என் மலர்
நீங்கள் தேடியது "வீரேந்திர சேவாக்"
- ஒப்பிட்டு பேசுவது எனக்கு பிடிக்காது. எனக்கு இப்போது 24-25 வயதுதான் ஆகிறது.
- ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் நான் அப்படி ஒன்றும் சொதப்பவில்லை.
நியூசிலாந்தில் விளையாடி வரும் இளம் இந்திய அணி டி20 தொடரை கைப்பற்றியது. இதனையடுத்து ஒருநாள் தொடர் நடைப்பெற்று வருகிறது. கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் ஓய்வெடுக்கும் இத்தொடர் இளம் வீரர்களுக்கான வாய்ப்பாக கருதப்படும் நிலையில் காலம் காலமாக வாய்ப்புக்காக காத்துக் கிடக்கும் கேரளாவை சேர்ந்த சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படாதது அனைவரையும் கொந்தளிக்க வைத்தது.
அதிகப்படியான வாய்ப்பை பெற்றும் சுமாராக செயல்படாத ரிஷப் பண்ட் ஒருநாள் போட்டிகளில் கடந்த ஜூலையில் இங்கிலாந்து மண்ணில் அடித்த சதத்தை தவிர்த்து பெரும்பாலும் சிறப்பாக செயல்பட்டதில்லை. இருப்பினும் அவரை அடுத்த தலைமுறை விக்கெட் கீப்பராகவும் கேப்டனாகவும் உருவாக்க நினைக்கும் பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழு சொதப்பலாகவே செயல்பட்டாலும் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வருவது ரசிகர்களை கடுப்பாக வைத்துள்ளது.
இந்நிலையில் தற்போது, நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி துவங்குவதற்கு முன், ரிஷப் பந்திடம் கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்லே சில கேள்விகளை கேட்டார்.
Rishabh Pant interview with Harsha Bhogle before 3rd ODI against NZ talking about rain, batting position, stats and scrutiny over T20i performance & WK drills. #NZvINDonPrime pic.twitter.com/TjOUdnPTCz
— S H I V A M 🇧🇷 (@shivammalik_) November 30, 2022
ஹர்ஷா போக்லே கேள்வி: வீரேந்தர் சேவாக் டெஸ்டில் அதிரடி காட்டி டி20, ஒருநாள் போட்டிகளில் சொதப்பியபோது, அவர் விமர்சனங்களை எதிர்கொண்டார். உங்களிடமும் இதே கேள்வியை கேட்க விரும்புகிறேன்.
ரிஷப் பந்த் பதில்: சார், ரெக்கார்ட் என்பது வெறும் எண்கள்தான். ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் நான் அப்படி ஒன்றும் சொதப்பவில்லை.
ஹர்ஷா போக்லே கேள்வி: நான் உங்களது ஒருநாள், டி20 ரெக்கார்ட் சரியில்லை எனக் கூறவில்லை. உங்களது டெஸ்ட் ரெக்கார்ட்டைவிட, ஒருநாள், டி20 ரெக்கார்ட் குறைவாக இருக்கிறது எனக் கூறுகிறேன்.
ரிஷப் பந்த்: ஒப்பிட்டு பேசுவது எனக்கு பிடிக்காது. எனக்கு இப்போது 24-25 வயதுதான் ஆகிறது. இப்போதே சேவாக் உடனும், எனது டெஸ்ட், ஒருநாள் ரெக்கார்ட்டை எப்படி ஒப்படுருகிறீர்கள். இப்போதே ஒப்பிடுவது சரியான கேள்வி தானா? 30-32 வயதாகட்டும். அதன்பிறகு ஒப்பிட்டு பாருங்கள்.
இப்படி இருவருக்கும் இடையிலான உரையாடல் அனல் பறந்தது.
- இந்த வருட ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- சமீப காலத்தில் நான் பார்த்த மிகச்சிறந்த டெஸ்ட் போட்டி இதுதான் என சேவாக் கூறினார்.
இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக் அவ்வப்போது நடைபெறும் கிரிக்கெட் போட்டிகள் குறித்த தனது கருத்துக்களை சமூக வலைகள் மூலமாக பகிர்வது வழக்கம். அந்த வகையில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி குறித்து டுவிட்டரில் கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது அங்கு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே கடந்த 16-ம் தேதி துவங்கிய முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்சில் 393 ரன்களை குவிக்க அதனை தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது 386 ரன்கள் குவித்தது. இதன் காரணமாக ஏழு ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 223 ரன்களை குறித்தது.
பின்னர் 281 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு ஆஸ்திரேலிய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதனை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது எட்டு விக்கெட்டை இழந்து 282 ரன்கள் குவித்து இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றிருந்தது.

இந்த போட்டி குறித்து சேவாக் கூறியதாவது:-
என்ன ஒரு அற்புதமான டெஸ்ட் போட்டி. சமீப காலத்தில் நான் பார்த்த மிகச்சிறந்த டெஸ்ட் போட்டி இதுதான். குறிப்பாக வானிலையை கருத்தில் கொண்டு முதல் நாள் முடிவடைவதற்கு சற்று முன்னதாக இங்கிலாந்து டிக்ளேர் அறிவித்தது துணிச்சலான முடிவாகும். ஆனால் கவாஜா இரண்டு இன்னிங்ஸ்களில் அற்புதமாக விளையாடினார். பேட் கம்மின்ஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மிஸ்டர் கூல். அவர் போட்டியை முடித்துக் கொடுத்ததும், அழுத்தமான சூழலில் லயன் உடனான சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தது என இந்த போட்டி நீண்ட நாட்களுக்கு எனக்கு ஞாபகத்தில் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- குல்தீப் மிகச்சிறப்பாக செயல்பட்டும் அதிகமான பாராட்டுகளை பெறுவதில்லை.
- கடந்த பல வருடங்களாக இந்திய அணிக்காக நன்றாக செயல்பட்டு வருகிறார்.
புதுடெல்லி:
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7ம் தேதி தர்மசாலாவில் தொடங்குகிறது.
இந்நிலையில் இந்திய அணியில் இருக்கும் வீரர்களிலேயே குல்தீப் யாதவ் மிகச்சிறப்பாக செயல்பட்டும் அதிகமான பாராட்டுகளை பெறுவதில்லை என்று சேவாக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
"மிகைப்படுத்துதல் என்று வரும்போது குல்தீப் யாதவ் மிகவும் குறைவாக மிகைப்படுத்தப்படும் வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். கடந்த பல வருடங்களாக இந்திய அணிக்காக நன்றாக செயல்பட்டு வருகிறார். ஆனாலும் அவருக்கு இப்போதும் ஆன்லைன் பேன்ஸ் கிளப் இல்லை.
அவர் மிகச்சிறப்பாக செயல்பட்டும் அதிகமான பாராட்டுகளை பெறுவதில்லை. மக்கள் யாரும் இவர்தான் அடுத்த பெரிய ஸ்டார் என்று கொண்டாடியதில்லை. என்னைக் கேட்டால் தற்போது பெறுவதை விட அவர் அதிக பாராட்டு மற்றும் மிகைப்படுத்தலுக்கு தகுதியானவர்.
என்று சேவாக் கூறினார்.
- டி20 கிரிக்கெட்டில் இருந்து ஷகிப் அல் ஹசன் ஓய்வை அறிவிக்க வேண்டும் என்று சேவாக் கூறியிருந்தார்.
- அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சேவாக் யார் என்று ஷகிப் கேள்வி எழுப்பினார்.
கிங்ஸ்டவுன்:
டி20 உலகக்கோப்பை தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 25 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் வங்கதேச பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறிய போது, அனுபவ வீரர் ஷகிப் அல் ஹசன் 46 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
முன்னதாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் ஷகிப் அல் ஹசன் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது இந்திய ஜாம்பவான் சேவாக் ஷகிப் அல் ஹசன் அதிக அனுபவங்களை கொண்ட வீரர். வங்கதேச அணியின் கேப்டனாக நீண்ட காலம் செயல்பட்டுள்ளார். ஆனால் டி20 கிரிக்கெட்டில் ஷகிப்பின் செயல்பாடுகள் மோசமான இருந்துள்ளன. இதனை நினைத்து அவர் வெக்கப்பட வேண்டும். டி20 கிரிக்கெட்டில் இருந்து ஷகிப் அல் ஹசன் ஓய்வை அறிவிக்க வேண்டும் என்று காட்டமாக பேசியிருந்தார்.
இந்த நிலையில் ஷகிப் அல் ஹசன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் சேவாக்கின் விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஷகிப் அல் ஹசன், எந்த வீரரும் யாருக்கும் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு வீரரின் பணி என்னவென்றால், அணியின் வெற்றிக்கு உதவுவது தான்.
பேட்ஸ்மேனாக, பவுலராக, ஃபீல்டராக சிறப்பாக செயல்பட்டு அணியை வெற்றிபெற வைக்க வேண்டும். மற்றபடி யாருக்கும் பதிலளிக்க தேவையில்லை. அதேபோல் ஒரு வீரரால் அணியின்வெற்றிக்கு பங்களிக்க முடியவில்லை என்றால், நிச்சயம் சில விவாதங்கள் வரும். அதில் எந்த தவறும் இல்லை என்று நினைக்கிறேன். ஆனால் எனது ஆட்டம் குறித்து நான் எப்போதும் கவலைக் கொண்டதில்லை.
என் கிரிக்கெட் வாழ்க்கை முழுக்கவே அப்படி தான் இருந்திருக்கிறேன். கிரிக்கெட்டில் ஒருநாள் உங்களுக்கான நாளாக இருக்கும். மற்றொரு நாள் இன்னொரு வீரருக்கான நாளாக இருக்கும். நன்றாக பவுலிங் செய்வதே எனது பணி. விக்கெட் வீழ்த்துவதற்கு கொஞ்சம் அதிர்ஷடமும் தேவை என்று நினைப்பதாக என்று தெரிவித்துள்ளார்.
- ஈஷா கிராமோத்சவத்தின் இறுதிப்போட்டிகள் கோவையில் இன்று நடைபெற்றன.
- ஐ.பி.எல்.லை விட பெரியது கிராமோத்சவம் என்றனர் சேவாக், வெங்கடேஷ் பிரசாத்
கோவை:
ஈஷா சார்பில் பாரதத்தின் மாபெரும் விளையாட்டு திருவிழாவான 16-வது ஈஷா கிராமோத்சவத்தின் இறுதிப்போட்டிகள் சத்குரு முன்னிலையில் இன்று கோவையில் கோலாகலமாக நடைபெற்றது.
கோவை ஆதியோகி முன் நடைபெற்ற இறுதிப்போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் பரிசுகளை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், வெங்கடேஷ் பிரசாத், பாரா ஒலிம்பிக் வீரர்கள் மாரியப்பன் தங்கவேலு, துளசிமதி மற்றும் பண்ணாரி அம்மன் குழுமத்தின் தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் வழங்கினர்.
இந்த விழாவில் சத்குரு பேசியதாவது:
ஒரு காலத்தில் 100 சதவீத கல்வி பெற்றதாக இருந்த நாடு, விடுதலை பெறும்போது 93 சதவீதம் கல்வியறிவு இல்லாத நாடாக மாறி இருந்தது. இது வெறும் 300 ஆண்டுகளில் நடைபெற்றது.
ஆனால் கடந்த 75 வருடங்களில் நாம் மகத்தான பல விஷயங்களைச் செய்துள்ளோம். புத்திசாலித்தனம், உறுதி, திறமை போன்ற பல அம்சங்கள் நம் வாழ்க்கையில் இருக்கின்றன. ஆனால் அவை எல்லாம் நமக்காக செயல்பட வேண்டும் என்றால் நாம் புத்துணர்வாக, உற்சாகமாக இருக்க வேண்டும். நீங்கள் புத்துணர்வாக இல்லை என்றால் எவ்வளவு பணம், சொத்து, திறமை இருந்தாலும் உங்களால் எதையும் உருவாக்க முடியாது. அந்த வகையில் கிராமங்களில் புத்துணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கிராமோத்சவம் நடத்தப்படுகிறது.
எளிமையாக துவங்கப்பட்ட இந்த கிராமோத்சவம் 5 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பங்குபெறும் பெரிய விழாவாக இன்று மாறி உள்ளது. ஆனால் இது போதாது. ஈஷா கிராமோத்சவம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடைபெற வேண்டும் என தெரிவித்தார்.
இந்த விழாவில் கிரிக்கெட் வீரர் சேவாக் பேசியதாவது:
மனித நல்வாழ்விற்காக சத்குரு செய்து வரும் மகத்தான பணிக்கு என் வணக்கங்கள். கிராமோத்சவம் திருவிழாவின் நோக்கம், தீவிரம் அனைத்தையும் பார்க்க ஆனந்தமாக இருக்கிறது. ஆயிரக்கணக்கான கிராமங்களில் விளையாட்டுப் போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்தி மகத்தான விளையாட்டுத் திருவிழாவாக இது நடந்து இருக்கிறது. இதற்கு சத்குருவிற்கு என் நன்றிகள். நீங்கள் வாழ்வதற்காக எதை செய்தாலும், விளையாட்டிற்காக தினமும் 10 - 15 நிமிடங்கள் செலவிடுங்கள்.
விளையாட்டு என்பது மகத்தான ஆசிரியர், அது குழுவாக இணைந்து செயல்படுவதை, எதிர்த்துப் போராடுவதை, இக்கட்டான சூழலில் இருந்து வெளியேறுவதை, தோல்வியிலிருந்து மீண்டு எழுவதை என வாழ்வின் பல அம்சங்களை நமக்கு கற்றுத் தருகிறது என கூறினார்.
பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன் பேசுகையில், காஞ்சிபுரத்தில் இருந்து தினக்கூலிக்கு பிறந்த பெண்ணால் சாதிக்க முடியும் என்றால் உங்களாலும் சாதிக்க முடியும். பெண்கள் விளையாட்டில் சாதனை படைக்க சத்குரு ஊன்றுகோலாகத் திகழ்கிறார். நான் ஏராளமான சர்வதேச விளையாட்டுகளில் பங்கேற்று பல பதக்கங்களை வென்றிருக்கிறேன். அந்த நேரத்தில் எல்லாம் எனக்கு எழுந்த மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வர சத்குருவின் உத்வேக வார்த்தைகள் எனக்கு உதவியாக இருந்தது என்றார்.
கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் பேசுகையில், ஐ.பி.எல். போட்டிகளை ஒருங்கிணைப்பது கூட எளிதானது. இது போன்ற கிராமங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்துவதுதான் கடினமானது. இதனை செய்யும் ஈஷாவிற்கும் சத்குருவிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

வாலிபால் இறுதிப்போட்டியில் கர்நாடக மாநிலம் பனகல் கிராமத்தைச் சேர்ந்த அலிப் ஸ்டார் அணி வென்று முதல் இடம் பிடித்தது. இரண்டாம் இடத்தை உடுப்பி மாவட்டம் பள்ளிகிராமத்தைச் சேர்ந்த பள்ளி பிரண்ட்ஸ் அணி பிடித்தது.
அதேபோல் பெண்களுக்கான த்ரோபால் இறுதிப்போட்டியில் கர்நாடக மாநிலம் மார்கோடு கிராமத்தைச் சேர்ந்த அணி வென்று முதல் இடத்தை பெற்றது. இரண்டாம் இடத்தை தமிழ்நாட்டில் இருந்து புள்ளாக்கவுண்டன் புதூர் கிராம அணி பிடித்தது
மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்பட்ட வாலிபால் போட்டிகளை பாரா பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன் துவங்கி வைத்தார். இதில் தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர். இதில் முதல் இடத்தை கோவை அணியும், இரண்டாம் இடத்தை கிருஷ்ணகிரி அணியும் வென்றன.
16-வது ஈஷா கிராமோத்சவ இறுதிப்போட்டியில் முதல் இடத்தை பிடித்த அணிகளுக்கு 5 லட்சமும், 2-ம் இடத்தைப் பிடித்த அணிகளுக்கு 3 லட்சமும், 3 மற்றும் 4-ம் இடத்தை பிடித்த அணிகளுக்கு தலா 1 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.
முன்னதாக, ஈஷாவுடன் இணைந்து யுவா கபடி லீக் நடத்திய கபடி போட்டி நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெற்ற இந்தப் போட்டியில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்றது.
அதேபோல், ஈஷாவுடன் இணைந்து கோயம்புத்தூர் கிரிக்கெட் அசோசியேஷன் நடத்திய சூப்பர் ஓவர் கிரிக்கெட் சேலஞ்ச் போட்டியில் 150 அணிகள் பங்கேற்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சேவாக் கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட் வழங்கப்பட்டது. சிலம்பம் போட்டிகளில் 500-க்கும் மேற்பட்டோர் வயது அடிப்படையில் 6 பிரிவுகளில் கலந்துகொண்டனர்.
இதனுடன் தென்னிந்திய மாநிலங்களின் பாரம்பரிய கலைகளைப் பிரதிபலிக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அந்த வகையில் தமிழ்நாடு சார்பில் பறையாட்டம் மற்றும் தவில், நாதஸ்வரம் இசை நிகழ்ச்சிகளும், கர்நாடகா சார்பில் பிலி வேசா எனும் புலி நடனமும், தெலுங்கானா சார்பில் கோண்டு பழங்குடிகளின் குசாடி நடனமும், கேரளா சார்பில் செண்ட மேளம் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் பஞ்சரி மேளம், 1000 பேர் கலந்துகொண்ட வள்ளி கும்மி, 500 பேர் பங்கேற்ற ஒயிலாட்டம், 1,500 பேர் பங்கேற்ற கோலப் போட்டி ஆகிய நிகழ்ச்சிகளும் பிரம்மாண்டமாக நடைபெற்றன.
- வீரேந்திர சேவாக், ஆர்த்தி என்பவரை கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
- இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஒருவருக்கொருவர் Unfollow செய்துள்ளனர்.
சமீபகாலமாக திரைப்பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலரும் தங்களது பல வருட திருமண வாழ்க்கையை முறித்துக் கொண்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்கும் இணைந்துள்ளார்.
வீரேந்திர சேவாக், ஆர்த்தி என்பவரை கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில், வீரேந்திர சேவாக்- ஆர்த்தி தம்பதி தங்களின் 21 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில மாதங்களாகவே இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்த நிலையில், சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஒருவருக்கொருவர் Unfollow செய்துள்ளனர்.
முன்னதாக, வீரேந்திர சேவாக் தனது தீபாவளி கொண்டாட்டத்தின் போது எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். அப்புகைப்படங்களில் அவரது மகன் மற்றும் அவரது தாயார் இடம்பெற்றிருந்தனர். ஆனால் அவரது மனைவி ஆர்த்தி இல்லை. மேலும், பாலக்காட்டில் உள்ள விஸ்வ நாகயக்ஷி கோவிலின் படங்களையும் சேவாக் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அதிலும் அவரது மனைவி இல்லை. இதனால் இந்த தம்பதிக்கு இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
விவாகரத்து தொடர்பாக வீரேந்திர சேவாக் மற்றும் ஆர்த்தி சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.