என் மலர்
நீங்கள் தேடியது "எம்.ஜி.ஆர். சிலை"
- நினைவு தினத்தை முன்னிட்டு எம்.ஜி.ஆர். சிலைக்கு ஓ.பி.எஸ். அணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
- ஆரைக்குடி முத்துராம லிங்கம், கீழமாத்தூர் தங்கராஜ், கருப்பு சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை
முன்னாள் முதல்வர் பாரத ரத்னா புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 35-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. மதுரையில் அ.தி.மு.க. ஒ.பி.எஸ். அணியினர் 3 ஆயிரம் பேர் மாவட்டச்செயலாளர் முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் தலைமையில் பேரணியாக சென்று மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் முருகேசன், நிர்வாகிகள் பி.எஸ். கண்ணன், முத்து இருளாண்டி, மாண வரணி மாநில இணை செயலாளர் ஒத்தக்கடை பாண்டியன், சோலை இளவரசன், ராமநாதன், வையதுரைமாரி,மார்க்கெட் ராமமூர்த்தி, வேல்முருகன், ஆரைக்குடி முத்துராம லிங்கம், கீழமாத்தூர் தங்கராஜ், கருப்பு சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
- பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கினார்.
திருப்பரங்குன்றம்
எம்.ஜி.ஆர். பிறந்தநாளை முன்னிட்டு மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருப்பரங்குன்றம் கிரிவலப்பாதையில் நடந்த நிகழ்ச்சிக்கு பகுதி செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளரும், அமைப்பு செயலாளருமான ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், பகுதி செயலாளர் பன்னீர்செல்வம், இளைஞர் அணி மாநில துணை செயலாளர் பாரி, இலக்கிய அணி செயலாளர் மோகன்தாஸ், பகுதி துணை செயலாளர் செல்வகுமார், வட்டச் செயலாளர் பொன்.முருகன், நாகரத்தினம், எம்.ஆர்.குமார், பாலா, பாலமுருகன், சாக்கிலிப்பட்டி மணி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- எம்.ஜி.ஆரின் சிலைக்கு ஓ.பி.எஸ். அணி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
- அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட செயலாளர் வினோபாஜி தொடங்கி வைத்தார்.
கோவில்பட்டி:
எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாளை முன்னிட்டு, கோவில்பட்டி புதுரோட்டில் உள்ள அவரது சிலைக்கு ஓ.பி.எஸ். அணி மாவட்ட செயலாளர் வினோபாஜி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து மார்க்கெட் அருகே பண்ணைத் தோட்டம் தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். பின்னர் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியையும் அவர் தொடங்கி வைத்தார்.
இதில் இளைஞர் அணி இணைச் செயலாளர் கருப்பூர் சீனி, கோவில்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் மகேஷ்குமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, நகர செயலாளர் வெள்ளத்துரை, மத்திய ஒன்றிய செயலாளர் கண்ணன், கயத்தாறு மேற்கு ஒன்றிய செயலாளர் சுந்தர்ராஜ், நகர செயலாளர் பிரபாகரன், கடம்பூர் நகர செயலாளர் மருதுபாண்டி, புதூர் ஒன்றிய செயலாளர் ஜெகதீசன், எட்டயபுரம் நகர செயலாளர் முத்து முருகன், பொதுக்குழு உறுப்பினர் வருமூர்த்தி, மாவட்ட இணைச்செயலாளர் ஜெயசீலன், மாவட்ட துணை செயலாளர் நடராஜன், இளைஞர் அணி செயலாளர் தியாகராஜன், நிர்வாகிகள் பாலமுருகன், செந்தில் முருகன், மலை மாரியப்பன், கந்தசாமி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
- திருமலையாண்டி பிள்ளை உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மார்த்தாண்டம் :
அ.தி.மு.க.வின் 52 -வது ஆண்டு விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஜாண் தங்கம் தலைமையில் தக்கலையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் சிவ.குற்றாலம், இணை செயலாளர் மேரி கமலாபாய், துணைச் செயலாளர்கள் அல்போன்சாள், கே.ஏ.சலாம், பொருளாளர் சில்வெஸ்டர், ஒன்றிய செயலாளர்கள் ஜீன்ஸ், கடையால் மணி, மாவட்ட அணி செயலாளர்கள் வக்கீல் அருள் பிரகாஷ் சிங், மகாஜி செல்வகுமார், ஜாண், யூஜின், விஜயகுமார், காசிராஜன், பொதுக்குழு உறுப்பினர்கள் சக்கீர் உசேன், அம்பலகடை பாபு மற்றும் நிர்வாகிகள் முருகன், திருமலையாண்டி பிள்ளை உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
- போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
- சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் பதட்டம் நீடித்தது.
புதுச்சேரி:
புதுவை வில்லியனுார் மூலக்கடை சந்திப்பில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். சிலை இருந்தது.
1996-ல் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இந்த சிலையை திறந்து வைத்தார். இந்த சாலை புறவழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டபோது போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் என எம்.ஜி.ஆர். சிலை அகற்றப்பட்டது.
சாலை விரிவாக்கம் செய்யப்பட்டபின் புதிதாக எம்.ஜி.ஆர். வெண்கலச் சிலை அமைக்கப்பட்டது. இந்த சிலை திறப்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சிலையின் கல்வெட்டில் தங்கள் பெயர் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக அ.தி.மு.க. உரிமை மீட்பு குழுவினர் புகார் தெரிவித்தனர்.
தங்களின் பெயரும், வில்லியனுார் தொகுதியை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் பெயரும் இடம்பெற வேண்டும் என கலெக்டரிடம் மனு அளித்தனர்.
இதனிடையே புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன், நேற்று முன்தினம் எந்த முன் அறிவிப்புமின்றி கட்சி நிர்வாகிகளுடன் சென்று எம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைத்து மாலை அணிவித்தார்.
இதையடுத்து அ.தி.மு.க. உரிமை மீட்பு குழுவினர் இன்று மீண்டும் அந்த சிலையை திறக்க உள்ளதாக அறிவித்தனர். இதற்கு புதுவை அ.தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அந்த சிலைக்கும், மற்றவர்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. சிலையை மீண்டும் திறக்க அனுமதிக்கக்கூடாது என போலீசாரிடம் அ.தி.மு.க.வினர் மனு அளித்தனர்.
இந்த நிலையில் இன்று காலை 8 மணி முதல் வில்லியனுார் புறவழிச்சாலை சந்திப்பில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
காலை 10 மணிக்கு மேல் ஒருபுறம் அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் அ.தி.மு.க.வினரும், மறுபுறம் முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்திசேகர் தலைமையில் உரிமை மீட்பு குழுவினரும் திரண்டனர்.
மேலும் அவர்கள் எதிர் எதிராக கோஷம் எழுப்பியதால் அங்கு கடும் பதட்டம் ஏற்பட்டது. அப்போது போலீசார் ஓம்சக்தி சேகரிடம், சிலைக்கு மாலை அணிவிக்க எந்த தடையும் இல்லை, ஆனால் திறப்பதற்கு அனுமதியில்லை என தெரிவித்தனர்.
ஓம்சக்தி சேகரும், அவரின் ஆதரவாளர்களும் இதனை ஏற்கவில்லை. போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் பதட்டம் நீடித்தது.
இதையடுத்து ஓம்சக்தி சேகர் தலைமையிலான உரிமை மீட்பு குழுவினர் சிலையை நோக்கி செல்ல முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி ஓம்சக்தி சேகர் உட்பட 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். எம்.ஜி.ஆர். சிலைக்கு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.