என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திடீர் தீ"
- பொருட்கள் எரிந்து நாசமானது
- 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் லியோ பிரான்ஸ் ( வயது 58). இவர் அண்ணாநகர் பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான இடத்தில் 3 அடுக்குமாடி குடியிருப்பு கட்டியுள்ளார்.
அந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில் மர கடை மற்றும் மரப்பட்டறை குடோன் நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை மரக் குடோனில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் சென்று பார்த்தபோது, கடையில் இருந்த பொருட்கள், தீப்பிடித்து எறிந்து கொண்டிருந்தது.
இதுகுறித்து உடனடியாக வாணியம்பாடி தீயணைப்பு துறை மற்றும் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர், அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர்களை உடனடியாக வெளியேற்றினர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்க முயன்றனர். சற்று நேரத்தில் கடையில் இருந்த பொருட்களுக்கும் தீ பரவியதால் அந்தப் பகுதியில் கரும்புகை மண்டலம் சூழ்ந்தது.
தீயணைப்பு வாகனத்தில் தண்ணீர் தீர்ந்து விட்டதால் ஆம்பூர், நாட்டறம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.
மேலும் லாரிகள் மற்றும் டிராக்டர்கள் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு, சுமார் 4 மணி நேரத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தால் மர குடோனில் இருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசமானது.
சம்பவம் நடந்த இடத்தில் வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், தாசில்தார் மோகன், இன்ஸ்பெக்டர் பழனி உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இது குறித்து வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தீயணைப்புத் துறையினர் தீ பரவாமல் கட்டுப்படுத்தினர்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஆலங்காயம்:
வாணியம்பாடி நியூ டவுன் அருகே சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள வணிக வளாகத்தில் சாதிக் (வயது 47) என்பவர் பட்டாசு கடை நடத்தி வருகிறார்.
இந்த கடையை சுற்றிலும் உள்ள நிலத்தில் கோரை புல் புதர்கள் முளைத்து அது முழுவதும் காய்ந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை திடீரென புதரில் தீ பிடித்து பட்டாசு கடையை சுற்றியுள்ள புல் மள மளவென எரிய தொடங்கி கடை அருகே தீ எரிந்துள்ளது.
இதை பார்த்த பட்டாசு கடையின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் வெளியே இருந்த பட்டாசுகளை அங்கிருந்து அப்புறப்படுத்தி உடனடியாக வாணியம்பாடி தீயணைப்புத்து றையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் கடையை சுற்றிலும் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து தீ கடையில் பரவாமல் கட்டுப்படுத்தினர்.
இந்த தீ காரணமாக அந்த பகுதியில் இருந்த மின்கம்பங்களில் இருந்த மின்சார ஒயர்கள் தென்னை மரங்கள் அனைத்தும் முற்றிலும் தீயில் கருகி நாசமாகின.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சாதுர்யமாக தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதை குறித்து வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கொடிகள் முளைந்து காய்ந்திருந்தது. மேலும், ஏரியில் மரங்களும் உள்ளன.
- மயில், முயல், கால்நடைகள் அங்கிருந்து வெளியேறின.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள கோடங்குடி கிராமத்தில் பெரிய ஏரி, நடு ஏரி, பழைய ஏரி உள்ளது. இந்த ஏரி சுமார் 144 ஏக்கர் ஆகும். இந்த ஏரியின் நடுவில் கோரைப் புற்கள் மற்றும் பல்வேறு வகையான கொடிகள் முளைந்து காய்ந்திருந்தது. மேலும், ஏரியில் மரங்களும் உள்ளன. இந்நிலையில் நடு ஏரியில் திடீரென நேற்று தீப்பற்றியது. இந்த தீ மளமளவென ஏரி முழுக்க பரவியது. இதில் சீமை கருவேல மரங்களும் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்தது. ஏரியின் அருகில் நிலங்களில் பணி செய்தவர்கள் கண் எரிச்சல் தாங்க முடியாமல் அங்கிருந்து வெளியேறினர்.
தீயினால் ஏற்பட்ட வெப்பம் தாங்க முடியால் ஏரியில் இருந்த மயில், முயல், கால்நடைகள் அங்கிருந்து வெளியேறின. இது குறித்த தகவலின் பேரில் திட்டக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் சண்முகம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும், திட்டக்குடி தாசில்தார் ரவிச்சந்திரன் மற்றும் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் ஏரிக்கு வந்து ஆய்வு செய்தனர். ஏரியில் திடீரென எவ்வாறு தீப்பிடித்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கல்லாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரிடம் வைக்கோல் கட்டுகளை வாங்கியுள்ளார்.
- கணேசனுக்கு சொந்த–மான வேனில் வைக்கோல் கட்டுகளை ஏற்றுக் கொண்டு தாண்டவராயபுரம் கிருஷ்ணாபுரம் ஊராட்சி வலசக்கல் பட்டி சென்றபோது மின் கம்பி மீது உரசி களால் வேன் தீப்பற்றிக் கொண்டது.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கல்லாநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவரும் இதே கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரிடம் வைக்கோல் கட்டுகளை வாங்கியுள்ளார்.
கணேசனுக்கு சொந்த–மான வேனில் வைக்கோல் கட்டுகளை ஏற்றுக் கொண்டு தாண்டவராயபுரம் கிருஷ்ணாபுரம் ஊராட்சி வலசக்கல் பட்டி சென்ற–போது மின் கம்பி மீது உரசி களால் வேன் தீப்பற்றிக் கொண்டது. இதை அறிந்த டிரைவர் வாகனத்தை நிறுத்தினார்.
இதனை அடுத்து கெங்கவல்லி தீயணைப்புத்–துறையினர் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் வேனில் பரவிய தீயை ஒரு மணி நேரம் போராடி தீயணைத்தனர். இந்த தீ விபத்தில் 200க்கும் மேற்பட்ட வைக்கோல் கட்டுகள் எரிந்து சாம்பல் ஆகியது.
- டெம்போ டிராவலர் வேனில் திருச்சி தேசிய நெஞ்சாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
- சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்திய டிரைவர் அனைவரையும் வெளியேறுமாறு கூறினார்.
கடலூர்:
சென்னையை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு டெம்போ டிராவலர் வேனில் திருச்சி தேசிய நெஞ்சாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த வேனை சென்னை திருமங்கலத்தை சேர்ந்த சுதாகர் (வயது 38) என்பவர் ஓட்டி வந்தார். இதில் அதே பகுதியை சேர்ந்த நந்தகுமார் (30), பிரவின் (33), ராஜகோபால் (33), பந்தல்ராஜன் (48), நரேஷ் (37), அணீஷ் (28), சதீப் (42), காந்தி (55) ஆகியோர் சபரிமலைக்கு சென்று திரும்ப வந்து கொண்டிருந்தனர்.
வரும் வழியில் திட்டக்குடி அடுத்த திருமா ந்துறை சுங்கச் சாவடி அருகில் காலை உணவை சாப்பிட்டனர். பின்னர் மீண்டும் சென்னை நோக்கி புறப்பட்டனர். திட்டக்குடி-வெங்கனூர் ஆவடி கூட்ரோடு அருகே வரும் போது டெம்போ டிராவலர் வேன் திடிரென தீப்பிடித்தது. உடனடியாக சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்திய டிரைவர் அனைவரையும் வெளியேறுமாறு கூறினார்.
இதைச் சற்றும் எதிர்பாராத அய்யப்ப பக்தர்கள் வேனில் இருந்து வெளியில் குதித்து உயிர் தப்பினர். வேன் தொடர்ந்து எரிந்து கொண்டிருந்ததால் அப்பகுதியே புகை மூட்டமாக மாறியது. தகவலறிந்து திட்டக்குடி, வேப்பூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். மேலும், ராமநத்தம் போலீசார் வேன் தீப்பிடித்த தற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த திடீர் தீ விபத்தால் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்