search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீயணைப்புத் துறை"

    • தீயணைப்புத் துறையினர் 2 வாகனங்களில் வந்து பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.
    • டீசல் டிரம்களில் தீப்பிடித்து இருந்தால் பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கும்.

    திருப்பதி:

    ஆந்திராவில் ரெயில்வே என்ஜினியர்கள் பயன்படுத்தும் சிறப்பு ரெயில் ஒன்று பெட்டா ரெயில் நிலையத்துக்கு வந்தது.

    7-வது பிளாட்பாரத்தின் முடிவில் லூப் லைனில் நிறுத்தப்பட்டு இருந்தது. நேற்று இரவு 7.30 மணி அளவில் தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரெயில் பெட்டியில் திடீரென புகை வந்தது.

    ரெயில் பெட்டியில் இருந்து புகை வருவதை கண்டு ரெயில்வே ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஏலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதற்குள் ரெயில் பெட்டி மளமளவென தீப்பிடித்து எரிய தொடங்கியது. தீயணைப்புத் துறையினர் 2 வாகனங்களில் வந்து பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.

    தீ விபத்து ஏற்பட்ட பெட்டியில் டீசல் நிரப்பப்பட்ட 10 டிரம்கள், பேட்டரிகள், மின் ஒயர்கள், தண்டவாள பராமரிப்பு பணிக்கான பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன.

    தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததால் டீசல் டிரம்களில் தீப்பிடித்து எரியவில்லை. டீசல் டிரம்களில் தீப்பிடித்து இருந்தால் பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கும்.

    அதிக வெப்பம் காரணமாக ரெயில் பெட்டியில் பொருத்தப்பட்டு இருந்த ஒயர்கள் கருகி ஒன்றுடன் ஒன்று உரசி மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து நடந்ததாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பஸ்சில் தீ கொளுந்து விட்டு எரிவதால் பயணிகள் கண்ணாடியை உடைத்து கொண்டு வெளியே குதித்து தப்பினர்.
    • தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி பற்றி எரிந்த தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.

    கிருஷ்ணகிரி:

    பெங்களூரில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு திருவண்ணாமலை நோக்கி கர்நாடகா அரசு பஸ் வந்து கொண்டிருந்தது.

    இந்த பஸ் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி அருகே இன்று மதியம் வந்தபோது தேசிய நெடுஞ்சாலை குறுக்கே இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் கடக்க முயன்றனர்.

    அப்போது கர்நாடகா அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பைக்கின் பெட்ரோல் டேங்க்கில் மோதியதால் வெடித்து சிதறியது. இதில் பயணம் செய்த 2 பேரும் உடல் கருகி இறந்தனர். மேலும் விபத்தில் சிக்கிய பஸ்சும் தீ குபுகுபுவென பற்றி எரிந்தது. இதனை பார்த்த பயணிகள் அலறினர். பஸ்சில் தீ கொளுந்து விட்டு எரிவதால் பயணிகள் கண்ணாடியை உடைத்து கொண்டு வெளியே குதித்து தப்பினர்.

    இந்த விபத்து குறித்து தீயணைப்புத் துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அவர்கள் விரைந்து வந்தனர். இந்த விபத்தால் சாலையில் நீண்ட தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி பற்றி எரிந்த தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். பின்னர் போலீசார் போக்குவரத்தை சரிசெய்து சீரமைத்தனர்.

    இந்த தீ விபத்தில் இறந்தவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என உடனடியாக தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதே பகுதியில் உள்ள ஆசைத்தம்பி என்பவரது 20 அடி ஆழமுடைய தரை கிணற்றில் விழுந்துவிட்டது.
    • ேஜ.சி.பி. எந்திரம் உதவியுடன் பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    கடலூர்:

    திட்டக்குடி அடுத்த கோழியூர் கிராமத்தில் நாராயணசாமி என்பவருக்கு சொந்தமான பசு மாடு அதே பகுதியில் உள்ள ஆசைத்தம்பி என்பவரது 20 அடி ஆழமுடைய தரை கிணற்றில் விழுந்துவிட்டது. இது குறித்து திட்டக்குடி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற நிலைய அலுவலர் சண்முகம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பசுமாட்டை 20 அடி ஆழமுடைய தரை கிணற்றில் இருந்து கயிறு மூலமாக ேஜ.சி.பி. எந்திரம் உதவியுடன் பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

    ×