search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி"

    • இரும்பாலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் மற்றும் கலால் துறை யினர் இணைந்து கள்ளச் சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தினர்.
    • திருப்பூர் கொங்கு நாட்டுப்புற கலைக்குழுவினர் கலந்து கொண்டு மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் என ஆட்டமாடி கள்ளச்சாராயம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள், மதுவிற்கு அடிமையாவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

     சங்ககிரி:

    சங்ககிரி தாலுகா அலுவல கம் முன்பு இரும்பாலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் மற்றும் கலால் துறை யினர் இணைந்து கள்ளச் சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தினர்.

    சங்ககிரி கலால் தாசில்தார் வேலாயுதம் தலைமை வகித்தார். திருப்பூர் கொங்கு நாட்டுப்புற கலைக்குழுவினர் கலந்து கொண்டு மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் என ஆட்டமாடி கள்ளச்சாராயம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள், மதுவிற்கு அடிமையாவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் சங்ககிரி மேற்கு வருவாய் ஆய்வாளர் கீதா, கிராம நிர்வாக அலுவலர்கள் பிரதீப், முனி யப்பன், மது விலக்கு போலீ சார், வனத்துறை அதி காரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இரும்பாலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் மற்றும் கலால் துறை யினர் இணைந்து கள்ளச் சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தினர்.

    • வன உயிரின ங்களுக்கும் மனிதர்களுக்கு ஏற்படும் மோதல் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.
    • பல்வேறு செயல்முறை விளக்க காட்சிகள் நடைபெற்றன.

    ஈரோடு:

    அறச்சலூரில் உள்ள கொடுமுடி சாலை சந்திப்பில் வன உயிரின ங்களுக்கும் மனிதர்களுக்கு ஏற்படும் மோதல் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.

    இதில் வன உயிரினங்க ளுடனான சந்திப்பின்போது தவிர்க்க வேண்டிய முக்கிய விஷயங்கள் மற்றும் வன உயிரினங்களின் தொல்லையில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி? என்பது குறித்த பல்வேறு செயல்முறை விளக்க காட்சிகள் நடைபெற்றன.

    நிகழ்வில் ஈரோடு வனச்சரக அலுவலர் சுரேஷ், வனவர் சந்தோஷ், வனக்காவலர்கள் துரைசாமி, ராமசாமி, கோமதி, ரீனுபிரியா ஆகியோர் பங்கேற்றனர்.

    • விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி ஜவளகிரி மற்றும் தளி யில் நடந்தது.
    • கலை நிகழ்ச்சிகள் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட ஜவளகிரி வனத்துறை சார்பில் வனப்பகுதியில் தீ விபத்து ஏற்படுவதை தடுக்க விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி ஜவளகிரி மற்றும் தளி யில் நடந்தது.

    வன சரகர் சுகுமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியை வன உதவி பாதுகாவலர் ராஜ மாரியப்பன் தொடங்கி வைத்தார். பாரதி கிராமிய கலை வளர்ச்சி மையக் குழுவினர் வனப்பகுதியில் தீ விபத்து ஏற்படுவது தடுக்க வேண்டும்,

    வன விலங்குகளை வேட்டையாடுவதை தடுக்க வேண்டும், உரிமை இல்லாத நாட்டுத் துப்பாக்குகளை வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.

    பட்டா நிலங்களில் மின்வேலி அமைக்க கூடாது என்று கலை நிகழ்ச்சிகள் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    ×