என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மருத்துவ குழுவினர்"
- கருக்கலைப்பு மாத்திரை விற்பனை செய்வதாக மருத்துவ துறையினருக்கு தகவல் கிடைத்தது.
- மருந்து சீட்டு இல்லாமல் விற்பனை செய்யக் கூடாது என மருந்தக உரிமையாளர்களை எச்சரித்தனர்
கடலூர்:
கடலூர் மாவட்டம், வேப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மருந்தக ங்களில் கருக்கலைப்பு மாத்திரை விற்பனை செய்வதாக மருத்துவ துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைனையடுத்து வேப்பூர் அரசு வட்ட தலைமை டாக்டர் அகிலன் கண்ணன் , மருந்தக ஆய்வாளர் நாராயணசாமி , வேப்பூர் சப்- இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் உள்ளிட்ட குழுவினர் வேப்பூர் பஸ் நிலையம் பகுதிகளில் உள்ள மருந்தகங்களில் கரு கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து கரு கலைப்பு மாத்திரைகள் முறையான மருந்து சீட்டு இல்லாமல் விற்பனை செய்யக் கூடாது என மருந்தக உரிமையாளர்களை எச்சரித்தனர் இந்த திடீர் ஆய்வால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- குப்பாண்டம் பாளையம் கிராமம் இடையார் பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.
- இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் சாந்திக்கு கடந்த 29-ம் தேதி காய்ச்சல் வந்துள்ளது. இதனையடுத்து, அவர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் ஒன்றியம், குப்பாண்டம் பாளையம் கிராமம் இடையார் பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.
இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் சாந்திக்கு கடந்த 29-ம் தேதி காய்ச்சல் வந்துள்ளது. இதனையடுத்து, அவர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து 4 மாணவர் களுக்கும் காய்ச்சல் வந்துள்ளது. இதனால் நேற்று பள்ளிக்கு யாரும் வரவில்லை.
இதனால் அதிகாரிகள் பள்ளி குழந்தைகள் 17 பேரின் வீட்டிற்கு சென்று மருத்துவ குழு பரிசோதனை செய்தனர். எலச்சிபாளையம் வட்டார மருத்துவ அலுவலர் கருணாகரன் தலைமையில், நடமாடும் மருத்துவ குழு டாக்டர் வசந்தபிரியா, பள்ளி சிறார் மருத்துவக்குழு டாக்டர் கிருஷ்ணகாந்த் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் சுகாதார கிராம செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ குழு இடையார்பாளையம் வந்து முகாமிட்டு அனைத்து குழந்தைகளையும் பரிசோதித்து ரத்த பரிசோதனை செய்து காய்ச்சலுக்கான காரணங்களை ஆய்வு செய்தனர்.
பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சிகிச்சைகள், மாத்திரைகள் அளிக்கப்பட்டது. மலேரியா, டெங்கு காய்ச்சலுக்கான ரத்த பரிசோதனை நடைபெற்றது. அதில் யாருக்கும் மலேரியா, டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்படவில்லை
அதுமட்டுமல்லாது, இடையார்பாளையம் கிராமம் முழுவதும் கொசுப்புழு ஒழித்தல், புகை மருந்து அடித்தல், பிளீச்சிங் பவுடர் தெளித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல், இருமல், சளி தொந்தரவுகள் உள்ளதா? எனவும் கண்டறியப்பட்டு அவர்களுக்கு மாத்திரை மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- ஈரோடு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் 3 மருத்துவர்கள் கொண்ட மருத்துவ குழுவினர் ஆய்வு செய்தனர்.
- இங்கு சுகாதாரம், சுத்தம், மருத்துவ கழிவு மேலாண்மை போன்றவைகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்குகிறோம்.
ஈரோடு:
மத்திய அரசின் காயகல்ப திட்டத்தில் அரசு மருத்துவ மனைகளின் தூய்மை மற்றும் தரமான மருத்துவ சேவை வழங்கப்படுவதை நேரடியாக ஆய்வு செய்து மதிப்பெண் மூலம் தேர்வு செய்கின்றனர்.
அதிக மதிப்பெண் பெறும் மாவட்ட தலைமை மருத்துவமனைகள், தாலுகா மருத்துவகனைகளுக்கு தேசிய விருதும், ரொக்க பரிசும் வழங்கப்படுகிறது.
இதன்படி ஈரோடு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அரூர் அரசு மருத்துவமனை டாக்டர். ராஜேஷ்கண்ணா தலைமையிலான 3 மருத்துவர்கள் கொண்ட மருத்துவ குழுவினர் ஆய்வு செய்தனர்.
அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை, மருத்துவ சேவை, சிகிச்சை நுணுக்கங்கள், குடிநீர் வசதி, சுற்றுப்புற சுகாதாரம், கழிப்பறை வசதி, தூய்மை பணி, மருத்துவ கழிவுகள் சேகரிப்பு மற்றும் அகற்றம், மின் சிக்கனம், டாக்டர்கள், செவிலியர் வருகை பதிவு போன்றவற்றை ஆய்வு செய்தனர்.
பின் கொரோனா சிகிச்சைக்கான ஆக்சிஜன் சிலிண்டர், படுக்கை வசதிகள், ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை கூடம் தயார் நிலையில் உள்ளதா என பார்வையிட்டனர்.
இதுபற்றி மருத்துவ குழுவினர் கூறியதாவது:
தேசிய காயகல்ப விருதுக்கு தமிழகத்தில் 32 அரசு மருத்துவமனைகள், 132 தாலுகா மருத்துவமனைகள் ஆய்வு செய்யப்படுகிறது. இதில் ஈரோடு அரசு மருத்துவமனையும் ஒன்றாகும்.
இங்கு சுகாதாரம், சுத்தம், மருத்துவ கழிவு மேலாண்மை போன்றவைகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்குகிறோம்.
அதிக மதிப்பெண் பெறும் மருத்துவமனைக்கு தேசிய விருது கிடைக்கும். முதலிடம் பெறும் மருத்துவமனைக்கு, ரூ.30 லட்சம், 2-ம் இடம் பெறும் மருத்துவமனைக்கு ரூ.20 லட்சம் வழங்கப்படும்.
இதுதவிர சுற்றுப்புற சூழல், மின் சிக்கனம் தொடர்பாக நடப்பாண்டு புதிய விருதும் அறிவிக்க உள்ளனர். இதில் முதலிடம் பெறும் மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆய்வின் போது ஈரோடு அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் வெங்கடேஷ், ஆர்.எம்.ஓ. கவிதா ஆகியோர் உடனிருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்