குமார், துணைப்பதி வாளர் நர்மதா, சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக், செயல் அலுவலர் ராம கிருஷ்ணன், பெருந்துறை தாசில்தார் பூபதி, குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் சிவகுமார், உதவி திட்ட அலுவலர்கள் சாந்தா, அன்பழகன், சரவணகுமார், சென்னிமலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குணசேகரன், பாஸ்கர் பாபு, உதவிபொறியாளர் பிரகாஷ், வட்டார பொறியாளர் ருக்மணி தேவி உள்பட துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
- புதிய கட்டிடம் அமைப்பதற்கான இடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகள் மற்றும் கொடுமுடி பேரூரா ட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, கலெக்டர் சிவகிரி பேரூராட்சிக்குட்பட்ட வள்ளியம்பாளையம் பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ.13.12 கோடி மதிப்பீட்டில் குடிநீர் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சுமார் 1.40 லட்சம் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி யினையும் மற்றும் நீர்த்தேக்க தொட்டிக்கு காவிரிஆற்றில் இருந்து நீர் செல்வதையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு இப்பகுதிக்கு குடிநீர் தேவைகள் குறித்தும் தொடர்புடைய அலு வலர்களிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து கொடுமுடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் நூலகம் கட்டுவத ற்கான இடம் மற்றும் ஆவுடையார்பாறை பகுதி யில் பழுதடைந்த நிலையில் உள்ள துணை சுகாதார நிலை யத்தினை அப்பு றப்படுத்தி புதிய கட்டிடம் அமைப்பதற்கான இடத்தி னையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கொடுமுடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத் தினையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அங்கு பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள் மற்றும் பதிவேடுகளையும் ஆய்வு செய்தார். மேலும் வேளாண்மை-உழவர் நலத்துறையின் சார்பில் தேசிய சமையல் எண்ணெய் இயக்கம், நெல் தரிசில் எண்ணெய் வித்து பரப்பினை அதிகரித்தல் திட்டத்தின் கீழ் ரூ.42,000 மானிய உதவியுடன் ரோட்ட வேட்டர் வழங்கப்பட்டு ள்ளதையும் மற்றும் வடிவுள்ள மங்களம் பகுதியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கம், பல்லாண்டுநறுமணபயிர் பரப்புவிரிவாக்கம் திட்டத்தின் கீழ் ரூ.20,000 மானியஉதவியுடன் மிளகு பயிரிடப்பட்டுள்ளதையும் மற்றும் இயற்கை முறையில் பாக்கு மரத்தில் வெற்றிலை கொடி பயிரிடப்பட்டுள்ள தையும் பார்வையிட்டார்.
முன்னதாக, ஆவுடை யார்பாறை ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், நூலக கட்டிடம் புணரமைப்பு பணி மேற்கொள்ளப் பட்டுள்ளதையும், ஆவுடையார்பாறைஊராட்சிஒன்றியதொடக்கப்பள்ளி வளாகத்தில் பள்ளி உட்கட்ட மைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.36,000 மதிப்பீட்டில் சத்துணவு சமையலறை பராமரிப்பு பணியினையும், ரூ.27.17 லட்சம் மதிப்பீட்டில் ஆவுடையார்பாறை ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டும் பணியினையும்,
ஆவுடையார் காலனியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.7.72 லட்சம் மதிப்பீட்டில் கதிரடிக்கும் களம் அமைக்கப்பட்டுள்ளதையும் மற்றும் நாகமநாயக்கன் பாளையம் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டம் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.2.97 லட்சம் மதிப்பீட்டில் தென்னை மரத்திற்கு வாய்க்கால் வரப்புகட்டும் பணியினையும் (தனிநபர்) நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டு நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை விரை வாக முடித்திட அலு வலர்களுக்கு அறிவுறுத்தி னார்.
இந்த ஆய்வின்போது கொடுமுடி பேரூராட்சி தலைவர் திலகவதி, கொடு முடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பத்மநாபன், உமா, கொடுமுடி தாசில்தார் முத்துகிருஷ்ணன், குடிநீர் வடிகால் வாரிய செய ற்பொறியாளர் வீரராஜன், உதவிபொறியளார் குருசாமி, ஊராட்சி ஒன்றிய உதவிபொறியாளர் விஜய ராகவன் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- கலெக்டர் மாணவியை பாராட்டி நினைவுப்பரிசினை வழங்கினார்.
- மாட்டின ஆராய்ச்சி நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து தொடர்புடைய அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. முன்னிலையில், கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா அந்தியூர் ஊராட்சி ஒன்றியம், பர்கூர் ஊராட்சி க்குட்பட்ட சோளகனை பகுதியில் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் தலா ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்ப ட்டுள்ள 3 தொகுப்பு வீடுகளையும், பாரத பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தலா ரூ.2.69 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்ப ட்டுள்ள 38 தொகுப்பு வீடுகளையும்,
ஈரோடு வனக்கோட்டம், பர்கூர் வனச்சரகம் பழங்குடி மலைவாழ் கிராம உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு ள்ள ஆழ்துளை கிணறு மற்றும் 10 லிட்டர் கொள்ள ளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி அமைக்கப் பட்டுள்ளதையும், அதே பகுதியில் செயல்படும் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலை ப்பள்ளியினையும்,
ஒட்டனூர் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.8.23 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் கான்கிரீட் தளம் அமைக்கப் பட்டுள்ளதையும், ஊசிமலை பகுதியில் செயல்படும் துணை ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு சாலை வசதி அமைக்க ப்படவுள்ள இடத்தினையும் மற்றும் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலை ப்பள்ளிக்கு செல்வதற்கான சாலையில் கான்கிரீட் தளம் அமை யவுள்ள இடத்தி னையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய த்தினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு நோயாளி களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவ ர்களிடம் கேட்டறிந்தார். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை மேற்கொண்டு குழந்தை பெற்று வீடு திரும்பியவரிடம் தொலை பேசியில் நலம் விசாரித்து, மருத்துவ மனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
முன்னதாக சோளகனை பகுதியை சேர்ந்த பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்த கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா அடிப்படை தேவைகளான குடிநீர், சாலை வசதி, மின்சாரம் ஆகியவற்றை தங்கு தடையின்றி கிடை த்திட நடவடிக்கை மேற்கொ ள்ளுமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொ டர்ந்து அரசுபொது த்தேர்வில் 12-ம் வகுப்பில் பர்கூர் அரசுபழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலை ப்பள்ளியில் பயின்ற மாணவி ஜோதிகா 600-க்கு 508 மதிப்பெண்கள் பெற்றதையடுத்து கலெக்டர் மாணவியை பாராட்டி நினைவுப்பரிசினை வழங்கினார்.
தொடர்ந்து பர்கூர் பகுதியில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில் செயல்படும் பர்கூர் மாட்டின ஆராய்ச்சி நிலையத்தினையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, இம்மையத்தில் பாலில் இருந்து தயாரிக்கப்படும் நெய், தயிர், வெண்ணெய் மற்றும் சாணத்தில் இருந்து தயாரிக்கப்படும் சாம்பிராணி, விளக்கு, பூந்தொட்டி உள்ளிட்ட பொரு ட்களையும் பார்வையிட்டார். மேலும் மாட்டின ஆராய்ச்சி நிலை யத்தின் செயல்பாடுகள் குறித்தும் தொடர்புடைய அலுவ லர்களிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ராமசாமி, அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவசங்கர், ஆனந்த், இணை இயக்குநர் (குடும்பநலம்) டாக்டர்.ராஜசேகர், உதவிபொறியாளர் சிவபிரசாத், பர்கூர் ஊராட்சி மன்றத்தலைவர் மலையன் உள்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் என பலர் உடன் இருந்தனர்.
- பில்சின்னாம்பாளையம் ஊராட்சியில் ரூ.37 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை பார்வையிட்டார்.
- பணிகள் விரைவாகவும், தரமானதாகவும் முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
கோவை,
கோவை மாவட்டம் ஆனைமலை ஊராட்சி ஒன்றிய பகுதிகள் மற்றும் சமத்தூர், கோட்டூர் பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அலர்மேல்மங்கை, சமத்தூர் பேரூராட்சி தலைவர் காளிமுத்து, பில்சின்னாம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி, அங்கலக்குறிச்சி ஊராட்சிமன்ற தலைவர் திருஞானசம்பத் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குழந்தைசாமி, பாலசுப்ரமணியம், உதவி செயற்பொறியாளர் ஜெயந்தி, சமத்தூர் செயல் அலுவலர் தாஜ் நிஷா, கோட்டூர் செயல் அலுவலர் ஜெசிமா பானு ஆகியோர் பங்கேற்றனர்.
கோவை மாவட்டம் சமத்தூர் பேரூராட்சியில் அம்ருத் திட்டத்தின் வார்டு எண் 1-ல் சக்தி கார்டன் லே அவுட் பகுதியில் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிறுவர் விளையாட்டு பூங்கா, சக்தி கார்டன் முதல் கிருஷ்ணா நகர் வரை ரூ.57 லட்சம் மதிப்பீட்டில் 1.5 கி.மீ நீளத்திற்கு தார் சாலை அமைக்கும் பணியினை கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், ஆனைமலை ஒன்றியம் பில்சின்னாம்பாளையம் ஊராட்சியில் ரூ.37 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.9.09 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கட்டிடப் பணிகள், கரியாஞ்செட்டி பாளையத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மண்புழு இயற்கை உரம் தயாரிக்கும் கூடம் மற்றும் அடர்வனம் அமைக்கும் இடம், அங்கலக்குறிச்சி ரூ.70.75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சுயஉதவிக்குழு கட்டிடம், ரூ.1.82 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் நூலக கட்டிடம், கோட்டூர் பேரூராட்சி ஆழியார் பகுதியில் ரூ.15.85 கோடி மதிப்பில் கட்டப்பட்டுவரும் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு இல்ல கட்டிடப்பணிகள், கோட்டூர் பேரூராட்சி பகுதியில் ரூ.5.60 கோடி மதிப்பில் கட்டப்பட்டுவரும் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு இல்ல பணிகள், கோட்டூர் ஆழியார் நகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ.32.43 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டப் பட்டு வருவதையும் கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகள் விரைவாகவும், தரமானதாகவும் முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
- குட்டைகள் அமைக்கும் பணியினை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்க விட அறி வுறுத்தப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா, தொகரப்பள்ளி, பட்லப்பள்ளி, குமாரம்பட்டி, நாகம்பட்டி ஆகிய கிராமங்களில் செயல்படுத்தியுள்ள ரூ.13 லட்சத்து 99 ஆயிரம் மதிப்பிலான உலர்களங்கள், கசிவு நீர் குட்டைகள் அமைக்கும் பணியினை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, மழைநீர் சேகரிப்பு பணிகளுக்காக பல்வேறு துறைகளின் சார்பில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில், கிருஷ்ணகிரி மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் கீழ், பர்கூர், வேப்பனஹள்ளி மற்றும் தளி வட்டாரங்களில் ரூ.6 கோடியே 28 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு, நுழைவுகட்டப் பணிகள், இயற்கை வள மேம்பாட்டு பணிகள், வேளாண் உற்பத்தி திட்டப்பணிகள், சுழல்நிதி வழங்கும் பணிகள் மற்றும் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் பர்கூர் தாலுகா தொகரப்பள்ளியில் ரூ.1 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பிலும், பட்லப்பள்ளியில் ரூ.1 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பிலும், கண்ணன்டஅள்ளியில் ரூ.2 லட்சம் மதிப்பிலும் கட்டி முடிக்கப்பட்டுள்ள உலர்கள பணிகளையும், குமாரம்பட்டியில் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலும், பட்லப்பள்ளியில் ரூ.2 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பிலும் கட்டி முடிவுற்றுள்ள கசிவுநீர் குட்டை அமைக்கும் பணிகளையும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், மத்தூர் ஒன்றியம் கண்ணன்டஅள்ளி ஊராட்சி பெத்தான் ஏரியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் தமிப்பில் மதகுகள் அமைக்கப்பட்டு ள்ளதையும் ஆய்வு செய்யப்பட்டது.
முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர், வேப்பனஹள்ளி, தளி ஆகிய 3 ஒன்றி யங்களில் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை யின் கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணி களை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்க விட அறி வுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
இந்த கள ஆய்வின் போது, மாவட்ட நீர்வடிப்பகுதி வேளாண்மை துணை இயக்குநர் (நுண்ணீர் பாசனம்) ஜெகதீசன், வேளாண்மை உதவி இயக்குநர் (நீர்வடிப்பகுதி) சகாயராணி, உதவிப் பொறியாளர் பத்மாவதி மற்றும் நீழ்வடிப்பகுதி உறுப்பினர்கள் பிரபு, இனியன் ஆகியோர் உடனிருந்தனர்.
- சிறப்பு சுருக்கமுறைத் திருத்த பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- டிசம்பர் 8-ந் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடை பெறுகிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஜெயசந்திரபானு ரெட்டி, கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெத்ததாளப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையங்கள், கங்கலேரி அரசு உயர்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்த பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியா ளர்களிடம் கூறியதாவது: -
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தர விற்கிணங்க, 1.1.2023-ம் தேதியினை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது நிறைவடைந்தவர்கள், 18வயது நிறைவடைந்து நாளது வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள் மற்றும் 17வயது பூர்த்தி அடைந்த இளம் வாக்காளர்கள் தங்கள் பெயரை சேர்த்துக்கொள்ளும் வகையில் கடந்த 9-ந் தேதி முதல் வருகிற டிசம்பர் 8-ந் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடை பெறுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 287 வாக்குசாவடிகள், பர்கூர் தொகுதிக்குட்பட்ட 292 வாக்குசாடிவகள், கிருஷ்ணகிரி தொகுதிக்குட்பட்ட 308 வாக்குசாவடிகள், வேப்பனபள்ளி தொகுதிக்குட்பட்ட 312 வாக்குசாவடிகள், ஓசூர் தொகுதிக்குட்பட்ட 379 வாக்குசாவடிகள், தளி தொகுதிக்குட்பட்ட 302 வாக்குசாவடிகள் என மொத்தம் 1880 வாக்கு சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.
வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க படிவம் 6, வெளிநாடு வாழ் வாக்காளர்கள் பெயர் பதிவு செய்ய படிவம் 6ஏ., இறந்தவர் மற்றும் நிரந்தரமாக வெளியூர் சென்றுவிட்டவர்கள் பெயர் நீக்கம் செய்ய படிவம் 7, வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்யவும், நகல் வாக்காளர் அட்டையாள அட்டை விண்ணப்பிக்கவும் படிவம் 8 மற்றும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க படிவம் 6 பி., ஆகியவற்றை பூர்த்தி செய்து வாக்காளர் தாங்கள் வசிக்கும் இருப்பிடங்களுக்கு அருகாமையில் உள்ள வாக்கு சாவடிகளில் வழங்கலாம்.
எனவே, இளம் வாக்காளர்கள் (இன்று) ஞாயிற்றுக்கிழமை நடை பெறும் சிறப்பு முகாம்களில் உரிய படிவங்களை பூர்த்தி செய்து, தங்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கலெக்டர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்