என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரொக்கப்பணம்"

    • கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்த கணவர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • ரூ. 5 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 10 பவுன் நகைகள் வரதட்சணை கேட்டதாக கூறப்படுகிறது.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே பேரையூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஸ்வரி (வயது 23). இவருக்கும், சாப்டூர் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (27) என்ப வருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    திருமணத்தின் போது ஜெகதீஸ்வரியின் பெற்றோர் 25 பவுன் நகைகள், ரூ. 2½ லட்சம் ரொக்கப்பணம் வரதட்ச ணையாக கொடுத்துள்ளனர். செல்வகுமார் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இதனால் அவர் தனது மனைவியுடன் சென்னையில் வசித்து வந்தார்.

    இந்தநிலையில் அவர் பணி காரணமாக அமெரிக்கா செல்ல இருந்தார். ஆகவே அவர் தனது மனைவியை சாப்டூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் விட்டு விட்டு, அமெரிக்கா சென்று விட்டார். மாமனார் மற்றும் மாமியாருடன் ஜெகதீஸ்வரி வசித்து வந்தார்.

    அப்போது அவரிடம் ரூ. 5 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 10 பவுன் நகைகள் கூடுதல் வரதட்சணை கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஜெகதீஸ்வரி கணவர் வீட்டில் இருந்து பேரையூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இதனைத்தொடர்ந்து செல்வகுமார் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்தநிலையில் தன்னிடம் கூடுதல் வரதட்சணை கேட்ட தொல்லை தந்ததாக தனது கணவர் குடும்பத்தினர் மீது திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலை யத்தில் ஜெகதீஸ்வரி புகார் செய்தார்.

    அதன் பேரில் செல்வகுமார், அவரது தாய் மற்றும் தந்தை ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சோதனையில் வெவ்வேறு அறைகளில் 4 கட்டை பையில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுக்கள் பல லட்ச ரூபாய் பதுக்கி வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர்.
    • தேர்தல் நேரத்தில் நிதி நிறுவனர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த லட்சக்கணக்கான பணம் சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நாமக்கல்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 19-ந்தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளது. இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர், போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் சந்தேகப்படும் இடங்களில் தேர்தல் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். இதில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்படும் பணம், நகைகள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டு வருகின்றன.

    இதற்கிடையே தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டதன்படி வருமான வரித்துறை அதிகாரிகளும் களத்தில் இறங்கி உள்ளனர். முறையாக வரி செலுத்தாதவர்கள், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பவர்கள் பட்டியலை சேகரித்து அவர்களின் வீடுகள், நிறுவனங்கள் மற்றும் புகார் தெரிவிக்கப்படும் இடங்களிலும் சோதனை நடத்தி வருகிறார்கள். அதுமட்டுமின்றி தேர்தல் பறக்கும் படையில் ரூ.10 லட்சத்திற்கு மேல் சிக்கினால் அது குறித்தும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.

    இந்த நிலையில் நாமக்கல் ஈ.பி.காலனியில் வசித்து வருபவர் செல்லப்பன் (வயது 60). தனியார் நிதி நிறுவன அதிபரான இவர், டேங்கர் லாரியும் வைத்துள்ளார். அதோடு ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இதனிடையே நேற்று வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக ஏராளமான பணத்தை நிதிநிறுவன அதிபர் செல்லப்பன் வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கலைச்செல்வன், அயாஸ்கான் தலைமையிலான தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் தலைமையிலான போலீசாரும் தொழில் அதிபர் செல்லப்பன் வீட்டிற்குள் சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையில் வெவ்வேறு அறைகளில் 4 கட்டை பையில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுக்கள் பல லட்ச ரூபாய் பதுக்கி வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த 7 பேர் கொண்ட நாமக்கல் வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவினர் 4 பைகளில் இருந்த ரூபாய் நோட்டுகளை எந்திரம் மூலம் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். சோதனையின் முடிவில் கணக்கில் வராத ரூ.80 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகளும் தங்களுடைய பங்களிப்பாக வீடு முழுவதும் தங்களுக்குரிய பாணியில் அதிரடி சோதனை நடத்தினார்கள். வீட்டின் குடிநீர் தொட்டி, பூஜை அறையை திறந்து பார்த்தனர். காலி சிலிண்டரை ஆய்வு செய்தனர். மேலும் வீட்டின் கீழ் தளம், மேல் தளத்தில் உள்ள ஒவ்வொரு அறைகளிலும் பீரோ, கட்டில், மெத்தை, பாத்திரங்கள், சமையல் அறையில் உள்ள பொருட்கள், அரிசி பைகள், பிளாஸ்டிக் டப்பாக்கள் ஆகியவற்றை திறந்து பார்த்தனர். இதில் படுக்கை அறையில் உள்ள கட்டிலுக்கு அடியில் ரூ.45 லட்சம் கட்டுகட்டாக இருந்தது. இந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இருக்கிறதா? என வீட்டில் உள்ளவர்களிடம் கேட்டனர். அதற்கு எந்த ஆவணங்களும் இல்லை என தெரிவிக்கவே அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    மேலும் சோதனையின்போது பீரோவில் நிறைய சொத்து ஆவணங்கள் இருந்தன. அவற்றை எடுத்து ஆய்வு செய்தபோது அவை ரூ.30 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் என தெரியவந்தது. இதற்கு உரிய வருமான வரி செலுத்தப்படுகிறதா? என அதிகாரிகள் கேட்டனர். இதையடுத்து அந்த சொத்து ஆவணங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் செல்லப்பன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் இதைத்தவிர வேறு இடங்களில் சொத்து, நிறுவனங்கள், கடைகள் உள்ளதா? என வருமான வரித்துறை அதிகாரிகள் கேட்டனர். அப்போது அவர்கள் கொடுத்த தகவல்களை பதிவு செய்து கொண்டு பறிமுதல் செய்த பணத்தை அதிகாரிகள் எடுத்துச்சென்றனர். உரிய ஆவணம் சமர்பிக்கப்பட்ட பிறகு பணம் திருப்பி ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த சோதனை இரவு முழுவதும் விடிய, விடிய நடைபெற்றது. இன்று அதிகாலையில் தான் அவர்கள் சோதனையை நிறைவு செய்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

    தொடர்ந்து செல்லப்பன் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பெயரில் உள்ள வங்கி கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது? பரிமாற்றம் எந்த அளவிற்கு மேற்கொள்ளப் பட்டுள்ளது? என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    தேர்தல் நேரத்தில் நிதி நிறுவனர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த லட்சக்கணக்கான பணம் சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு.
    • வரும் ஜனவரி 9ம் தேதி முதல் டோக்கன் விநியோகம் தொடங்கும் என தமிழக அரசு அறிவித்தது.

    2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற்றுக் கொள்ள வரும் ஜனவரி 9ம் தேதி முதல் டோக்கன் விநியோகம் தொடங்கும் என தமிழக அரசு அறிவித்தது.

    பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2000 ரொக்கப்பணம் வழங்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

    இந்நிலையில், அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது அவரிடம், பொங்கல் பரிசுத்தொகுப்பில் ரூ.1,000 ரொக்கப்பணம் இடம்பெறாதது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.

    அதற்கு பதிலளித்து அவர், "கடந்த ஆண்டு புயல், மழையால் ஏற்பட்ட பேரிடர்களுக்கு ரூ.2,028 கோடி செலவிட்டுள்ளோம். பேரிடர்களுக்காக மாநில நிதியில் இருந்து செலவிட்டிருக்கிறோம். பேரிடர் நிவாரண நிதியாக ரூ.37 ஆயிரம் கோடி கேட்டதற்கு ரூ.276 கோடி மட்டுமே மத்திய அரசு தந்தது. மத்திய அரசிடம் அதிகம் கேட்டாலும் சொற்பமாகத்தான் கிடைத்தது. நிதிச்சுமையை தமிழக அரசு ஏற்றது.

    பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க ரூ.280 கோடி செலவாகியுள்ளது. நல்ல சூழல் விரைவில் உருவாகும். மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000-ஐ பொங்கல் பண்டிகைக்கு முன்பாக வழங்குவது குறித்து பரிசீலிக்கிறோம்" என்றார்.

    • பொங்கல் பரிசுத் தொகை அறிவிப்பு இல்லாதது தமிழக மக்களுக்கு பெரும் ஏமாற்றம் அளிக்கிறது.
    • நிதிப்பற்றாக்குறையை காரணம் காட்டி பொங்கல் பண்டிகைக்கு பரிசுத் தொகை வழங்க மறுப்பது பொருத்தமல்ல என்றார்.

    பொங்கல் தொகுப்பு திட்டத்துடன், பரிசுத்தொகையும் வழங்க தமிழ்நாடு அரசை முன்வர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பொங்கல் தமிழர்களின் முக்கியமான பண்பாட்டுத் திருவிழா ஆகும். பொங்கல் சிறப்பாக கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். தமிழ்நாடு அரசு பொங்கல் தொகுப்பு திட்டத்தை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

    அதேநேரத்தில் வழக்கமாக வழங்கப்படும் பொங்கலுக்கான பரிசுத் தொகை அறிவிக்கப்படாதது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

    தமிழக நிதியமைச்சர் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு நிதி வழங்குவதில் பாரபட்சமாக நடந்து கொள்வது, இயற்கை பேரிடருக்கு தமிழ்நாடு அரசு கோரிய நிதியினை தராமல் சொற்ப நிதியை வழங்கியிருப்பது, வெள்ள பாதிப்புகளுக்கு தமிழ்நாடு அரசு செலவழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் போன்ற காரணங்கள் அனைத்தும் ஏற்கத்தக்கது தான்.

    இருப்பினும் பொங்கல் பண்டிகைக்கு நிதிப்பற்றாக்குறையை காரணம் காட்டி வழங்க மறுப்பது பொருத்தமல்ல.

    எனவே, தமிழ்நாடு அரசு நிதி சிரமம் இருப்பினும், பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றப்படுவதைப் போல இந்த ஆண்டு பொங்கலுக்காக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பரிசுத்தொகையாக ரூ. 1000/- வழங்கிட முன்வர வேண்டுமென்று சிபிஐ (எம்) மாநில செயற்குழு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • திருமண மண்டபங்களில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
    • பதவிக்கு ஏற்ப பொங்கல் பணம் கொடுக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை அனைவரும் கொண்டாடும் நிலையில், தி.மு.க.வினர் மிக எழுச்சியாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுவது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    இதையொட்டி கட்சி நிர்வாகிகளுக்கு புத்தாடைகள், கரும்புகள், பொங்கல் பொருட்கள், பாத்திரங்கள், ரொக்கப்பணம் ஆகியவையும் வழங்கப்பட்டு வருகிறது.

    கழக செயலாளர்கள், மாவட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், பகுதி கழக வட்ட கழக செயலாளர்கள், கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கி வருகிறார்கள். ஆங்காங்கே உள்ள திருமண மண்டபங்களில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    இதுதவிர கட்சித் தலைமையில் இருந்தும் நிர்வாகிகளுக்கு பெரிய அளவில் பணம் வழங்கப்பட்டு வருகிறது. அமைச்சர்கள் மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள், மேயர்கள், துணை மேயர்கள், கவுன்சிலர்கள், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், பகுதி கழக வட்டக் கழக ஒன்றிய கழக நிர்வாகிகள் பேரூர் செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிள், தலைமை செயற்குழு, பொதுக் குழு உறுப்பினர்கள், பி.எல்.ஏ.-2 பாக முகவர்கள், பூத் கமிட்டி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் பதவிக்கு ஏற்ப பொங்கல் பணம் கொடுக்கப்பட்டு வருகிறது.

    இதில் எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.5 லட்சம் கிடைத்துள்ளது.

    இதுகுறித்து தி.மு.க. நிர்வாகிகள் கூறுகையில், கட்சி தலைமையில் இருந்து தீபாவளிக்கு பணம் தந்தது போல் இப்போது பொங்கலுக்கும் தந்துள்ளனர்.

    மாவட்ட செயலாளர் களுக்கு ரூ.10 லட்சம், எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.5 லட்சம், மாநகர செயலாளர்களுக்கு ரூ.3 லட்சம், பகுதி செயலாளர்களுக்கு ரூ.1½ லட்சம், பேரூர் செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்களுக்கு ரூ.50 ஆயிரம், கவுன்சிலர்கள், வட்டச் செயலாளர்களுக்கு ரூ.25 ஆயிரம், வட்ட பொறுப்பில் உள்ளவர்களுக்கு ரூ.5 ஆயிரம், ரூ.2 ஆயிரம் என பதவிக்கேற்ப பொங்கல் பணம் வழங்கப்பட்டு வருகிறது.

    இதனால் கட்சி நிர்வாகிகள் உற்சாகமாக உள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    ×