search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காட்டன் சூதாட்டம்"

    • பல ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம் என்று ஆசை
    • உழைப்பை சுரண்டும் கும்பல் மீது நடவடிக்கை

    அணைக்கட்டு:

    பள்ளிகொண்டா அருகே உள்ள கந்தனேரி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன் (வயது 27).

    இவர் காட்டன் சூதாடியபோது போலீசார் மடக்கிபிடித்தனர். இதனையடுத்து மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார். கூலி தொழிலாளர்களை குறி வைத்து அவர்கள் சம்பாதிக்கும் குறைந்த பணம் காட்டன் சூதாட்டம் என்ற பெயரில் பல ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டி அவர்களை உழைப்பை சுரண்டும் இதுபோன்று கும்பல்களை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர்
    • பணத்தை பறிமுதல் செய்து விசாரணை

    சோளிங்கர்:

    சோளிங்கர் மற்றும் சுற்று வட் டார பகுதியில் நேற்று முன்தினம் இரவு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சோளிங்கர் கிழக்கு பஜார் தெருபகுதியில் ஒரு கும்பல் காட்டன் சூதாட் த்தில் ஈடுபட்டிருந்தது. போலீசாரை பார்த்ததும் அவர்கள் தப்பி ஓடினர்.

    அவர்களில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத் தினர். விசாரணையில் அவர் சோளிங்கர் குமரன் தெருவை சேர்ந்த விஜயன் (வயது 43) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விஜயனை கைது செய்தனர். அவரிடமிருந்து பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

    • லாட்டரி சீட்டு விற்பனை காட்டன் சூதாட்டம் என்ற பெயரில் அமோகமாக நடைபெற்று வருகிறது.
    • 3-ம் நம்பர் லாட்டரியும், காட்டன் சூதாட்டமும் எளிய மக்களின் வருவாய் அனைத்தையும் பிடுங்கி, அவர்களை நடுத்தெருவில் நிற்கச் செய்கிறது.

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை காட்டன் சூதாட்டம் என்ற பெயரில் அமோகமாக நடைபெற்று வருகிறது.

    பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பஜார் பகுதியில் வீடுகளை வாடகைக்கு எடுத்து காட்டன் சூதாட்டத்தை நடத்தி வருகின்றனர். தினமும் கூலி வேலைக்கு செல்பவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், காய்கறி, பூ, பழம் விற்கும் சிறு வியாபாரிகள், கட்டிட வேலை செய்பவர்கள் என இவர்களை குறிவைத்தே காட்டன் சூதாட்டம் நடத்தப்படுகிறது.

    இதில் நூற்றுக்கணக்கான ஏஜெண்டுகள் இருப்பதாகவும், இதில், பல கோடி ரூபாய் புரளுவதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் லாட்டரி விற்பனை தடை செய்யப்பட்டுள்ள நிலையில் காட்டன் ஜாக்பாட் என்ற பெயரில் நடத்தி வரும் சூதாட்டத்தை போலீசாரும் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த காட்டன் சூதாட்டம் விற்பனை மதியம் 1.30 மணிக்கு மேல் தான் சூடு பிடிக்க தொடங்குகிறது.

    அந்த சமயத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளிகள் அவர்களது வாகனங்களை சாலையில் நிறுத்திவிட்டு அந்த சூதாட்டம் நடக்கும் தெருவில் சென்று லாட்டரி சீட்டுகளை அங்கு இருக்கும் ஏஜென்ட்கள் மூலமாக மாறி மாறி எழுதி விட்டு செல்கின்றனர்.

    சூதாட்ட கும்பல் தங்களிடம் எழுத வரும் நபர்களிடம் இருந்து பல ஆயிரம் ரூபாய் அளவிற்கு பணத்தை கட்டணமாக பெற்றுக் கொள்கின்றனர்.

    குறிப்பாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிகளவில் காட்டன் சூதாட்டம் மூன்றாம் நம்பர் லாட்டரி விற்பனை அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர்.

    "அரக்கோணம், சோளிங்கர், ஆற்காடு, ராணிப்பேட்டை விஷாரம் என மாவட்டம் முழுக்க காட்டன் குதாட்டமும், மூன்று நம்பர் லாட்டரியும் கொடிகட்டிப் பறக்கின்றன. இந்த காட்டன், 3-ம் நம்பர் லாட்டரி இரண்டுக்கும் இடையே பெரிய வித்தியாசம் கிடையாது. காட்டன் என்பது 2 எண்கள் எழுதித்தர வேண்டும். உதாரணமாக, ஒரு பெட்டிக்கடைக்கு சென்று 35 எனச்சொன்னால் 10 ரூபாய் வாங்கிக்கொண்டு அந்த எண்ணை ஒரு துண்டுச் சீட்டில் எழுதித் தந்துவிடுவார்கள் நாம் சொன்ன எண் தேர்வாகியிருந்தால் 700 ரூபாய் கிடைக்கும். ஒரு எண்ணுக்கு 10 ரூபாய் என்பதால் பலரும் 35, 44. 55 என 10 முதல் 20 விதமான இரட்டை இலக்க எண்களை எழுதி அதற்கான பணத்தைத் தந்துவிடுவார்கள்.

    இதில் ஒப்பன், குளோஸ் என மற்றொரு வகை உள்ளது. ஓப்பன் என்றால், 2 எண்களில் முதல் எண்ணை மட்டும் குறிப்பிடுவது. அதாவது 1 முதல் 9 வரை என ஏதாவது ஒரு எண்ணை சொல்லி பணம் கட்டுவது. உதாரணமாக 4-ம் எண் மீது பணம் கட்டியிருந்தால் இதில் 40, 41, 42 என வந்தாலும் முதலில் 4 வந்தால் அதற்கு பரிசு தருவார்கள்.

    அதாவது 10 ரூபாய் கட்டினால் 350 ரூபாய் கிடைக்கும். குளோஸ் டைப் என்பது, கடைசி எண் 1 முதல் 9 வரை ஏதாவது ஒரு எண்ணை குறித்துத் தர வேண்டும். உதாரணமாக 5 என வைத்துக் கொள்வோம் 45, 55, 65, 15 என எது வந்தாலும் கடைசியில் 5 என முடிந்தால் பாதித் தொகை கிடைக்கும்.

    நீங்கள் 10 ரூபாய்தான் கட்டவேண்டும் என்கிற கட்டாயமில்லை. 100. 500 கூட கட்டலாம். பரிசுத்தொகை அப்படியே 10 மடங்கு அதிகமாகத் தருவார்கள் 3-ம் நம்பர் லாட்டரி என்பது, ஒரு எண்ணுக்கு 10 ரூபாய் செலுத்த வேண்டும்.

    உதாரணமாக, 567 என எழுதித் தந்தால் 567 குலுக்கலில் வந்தால் அந்த எண்ணை எழுதித் தந்தவர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். 5 மட்டுமே வந்தது என்றால் 30 ரூபாய் தருவார்கள். S6 என 2 எண்கள் வந்திருந்தால் 500 ரூபாய் தருவார்கள்.

    100 ரூபாய்க்கு டோக்கன் எழுதினால். எழுதும் புரோக்கருக்கு 30 ரூபாய் கிடைப்பதால், தொழிலாளர்கள் அதிகம் புழங்கும் காய்கறி மார்க்கெட், பூ மார்க்கெட், பஸ் நிலையங்களில் உள்ள கடைகள் மற்றும் தனி அறைகளை எடுத்தும் பலர் எழுதுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

    3-ம் நம்பர் லாட்டரியும், காட்டன் சூதாட்டமும் எளிய மக்களின் வருவாய் அனைத்தையும் பிடுங்கி, அவர்களை நடுத்தெருவில் நிற்கச் செய்கிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    • துண்டு சீட்டுகள் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை எஸ்பி கட்டுப்பாட்டு அறைக்கு ஆம்பூர் பகுதியில் காட்டன் சூதாட்டம் நடப்பதாக தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் ஆம்பூர் அடுத்த எஸ் கே ரோட்டில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (வயது 48)என்பவர் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    பின்னர் ஆறுமுகத்தை போலீசார் பிடித்து அவரிடம் இருந்த துண்டு சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    மேலும் அவர் மீது போலீசா வழக்குப் பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் மற்றும் ஆரணி போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்
    • கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ரொக்க பணம் ரூ.5,450 பறிமுதல் செய்யப்பபட்டது

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணியில் காட்டன் சூதாட்டம் கொடிக்கட்டி பறப்பதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாணத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எனவே, அவரது உத்தரவின் பேரில் ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி மற்றும் பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் ஆரணி காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கர், வெங்கடேசன், தியாகராஜன், ராஜ்குமார் மற்றும் போலீசார் ஆரணி பஜார் வீதியில் கண்காணித்தனர்.

    அப்பொழுது ஆரணி புதிய இருளர் காலணியை சேர்ந்தவர்களான ரெனால்ட் என்ற கார்த்திக்(வயது32), விஜயன் (வயது48), நாகராஜ் (வயது31), அத்திக்குளம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தன்(வயது56), எஸ்.பி.கோவில் தெருவை சேர்ந்த நாகூர்(வயது40) ஆகிய ஐந்து பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து ரொக்க பணம் ரூ.5,450 மற்றும் நோட்டு, வெள்ளை பேப்பர் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர்.

    ஐந்து பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து காட்டன் சூதாட்டத்தின் முக்கிய பிரமுகர்கள் யார்? யார்? என விசாரணை மேற்கொண்டனர். பின்னர், 5 பேரையும் பொன்னேரி முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர் செய்தனர். அவரது உத்தரவின் பேரில் போலீசார் அனைவரையும் பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர். 

    ×