என் மலர்
நீங்கள் தேடியது "வங்கிக்கணக்கு"
- வங்கிக்கணக்கு, ஆதார் எண் விபரங்களை ரேசன் கடைகளில் வழங்க வேண்டும்.
- ராமநாதபுரம் கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் குடும்ப அட்டை தாரர்களில் வங்கி கணக்கு வைத்து ஆதார் எண் இணைக்கப் பெறாமையாலும் கணக்கு எண் ஒரு வேளை இல்லாமலும் இன்னும் 21704 குடும்ப அட்டை தாரர்கள் உள்ளதாக விவரங்கள் கண்டறியப்பட்டு உள்ளன.
இத்தகைய குடும்ப அட்டை தாரர்கள் விபரம் தற்போது சம்மந்தப்பட்ட நியாய விலைக்கடை வாரியாக பிரித்தெடுக்கப்பட்டு அவர்களிடமிருந்து வங்கி கணக்கு எண்ணில் ஆதார் எண்ணை தொடர்புப்படுத்தி இயக்கத்திற்கு கொண்டு வரவேண்டும் என அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் அதற்கான நடவடிக்கையாக கணக்கு எண் உள்ள வங்கியில் படிவம் எண் 2-ஐ பெற்று விவரங்களைப்பூர்த்தி செய்து உடன் அளிக்கும் படியும் இது வரை வங்கிக்கணக்கு எண் இல்லாதவர்கள் கூடுமானவரை அருகில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கி அல்லது கூட்டுறவு வங்கிகளில் புதியதாக வங்கிக்கணக்கு எண், ஆதார் எண் விவரத்தினை இணைத்து உடன் தொடங்கிட வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
- இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.
- தபால்காரர்கள், கிராம அஞ்சல் ஊழியரை தொடர்பு கொண்டு வங்கிக்கணக்கு தொடங்கலாம்.
திருப்பூர் :
ஆதிதிராவிடர் நலத்துறையின் கல்வி உதவித்தொகை பெற வசதியாக அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியுடன் இணைந்து அந்தந்த பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக்கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் 9 ஆயிரத்து 302 மாணவர்களுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாமல் இருந்தது. கடந்த 10 நாட்களாக பள்ளிகளில் நடந்தப்பட்ட சிறப்பு முகாம்கள் மூலமாக 2 ஆயிரத்து 157 மாணவர்களுக்கு இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 7 ஆயிரத்து 145 மாணவர்களுக்கு வருகிற 25-ந் தேதிக்குள் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக்கணக்கு தொடங்கப்பட வேண்டும்.
பள்ளிகளில் நடக்கும் சிறப்பு முகாம்கள் மட்டுமில்லாமல் அருகில் உள்ள தபால் நிலையங்கள், தபால்காரர்கள், கிராம அஞ்சல் ஊழியரை தொடர்பு கொண்டு வங்கிக்கணக்கு தொடங்கலாம். தபால்காரர்கள், கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலமாக மாணவர்களின் ஆதார் எண், செல்போன் எண்ணை பயன்படுத்தி விரல் ரேகை மூலம் வங்கிக்கணக்கு தொடங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வங்கிக்கணக்கு இல்லாத மாணவர்கள், அருகில் உள்ள தபால் நிலையத்தில் தொடங்கலாம்.
- ஐ.பி.பி.பி.மூலம் பள்ளியிலேயே ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக்கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் 2022-23-ம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கல்வி உதவித்தொகை பெற வசதியாக, ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக்கணக்கு இல்லாத பள்ளி மாணவர்களுக்கு தபால் துறையின் கீழ் செயல்படும் ஐ.பி.பி.பி.மூலம் பள்ளியிலேயே ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக்கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தற்போது பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக்கணக்கு இல்லாத மாணவர்கள், அருகில் உள்ள தபால் நிலையம் மற்றும் தபால்காரருக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம் மாணவர்களின் ஆதார் மற்றும் செல்போன் எண்ணை பயன்படுத்தி இ-கேஒய்சி (விரல்ரேகை) மூலம் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கை தொடங்கலாம்.இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
- காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து உழைக்கும் பெண்களுக்கும் வருடத்திற்கு 1 லட்சம் வழங்கப்படும் அறிவித்திருந்தது.
- இந்த மாற்றம் உங்கள் ஒவ்வொருவரின் ஒற்றை ஓட்டுகளால் உண்டாகும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
ஜூலை 1, 2024 அன்று, அனைத்து உழைக்கும் குடும்பத்தை சேர்ந்த பெண்களின் வங்கி கணக்கிலும், ரூ. 8,500 போடப்படும் என ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், இது ஜூலை முதல் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் என்றும் இந்த மாற்றம் உங்கள் ஒவ்வொருவரின் ஒற்றை ஓட்டுகளால் உண்டாகும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து உழைக்கும் பெண்களுக்கும் வருடத்திற்கு 1 லட்சம் வழங்கப்படும் என்று அக்கட்சி தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது.
இந்நிலையில் அந்த 1 லட்ச ரூபாயை 12 பங்காக பிரித்து மாதம் 8,500 ரூபாய் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்று ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.
1 जुलाई 2024 को सुबह सुबह गरीब परिवार की महिलाएं जब अपना अकाउंट चेक करेंगी तो उसमें 8500 रुपए आ चुके होंगे।
— Rahul Gandhi (@RahulGandhi) May 13, 2024
और INDIA की सरकार में ऐसा हर महीने की पहली तारीख को होगा।
ये है आपके एक वोट की ताकत।
महिलाओं को लेकर साथ, अब हाथ बदलेगा हालात। pic.twitter.com/IuvtvRnv0h
- படிக்கும் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு.
- பள்ளிக் கல்வித் துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
சென்னை:
படிக்கும் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்குகளை பள்ளிகளிலேயே தொடங்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
1-ம் வகுப்பு முதல் 12-ம் வப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் இடைநிற்றல் இன்றி தொடர்ந்து கல்வி பயில ஏதுவாக உதவி தொகைகள் மற்றும் ஊக்க தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த உதவித்தொகைகள் மாணவ-மாணவிகளுக்கு குறித்த நேரத்தில் நேரடியாக வழங்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கில் மாணவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக பணம் செலுத்திடும் முறை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு வங்கி கணக்கு கட்டாயம் தேவைப்படுவதால் இந்த சுற்றறிக்கை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்தந்த பகுதியில் உள்ள தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களின் மேற்பார்வையில் வங்கி கணக்குகள் தொடங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சிறுமியின் புகைப்படத்தை வாங்கி அதை மார்பிங் செய்து சிறுமியை மிரட்டி பணம் பறிக்கத்தொடங்கியுள்ளான்.
- சிறுமி தனது பாட்டியின் வங்கிக்கணக்கில் நெட் பேங்கிங் பயன்படுத்தி வந்துள்ளார்.
அரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் உள்ள பள்ளியொன்றில் படித்து வந்த 15 வயது சிறுமி தனது பாட்டியின் வங்கிக்கணக்கில் நெட் பேங்கிங் பயன்படுத்தி வந்துள்ளார். பாட்டியின் கணக்கில் நிறைய பணம் இருந்துள்ளது. பாட்டியின் கணக்கை பயன்படுத்துவது பற்றி சிறுமி தனது பள்ளித் தோழர்களிடம் கூறியுள்ளார்.
அவர்களின் ஒரு மாணவன் இதை தனது மூத்த சகோதரனிடம் கூறியுள்ளான். அந்த சகோதரன் தனது நண்பர்களுடன் இணைந்து சதித்திட்டம் ஒன்றை தீட்டியுள்ளான். சிறுமியின் சமூக வலைதள கணக்கை அறிந்து அவருடன் நட்பாக அந்த இளைஞன் பழகியுள்ளான்.
சிறுமியின் புகைப்படத்தை வாங்கி அதை மார்பிங் செய்து சிறுமியை மிரட்டி பணம் பறிக்கத்தொடங்கியுள்ளான். கடந்த வருடம் பிப்ரவரி மாதம் இந்த மோசடி தொடங்கி சுமார் 8 மாத காலங்களாக நடந்து வந்திருக்கிறது.
இளைஞன் கேட்ட போதல்லாம் சிறுமி ரூ.1000 முதல் ரூ.1 லட்சம் வரை தனது பாட்டியின் கணக்கிலிருந்து தனது செல்போன் நெட் பேங்கிங் மூலம் பரிவர்த்தனை செய்துள்ளாள். இவ்வாறு சுமார் ரூ.50 லட்சம் வரை சிறுமியிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் பாட்டியின் வங்கிக்கணக்கில் பணம் இல்லாமல் போகவே, சிறுமி படித்து வந்த டியூசன் சென்டருக்கு சென்று அந்த இளைஞன் மிரட்டியுள்ளார். இதை கண்ட டியூசன் டீச்சர் சிறுமியிடம் விசாரித்ததில் உண்மை வெளிவந்துள்ளது.
சிறுமியின் குடும்பத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த டிசம்பரில் விசாரணை தொடங்கியதிலிருந்து 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முக்கிய குற்றவாளி நவீன் (28) நேற்று கைது செய்யப்பட்டான். நவீனிடமிருந்து ரூ.5 லட்சத்தையும், ஒரு டெபிட் கார்டையும் போலீசார் மீட்டனர். நவீன் தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளான்.
சிறுமியிடம் மோசடியாகப் பெறப்பட்ட தொகையில் இதுவரை ரூ.36 லட்சம் மீட்கப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.