என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய கல்விக்கொள்கை"

    • இந்தியை முன்னால் அனுப்பி பின்னால் சமஸ்கிருதத்திற்கு மணி கட்டி அனுப்புவதுதான் தேசியக் கல்விக் கொள்கை
    • சமஸ்கிருதத்தை அடிப்படையாக கொண்ட தேசியக் கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம்

    மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக்கொள்கை இந்தியை திணிப்பதாக கூறி தமிழ்நாடு அரசு தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    இந்நிலையில், "இந்தியை முன்னால் அனுப்பி, பின்னால் சமஸ்கிருதத்திற்கு மணி கட்டி அனுப்புவதுதான் தேசியக் கல்விக் கொள்கை" என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

    "மோடி அரசின் தேசியக் கல்விக் கொள்கை சமஸ்கிருதத்தை முக்கிய தூணாகக் கொண்ட இந்திய அறிவு முறைக்கு வலுவான முக்கியத்துவம் அளிக்கிறது என மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.

    இது தொடர்பான செய்தி துணுக்கை தனது எக்ஸ் பக்கத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பகிர்ந்துள்ளார்.

    அந்த பதிவில், "மோடி அரசின் தேசியக் கல்விக் கொள்கை சமஸ்கிருதத்தை முக்கிய தூணாகக் கொண்ட இந்திய அறிவு முறைக்கு வலுவான முக்கியத்துவம் அளிக்கிறது" என்று பேசியுள்ளார் ஒன்றிய அமைச்சர் அமித் ஷா அவர்கள்.

    இதைத்தான் நாங்களும் தெரிவித்து வருகிறோம். 'வர்ணாசிரமத்தை உயர்த்திப் பிடிக்கும் சமஸ்கிருதத்தை அடிப்படையாக கொண்ட தேசியக் கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம்" என்கிறோம். "இந்தியை முன்னால் அனுப்பி பின்னால் சமஸ்கிருதத்திற்கு மணி கட்டி அனுப்புவதுதான் தேசியக் கல்விக் கொள்கை' என்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார். 

    • மும்மொழிக் கொள்கையை இந்தி திணிப்பு எனக்கூறி ஏற்க மறுத்ததால் தமிழ்நாட்டுக்கான ரூ.2000 கோடி கல்வி நிதி மறுக்கப்பட்டது.
    • கேரளாவுக்கு செல்லும்போது மலையாளத்தில் பேசினார் என தெரிவித்தார்.

    தேசிய கல்விக்கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் கொள்கையை இந்தி திணிப்பு எனக்கூறி ஏற்க மறுத்ததால் தமிழ்நாட்டுக்கான ரூ.2000 கோடி கல்வி நிதியை தர மறுத்து மத்திய அரசு கைவிரித்துவிட்டது.

    இந்நிலையில் மும்மொழிக் கொள்கை தொடர்பாக இன்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தில் ருசிகர விவாதம் நடந்துள்ளது.

    மாநில சுயாட்சி தொடர்பாக முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. இதில் புதிதாக பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பேற்றுள்ள நெல்லை எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் அவையில் பேசும்போது, முதலமைச்சர் கேரளாவுக்கு செல்லும்போது மலையாளத்தில் பேசினார் என தெரிவித்தார்.

    அப்போது பேசத்தொடங்கிய சபாநாயகர் அப்பாவு, பிரதமர் கூட தமிழில் பேசுகிறார். அவர் தமிழ்நாட்டுக்கு வந்தபோது வணக்கம் என சொல்லவில்லையா, அதுபோல தான் இதுவும் என பதில் அளித்தார். இதைத்தொடர்ந்து அவையில் சிரிப்பலை பரவியது.

    இதற்கிடையே எழுந்த முதல்வர் ஸ்டாலின், மலையாளத்தில் தாம் பேசியதை தமிழில் எழுதி வைத்துதான் படித்தேன் என விளக்கம் அளித்தார். 

    • ஜனநாயகம் குறித்து தமிழர்களுக்கு மத்திய அரசு பாடம் எடுக்க வேண்டாம்.
    • இந்தியை வளர்ப்பதற்காக கொண்டு வந்தது தான் தேசிய கல்விக் கொள்கை.

    மத்திய பாஜக அரசை கண்டித்து திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.

    அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-

    கல்வியில் இருந்து மக்களை நீக்கும் இனைத்து வேலைகளையும் தேசிய கல்விக் கொள்கை செய்கிறது. தேசிய கல்விக் கொள்கை என்பது கல்விக் கொள்கை அல்ல, காவிக் கொள்கை.

    இந்தியை வளர்ப்பதற்காக கொண்டு வந்தது தான் தேசிய கல்விக் கொள்கை. குலக்கல்வி திட்டத்தை கொண்டு வர தேசிய கல்விக் கொள்கை மூலம் முயற்சி- அதனால் தான் எதிர்க்கிறோம்.

    ஜனநாயகம் குறித்து தமிழர்களுக்கு மத்திய அரசு பாடம் எடுக்க வேண்டாம். இந்தியை வளர்ப்பதற்காக கொண்டு வந்தது தான் தேசிய கல்விக் கொள்கை.

    ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையை அறிவித்து விட்டு 7 ஆண்டுகளாக கட்டாமல் இருப்பது தான் நாகரிகமா ? தமிழ்நாட்டில் பேரிடர் நடந்து 2 ஆண்டுகள் கடந்தும், நிதியை வழங்காமல் இழுத்தடிப்பது தான் நாகரிகமா ?

    இந்தியை ஏற்றுக் கொள்ளாவிட்டால் நிதி தர மாட்டேன் என கூறுவதை விடவும் அராஜகம் இருந்து விட முடியுமா ?

    திமுக எம்பிக்களின் போர்க்குணத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க முயற்சி.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பல்லடம் பஸ் நிலையம் முன்பு பிரச்சார இயக்கம் நடைபெற்றது.
    • தேசிய கல்விக்கொள்கை 2020-ஐ ரத்து செய்ய வேண்டும்.

    தாராபுரம்:

    இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து தாராபுரம் பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பிரசார இயக்கத்தின் போது புதிய தேசிய கல்வி கொள்கையினால் 3,5,6-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு 9,10,11,12-ம் வகுப்புகளுக்கு பருவ தேர்வு என்பது நாட்டின் ஏழை-எளிய, கிராமப்புற குழந்தைகளின் கல்வி வாய்ப்பை தட்டி பறிப்பதோடு, மாணவர்களின் பள்ளி இடைநிற்றலை அதிகரிக்கும். மும்மொழி கொள்கை குழந்தைகளின் கல்விச்சுமையை அதிகரிப்பதோடு தாய்மொழி வழிக்கல்வியை கேள்விக்குறியாக்கும். 20 மாணவர்களுக்கு கீழுள்ள பள்ளிகள் மூடப்படும் என்பதும், வளாகப்பள்ளிகள் அமைக்கப்படும் என்பதும் ஆரம்பக்கல்வியை முற்றிலும் பாதிக்கும்.

    இடைநிலைக்கல்வி முடிந்தவுடன் கொண்டு வரப்படும் தொழிற்கல்வி, குலக்கல்வித்திட்டமாக அமையும். பள்ளிக்கல்வி, உயர்கல்வி, ஆராய்ச்சி கல்வி என அனைத்தும் தனியார் மயமாதலின் மூலம் கல்வி முற்றிலும் வணிகமயமாக்கப்படும். தேர்வுகள் நடத்திட தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்படும். எனவே தேசிய கல்விக்கொள்கை 2020-ஐ ரத்து செய்ய வேண்டும்.

    தன்பங்கேற்பு ஓய்வூதியத்திட்டத்தால் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் ஓய்வுக்கால வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.தமிழ்நாட்டில் ஆட்சியில் உள்ள தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் கூறியவாறு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் கோரி பிரசாரம் நடைபெற்றது.

    பல்லடம் பஸ் நிலையம் முன்பு பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    • தமிழக அரசு பிஎம்ஸ்ரீ திட்ட ஒப்பந்தத்தில் சில மாற்றங்களை கூறியது.
    • மத்திய அரசு மாற்றங்கள் இல்லாமல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழக அரசிடம் மீண்டும் மீண்டும் கோரிக்கை வைத்து வருகிறது.

    சென்னை:

    நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கல்வியை உறுதி செய்வதற்கும், அவர்களுக்கு பாகுபாடின்றி தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் மத்திய அரசு சமக்ரா சிக்ஷா என்ற அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ் மாநில அரசுகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 8 வடகிழக்கு மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்களில் மத்திய அரசின் பங்களிப்பு 60 சதவீதம் ஆகும். மாநில அரசு பங்களிப்பு 40 சதவீதம் ஆகும்.

    அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு கடந்த 2023-24-ம் ஆண்டில் ரூ.2,120.25 கோடி விடுவிக்க வேண்டும். ஆனால் அதில் ரூ.1,871.96 கோடி மட்டுமே விடுவித்தது. ரூ.248.29 கோடியை வழங்காமல் நிறுத்தி விட்டது. அதற்கு காரணம், தமிழக அரசு பிஎம்ஸ்ரீ திட்டத்தில் இணையவில்லை என்று கூறியது.

    மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையின் அடிப்படையில் பிஎம்ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்தினால், அது மத்திய அரசின் தேசிய கொள்கையை ஏற்று கொண்டது போல் ஆகிவிடும். மேலும் தமிழக அரசின் கொள்கையான 2 மொழி கொள்கைக்கு பதில் 3 மும்மொழி கொள்கையை அமல்படுத்த வேண்டிய நிலை வந்துவிடும் என்றுகூறி எதிர்ப்பு தெரிவித்தது.

    எனவே தமிழக அரசு பிஎம்ஸ்ரீ திட்ட ஒப்பந்தத்தில் சில மாற்றங்களை கூறியது. ஆனால் அதனை மத்திய அரசு எற்று கொள்ளவில்லை. எனவே மத்திய அரசு, 2023-24-ம் ஆண்டில் விடுவிக்க வேண்டிய அனைவருக்கும் கல்வி இயக்க நிதி ரூ.248.29 கோடியை விடுவிக்கவில்லை. அதுமட்டுமின்றி 2024-25-ம் ஆண்டுக்கான ரூ.2,151.59 கோடியை வழங்காமல் உள்ளது. ஆக மொத்த மத்திய அரசு ரூ.2,399.88 கோடி நிதி ஒதுக்க வேண்டி உள்ளது.

    இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை நேரில் சந்தித்தும் வலியுறுத்தினார். ஆனால் மத்திய அரசு, பிஎம்ஸ்ரீ திட்டத்தில் இணைந்தால் தான் அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தை விடுவிக்க முடியும் என்று கூறியது.

    இந்த நிலையில் பாராளுமன்றத்தில் தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டிய அனைவருக்கும் கல்வி இயக்கம் நிதி குறித்து தி.மு.க. எம்.பி. ஆ.ராசா கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய அரசு எழுத்துபூர்வமாக பதிலளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு 2024-25 கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பு பிஎம்ஸ்ரீ ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமது உறுதிமொழியை கடந்த மார்ச் மாதம் 15-ந்தேதி அளித்தது. அதன்பின், பள்ளி கல்வி மற்றும் எழுத்துத்திறன் துறை, தமிழக அரசுக்கு ஒரு ஒப்பந்த வரைவு அனுப்பியது. ஆனால் கடந்த ஜூலை 6-ந்தேதி தமிழக அரசு ஒரு திருத்தப்பட்ட ஒப்பந்தத்தை அனுப்பியது. அதில் தேசிய கல்வி கொள்கை 2020-ஐ முழுமையாக செயல்படுத்துவது தொடர்பான முக்கியமான பத்தி நீக்கப்பட்டிருந்தது.

    இதனைத் தொடர்ந்து, மத்திய அரசு மாற்றங்கள் இல்லாமல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழக அரசிடம் மீண்டும் மீண்டும் கோரிக்கை வைத்து வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அதாவது தமிழக அரசு பிஎம்ஸ்ரீ திட்டத்தில் இணைந்தால் மட்டுமே தமிழகத்திற்கான நிதியை விடுவிக்க முடியும் என்பதில் மத்திய அரசு உறுதியாக இருப்பது தெரியவருகிறது.

    • இந்தி எத்தனை இந்திய மொழிகளை விழுங்கிவிட்டிருக்கிறது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
    • முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்தி எதிர்ப்பு இந்திய அளவில் பேசுபொருளாகியுள்ளது.

    இந்தி திணிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பதிவு இந்திய அளவில் பேசுபொருளாகியுள்ளது.

    அவரது பதிவில், "மற்ற மாநிலங்களைச் சேர்ந்த என் அன்பான சகோதரிகளே, சகோதரர்களே,

    இந்தி எத்தனை இந்திய மொழிகளை விழுங்கிவிட்டிருக்கிறது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? போஜ்புரி, மைதிலி, அவதி, பிரஜ், பண்டேலி, கர்வாலி, குமாவோனி, மகாஹி, மார்வாரி, மால்வி, சத்திஸ்கர், சந்தாலி, அங்கிகா, ஹோ, காரியா, கோர்தா, கூர்மாலி, குருக், முண்டாரி மற்றும் இன்னும் பல இப்போது உயிர்வாழ்வதற்காக மூச்சுத் திணறுகின்றன.

    ஒற்றைக்கல் (monolithic) இந்தி அடையாளத்திற்கான அழுத்தம் பண்டைய தாய்மொழிகளைக் கொல்கிறது. உ.பி. மற்றும் பீகார் ஒருபோதும் வெறும் "இந்தி இதயப்பகுதிகள்" அல்ல. அவற்றின் உண்மையான மொழிகள் இப்போது கடந்த காலத்தின் நினைவுச்சின்னங்கள்.

    இது எங்கே முடிகிறது என்பது நமக்குத் தெரியும் என்பதால் தமிழ்நாடு எதிர்க்கிறது. தமிழ் விழித்தது; தமிழினத்தின் பண்பாடு பிழைத்தது! சில மொழிகள் இந்திக்கு இடம் கொடுத்தன; இருந்த இடம் தெரியாமல் தொலைந்தன" என்று பதிவிட்டிருந்தார்.

    இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், "இந்தியை திணிக்காத தேசிய கல்விக்கொள்கையை தமிழக அரசு எதிர்ப்பதன் பின்னணியில் அரசியல் காரணங்கள் உள்ளன.

    புதிய கல்விக்கொள்கை 2020 இல் இந்தி மட்டுமே இருக்கும் என்று நாங்கள் ஒருபோதும் கூறியதில்லை. தாய்மொழியில் தான் கல்வி கற்பிக்கப்படும். தமிழகத்தில் தமிழில் தான் கற்பிக்கப்படும் என்றுதான் சொன்னோம்.

    சிலரின் அரசியல் ஆசைகளுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. புதிய கல்விக்கொள்கை 2020 இந்தியாவின் பல்வேறு மொழிகளில் கவனம் செலுத்துகிறது. அதில், இந்தி , தமிழ், ஒடியா, பஞ்சாபி உட்பட எல்லா மொழிகளுக்கும் சம முக்கியத்துவம் உண்டு. தமிழகத்தில் அரசியல் காரணங்களால் இதை சிலர் எதிர்க்கிறார்கள்" என்று தெரிவித்தார்.

    ×