என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீர்வரிசை பொருட்கள்"

    • பீரோ, குடம், உள்ளிட்டவைகளை பொதுமக்கள் வழங்கினர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் ஒன்றியம் ஏ.கே. மோட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட புதுப் பூங்குளம் ஊராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 120 மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இந்த பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள், சார்பில் பீரோ, டேபிள், சேர், சுவர் கடிகாரம், பிளாஸ்டிக் குடங்கள், என பள்ளிக்கு தேவையான அனைத்து பொருட்களையும் சீர்வரிசையாக வழங்கும் நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் பு.வேலு தலைமை வகித்தார் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் எம்.ராஜேந்திரன், துணைத் தலைவர் சிவப்பிரகாசம் முன்னிலை வகித்தார்.

    அனைவரையும் தலைமை ஆசிரியர் புண்ணியமூர்த்தி வரவேற்றார், சிறப்பு அழைப்பாளராக ஏ. நல்லதம்பி எம்எல்ஏ கலந்துகொண்டு பள்ளிக்கு வழங்கிய சீர் வரிசைகளை வட்டார கல்வி அலுவலர் நெடுஞ்செழியனிடம் வழங்கி பேசினார்.

    • கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • துணை சேர்மன் துரைகற்பகராஜ் மற்றும் டாக்டர் ராதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை யொட்டி ராஜபாளையம் ரெயில்வே பீடர் ரோட்டில் உள்ள மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. தங்கபாண்டி யன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். யூனியன் சேர்மன் சிங்கராஜ் முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் தனது 3 மாத ஊதியத்தில் இருந்து 500 கர்ப்பிணிகளுக்கு 19 வகையான சீர்வரிசை பொருட்களை தங்கபாண்டி யன் எம்.எல்.ஏ. வழங்கினார். பின்னர் அவர் பேசியதா வது:-

    கருணாநிதி ஆட்சியில் தான் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்கப்பட்டது. தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் பெண்கள் உயர்கல்வி பயில புதுமைப்பெண் திட்டம், அரசு பஸ்களில் பயணம் செய்ய கட்டணமில்லா பஸ் வசதி, குடும்ப தலைவி களுக்கு மாதம் ரூ.1000 மகளிர் உரிமை தொகை என பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    நிகழ்ச்சியில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் தங்கலட்சுமி, பங்கஜம், ராஜபாளையம் மருத்துவ அலுவலர்கள் வரலட்சுமி, ரம்யா, உமாமகேஸ்வரி, நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, மாவட்ட அணிகளின் அமைப்பாளர் கள் சுமதி ராமமூர்த்தி, கல்பனா குழந்தை வேலு, சேகர், நவமணி, சொர்ணம், துணை சேர்மன் துரைகற்பக ராஜ் மற்றும் டாக்டர் ராதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காலங்காலமாக பழனி மலை முருகனுக்கு குறவர் இன மக்கள் சீர்வரிசை பொருட்கள் கொடுத்து வருகின்றனர்.
    • ஊர்வலத்தின் முன்பு மேளம், பறை இசை முழங்க சிறுவர்-சிறுமிகள் வேடன்-குறத்தி போன்று வேடமிட்டு ஆடி வந்தது அனைவரையும் கவர்ந்தது.

    பழனி:

    தமிழ் கடவுள் முருகனின் 3ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். தைப்பூசத்தின் போதும் அதனை தொடர்ந்து தற்போது வரை பக்தர்கள் பழனியில் குவிந்து வருகின்றனர். பல்வேறு காவடிகள் எடுத்தும் பாதயாத்திரையாக வந்து அவர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பிரசித்தி பெற்ற எடப்பாடி காவடிக்குழுவினர் 19ம் தேதி பழனி வந்து மலைக்கோவிலில் தங்கி சிறப்பு வழிபாடு செய்தனர்.

    மேலும் தங்கள் கைகளால் பஞ்சாமிர்தம் தயாரித்து முருகனுக்கு படைத்தனர். காலங்காலமாக பழனி மலை முருகனுக்கு குறவர் இன மக்கள் சீர்வரிசை பொருட்கள் கொடுத்து வருகின்றனர். அதன்படி இன்று சீர்வரிசை பொருட்களுடன் பழனி வந்தனர். பழங்குடியின மக்கள் பாரம்பரிய நடனம் ஆடி அடிவார பகுதிக்கு வந்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து குறவர் இன மக்கள் மற்றும் வனவேங்கைகள் கட்சியினர் சீர்வரிசை பொருட்களுடன் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    முன்னதாக பஸ்நிலைய பகுதியில் இருந்து மா, பலா, வாழை உள்ளிட்ட பழங்கள், கிழங்கு வகைகள், தேன், தினைமாவு, காய்கறிகள் உள்ளிட்டவற்றை மூங்கில்நார் கூடைகளில் பெண்கள் எடுத்து ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தின் முன்பு மேளம், பறை இசை முழங்க சிறுவர்-சிறுமிகள் வேடன்-குறத்தி போன்று வேடமிட்டு ஆடி வந்தது அனைவரையும் கவர்ந்தது.

    குறவர் மகள் வள்ளியை முருக பெருமான் திருமணம் செய்ததால் தாய்வீட்டு சீதனமாக மலைப்பகுதியில் விளையும் பொருட்களை சீர்வரிசையாக கொண்டு வந்து தரிசனம் செய்து வருகின்றோம். பூர்வீக தமிழ்குடி மக்களாகிய எங்களுக்கு அறுபடை வீடுகளிலும் உரிய முக்கியத்துவம் தரவேண்டும் என்றனர்.

    ×