search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இல்லம் தேடி கல்வி திட்டம்"

    • பொது நூலக இயக்குனராக ஐ.ஏ.எஸ். அதிகாரி இளம்பகவத் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நியமனம் செய்யப்பட்டார்.
    • ஐ.ஏ.எஸ். அதிகாரி இளம்பகவத் முழு கூடுதல் பொறுப்பு வகிக்க பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அரசாணை பிறப்பித்துள்ளார்.

    சென்னை:

    பள்ளி கல்வித்துறையின் கீழ் வரும் பொது நூலக இயக்குனராக (முழு கூடுதல் பொறுப்பு) ஐ.ஏ.எஸ். அதிகாரி இளம்பகவத் கடந்த ஆண்டு (2022) ஜனவரி மாதம் நியமனம் செய்யப்பட்டார். அதோடு சேர்த்து, இல்லம் தேடி கல்வி திட்டத்தின் சிறப்பு பணி அலுவலராகவும் பணிபுரிந்து வந்தார்.

    அதையடுத்து கடந்த மாதம் (மே) இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் சிறப்பு பணி அலுவலர் பணியிடத்தில் இருந்து மாற்றம் செய்யப்பட்டு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக இயக்குனராக நியமிக்கப்பட்டார்.

    இந்த நிலையில், காலியாக இருந்த இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் சிறப்பு பணி அலுவலர் பணியிடத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரி இளம்பகவத் முழு கூடுதல் பொறுப்பு வகிக்க பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா நேற்று அரசாணை பிறப்பித்துள்ளார்.

    • கலெக்டர் தகவல்
    • தன்னார்வலர்கள் மூலம் பாடம் நடத்தப்படுகிறது

    வேலூர்:

    வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா தொற்று காலத்தில் மாணவர்களிடம் ஏற்பட்ட கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் இழப்பை ஈடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல்-அமைச்சர் கடந்த 2021-ம் ஆண்டு இல்லம் தேடி கல்வி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இந்த திட்டத்தில் தன்னார்வலர்கள் மூலமாக மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது.

    இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த மாநிலம், மாவட்டம் மற்றும் பள்ளி என 3 நிலை குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

    அதன்படி வேலூர் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 934 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் 4 ஆயிரத்து 934 தன்னார்வலர்கள் மூலம் 57 ஆயிரத்து 490 மாணவ - மாணவிகளுக்கு பாடம் நடத்தப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இல்லம் தேடி கல்வி மையங்கள் சார்பில் ஆண்டு விழா நடைபெற்றது.
    • விழாவில் மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் 7 மற்றும் 10-வது வார்டுகளை சேர்ந்த இல்லம் தேடி கல்வி மையங்கள் சார்பில் ஆண்டு விழா வட்டார ஒருங்கிணைப்பாளர் சப்திகா டொமிலா தலைமையில் நடைபெற்றது.நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியை அன்பாய் செல்வம் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு விருந்தினர்களாக அறிவொளி இயக்க முன்னாள் மையத் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் மகா பால்துரை, ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், வக்கீல் வேணுகோபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இவ்விழாவில் இல்லம் தேடி கல்வி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் தனித் திறன்களில் மேன்மை பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன .

    விழாவில் சாத்தான் குளம் தூய இருதய மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் நேசமலர், பூங்கொடி, ஆண்ட்ரூஸ், இப்ராஹிம் நடுநிலைப்பள்ளி ஆசிரியை கீதா, ஸ்டீபன்ஸ் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை வேதராணி மற்றும் தலைமை ஆசிரியர் சாந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மைய தன்னார்வலர் கிருபைமேரி கிருஸ்டிபாய் வரவேற்றார். முடிவில் ராகப் பிரியா நன்றி கூறினார்.

    • தமிழகத்தில் 20 சதவீத மாணவர்களால் மட்டுமே தமிழ் சொற்களை புரிந்து கொள்ள முடிகிறது.
    • அடிப்படை கணக்குகளை 23 சதவீதம் பேர்களால் தான் செய்ய முடிகிறது.

    மதுரை:

    மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    இல்லம் தேடி கல்வி திட்டங்கள் இன்றைக்கு தமிழகத்தில் மிகப்பெரிய தோல்வியை தழுவி இருக்கிறது. பெரிய அளவில் பலன் தரவில்லை என்று என்.சி.இ.ஆர்.டி. நடத்திய ஆய்வின் மூலமாக தெரிய வந்துள்ளது பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. அடிப்படை கல்வியை வலுப்படுத்தி மாற்று திட்டங்கள் செயல்படுத்த வேண்டுமென கல்வியாளர்கள் வலியுறுத்தி வருகின்றார்கள்.

    தமிழகத்தில் 20 சதவீத மாணவர்களால் மட்டுமே தமிழ் சொற்களை புரிந்து கொள்ள முடிகிறது. அடிப்படை கணக்குகளை 23 சதவீதம் பேர்களால் தான் செய்ய முடிகிறது. 52 சதவீத மாணவர்களால் நாள்காட்டியில் தேதி, மாதத்தை கூட சரியாக சொல்ல முடியாத ஒரு அவல நிலை உள்ளது.

    அதிலும் அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் மிகவும் பின்தங்கி உள்ளது. அதே நேரம் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் 40-ல் இருந்து 45 சதவீதம் வரை மாணவர்கள் தாய் மொழியை நன்கு படிக்கவும், அடிப்படை கணக்குகளுக்கு பதில் அளிக்கவும் முடிகிறது. இதன் மூலம் தமிழகத்திலே கல்வி கற்றலில் பின்தங்கி இருப்பது வேதனையின் வேதனையாகும்.

    கொரோனா தாக்கம் இருப்பதாக நாம் வைத்துக் கொண்டாலும் கூட, இந்த 2 ஆண்டுகளாக இன்னும் பள்ளிக்கு முழுமையாக மாணவர்களை வரவழைத்து, அவர்களுக்கு கல்வி பயில்வதற்கு இந்த அரசு எடுத்த நடவடிக்கைகள் எல்லாம், தோல்வியிலே முடிந்திருப்பதே ஆய்வின் மூலம் தெரிகிறது.

    ஆகவே பிரிட்ஜ் கோர்ஸ் என்ற இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் ஆகிய திட்டங்கள் தமிழக அரசால் ரூ.500 கோடியில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில் இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டு முடிந்துவிட்டது. எனினும் தமிழக மாணவர்களின் அடிப்படை கற்றல் பின்தங்கி இருப்பது வேதனையின் உச்சமாக உள்ளது. தி.மு.க. அரசால் செயல்படுத்தப்பட்ட திட்டம் தோல்வி அடைந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×