என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவன் காயம்"

    • கீழக்கடையம் பகுதியில் இன்று அதிகாலை காட்டுப்பன்றி ஒன்று சுற்றி திரிந்துள்ளது.
    • வீடுகள், தோட்டங்கள் மற்றும் வயல்களில் சுற்றி அலைந்த காட்டுப்பன்றி, 2 பேரை தாக்கி உள்ளது.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள கிராமங்களில் அடிக்கடி வனவிலங்குகளான கரடி, காட்டுப்பன்றி உள்ளிட்டவை புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது. சில நேரங்களில் மனிதர்களையும் அவை கடித்து குதறிவிடும் சம்பவமும் ஏற்பட்டு விடுகிறது.

    இந்நிலையில் கீழக்கடையம் பகுதியில் இன்று அதிகாலை காட்டுப்பன்றி ஒன்று சுற்றி திரிந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள வீடுகள், தோட்டங்கள் மற்றும் வயல்களில் சுற்றி அலைந்த அந்த காட்டுப்பன்றி, கீழக்கடையத்தை சேர்ந்த பள்ளி மாணவர்களான ராஜ்குட்டி என்பவருடைய மகன் பரசுராம்(வயது 15) மற்றும் ராமர் மகள் வைஷ்ணவி ஆகியோரை தாக்கி உள்ளது.

    காயம் அடைந்த அவர்கள் 2 பேரையும், அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கடையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்ற பின்னர் 2 பேரும் வீடு திரும்பினர்.

    இதுகுறித்து தகவலறிந்த கடையம் வனத்துறையினர் காட்டுப்பன்றியை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • டயர் வெடித்து விபரீதம்
    • பொக்லைன் எந்திரம் மூலம் கரும்புகளை அகற்றி மீட்டனர்

    வந்தவாசி:

    வந்தவாசி சுற்றி பல கிராமங்கள் இந்த கிராமங்களில் விவசாய நிலங்களில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இந்த கரும்புகளை வெட்டி செய்யாறு சக்கரை ஆலைக்கு கொண்டு செல்வது வழக்கம்.

    வந்தவாசி அடுத்த கண்டராயபுரம் கிராமத்தில் விவசாய நிலத்தில் நன்கு வளர்ந்துள்ள கருவுகளை வெட்டி டிராக்டரில் ஏற்றிக்கொண்டு வெங்கடேசன் என்பவர் ஓட்டி சென்றார்.

    வெங்கடேசனின் கல்லூரி நண்பர்கள் குமார், வினோத், வேல்முருகன், ஆகியோரும் டிராக்டரில் பயணம் செய்தனர்.

    எறும்பூர் அருகே டிராக்டர் சென்று கொண்டிருந்த போது பின்பக்க டயர் எதிர்பாராத விதமாக வெடித்துள்ளது. அப்போது தாறுமாறாக ஓடிய டிராக்டர் சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்தது.

    டிராக்டரில் அமர்ந்திருந்த குமார் கரும்புகளுக்கிடையே மாட்டிக் சிக்கி கொண்டார்.

    இது குறித்து வந்தவாசி தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    விரைந்து வந்த அவர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் கரும்புகளை அகற்றி கரும்புக்கிடையே அடியில் சிக்கி கிடந்த குமாரை மீட்டனர்.

    காயமடைந்த குமாரை வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.மற்றவர்கள் காயம் இன்றி உயிர் தப்பினர்.

    • பள்ளியில் அரசின் இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.
    • சிறிய விஷயத்துக்காக மாணவனை தலைமை ஆசிரியர் அடித்ததால்தான் அவருக்கு காது வலி ஏற்பட்டுள்ளது.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் கோவிலூர் அருகில் உள்ள கே.ராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பொன்னிவளவன் (வயது17) என்பவர் பிளஸ்-2 படித்து வருகிறார். நேற்று இந்த பள்ளியில் அரசின் இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.

    சைக்கிளை பெற்றுக்கொண்ட மாணவன் பொன்னிவளவன் பெல் சரியாக அடிக்கிறதா என்று சரி பார்த்துள்ளார். தொடர்ந்து அவர் பெல்லைஅடித்துக்கொண்டே இருந்ததால் அருகில் இருந்த தலைமை ஆசிரியர் மாணவனின் காதில் தாக்கினார்.

    இதனால் மாணவன் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு வேடந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து மாணவனின் மாமா ஜெயமுருகன் தெரிவிக்கையில், சிறிய விஷயத்துக்காக மாணவனை தலைமை ஆசிரியர் அடித்ததால்தான் அவருக்கு காது வலி ஏற்பட்டுள்ளது.

    எனவே இனிமேலாவது இதுபோன்ற செயலில் ஈடுபடுவதை அவர் தவிர்க்க வேண்டும் என்றார். 

    ×