என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பயங்கரம்"
- எர்ணாகுளத்தில் இருந்து சென்னைக்கு ஆம்னி பஸ் நேற்று இரவு புறப்பட்டது. இந்த பஸ்சினை மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த டிரைவர் வைத்தியநாதன் ஓட்டினார்.
- ஆம்னி பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் சாலையில் இருந்த சென்டர் மீடியன் கட்டையின் மீது ஏறி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
திண்டிவனம்:
எர்ணாகுளத்தில் இருந்து சென்னைக்கு ஆம்னி பஸ் நேற்று இரவு புறப்பட்டது. இந்த பஸ்சினை மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த டிரைவர் வைத்தியநாதன் ஓட்டினார். இன்று அதிகாலை சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த போது திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பம் கல்லூரி அருகே ஆம்னி பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் சாலையில் இருந்த சென்டர் மீடியன் கட்டையின் மீது ஏறி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பஸ்ஸில் பயணம் செய்த டிரைவர் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். காயமடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்த விபத்தால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டலூர் அடுத்த பச்சையாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் நூருல்லா சாகித் (வயது 35). சம்சா வியாபாரி.
- இரண்டு பேர் நூருல்லா சாகித் மற்றும் அவரது தந்தை முகமது மொய்தீன் ஆகியோரை சரமாரியாக கத்தியால் வெட்டினார்கள்.
கடலூர்:
கடலூர் அடுத்த பச்சையாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் நூருல்லா சாகித் (வயது 35). சம்சா வியாபாரி. இவரும் இவரது தந்தை முகமது மொய்தீன் ஆகியோர் இணைந்து சம்சா போட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று இரண்டு பேர் நூருல்லா சாகித் மற்றும் அவரது தந்தை முகமது மொய்தீன் ஆகியோரை சரமாரியாக கத்தியால் வெட்டினார்கள். இதில் இரண்டு பேரும் கதறி துடித்தனர். இந்த சத்தம் கேட்ட அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் சம்பவத்திற்கு வந்து பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் இரண்டு பேரும் இருந்தனர். இதனை தொடர்ந்து உடனடியாக இரண்டு பேரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது நூருல்லா சாகித்தை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார் மேலும் இவரது தந்தை முகமது மொய்தீனுக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் தற்போது தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார். இத் தகவல் இருந்த கடலூர் துறைமுகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
இது குறித்து கடலூர் துறைமுகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், கொலை செய்யப்பட்ட நூருல்லா சாகித்துக்கும் , அவரது குடும்ப உறவினருக்கும் முன் விரோத தகராறு இருந்து வந்தது. இதன் காரணமாக நேற்று இரவு 2பேர் நூருல்லா சாகித் மற்றும் அவரது தந்தை முகமது மொய்தினை சரமாரியாக வெட்டியது தெரியவந்துள்ளது. மேலும் சந்தேகத்தின் பேரில் ஒருவரை போலீசார் பிடித்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். . கடலூர் அருகே குடும்ப தகராறு காரணமாக சம்சா வியாபாரியை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மணிகண்டன் அதே பகுதியை சேர்ந்த கோமதி என்ற பெண்ணை காதலித்து வந்தார்
- இதனால் 2 குடும்பத்திற்கும் அடிக்கடி தகராறு நடந்து வந்தது.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த தொரப்பாடி குமரக் கோயில் தெருவை சேர்ந்தவர் முருகன்.இவரது மனைவி சின்னபொண்ணு (வயது 40). இவர்களது மகன் மணிகண்டன். மணிகண்டன் அதே பகுதியை சேர்ந்த கோமதி என்ற பெண்ணை காதலித்து வந்தார். இதனால் 2 குடும்பத்திற்கும் அடிக்கடி தகராறு நடந்து வந்தது. இது குறித்து மகளிர் போலீசில் புகார் செய்து வழக்கு விசாரணையும் நடந்து வருகிறது. மேலும் மணிகண்டன் குடும்பத்தாரை வீட்டோடு தீ வைத்து கொளுத்தி விடுவதாக கோமதியின் தந்தை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு மணிகண்டன் வீட்டிற்கு மர்ம ஆசாமிகள் தீ வைத்தனர். இதில் வீட்டிலிருந்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இருந்த போதும் வீட்டு உபயோக பொருட்கள் தீயில் கருகி நாசமாயின.
இது குறித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் கோமதியின் தந்தை முருகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
- சத்யராஜ் (வயது 27). இவர் அதே ஊரை சேர்ந்த முத்துவேல் மகள் சசிகலா (24) என்பவரை கடந்த ஒரு வருடம் முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார்.
- இந்நிலையில் சத்யராஜ் கழுத்து அறுபட்ட நிலையில் மொடையூர் சங்கராபரணி ஆற்றுப்பாலத்தின் கீழ் நேற்று முன்தினம் இரவு விழுந்து கிடந்தார்.
விழுப்புரம்:
செஞ்சி அருகில் உள்ள ஜம்போதியை சேர்ந்த கணேசன் மகன் சத்யராஜ் (வயது 27). இவர் அதே ஊரை சேர்ந்த முத்துவேல் மகள் சசிகலா (24) என்பவரை கடந்த ஒரு வருடம் முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சத்யராஜ் கழுத்து அறுபட்ட நிலையில் மொடையூர் சங்கராபரணி ஆற்றுப்பாலத்தின் கீழ் நேற்று முன்தினம் இரவு விழுந்து கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் செஞ்சி போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சப்-இன்ஸ்பெக்டர் சங்கர சுப்பிரமணியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்றனர். அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த சத்யராஜை மீட்டு செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சிகிச்சை அளித்தனர்
. சிகிச்சைக்கு பின்னர் அவரால் பேச முடியாததால் வெள்ளை தாளில் நடந்த சம்பவங்கள் குறித்து எழுதி போலீசாரிடம் கொடுத்தார். அதில், எனது மனைவி சசிகலாவும், அதே ஊரை சேர்ந்த சசிகலாவின் கள்ளக்காதலன் ஜானகி ராமன் ஆகியோர் சேர்ந்து கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சி செய்தனர் என்றிருந்தது. இது குறித்த விசாரணையை போலீசார் தொடங்கினர் அப்போது சத்தியராஜை பார்க்க சசிகலாவையும், ஜானகிராமனும் ஆஸ்பத் திரிக்கு வந்தனர். அங்கிருந்த போலீசார் 2 பேரையும் கைது செய்து, செஞ்சி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கழுத்து அறுக்கப் பட்டதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள சத்யராஜ், மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளார். காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவனை, கள்ளக்காதலுனுடன் சேர்ந்து மனைவி கழுத்தை அறுத்து கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் செஞ்சி சுற்று வட்டார கிராமங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சுரேஷ்குமார் (வயது 52). வார்டு உறுப்பினர், தி.மு.க. கிளைச் செயலாளர், இவரது தம்பி ரமேஷ் (50). பா.ஜ.க. பிரமுகர்.இவர்களுக்குள் சொத்து தகராறு அடிக்கடி ஏற்படும். .
- இவர்களுக்கு நடந்த தகராறில் நிலை தடுமாறிய ரமேஷ் அங்கேயே மயங்கி விழுந்தார்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த எல்.என்.புரம் சென்னை சாலையில் வ.வு.சி. நகர் உள்ளது. இங்கு சுரேஷ்குமார் (வயது 52). வார்டு உறுப்பினர், தி.மு.க. கிளைச் செயலாளர். வெட்கிரைண்டர் சர்வீஸ் செய்யும் பணி செய்கிறார். இவரது தம்பி ரமேஷ் (50). பா.ஜ.க. பிரமுகர். இவர் கட்டில், பீரோ செய்து விற்பனை செய்கிறார். இவர்கள் 2 பேரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களது தந்தை மறைவிற்கு பின்னர், இவர்களுக்குள் சொத்து தகராறு அடிக்கடி ஏற்படும் இந்நிலையில், இன்று காலை சுரேஷ்குமார் மனைவிக்கும், ரமேஷின் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் 2 பேரும் ஈடுபட்டனர். அப்போது 4 பேருக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ரமேஷை, சுரேஷ்குமார் பிடித்து தள்ளினார். இதில் வீட்டின் சுவற்றில் ரமேஷின் தலை மோதியது.
இதனால் நிலை தடுமாறிய ரமேஷ் அங்கேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ரமேஷ் இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து ரமேஷின் மனைவி அனு பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும், தள்ளுமுள்ளு நடந்த போது ரமேஷின் மகள் செல்போனில் வீடியோ எடுத்திருந்தார். இதனையும் போலீசாரிடம் காண்பித்து ரமேஷின் மனைவி அனு புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கவேலு, சரண்யா தலைமையிலான போலீசார் சுரேஷ்குமாரை கைது செய்தனர். அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ரமேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
- விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து
- சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க போலீசார் தடை
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள்.
இவற்றை பார்வையிடச் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது. 3 படகுகள் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவேளை இன்றி தொடர்ச்சியாக இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை கன்னியாகுமரி கடலில் பயங்கர சூறாவளி காற்று வீசியது. இதனால் கடல் கொந்தளிப்பாகவும் சீற்றமாகவும் காணப்பட்டது. மேலும் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பாறை அமைந்துள்ள வங்க கடல் பகுதியில் கடல் நீர் மட்டம் "திடீர்" என்று தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. அதேசமயம் இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் அமைந்துள்ள தெற்கு மற்றும் மேற்கு கடல் பகுதியில் கடல் சீற்றமாகவும் கொந்தளிப்பாகவும் காணப்பட்டது. இதனால் இந்த பகுதியில் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் ஆக்ரோமாக எழும்பி வீசின.
இதனால் இன்று காலை காலை 8 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால் விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலை முதலே படகுத் துறையில் நீண்ட கியூ வரிசையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதனால் சுற்றுலா பயணிகள் கடற்கரையில் நின்றபடியே விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்த்து ரசித்த தோடு மட்டுமின்றி தங்களது செல்போன் களில் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து சென்றனர்.
மேலும் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, ஆரோக்கியபுரம், கோவளம், கீழமணக்குடி, மணக்குடி, பள்ளம் போன்ற கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாவும் கொந்தளிப்பாகவும் காணப்பட்டது. கன்னியாகுமரி கடலில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க சுற்றுலா போலீசார் தடை விதித்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் கடலில் ஆனந்த குளியல் போட முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
- அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 5 வாலிபர்கள்
- கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி நான்கு வழி சாலையில் நள்ளிரவில் சீறிப்பாய்ந்த சொகுசு கார் வீட்டு சுவர் மீது பயங்கரமாக மோதியது. இதில்இருந்த 5 வாலிபர்கள் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்கள். இந்த விபத்து பற்றிய சி.சி.டி.வி.காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
கன்னியாகுமரிஅருகே உள்ள குண்டல் பகுதியில் நேற்று நள்ளிரவு சொகுசு கார் ஒன்று அதிவேகமாக வந்தது. அதில்இருந்த 5 வாலிபர்களும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.அதிவேகமாக வந்த அந்த சொகுசு கார் வடக்கு குண்டல் பகுதியில் வளைவில் திரும்பிய போது கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த ஒரு வீட்டின் சுவர் மீது மோதியது.விபத்து ஏற்படுத்திய சொகுசு காரில் இருந்த அந்த 5 வாலிபர்கள் மது போதையில் இருந்ததால் போலீசாருக்கு பயந்து காரை அங்கேயே விட்டுச் சென்று உள்ளனர்.
இந்த விபத்துகுறித்து தகவல்அறிந்த கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.விபத்து நடந்த பகுதியின்அருகில் உள்ள ஒரு தங்கும்விடுதியில் இருந்தகண்காணிப்பு கேமராவில்விபத்துநடந்தது தெளிவாக பதிவாகி உள்ள து. அந்த சி.சி.டி.வி.காட்சி கள்சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்