search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறைந்த விலை"

    • எங்கள் கடையில் சுற்றுப்புற சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வண்ணம் வெடிக்கக் கூடிய பசுமை பட்டாசுகள் ஏராளம் உள்ளன.
    • குறைந்த விலையில் விதவிதமான பட்டாசுகள் வாங்குவதற்கு எங்கள் கடைக்கு வாருங்கள்.

    சென்னை:

    பாண்டிபஜார் எஸ்.ஜி. தமிழரசனின் பட்டாசு கடை நடத்தும் பாபா சுரேஷ் பட்டாசு கடைகள் இந்த ஆண்டு தி.நகரில் 3 இடங்களிலும், வடபழனியில் ஒரு இடத்திலும் மொத்தம் 4 இடங்களில் பட்டாசு கடைகள் திறக்கப்பட்டுள்ளது.

    பாண்டிபஜார் தணிகாசலம் ரோடு, ஜி.என்.செட்டி ரோடு கண்ணதாசன் சிலை அருகில், கோபால கிருஷ்ணன் தெரு மற்றும் வடபழனி துரைசாமி ரோடு (ஜே.ஆர்.கே.பள்ளி அருகில்) பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இங்கு ஸ்டாண்டர்டு ரக பட்டாசுகள் ஏராளம் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. பசுமை ரக பட்டாசுகளும் எண்ணற்ற ரகங்களில் கிடைக்கிறது.

    2 ஆயிரம் வாலா பட்டாசுகள், 5,000, 10,000 வாலா பட்டாசுகள், அணுகுண்டு, கம்பி மத்தாப்புகள், சரவெடிகள், புஸ்வானம், துப்பாக்கி வெடிகள், மியூசிக் வெடிகள், சூரிய காந்தி யானை வெடிகள், சிறுவர்கள் வெடிக்கும் வெடிகள், தரசக்கரம், ராக்கெட் வெடிகள் குறைந்த விலையில் விற்கப்படுகிறது

    கடையை நிர்வகிக்கும் தமிழரசனின் மருமகன் பாண்டிபஜார் பாபா சுரேஷ் கூறியதாவது:-

    எங்கள் கடையில் சுற்றுப்புற சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வண்ணம் வெடிக்கக் கூடிய பசுமை பட்டாசுகள் ஏராளம் உள்ளன.

    இந்த வகை பட்டாசுகளுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. ஸ்டாண்டர்டு ரக பட்டாசுகள் பல ரகங்களில் எண்ணற்ற வகையில் வர வழைத்துள்ளோம். குறைந்த விலையில் விதவிதமான பட்டாசுகள் வாங்குவதற்கு எங்கள் கடைக்கு வாருங்கள். மனம் விரும்பும் பட்டாசுகளை வாங்கிச் செல்லுங்கள் தீபாவளியை கொண்டாட எங்களது கடையை தேர்ந்தெடுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தற்போது தக்காளியின் உற்பத்தி குறைந்து விலையேற்றம் அதிகரித்துள்ளது.
    • உழவர் சந்தைகளில் தக்காளி விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து குறைவான விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கிருஷ்ணகிரி,

    தோட்டக் கலைத்துறையின் மூலம் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்படும் என கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தக்காளி விலை அதிகரித்து, ஒரு கிலோ ரூ.140 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. பொதுவாக தக்காளி மட்டுமல்லாது அனைத்து காய்கறிகளும் வரத்து மற்றும் வினியோகம் வைத்து விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

    சராசரியாக நாள் ஒன்றுக்கு 1,200 மெட்ரிக் டன் அளவு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தக்காளி உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த 15 நாட்களில் தக்காளி வரத்து குறைந்து 250 மெட்ரிக் டன் அளவே உற்பத்தி ஆகிறது. மேலும், தற்போது ராயக்கோட்டை தக்காளி சந்தையில் இருந்து ஒரு நாளைக்கு சுமார் 50 மெட்ரிக் டன் தக்காளி வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது.

    பொதுவாக பருவம் தவறிய மழைப் பொழிவினாலும், கடந்த 2-3 மாதங்களாக தக்காளியின் விலை குறைந்ததின் காரணமாக விவசாயிகள் புதிய தக்காளி நடவு செய்யாமையினாலும், தற்போது தக்காளியின் உற்பத்தி குறைந்து விலையேற்றம் அதிகரித்துள்ளது.

    தற்போது தக்காளியின் விலையேற்றத்தை குறைக்கும் விதமாக வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலர், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் ஆகியோரின் ஆணைப்படி, மாவட்டங்களில் உள்ள உழவர் சந்தைகளில் விலை கட்டுப்படுத்தப்பட்டு தக்காளி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த 4 நாட்களாக தோட்டக்கலை துறையின் நடவடிக்கையின் மூலமாக தக்காளி விற்பனை விலை வெளிசந்தை விலையை விட குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தோட்டக்கலை துறை மூலம் உழவர் சந்தைகளில் தக்காளி விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து குறைவான விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கிருஷ்ணகிரி மாவட்டம், தோட்டக்கலை துறையின் மூலம் தக்காளி நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து, குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மேலும் தக்காளியின் உற்பத்தி குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தோட்டக்கலை துறையின் மூலம் இங்குள்ள விவசாயிகளிடம் தக்காளி நேரடியாக கொள்முதல் செய்து, குறைந்த விலைக்கு விற்பனை செய்ய மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது.

    இதன் மூலம் தக்காளியின் விலை கட்டுக்குள் வைக்கப்படுகிறது. தோட்டக்கலை துறையின் மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்யும் தக்காளியை பொதுமக்கள் பெற்று பயன் அடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராமநாதபுரத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்படும்.
    • பொதுமக்கள் வாங்கி பயனடையுமாறு கலெக்டர் கூறியுள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகம் முழுவதும் தக்காளி உற்பத்தி மற்றும் வரத்து குறைவின் காரண மாக. கடந்த சில நாட்களாக விலை ஏறுமுகமாக இருந்து வருகிறது. இந்த திடீர் விலை உயர்வால் பாதிக்கப் பட்டுள்ள பொதுமக்களின் நிலையை உணர்ந்த முதல் அமைச்சர் இந்த தற்காலிக விலையேற்றத்தில் இருந்து பொதுமக்களை காக்கவும் விலை ஏற்றத்தை கட்டுப் படுத்தவும் தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள் முதல் செய்து உழவர் சந்தைகளில் குறைந்த விலையில் விற்பனை செய்ய வேண்டு மென உத்தரவிட்டுள்ளார்.

    இதனைத் தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் ராமநாதபுரம் உழவர் சந்தையில் டான்ஹோடா விற்பனையகம் மூலம் சந்தை விலையை விட குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு தனி நபருக்கு அதிகபட்ச மாக 1 கிலோ வரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு உழவர் சந்தையில் தோட்டக்கலைத்துறை மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் தக்காளியினை பொதுமக்கள் வாங்கி பயனடையுமாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 70க்கும் அதிகமான தன்னார்வலர் உதவியுடன் சேவை அளிக்கப்படுகிறது.
    • மாதம் ஒருமுறை மருத்துவ சேவை, ஆண்டுக்கு நான்குமுறை புத்தாடைகள் வழங்கி வருகின்றனர்.

    திருப்பூர் :

    ஆதரவற்றவர்களுக்கும், மாற்றத்திறனாளிகளுக்கும் உணவளித்து சேவையாற்றும் அட்சயபாத்திரம் அமைப்பு 2019 நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது. திருப்பூரில் 15 மண்டலங்களாக பிரித்து 70க்கும் அதிகமான தன்னார்வலர் உதவியுடன் சேவை அளிக்கப்படுகிறது. ஆதரவற்றவர், முதியோர், மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு தினமும் காலை உணவு வழங்கப்படுகிறது. மாதம் ஒருமுறை மருத்துவ சேவை, ஆண்டுக்கு நான்குமுறை புத்தாடைகள் வழங்குவது, பராமரிப்பது என சேவையாற்றி வருகின்றனர்.

    அட்சய பாத்திரம் அமைப்பின் அடுத்தகட்ட திட்டங்கள் குறித்து ஆலோசிக்க சிறப்பு கருத்தரங்கு மற்றும் ஆலோசனை கூட்டம் நடந்தது. மங்கலம், ஆண்டிபாளையம் பாரடைஸ் அரங்கில் அன்னம் பகிர்ந்திடு, சாய்ந்திட தோள்கொடு என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கு நடந்தது.

    உலக நல வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சிக்கு, அட்சயபாத்திரம் ஆலோசனை குழு தலைவர் மோகன்கார்த்திக் தலைமை வகித்தார். தலைவர் செந்தில்குமார், செயலாளர் நாகராஜன் ஆகியோர் சமூக பணிகளை விளக்கி பேசினர்.

    அறக்கட்டளையின் புதிய திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி வெளியே ஓட்டல்களில் உணவு ஆர்டர் செய்து ஏழைகளுக்கு வினியோகிக்கப்படுகிறது. இனி புதிய சமையல் கூடம் உருவாக்கி தரமான உணவு தயாரித்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.தன்னார்வலர்கள் பங்களிப்புடன், இலவச இரவு நேர உணவு வழங்கவும் திட்டமிட்டுள்ளனர். அத்துடன் பொதுமக்கள், தொழிலாளர் பயன்பெறும் வகையில் குறைந்தவிலையில் மதிய உணவு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • தேவகோட்டை அருகே குறைந்த விலைக்கு நகைகள் அடகு வைக்கப்பட்டது.
    • அந்த நகைகள் இந்த வழக்கில் தொடர்புடையதா? என்று தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்ணங்கோட்டை கிராமத்தில் கடந்த ஜனவரி மாதம் 11-ந் தேதி தாய், மகளை கொலை செய்து 60 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளை யடித்தனர். இவர்களது அருகில் தூங்கிய வேலுமதி மகன் மூவரசன் என்ற 13 வயது சிறுவனின் மண்டையை உடைத்து படுகாயப்படுத்தி விட்டு குற்றவாளிகள் தப்பி விட்டனர்.

    தமிழகத்தையே உலுக்கிய இந்த கோரச்சம்பவம் பொது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து தேவகோட்டை தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. துரையும் விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்த வழக்கு சம்பந்தமாக தேவகோட்டை துணை கண்காணிப்பாளர் பார்த்திபன், காரைக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் மேற்பார்வையில் 8 தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையின் போது 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர்.

    இந்த வழக்கில் ெதாடர்புடைய மேலும் சில குற்றவாளிகளை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. தற்போது விசாரணை தீவிரமடைந்து முக்கிய நபர்கள் விசாரணை வளையத்தில் சிக்கி இருப்ப தாக தெரிகிறது. எனவே போலீசார் அவர்கள் மீது ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருடப்பட்ட நகைகள் குறித்து தேவகோட்டை நகை கடை பஜாரில் உள்ள கடை உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களிடம் தனிப்படையினர் விசா ரணை நடத்தினர். அதில் இந்த வழக்கில் முக்கிய நபர் மூலமாக நகைக்க டைகளில் பல லட்சம் மதிப்பிலான நகை களை குறைந்த விலைக்கு அடகு வைத்தது தெரியவந்தது. அந்த நகைகள் இந்த வழக்கில் தொடர்புடையதா? என்று தனிப்படையினர் விசாரணை 

    • புதுச்சேரி மதுபான பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சீர்காழி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
    • 650 மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கோவில் பத்து கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 50) இவரது வீட்டின் பின்புறம் உள்ள வயலில் புதுச்சேரி சாராயம் மற்றும் குறைந்த விலை மதுபான பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சீர்காழி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று ஆறுமுகம் வீட்டின் பின்புறம் சோதனை செய்தனர். அப்போது அங்குள்ள வயலில் புதுச்சேரி மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் 650 மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் தப்பியோடிய ஆறுமுகத்தை தேடி வருகின்றனர்.

    • பெண்களிடம் இருந்து பணத்தை ஏமாற்றி சென்று விடுகின்றனர்.
    • குறைந்த விலையில் வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்ய வரும் நபர்களை நம்பி ஏமாற வேண்டும்.

    திருப்பூர் :

    கடந்த சில நாட்களாக குறைந்த விலையில் வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்வதாக கூறி வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் பணத்தை ஏமாற்றும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக திருமுருகன்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையில் போலீசார் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    அதில் வடமாநில இளைஞர்கள் உள்பட ஒருசிலர் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களிடம் சென்று, குறைந்த விலையில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்வதாக நைசாக பேச்சு கொடுக்கின்றனர். பின்னர் ஏதாவது மூளைச்சலவை செய்து பெண்களிடம் இருந்து பணத்தை ஏமாற்றி சென்று விடுகின்றனர். இதுபோன்ற ஒருசில சம்பவங்கள் திருப்பூரில் நடைபெற்றுள்ளது.

    எனவே வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள், அதுபோன்று குறைந்த விலையில் வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்ய வரும் நபர்களை நம்பி ஏமாற வேண்டும். சந்தேகப்படும்படியாக அந்த நபர்கள் இருந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும்திருமுருகன்பூண்டி போலீசார் பெண்கள் உள்பட பொதுமக்களுக்கு சமூக வலைத்தளங்கள் மூலமாக அறிவுரையுடன் கூடிய விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளனர்.

    ×