என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "டீக்கடை"
- டேம்ஸ் சாலை சந்திப்பில் டீ குடித்துக் கொண்டிருந்தார்.
- சாலையில் கிடந்த காலி பீர் பாட்டிலை எடுத்து ராகுலின் தலையில் அடித்துள்ளனர்.
சென்னை எழும்பூர் அருகே உள்ள சிந்தாதிரிப்பேட்டையில் டீ குடிக்க அழைத்த நபரை தாக்கிய கணவன்-மனைவி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. சிந்தாதிரிப்பேட்டை ரிச்சி தெரு ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் ராகுல் (வயது 20) என்பவர் நேற்று முன் தினம் மதியம் டேம்ஸ் சாலை சந்திப்பில் டீ குடித்துக்கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாகப் பிரபு என்பவரும் அவரது மனைவி காயத்திரியும் வந்துள்ளனர். இவர்கள் ராகுலின் உறவினர்கள் என்று கூறப்படுகிறது. எனவே பிரபுவையும், காயத்திரியையும் டீ குடிக்க அழைத்துள்ளார் ராகுல். அப்போது கணவன் மனைவி இருவரும், "நாங்கள் என்ன பிச்சைக்காரர்களா? ஓசியில் டீ குடிக்க" என்று ராகுலிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு கட்டத்தில் சாலையில் கிடந்த காலி பீர் பாட்டிலை எடுத்து ராகுலின் தலையில் அடித்துள்ளனர். இதில் ரத்தக்காயம் ஏற்பட்டு ராகுல் நிலைகுலைந்து கீழே விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதற்கிடையே இந்த தாக்குதல் தொடர்பாக ராகுல் அளித்த புகாரின் பேரில் சிந்தாதிரிப்பேட்டை போலீசார் கொலை முயற்சி வழக்கின் கீழ் பிரபு, காயத்ரி ஆகிய இருவரையும் கைது செய்தனர். ராகுலுக்கும் இவர்களுக்கும் ஏற்கனவே முன்பகை இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் போலீஸ் விசாரணைக்கு பின்னர் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
- அனைத்தையும் ஒன்றாகக் கலந்து சற்றுக் கெட்டியாகக் கரைத்துக் கொள்ளுங்கள்.
- கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் போட்டு சிவக்கப் பொரித்தெடுங்கள்.
தேவையான பொருட்கள்:
மைதா - 1/2 கிலோ
நேந்திரம் பழம் - 5
சர்க்கரை - 4 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள்தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.
செய்முறை:
• பஜ்ஜிக்கு வாழைக்காய் வெட்டுவதைப் போல நேந்திரம் பழத்தை நீள நீளமாக வெட்டிக் கொள்ளுங்கள்.
• மைதா, அரிசிமாவு, மஞ்சள்தூள், சர்க்கரை, உப்பு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து சற்றுக் கெட்டியாகக் கரைத்துக் கொள்ளுங்கள்.
• பஜ்ஜி மாவுப் பதம் இருக்க வேண்டும். பழத்துண்டை மாவில் நனைத்து, கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் போட்டு சிவக்கப் பொரித்தெடுங்கள்.
• சுவையான பழம்பொரி தயார்.
- மேற்கு வங்காளத்தில் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற உள்ளது.
- வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறுகிறது.
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற உள்ளது. ஏப்ரல் 19-ம் தேதி முதல் கட்டம் தொடங்கி, ஜூன் 1-ம் தேதியுடன் நிறைவடைகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறுகிறது.
தேர்தலை முன்னிட்டு திரிணாமுல் காங்கிரஸ், பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், ஜல்பைகுரி பகுதியில் அமைந்துள்ள டீக்கடைக்கு முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று சென்றார். அங்கு டீ தயாரித்துக் கொடுத்து வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார்.
இதுதொடர்பான புகைப்படங்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
- டீ தயாரித்து ஒவ்வொரு கிளாசிலும் ஊற்றி வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கிறார்.
- மக்கள் இந்த தேனீர் கடையை டீக்கடை கோவில் என அழைக்கின்றனர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் முதியவர் ஒருவர் நடத்தும் டீக்கடை டுவிட்டரில் வைரலாகி வருகிறது. 80 வயதான சீக்கியர் அஜித்சிங் என்பவர் அந்த கடையை 40 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். அப்பகுதியில் 100 வருட பழமையான மரத்தின் கீழ் செயல்படும் இந்த டீக்கடையில் தேனீருக்கு என்று எந்த விலையும் நிர்ணயிக்கப்படவில்லை. அதாவது வாடிக்கையாளர் எவ்வளவு பணம் கொடுக்க வேண்டுமோ கொடுக்கலாம். அல்லது இலவசமாக கூட குடிக்கலாம்.
வீடியோவில் அஜித்சிங்கை சுற்றிலும் பாத்திரங்களும், கொதிகலனும் இருக்கிறது. அங்குள்ள அடுப்பில் டீ தயாரித்து ஒவ்வொரு கிளாசிலும் ஊற்றி வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கிறார். அங்குள்ள மக்கள் இந்த தேனீர் கடையை டீக்கடை கோவில் என அழைக்கின்றனர்.
எதற்காக டீயை இலவசமாக கொடுக்கிறீர்கள்? என அஜித்சிங்கிடம் கேட்ட போது அவர் கூறுகையில், தன்னலமற்ற சேவையை செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதாகவே இதை பார்க்கிறேன் என கூறுகிறார். இந்த வீடியோவை பிரபல தொழிலதிபரான ஆனந்த் மகிந்திரா டுவிட்டரில் பகிர்ந்ததோடு, இனி எப்போதெல்லாம் நான் அமிர்தசரஸ் வருகிறேனோ, அப்போதெல்லாம் இந்த கடைக்கு சென்று டீ குடிப்பேன். அமிர்தசரசில் சுற்றிப்பார்க்க நிறைய இடங்கள் உள்ளன. ஆனால் அடுத்த முறை இந்த நகரத்திற்கு வந்தால் பொற்கோவிலுக்கு சென்றுவிட்டு நேராக இந்த கடைக்கும் செல்வேன் என பதிவிட்டுள்ளார்.
- 312 உணவு வணிகர்கள் இந்த திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- ஒருமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய் சேகரிக்கப்பட்டு பயோடீசலாக மாற்ற அனுப்பி வைக்கப்படுகிறது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தலின்பேரில் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு குழுவினர் திருப்பூர் மாவட்டத்தில் உணவு கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதில்,உணவு கடைகளில் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை சேகரித்து அதை பயோடீசலாக மாற்றம் செய்ய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒருமுறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை உணவு வணிகர்களிடம் இருந்து விலைக்கு பெற்று பயோ டீசலாக மாற்றப்படுகிறது. இதனால் சமையல் எண்ணெயை மீண்டும், மீண்டும் பயன்படுத்துவது தடுக்கப்படும்
இதுபோன்று மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால் இதயம், வயிறு சம்பந்தமான கோளாறுகள் ஏற்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதை தடுக்கும் வகையில் ஒருமுறை பயன்படுத்தப்பட்ட சமை–யல் எண்ணெயை சேகரிக்கும் ரூகோ திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை கூறியதாவது :- மாவட்டத்தில் இதுவரை 312 உணவு வணிகர்கள் இந்த திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உணவு தயாரிப்பு கூடங்களில் 40 லிட்டர் கொள்ளளவு உள்ள கேன்கள் பயன்படுத்தப்பட்ட எண்ணெயை சேகரிக்க வைக்கப்படும். ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை சேகரித்து வாரத்துக்கு ஒருமுறை அல்லது இருமுறை சேகரிக்கப்பட்டு பயோடீசலாக மாற்ற அனுப்பிவைக்கப்படுகிறது.
மாதத்துக்கு 7 முதல் 8 டன் வரை ஒருமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய் சேகரிக்கப்பட்டு பயோடீசலாக மாற்ற அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கடந்த மே மாதம் வரை 111 டன் எண்ணெய் சேகரிக்கப்பட்டு அதில் 85 டன் பயோடீசலாக மாற்றுவதற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் திருமண மண்டபங்களில் செயல்படுத்த முனைப்பு காட்டப்படுகிறது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
பேக்கரி, டீக்கடைகள், உணவு விற்பனை நிலையங்களில் பஜ்ஜி, போண்டா போன்ற பலகாரத்தை காகிதத்தில் பரிமாறுவது தவிர்க்கப்பட்டு வாழை இலையை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களில் 90 கிலோ காகிதம் பறிமுதல் செய்து கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கலப்படம் மற்றும் உணவு தரம் தொடர்பான புகார்களை 94440 42322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
- யானை தேனி மாவட்டம் மேகமலை வனச்சரணாலயத்திற்குட்பட்ட பகுதிகளில் சுற்றி வருகிறது.
- பூப்பாறை பகுதியில் ஜீப் டிரைவர்கள் இணைந்து அரிசி கொம்பன் தேநீர் கடையை தொடங்கி உள்ளனர்.
மேலசொக்கநாதபுரம்:
கேரளமாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல், சாந்தம்பாறை ஊராட்சிகளில் 8 பேரை பழிவாங்கிய அரிசி கொம்பன் யானை பல்வேறு சேதங்களை ஏற்படுத்தியது. இந்த ஆண் காட்டுயானையை கேரள வனத்துறையினர் கடந்த மாதம் 29-ம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடித்து பெரியாறு புலிகள் காப்பகம் வனப்பகுதியில் விட்டனர்.
தற்போது இந்த யானை தேனி மாவட்டம் மேகமலை வனச்சரணாலயத்திற்குட்பட்ட பகுதிகளில் சுற்றி வருகிறது. மணலாறு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பை சேதப்படுத்தி அங்கிருந்த ரேசன் கடையையும் உடைத்து சூறையாடியது. மேலும் நள்ளிரவில் வரும் அரசு பஸ்சையும் மறித்ததால் பயணிகள் அச்சமடைந்தனர். பெரும்பாலும் வனப்பகுதியை ஒட்டியே நடமாடும் இந்த அரிசி கொம்பன் யானை இரை தேடுவதற்காக மட்டும் குடியிருப்பு பகுதியை நோக்கி வருகிறது. அதன்மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கும்போது உயிர்பலி ஏற்படுகிறது.
ஆரம்பத்தில் அரிசி கொம்பன் யானை மீது கோபம் ஏற்பட்ட மக்களுக்கு தற்போது அனுதாப அலை வீசி வருகிறது. இதனிடையே அரிசி கொம்பனின் கதையை திரைப்படமாக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இதனால் இடுக்கி மாவட்டத்தில் அரிசி கொம்பனுக்கு ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர்.
அவர்கள் அரிசி கொம்பன் பெயரில் ரசிகர் மன்றத்தை தொடங்கி உள்ளனர். வனப்பகுதி என்பது வனவிலங்குகளுக்கு மட்டுமே சொந்தம். அங்கு குடியிருப்புகள் அதிகரிப்பால் வனவிலங்குகள் உள்ளே வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வனப்பகுதியையும், வனவிலங்குகளையும் காப்போம் என்ற அடிப்படையில் பிரசாரமும் செய்து வருகின்றனர்.
மேலும் பூப்பாறை பகுதியில் ஜீப் டிரைவர்கள் இணைந்து அரிசி கொம்பன் தேநீர் கடையை தொடங்கி உள்ளனர். இங்கு வரும் பொதுமக்களுக்கும் வனவிலங்குகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இது உள்ளூர் பகுதி மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
- சில்லறை தட்டுப்பாடு காரணமாக டீக்கடை உரிமையாளருக்கும், வாலிபர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
- ஆத்திரமடைந்த வாலிபர் ஒருவர் தனது பாக்கெட்டில் இருந்த கை துப்பாக்கியை எடுத்து ரகுநாதனின் நெற்றிப்பொட்டில் வைத்து சுட்டு விடுவதாக மிரட்டினார்.
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் அடுத்த சைதராபாத் பகுதியில் ரகுநாதன் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். ரகுநாதன் டீக்கடைக்கு 3 வாலிபர்கள் டிப் டாப் உடை அணிந்து வந்தனர். அவர்கள் 3 பேரும் டீ குடித்தனர்.
பின்னர் அதில் இருந்த வாலிபர் ஒருவர் 2 ஆயிரத்தை ரகுநாதனிடம் கொடுத்தார். அதற்கு அவர் தன்னிடம் ரூ.2 ஆயிரத்திற்கு சில்லறை இல்லை என்றார். ரூ. 30 மட்டும் தர வேண்டும் என கூறினார்.
சில்லறை தட்டுப்பாடு காரணமாக டீக்கடை உரிமையாளருக்கும், வாலிபர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் ஒருவர் தனது பாக்கெட்டில் இருந்த கை துப்பாக்கியை எடுத்து ரகுநாதனின் நெற்றிப்பொட்டில் வைத்து சுட்டு விடுவதாக மிரட்டினார்.
மற்றொரு வாலிபர் கத்தியை எடுத்து ரகுநாதனின் மார்பில் குத்தி விட்டு அங்கிருந்து 3 பேரும் பைக்கில் தப்பி சென்றனர்.
இது குறித்து ரகுநாதன் சைதராபாத் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அங்கு பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.
இது சம்பந்தமாக சைதராபாத் உசேன் அஷலம் பகுதியை சேர்ந்த முகமது உஸ்மான், யான் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். 30 ரூபாய் "டீ" க்காக துப்பாக்கி காட்டி மிரட்டிய சம்பவம் ஐதராபாத் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்