என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இறுதிச் சடங்கு"

    • பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 40 பேர் உடல் உபாதையால் பாதிப்பு.
    • உணவில் விஷம் ஏதும் கலந்துள்ளதா என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சத்தீஸ்கரின் சூரஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் மரணத்திற்குப் பிந்தைய சடங்கிற்காக தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிட்ட 40 பேருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    பாதிக்கப்பட்டவர்கள் ராமானுஜ்நகர் மேம்பாட்டுத் தொகுதிக்கு உட்பட்ட விசுன்பூர் கிராமத்தில் நேற்று காலை உணவை உட்கொண்டதாக சூரஜ்பூர் தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி மருத்துவர் ஆர்.எஸ்.சிங் தெரிவித்தார்.

    உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் அனைவரும் சூரஜ்பூர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் உடல் நிலை தற்போது சீராக உள்ளதாகவும், மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் அதிகாரி தெரிவித்தார்.

    உணவு உட்கொண்ட இரண்டு, மூன்று மணி நேரத்திற்குப் பிறகு, பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 40 பேர் உடல் உபாதையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து அவர்கள் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    இந்நிலையில் இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • 57 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு.
    • தாய்க்கு இறுதிச் சடங்குகளை மேற்கொண்டனர்.

    பாராளுமன்ற தேர்தலின் கடைசிக்கட்ட வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது. வாக்காளர்கள் காலை முதலே ஆர்வமாக வந்து வாக்களித்தனர். இன்று மட்டும் 8 மாநிலங்களை சேர்ந்த 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

    அந்த வகையில், பீகார் மாநிலத்தின் ஜெகானாபாத்தின் தேவ்குல்லி கிராமத்தை சேர்ந்தவர் மிதிலேஷ் யாதவ். இவரது தாயார் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். எனினும், இவர் முதலில் வாக்களித்து விட்டு அதன்பிறகு தாயாருக்கு இறுதிச் சடங்கு செய்வதென முடிவு செய்துள்ளார். அதன்படி இவரது குடும்பத்தினர், முதலில் வாக்களித்து விட்டு, அதன்பிறகு தான் இறுதிச் சடங்குகளை மேற்கொண்டனர்.

    இது குறித்து பேசிய மிதிலேஷ் யாதவ், "உயிரிழந்த தாய் மீண்டும் வரப்போவதில்லை. அவருக்கான இறுதிச் சடங்குகள் காத்திருக்கலாம், ஆனால் தேர்தல் காத்திருக்காது. ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு தான் மீண்டும் தேர்தல் வரும்."

    "இதனால் எங்களது குடும்பத்தினர் முதலில் வாக்களித்துவிட்டு, அதன்பிறகு எங்களது தாயாரின் இறுதிச் சடங்குகளை மேற்கொள்ளலாம் என்று முடிவெடுத்தோம்," என்று தெரிவித்தார்.

    • ஆவடி அடுத்த பொத்தூரில் அடக்கம் செய்ய உறவினர்கள் ஒப்புதல்.
    • பெரம்பூரில் இருந்து 21 கி.மீ., தொலைவில் பொத்தூர் அமைந்துள்ளது.

    கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி மாநில அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி தொடர்ந்த வழக்கை இன்று சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

    உயர்நீதிமன்ற நீதிபதி பவானி சுப்பராயன் முன் இன்று காலை 9 மணிக்கு வழக்கு விசாரணை தொடங்கியது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி இருமுறை வழக்கை ஒத்திவைத்தார். இதன்பின்னர் பிற்பகல் 2.15 மணிக்கு மீண்டும் விசாரணை தொடங்கியது.

    அப்போது, திருவள்ளூர் மாவட்டத்தில் உடலை அடக்கம் செய்ய தேவையான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூர் மாவட்டத்தில் அடக்கம் செய்து கொள்ளலாம். பெரம்பூர் கட்சி இடத்தில் நினைவிடம் அமைத்துக்கொள்ளலாம். கட்சி அலுவலகம் உள்ள இடத்தில் அடக்கம் செய்ய கூடாது என்பது தான் பிரச்சனை. நினைவு மண்டபம் கட்ட பிரச்சனை இல்லை. பெரம்பூரில் அரசு அனுமதியுடன் நினைவிடம் கட்டிக்கொள்ளலாம் என்று நீதிபதி தெரிவித்தார்.

    இதை தொடர்ந்து, ஆம்ஸ்ட்ராங்கின் உடலை ஆவடி அடுத்த பொத்தூரில் அடக்கம் செய்ய உறவினர்கள் ஒப்புதல் அளித்தனர்.

    அதன்படி, பௌத்த முறைப்படி இறுதிச் சடங்கு முடிந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங்கின் உடல் இறுதி ஊர்வலமாக பொத்தூருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

    பெரம்பூரில் இருந்து மூலக்கடை, மாதவரம் ரவுண்டானா வழியாக இறுதி ஊர்வலம் நடைபெற்று வருகிறது. வழிநெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு, போக்குவரத்து சீர்செய்யப்பட்டுள்ளது.

    இறுதி ஊர்வலத்தில் ஏராளமான தொண்டர்கள் திரண்டுள்ளனர். பெரம்பூரில் இருந்து 21 கி.மீ., தொலைவில் பொத்தூர் அமைந்துள்ளது.

    அடக்கம் செய்யும் இடத்தில் ஆவடி கூடுதல் ஆணையர் தலைமையில் 300 போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • ஆண்கள் செய்யக்கூடிய எந்த பணிகளையும் பெண்களும் செய்யலாம் என்றனர்.
    • மூதாட்டியின் உடலை மயானத்திற்கு பெண்களே தூக்கி சென்ற சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மெட்ரோ சிட்டியை சேர்ந்தவர் வக்கீல் கிருஷ்ணகுமார். இவரது பெரியம்மா இந்திராணி (வயது 83). இவர் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார்.

    இதையடுத்து அவரது உடலுக்கு திராவிடர் கழகத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் அஞ்சலி செலுத்தியதோடு இறுதி சடங்குகளுக்காக மூதாட்டியின் உடலை மின் மயானத்திற்கு எடுத்து செல்வதற்காக தயாராகினர். இதையடுத்து திராவிடர் கழகத்தை சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் மூதாட்டி உடலை வீட்டிற்கு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அங்கிருந்து ஆம்புலன்சில் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மின்மயானத்திற்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மின் மயானத்தில் இருந்து மூதாட்டி உடலை ஆம்புலன்ஸ் வாகனத்திலிருந்து எரியூட்டும் மையம் வரை எடுத்துச்சென்று மின் மயானத்தில் உடலை வைத்து எரியூட்டினர். வழக்கமாக மின் மயானத்திற்கு ஆண்கள் மட்டுமே அதிக அளவில் சென்று இறந்தவர்களின் இறுதிச்சடங்கை செய்வார்கள். ஆனால் உயிரிழந்த மூதாட்டி உடலை வீட்டில் இருந்து மின் மயானம் வரை கொண்டு சென்றதுடன், இறுதி சடங்குகள் செய்து, மின்மயானத்தில் எரியூட்டும் வரை காத்திருந்து ஆண்கள் செய்யும் நடைமுறை வழக்கத்தை மாற்றி உள்ளனர்.

    இது குறித்து திராவிடர் கழகத்தை சேர்ந்த பெண்கள் கூறுகையில், ஆண்களுக்கு பெண்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் நாங்கள் இந்த பணியில் ஈடுபட்டோம். ஆண்கள் செய்யக்கூடிய எந்த பணிகளையும் பெண்களும் செய்யலாம் என்றனர். உயிரிழந்த மூதாட்டியின் உடலை மயானத்திற்கு பெண்களே தூக்கி சென்ற சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது.

    • சட்டப்படி எரியூட்டப்பட்டவர்களின் சாம்பலையும் அதில் இருந்து மிஞ்சிய எலும்புகளை மட்டுமே உறவினர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
    • கடந்த 2023 ஆம் ஆண்டில் மட்டும் அவ்வகை உலோகங்களை விற்று சுமார் 6.49 பில்லியன் யென் [சுமார் 76 கோடி ருபாய்] வரை நகரங்கள் சம்பாதித்துள்ளன.

    இறந்தவர்களின் சடலங்களை எரியூட்டிய சாம்பலில் இருந்து எஞ்சிய உலோகங்களை விற்று ஜப்பானிய நகரங்கள் லாபம் ஈட்டுவது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜப்பானில் வருடந்தோறும் சராசரியாக சுமார் 1.5 மில்லியன் மக்களின் சடலங்கள் எரியூட்டப்படுகின்றன. அந்நாட்டின் சட்டப்படி எரியூட்டப்பட்டவர்களின் சாம்பலையும் அதில் இருந்து மிஞ்சிய எலும்புகளை மட்டுமே உறவினர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

    ஆனால் உயிரிழந்தவர்கள் உடலில் அணிந்தும், பொருத்தப்படும் இருந்த தங்கம் உள்ளிட்ட மிக்க உலோகங்கள் எரியூட்டப்பட்ட சாம்பலில் மிச்சம் இருக்கும். குறிப்பாக தங்களின் பற்களை அடைக்க [dental fillings] தங்கம், பலேடியம் உள்ளிட்ட உலோகங்களை மக்கள் பயன்படுத்துவதால் அந்த உலோகங்களின் எச்சங்களும், எழுப்புகளில் இம்பிளாட் ஆக பொருத்தப்பட்டிருக்கும் டைட்டானியம் உள்ளிட்ட உலோகங்களின் எச்சங்களும் சாம்பலில் அதிகம் மிஞ்சுகின்றன.

     

    எனவே பல்வேறு ஜப்பானிய நகரங்கள் அதை சேகரித்து விற்று பணமாக்குகின்றன. ஜப்பானில் 97% சதவீத மயானங்களை அரசே நடத்தகுவதால் இதன் மூலம் பெரு நகரங்கள் அதிக லாபம் சம்பாதிக்கின்றன.

    கடந்த 2023 ஆம் ஆண்டில் மட்டும் அவ்வகை உலோகங்களை விற்று சுமார் 6.49 பில்லியன் யென் [சுமார் 377 கோடி ருபாய்] வரை நகரங்கள் சம்பாதித்துள்ளன. குறிப்பாக கியோடா நகரம் 303 மில்லியன் யென், யோகோஹாமா நகரம் 233 மில்லியன் யென், நகோயா நகரம் 225 மில்லியன் யென் சம்பாதித்துள்ளன. 

    • ப்ரிஜேஷ் காணவில்லை என அவரது குடும்பம் போலீசில் புகார் அளித்தது.
    • பண முதலீடுகள் தொடர்பாக ப்ரிஜேஷ் மன அழுத்தத்தில் இருந்தார்.

    குஜராத்தில் தகனம் செய்யப்பட்ட நபர் மறுநாள் அவரின் வீட்டில் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்திற்கு வந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. குஜராத் மாநிலம் நரோதா பகுதியை சேர்ந்த ப்ரிஜேஷ் சுதர் என்ற 43 வயது நபர் கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி வீட்டிலிருந்து காணாமல் போனார்.

    இதைத்தொடர்ந்து ப்ரிஜேஷ் காணவில்லை என அவரது குடும்பம் போலீசில் புகார் அளித்தது. இந்நிலையில் அவர் காணாமல் போய் 2 வாரங்கள் கழித்து கடந்த நவம்பர் 10 ஆம் தேதி சபர்மதி பாலம் அருகே அழுகிய நிலையில் இருந்த ஒரு நடுத்தர வயது நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

    உடலை அடையாளம் காண ப்ரிஜேஷ் குடும்பத்தினர் அழைத்து வரப்பட்டனர். அந்த நபரின் உடல் வாகு காணாமல் போன ப்ரிஜேஷை ஒத்திருந்ததால் அவர்தான் ப்ரிஜேஷ் என்று குடும்பத்தினர் கூறியுள்ளனர். எனவே அந்த உடலுக்கு இறுதிச் சடங்கு செய்துள்ளனர்.

    ஆனால் மறுநாளே [கடந்த வியாழக்கிழமை] வீட்டில் அவரது மறைவுக்கான பிரார்த்தனைக் கூட்டத்தின்போது ப்ரிஜேஷ் வந்ததைப் பார்த்து குடும்பத்தினர் அதிர்ந்தனர். பண முதலீடுகள் தொடர்பாக ப்ரிஜேஷ் மன அழுத்தத்தில் வீட்டை விட்டு வெளியேறியது விசாரணையில் தெரியவந்தது. இதற்கிடையே புதைக்கப்பட்டது யாருடைய உடல் என விசாரணை நடந்து வருகிறது.

    • இறுதிச் சடங்குக்கு வெளியூரில் வசித்து வந்த அண்ணன் கிஷன் தம்பியின் வீட்டுக்கு வந்துள்ளார்.
    • இதனால் அண்ணன் - தம்பி இடையே தகராறு ஏற்பட்டது.

    மத்தியப் பிரதேசத்தில் தந்தையின் உடலை இரண்டாக வெட்டி தனித்தனியே இறுதிச்சடங்கை நடந்த மகன்கள் சண்டையிட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    மத்திய பிரதேசத்தின் திகம்கர் மாவட்டம், லிதோரடால் கிராமத்தை சேர்ந்தவர் தயானி சிங் கோஷ் (84). இவர் தனது இளைய மகன் தேஷ்ராஜுடன் வசித்து வந்தார். மூத்த மகன் கிஷன் வெளியூரில் வசித்து வந்தார். உடல்நலக்குறைவு காரணமாக தயானி சிங் நேற்று முன் தினம் ( ஞாயிற்றுக்கிழமை ) உயிரிழந்தார்.

    இறுதிச் சடங்குக்கு வெளியூரில் வசித்து வந்த அண்ணன் கிஷன் தம்பியின் வீட்டுக்கு வந்துள்ளார். மூத்த மகன் என்ற அடிப்படையில் தந்தையின் இறுதிச் சடங்களை தான்தான் செய்வேன் என தம்பியிடம் கிஷன் கூறினார். ஆனால் தம்பியோ தானே இறுதிச் சடங்கு செய்வேன் என அடம்பிடித்தார். இதனால் அண்ணன் - தம்பி இடையே தகராறு ஏற்பட்டது.

    ஏற்கனவே மதுபோதையில் வந்திருந்த அண்ணன் கிஷன், தந்தையின் உடலை வெட்டி அதில் பாதியை தான் இறுதிச் சடங்கு செய்ய தர வேண்டும் என்றும் மீதி பாதி உடலை வைத்து தம்பியை இறுதிச் சடங்கு செய்துகொள்ளுமாறும் தகராறு செய்யத்தொடங்கினார்.

    சகோதரர்களின் சண்டையை கண்டு அதிர்ச்சியடைந்த கிராமத்தினர் உடனே போலீஸுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் மூத்த மகன் கிஷனை சமாதானப்படுத்தி அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இளைய மகன் தேஷ்ராஜ் தந்தையின் இறுதிச் சடங்குகளை செய்து முடித்தார்.

    • பெய்ரூட்டில் ஒரு பதுங்கு குழியை குறிவைத்து இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் செப்டம்பர் 27 அன்று நஸ்ரல்லா கொல்லப்பட்டார்
    • சியோனிச (இஸ்ரேலிய) எதிரியால் ஒருபோதும் நசுக்க முடியாது

    லெபனானின் கிளர்ச்சி அமைப்பான ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் இறுதிச் சடங்குகள் அவர் உயிரிழந்த 4 மாதங்களுக்குப் பிறகு இன்று நடைபெறுகின்றன. 

    காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எதிராக ஹிஸ்புல்லா அமைப்பு லெபனான் எல்லையில் இருந்து எதிர்த்தாக்குதல் நடத்தியது. இதனால் கோபமடைந்த இஸ்ரேல் லெபனான் நகரங்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தியது.

    இதில் லெபனான் பொதுமக்கள் உட்பட 3000 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கான மக்கள் புலம்பெயர்ந்தனர். சுமார் 4 மாத தாக்குதல்களுக்கு பிறகு அக்டோபர் 1 ஆம் தேதி போர் நிறுத்தம் ஏற்பட்டது.

    இதற்கிடையே பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியில் ஒரு பதுங்கு குழியை குறிவைத்து இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் செப்டம்பர் 27 அன்று நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இந்நிலையில் இன்று நடைபெறும் இறுதிச் சடங்கில் அதிகமான மக்கள் கலந்து கொள்ளுமாறு ஹிஸ்புல்லாவின் நிர்வாகக் குழுவின் துணைத் தலைவர் ஷேக் அலி தமூச் அழைப்பு விடுத்தார்.

     

     

     

    இதில் லெபனான் உட்பட உலகம் முழுவதிலுமிருந்து பலர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல ஷியா அமைப்புகளும், ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பகீர் கலிபாப்பும் இதில் பங்கேற்பார்கள். இஸ்ரேலுடனான போருக்குப் பிறகு பலவீனமடைந்துள்ள ஹிஸ்புல்லாவைப் பொறுத்தவரை, இந்த நிகழ்வு அதன் அரசியல் வலிமையை நிரூபிக்கும் நிகழ்வாக இருக்கும்.

    ஹிஸ்புல்லாவின் நிறுவனர்களில் ஒருவரான ஹசன் நஸ்ரல்லா, கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் அந்த அமைப்பை வழிநடத்தி, அந்தக் குழுவை ஒரு இராணுவ அமைப்பாகவும், லெபனானில் ஒரு பெரிய அரசியல் சக்தியாகவும் உருவாக்கினார்.

    இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளுமாறு மக்களை வேண்டுகோள் விடுத்த ஹிஸ்புல்லா தலைவர் ஷேக் அலி டாமோச், "நமது எதிர்ப்பு வலுவானது, போர்க்களத்தில் நமது எதிர்ப்பு நிலைத்திருக்கும், சியோனிச (இஸ்ரேலிய) எதிரியால் அதை ஒருபோதும் நசுக்க முடியாது என்று நண்பர்களுக்கும் எதிரிகளுக்கும் தெரிவிக்கும் வகையில், ஒவ்வொரு வீடு, கிராமம் மற்றும் நகரத்திலிருந்தும் மக்கள் பெருமளவில் வெளியே வந்து இதில் பங்கேற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

    ×