என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பரிசு தொகுப்பு"
- பரிசு தொகுப்பின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர்.
- நாங்கள் ஆனந்த் மற்றும் ராதிகாவின் திருமணத்தை கொண்டாடுகிறோம்.
ஆனந்த் அம்பானி திருமணத்திற்காக ரிலையன்ஸ் ஊழியர்களுக்கு வெள்ளி நாணயத்துடன் ஹல்திராம்சின் ஆலு பூஜியா, சேவ் உள்ளிட்ட பொருட்கள் நிறைந்த பரிசு தொகுப்பை அம்பானி வழங்கியுள்ளார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் என்பவரை மும்பையில் இன்று கோலாகலமாக திருமணம் செய்கிறார்.
திருமணத்திற்கு வரும் விருந்தினர்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்க வைத்து, ஆடம்பர பரிசுகளுடன் நடத்தப்படுகையில், ரிலையன்ஸ் ஊழியர்களும் விழாவைக் கொண்டாட ஒரு பரிசுப் பெட்டி தொகுப்பை பெற்றுள்ளனர்.
திருமணத்திற்கு முன்னதாக ஊழியர்கள் பெற்ற இந்த பரிசு தொகுப்பின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர்.
சிவப்பு பரிசுப் பெட்டியில் தங்க நிறத்தில் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. அதில்,"எங்கள் தேவி மற்றும் தேவதைகளின் தெய்வீக அருளால், நாங்கள் ஆனந்த் மற்றும் ராதிகாவின் திருமணத்தை கொண்டாடுகிறோம். நல்வாழ்த்துக்களுடன், நீடா மற்றும் முகேஷ் அம்பானி" என குறிப்பிடப்பட்டிருந்தது.
பெட்டியின் உள்ளே ஹல்திராமிஸின் நம்கீனின் நான்கு பாக்கெட்டுகள், இனிப்புப் பெட்டி மற்றும் ஒரு வெள்ளி நாணயம், நம்கீன் பாக்கெட்டுகளில் ஹல்திராமின் ஆலு பூஜியா சேவ் மற்றும் லைட் சிவ்டா ஆகியவை அடங்கும்.
- 2024 ஆண்டிற்கான பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
- பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு வழங்க உத்தரவு.
பொங்கல் பண்டிகையை ஒட்டி ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இது தொடர்பாக வெளியாகி இருக்கும் தமிழ்நாடு அரசின் அராசாணையில், "2024 தைப்பொங்கலை ஒட்டி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தாருக்கு பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது," என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இதற்காக ரூ. 238 கோடியே 92 லட்சத்து 72 ஆயிரத்து 741 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 402 குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவர். கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ. 1000 வழங்கப்பட்டது.
இந்த ஆண்டிற்கான பொங்கல் தொகுப்பில் ரொக்கப்பரிசு குறித்த அறிவிப்பு இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று பொங்கல் தொகுப்பு எப்போது வழங்கப்படும் என்பது குறித்தும் எந்த தகவலும் இல்லை.
- ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
- பொங்கல் பரிசுத்தொ குப்பு மற்றும் ரொக்கத் தொகை விநியோகம் குறித்த புகார்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1077ல் தொடர்பு கொள்ளலாம்.
ராமநாதபுரம்
பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் ஒரு பன்னீர் முழுக்கரும்பு, 1கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 பொது விநியோகத்திட்டத்தின் கீழ் செயல்படும் ரேசன் கடைகள் மூலமாக பொங்கல் பரிசுத் தொகுப்பு தமிழக அரசால் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற கடந்த 3-ந்தேதி முதல் டோக்கன் வழங்கப்பட்டது. இன்று காலை ராமநாதபுரம் வசந்த நகர், ஏ.வி.எம். மெட்ரிக்குலேசன் பள்ளி அருகில் உள்ள கே.கே.சாலை ரேசன் கடையில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தாங்கி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி தொடங்கி வைத்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சித் திட்ட பொது மேலாளர் சக்தி சரவணன் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முத்துக்குமார் வரவேற்றார்.
நகர் மன்ற தலைவர் கார்மேகம், துணைத் தலைவர் பிரவீன் தங்கம், தாசில்தார் தமீம்ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி தொகுத்து வழங்கினார்.
பின்னர் கலெக்டர் கூறியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 776 ரேசன் கடைகளில் 3 லட்சத்து 96 ஆயிரத்து 403 கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் அந்தந்த ரேஷன் கடைகளில் பகுதி வாரியாக டோக்கன் வழங்கப்படும். அதற்கான விவரப்பட்டியல் சம்பந்தப்பட்ட ரேசன் கடைகளில் அறிவிப்பாக தெரிவிக்கப்படும்.
குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசான பச்சரிசி மற்றும் சர்க்கரையை பெற கட்டாயம் துணிப்பை கொண்டு வர வேண்டும். குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நாட்களில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுச் செல்லலாம்.
பொங்கல் பரிசுத்தொ குப்பு மற்றும் ரொக்கத் தொகை விநியோகம் குறித்த புகார்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1077ல் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கலெக்டர்-மேயர் பங்கேற்று ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கினர்
- ஏழை,எளிய மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும்
நாகர்கோவில்:
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையொட்டி ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சை அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு, ரூ.ஆயிரம் ரொக்கம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்தார்.
இதையடுத்து ரேஷன் கடை ஊழியர்கள் மூல மாக கார்டுதாரர்களுக்கு டோக்கன் வழங்கப் பட்டது. தொடர்ந்து இன்று முதல் ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகிக்க ப்படுகிறது.
நாகர்கோவில் மறவன் குடியிருப்பில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க ரேஷன் கடையில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார்.மாநகராட்சி மேயர் மகேஷ் பொங்கல் தொகுப்பு விநியோகத்தை தொடங்கி வைத்தார்.
துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாவட்ட வழங்கல் அதிகாரி விமலா ராணி, அகஸ்தீஸ்வரம் வழங்கல் அதிகாரி ஜெகதா, கவுன்சிலர்கள் சோபி, நவீன்குமார், சிஜி, தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்த், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சந்திர சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து பொது மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டது. விழாவில் மேயர் மகேஷ் பேசுகையில், ஏழை,எளிய மக்கள் அனைவரும்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பொங்கல் பரிசுத்தொகை அறிவித்து உள்ளார். ரூ.ஆயிரம் ரொக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் அனைவரும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும்.முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏராளமான மக்கள் திட்ட ங்களை செயல்படுத்தி வருகிறார்.
தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளும் வளர்ச்சி அடைந்து உள்ளது என்றார்.
கலெக்டர் அரவிந்த் கூறுகையில், மாவட்டம் முழுவதும் 5 லட்சத்து 74 ஆயிரத்து 675 ரேஷன் கார்டுதாரர்களுக்கு 774 ரேஷன் கடைகள் மூலமாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. தினமும் காலையில் 100 பேருக்கும் மாலையில் 100 பேருக்கும் என பொங்கல் பரிசு தொகை வழங்க ஏற்கனவே டோக்கன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
டோக்கன் அடிப்படையில் பொதுமக்கள் அந்தந்த ரேஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பை பெற்று கொள்ளலாம் என்றார்.
பொங்கல் பரிசு தொகுப்பு இன்று முதல் விநியோகம் செய்யப்பட்டதையடுத்து ரேஷன் கடைகளில் இன்று காலையிலேயே கூட்டம் அலைமோதியது. ரேஷன் கடை ஊழியர்கள் பொங்கல் பரிசு தொகையை பொது மக்களுக்கு வழங்கினார்கள்.
- கிறிஸ்மஸ் பரிசு தொகுப்பு வழங்கும் விழா சிந்தல்பாடியில் நடைபெற்றது.
- 60 பாதிரியார்களுக்கு கிருஸ்மஸ் பரிசு தொகுப்பு வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
மொரப்பூர்,
தருமபுரி மாவட்டம், மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கிருஸ்துமஸ் விழாவையொட்டி பாதிரியார்களுக்கு கிறிஸ்மஸ் பரிசு தொகுப்பு வழங்கும் விழா சிந்தல்பாடியில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன் தலைமை வகித்து கேக் வெட்டி 60 பாதிரியார்களுக்கு கிருஸ்மஸ் பரிசு தொகுப்பு வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் பீட்டர் கடத்தூர் இணை ஒருங்கிணைப்பாளர்கள் சி.எஸ்.சி.சர்ச் பால்ராஜ், சிந்தல்பாடி ஜோதி,சமத்துவபுரம் தீமோத்தேயு ராஜா, தி.மு.க. முன்னாள் மாநில தொண்டரணி அமைப்பாளர் ராஜேந்திரன், கடத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் நெப்போலியன், மொரப்பூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் இ.டி.டி.செங்கண்ணன், மாவட்ட ஆதிதிராவிட நல குழு தலைவர் குபேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் பத்மாவதி சரவணன், துணை தலைவர் தேவகி சின்னத்தம்பி, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ராம கிருஷ்ணன், ஓய்வு பெற்ற ஆசிரியர் நடராஜன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திருமால், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் அண்ணாதுரை, நிர்வாகிகள் பாண்டியன், அன்பழகன், சிவகுமார் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்