search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ளம் பாதிப்பு"

    • ஹெலிகாப்டரின் இருந்த 2 பைலட்டுகள் உள்ளிட்ட 3 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
    • ஹெலிகாப்டரில் இருந்த நிவாரணப் பொருட்களை படகில் வந்து மக்கள் எடுத்துச் சென்றனர்.

    பீகாரின் சீதாமர்ஹி என்ற பகுதியில் ராணுவத்தின் இலகு ரக ஹெலிகாப்டர் வெள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளானது.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணப் பொருட்களை எடுத்துச்சென்றபோது ஹெலிகாப்டர் வெள்ளத்தில் இறங்கியது.

    ஹெலிகாப்டரின் இருந்த 2 பைலட்டுகள் உள்ளிட்ட 3 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    ஹெலிகாப்டரில் இருந்த நிவாரணப் பொருட்களை படகில் வந்து மக்கள் எடுத்துச் சென்றனர்.

    மேலும், மீட்பு பணி வராததால் பொது மக்கள் உதவியுடன் ஹெலிகாப்டரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

    • நான்கு மாவட்டங்கள் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
    • அனைத்து துறைகளும் ஒருங்கிணைப்பு மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை எதிர்கொள்ளவும், மக்களுக்குத் தேவையான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளையும் உடனடியாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்க முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.

    மேலும் அப்பகுதிகளில் மாநில பேரிடர் மீட்புக்குழு, தேசிய பேரிடர் மீட்புக்குழு, தீயணைப்புத்துறை, காவல் துறையினர் மற்றும் அனைத்து அரசுத்துறைகளுடன் இணைந்து ஒருங்கிணைந்த முறையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    இந்த சூழ்நிலையில் முன்னதாக இன்று தூத்துக்குடிக்குச் செல்வதாக அறிவித்திருந்த முதலமைச்சர், மத்தியக் குழு இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதால் மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு உடனிருக்க வேண்டிய நிலையைக் கருத்தில் கொண்டு நாளை ஆய்வு மேற்கொள்கிறார்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சில முகவர்கள் ஒருங்கிணைப்பு இல்லாமை மற்றும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஒட்டு மொத்த நிலைமையை மதிப்பிடாதது குறித்து கவலையை எழுப்பினர்.
    • தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர்- அமைச்சர்

    மிச்சாங் புயலைத் தொடர்ந்து 17 மற்றும் 18-ந்தேதிகளில் தென்மாவட்டங்களான திருநேல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 100 வருடங்கள் இல்லாத அளவிற்கு கனமழை கொட்டித்தீர்த்தது.

    கனமழையுடன் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மேலும் குளங்கள், கால்வாய்கள் உடைத்து கிராமத்திற்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தன.

    தேசிய பேரிடர் மீட்புக்குழு உள்ளிட்ட முப்படைகளும் மீட்புப் பணியில் களம் இறங்கியுள்ளன. மாநில அரசும் துரித மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது. சுமார் 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்களில் களத்தில் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று தென்மாவட்ட மழை வெள்ளம் பாதிப்பு, மீட்புப்பணி குறித்து தமிழக ஆளுநர் மத்திய அமைப்புகள் மற்றும் ஆயுதப்படைகளின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    ஆலோசனைக்கப் பிறகு ஆளுநர் மாளிகையில வெளியிட்ட அறிக்கையில் "தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் நிலைமை மோசமாக உள்ளது. மத்திய அரசு நிறுவனங்கள் தங்கள் வளங்களை மாநில அரசின் வசம் வைத்து, மாநிலம் கோரும்போது செய்து வருகின்றன. அவர்கள் மாநில மற்றும் மாவட்ட அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி மீட்பு மற்றும் நிவாரணம் வழங்குகிறார்கள்.

    சில முகவர்கள் ஒருங்கிணைப்பு இல்லாமை மற்றும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஒட்டு மொத்த நிலைமையை மதிப்பிடாதது குறித்து கவலையை எழுப்பினர். மோசமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு கூடுதல் ஆதாரங்களைத் திரட்டுமாறு ஆளுநர் அவர்களிடம் கேட்டுக் கொண்டார்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதற்கு பதில் அளித்த தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு, "மத்திய அரசின் மீட்பு துறைகளுக்கும், மாநில அரசுக்கும் இடையே ஒருங்கிணைப்பு இருந்தது. வெள்ளம் பாதித்த இடங்களில் மீட்புப் பணிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

    தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். களத்தில் உள்ள அனைவருக்கும் முதலமைச்சர் அறிவுரைகளை வழங்கி வருகிறார்" என்றார்.

    • மேல்நிலை வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு.
    • மொழிப்பாட தேர்வுகள் வரும் 14 மற்றும் 20ம் தேதிகளில் நடைபெறும்.

    மிச்சாங் புயல் எதிரொலியால் சென்னையில் வரலாறு காணாத கனமழை ஏற்பட்டது. இதனால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளை தொடங்க இருந்த அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.

    இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    நாளையும், நாளை மறுநாளும் நடைபெற இருந்த மொழிப்பாட தேர்வுகள் வரும் 14 மற்றும் 20ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளி அளவில் வினாத்தாள் தயாரிப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்படுவதை கருத்தில் கொண்டு மீண்டும் மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

     

    • 40 வீடுகள் பாதிப்பு
    • உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தொடர்ந்து ஆய்வு

    வேலூர்:

    மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. வேலூர் மாநகராட்சி கன்சால்பேட்டை ஆஞ்சநேயர் கோவில் தெருவில் தேங்கி மழை நீர் தேங்கியது.

    இதனால் அப்பகுதியில் உள்ள சுமார் 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவ்வழியாக செல்லும் நிக்கல்சன் கால்வாய் முறையாக தூர்வாரப்படாததால் கால்வாயில் செல்லும் நீரின் அளவு அதிகரித்ததால் குடியிருப்புக்குள் புகுந்து கழிவு நீருடன் சேர்ந்து மழை நீரும் தெரு முழுவதும் தேங்கியது. குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.

    மேலும் தண்ணீரின் அளவு உயராத வண்ணம் மாநகராட்சி ஊழியர்கள் மணல் மூட்டைகளை அடுக்கினர். ஒவ்வொரு ஆண்டு மழைக்காலத்தின் போதும் இப்பகுதியில் மழைநீர் தேங்கி நிற்பது வாடிக்கையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    வேலூர் சம்பத் நகர் பகுதியில் மழை காரணமாக தேங்கியுள்ள மழை நீரை ராட்சத மின் மோட்டார் மூலம் அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனை மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், மேயர் சுஜாதா, கமிஷனர் அசோக்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். அதேபோல் நிக்கல்சன் கால்வாய் பகுதியில் குப்பைகள் தேங்காத வாரும் அதனை தூர்வாரும் பணியினையும் ஆய்வு செய்தனர்.

    பின்னர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறுகையில்

    வேலூர் மாவட்டத்தில் எதிர்பார்த்த அளவைக் காட்டிலும் காற்றின் வேகம் குறைவாகவும் மழையின் அளவு குறைவாகவும் உள்ளது. மாலை வரை மழை தொடரும் என கூறி இருக்கும் நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

    மாவட்டம் முழுவதும் 35 இடங்கள் பாதிப்புக்கு உள்ளாகும் இடங்களாக கண்டறியப்பட்டு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். முகாம்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இதுவரை தெருக்களில் மட்டுமே தண்ணீர் தேங்கியுள்ளதால் வீடுகளுக்குள் தண்ணீர் புகவில்லை. இருந்த போதும் முகாம்களை தயார் நிலையில் வைத்துள்ளோம் என்றனர்.

    ×