search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சதுரங்கப்போட்டி"

    • தென்பரை அரசு பள்ளியில் குறுவட்ட அளவிலான சதுரங்கப்போட்டி நடைபெற்றது.
    • வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழும் வழங்கப்பட்டது.

    திருவாரூர்:

    திருமக்கோட்டை அருகே உள்ள தென்பரை அரசு உயர்நிலைப் பள்ளியில் குறுவட்ட அளவிலான சதுரங்கப்போட்டி நடைபெற்றது.

    இதற்கு பள்ளி தலைமை ஆசிரியை ராசாத்தி தலைமை தாங்கினார். கோட்டூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டியை பாளையக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.

    போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. இதில் மாநில சதுரங்க கழக துணைத்தலைவர் பாலகுணசேகரன் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழும் வழங்கினார்.

    இதற்கான ஏற்பாடுகளை தென்பரை அரசு உயர்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் பஞ்சாபிகேசன், பாளையக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டிகள் நடத்தப்பட்டது.
    • இவர்களை, தலைமை யாசிரியர் பொன். நாகேஷ் மற்றும் ஆசிரியர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேடரப்பள்ளியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டிகள் நடத்தப்பட்டது.

    இதில், 11 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் ரேகா, மானிஷா ஸ்ரீ ஆகியோரும், ஆண்கள் பிரிவில் இளைய சந்திரன், தர்ஷன் ஆகியோரும் வெற்றி பெற்றனர்.

    இதே போல், 14 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் யாழினி, சமிக்க்ஷா, ஆண்கள் பிரிவில் கிஷோர், லோகேஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    இவர்களை, தலைமை யாசிரியர் பொன். நாகேஷ் மற்றும் ஆசிரியர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

    • சுதந்திரா இயக்கம் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் வகையில் திறனறிவு போட்டிகளை நடத்தி வருகிறது.
    • சேலம் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கென்னடி சதுரங்கப் போட்டியை அறிமுகம் செய்து வைக்கிறார்.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் சமூகநல சேவைகளை செய்து வரும் சுதந்திரா இயக்கம் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் வகையில் திறனறிவு போட்டிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் மாணவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்த சேலம் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியை சுதந்திரா இயக்கம், ஜெ.எஸ்.டபிள்யூ உதவியுடன் நடத்துகிறது.

    தொடக்க விழா

    இதன் தொடக்க விழா நாளை மறுநாள் (24-ந்தேதி) சேலம் திருச்சி மெயின்ரோடு குகையில் உள்ள சுதந்திரா இயக்கம் மாநில தலைமை அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுகின்றது. மாநில தலைவர் காமராஜ் தலைமை தாங்குகிறார்.

    ஜே.எஸ்.டபிள்யூ எக்ஸ்கியூட்டிவ் துணை சேர்மன் பிரகாஷ்ராவ், பொது மேலாளர் அரிராஜ், சி.எஸ்.ஆர். மூத்த மேலாளர் பாரதி பழனிசாமி, சேலம் மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்ரமணியம், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் சிவரஞ்சன், சேலம் மாவட்ட செஸ் அசோஷியேசன், செயலாளர் அருண் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்கள்.

    ஏற்பாடுகள் தீவிரம்

    சேலம் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கென்னடி சதுரங்கப் போட்டியை அறிமுகம் செய்து வைக்கிறார். அரசு மற்று தனியார் பள்ளி மாணவர்கள் கலந்துகொள்ளும் வகையில் சுதந்திரா இயக்க நிர்வாகிகள் மற்றும் மூத்த தேசிய சதுரங்கப் போட்டி நடுவர் சக்திவேல் செய்து வருகின்றனர்.

    வருகிற ஜனவரி மாதம் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியை நடத்த திட்டுமிட்டுள்ளதாக அதன் நிர்வாக இயக்குநர் ரவிச்சந்திரபாபு தெரிவித்துள்ளார்.

    ×