search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உத்திரகோசமங்கை"

    • இந்த சாபத்தினால்தான் ஈசனுடைய உருவச்சிலை மரகத கல்லால் அமைந்துள்ளது என்கிறார்கள்.
    • இந்த சிலை ஒலி, ஒளி, சப்தம் தாங்காத தன்மை கொண்டது.

    உத்தரகோசமங்கை திருத்தலத்தில் ஈசன், ஈஸ்வரியை பர்வத மகளாகவும், காளியாகவும், போகும்படி சாபம்

    இட்டத்தையும் இத்திருத்தலத்தில் ஈசனோடு ஆடிய நாட்டிய போட்டியில்தான் தோல்வியுற்றதையும் எண்ணி

    மிகுந்த மனவேதனைப்பட்டு தன் கணவர் என்று பாராமல் பார்வதி உத்தரகோசமங்கை திருத்தலத்தில் "தன்னுடைய

    உருவ விக்கரகத்துக்கு பக்தர்கள் தினந்தோறும் பூ, பழம், தேங்காய், மேளதாளங்கள், இசை, சப்தம், ஒலி, ஒளியுடன்

    வழிபட்டு செல்வார்கள் ஆனால் இத்திருத்தலத்தில் ஈசனுடைய உருவ விக்கிரகத்துக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டும்

    ஆருத்திர தரிசனம் பக்தர்கள் வழிபட்டு செல்ல வேண்டும்.

    எனவே உத்தரகோசமங்கை திருத்தலத்தில் சக்திக்குத்தான் அதிக சக்தியுண்டு" என்று ஈசனுக்கே ஈஸ்வரி சாபம் விடுத்தாளாம்.

    இந்த சாபத்தினால்தான் ஈசனுடைய உருவச்சிலை மரகத கல்லால் அமைந்துள்ளது என்கிறார்கள்.

    இந்த சிலை ஒலி, ஒளி, சப்தம் தாங்காத தன்மை கொண்டது.

    • உத்தரகோசமங்கை கோவிலில் நடராஜருக்கு தனி சன்னதி கோவில் உள்ளது.
    • என்னுடன் போட்டி நடனம் ஆடிப்பாரும் என பார்வதி தேவி சவால் விட்டாள்.

    உத்தரகோசமங்கை கோவிலில் நடராஜருக்கு தனி சன்னதி கோவில் உள்ளது.

    இக்கோவிலின் மத்தியில் இராஜகோபுரம் மிக சிறப்பாக அமைந்துள்ளது. இதைச் சுற்றி அகழியுள்ளது.

    அகழியை சுற்றிலும் தீப்பிழம்பை மலைபோல் வளர்த்துக் கொண்டு ஈசன், ஈஸ்வரி அக்கினி கோளத்தில் யாரும் அறியாமல் மூலஸ்தனத்தின் ரகசிய அறைக்குள் முதல் பெண் பார்வதி தேவிக்கு பரத நாட்டிய கலையையும், அந்தரங்க கலை முழுவதையும் கற்றுக் கொடுத்துள்ளார்.

    மற்றும் தேவ ரகசியத்தை தன்னில் பாதியாகக் கொண்ட பார்வதி தேவிக்கு சிவபெருமான் பிரணவ மந்திரத்தை உபதேசித்த இடமாகும்.

    இந்த அந்தரங்க அறையில் அம்பாள் சிலை உள்ளது. இந்த அறைக்கு யாரும் செல்ல மாட்டார்கள்.

    ஆதியில் அந்தரங்க அறையில் ஈசன் ஈஸ்வரி பரதநாட்டியம் ஆடியதற்குத்தான் ஆதி சிதம்பரம் என்ற உத்தரகோசமங்கை என்று வழங்கப்படுகிறது.

    முதலில் அறையில் ஆடிய பிறகுதான் பின்பு அம்பலத்தில் ஆடினார் என்று சொல்லப்படுகிறது.

    எனவே இந்த மரகத நடராஜர் சன்னதிக்கு தெற்குபுறமாக வாசல் அமைந்துள்ளது.

    ஈசன் ஈஸ்வரி பரதநாட்டியம் ஆடிய மரப்பலகை ஐந்தை இப்பொழுதும் காணலாம்.

    பரத நாட்டியத்தை முதல் முதலில் உத்திரகோசமங்கையில் ஆடல் அரசன் என்ற தெய்வம் சிவபெருமான் தான் அறிமுகம் செய்தார்.

    முதல் நாளில் சிவனும், பார்வதியும் "ஆனந்த தாண்டவம்" ஆடுகின்றார்கள்.

    இரண்டாவது நாள் "சந்தியா தாண்டவம்". மூன்றாவது நாள் "சம்ஹாரத் தாண்டவம்" ஆடுகின்றார்கள்.

    இந்த மூன்று நாட்களும் நடந்த நாட்டியத்திற்கு சிவபெருமான், பார்வதி ஆகியோரின் நடனம் ஒரே மாதிரியாக இருந்ததால் நடுவர்களால் சரியான தீர்ப்பு கூற முடியவில்லை.

    எனவே திருமால், பிரம்மன், இந்திரன் ஆகியோரிடம் பெரும் குழப்பம் ஏற்பட்டு விட்டது.

    நான்காவது நாள் ஊர்த்துவதாண்டவம் நடந்தது.

    ஆடவல்லான் நடராஜரின் கால் சதங்கை சப்தம் ரம்மியமாய் ஒலித்தது.

    பார்வதி, நடராஜன் ஆடும் சபையை நோக்கி நடந்தாள். நடராஜனின் அருகே சென்றாள்.

    சுவாமி ஆடல், கலை பெண்களுக்கே உரியது.

    நீர் ஆடி ஆட வல்லான் என்று பெயர் பெறுவது நல்லது அல்ல.

    என்னுடன் போட்டி நடனம் ஆடிப்பாரும் என பார்வதி தேவி சவால் விட்டாள்.

    ஈசனும் போட்டி நடனம் ஆட சம்மதித்தார். ஒருபுறம் பார்வதி, இன்னொருபுறம் சிவபெருமானான, நடராஜன் ஆட்டம் தொடங்கியது.

    இந்த போட்டி நடனத்துக்கு நாரதர் யாழை இசைத்தார்.

    மகா விஷ்ணு மத்தளம் கொட்டினார். நந்திய பெருமான் தாளமிட்டார்.

    பிரம்மா ஜதி சொல்லத் தொடங்கினார். ருத்திரன் நாதசுரம் வாசித்தார். சரஸ்வதி வீணையை மீட்டினாள்.

    வெற்றி யாருக்கு எனப் புரியாத நிலையில் திகைத்து இருந்தார்கள் தேவர்கள்.

    இந்த நாட்டியத்தில் பார்வதி சுழன்றாடினாள்.

    வெற்றி யாருக்கு என்று புரியாத நிலையில் அனைவரும் சிவதாண்டவத்தையும், பார்வதி ஆட்டத்தையும் கண்டு களித்தனர்.

    ஆட்டம் சூடு பிடித்தது. இருவரும் சுழன்று சுழன்று ஆடினர். பார்வதியின் கால் சலங்கை கழன்று கீழே விழுந்தது.

    ஆடலரசன் தன் காதிலிருந்த ஒரு குண்டலத்தை கீழே விழச் செய்தார்.

    பார்வதி கால் சதங்கையை சரி செய்து சிவபெருமானின் செயல்களைக் கூர்ந்து கவனித்தார்.

    சக்கரமாய் ஆடிவந்த சிவபெருமானின் ஒரு காலின் விரல்கள் கீழே கிடந்த குண்டலத்தை மெல்லக் கவ்வியது.

    சிவபெருமான் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று புரியாது பார்வதி ஆடிக்கொண்டே நடப்பதைக் கவனித்தாள்.

    கூடி இருந்தவர்களுக்கு ஈசனின் இந்த செய்கை புரியவில்லை.

    புரியாத குழப்பத்திலேயே ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தனர்.

    அடுத்த கணம் நடராஜர் தன் இடது காலை அழுந்த ஊன்றி வலது காலை நாட்டியமண்டபத்துக்கு அருகில் மரங்கள் சூழ்ந்த வனம் பகுதியை நோக்கி தில்லையின் எல்லையை நோக்கி நடந்தார்.

    பின்னர் நடராஜன் தன் வலது காலை தூக்கி இடது காதை தொட்டார்.

    ஆனால் அது போன்று பார்வதிதேவி செய்ய முடியவில்லை.

    தள்ளாடி கீழே விழுந்து மயக்கம் நிலையை அடைந்து தோல்வியுற்றாள்.

    இந்த "தலம்" ஊர்த்துவ தாண்டவம் ஆடி தன்னுடன் போட்டி நடனம் ஆடிய பார்வதியை ஈசன் வென்ற "தலம்" தான் உத்திரகோசமங்கை திருத்தலமாகும்.

    இந்தப் போட்டி நடனத்திற்கு திருமால், பிரம்மன், இந்திரன் ஆகியோர்கள் நடுவர்களாக இருந்து பார்வதி தோல்வியுற்றதாகத் தீர்ப்பு வழங்கிய திருத்தலமாகும்.

    • கைலாயத்தில் இருப்பதாலும், கங்கை, சந்திரனை சடாமுடியில் சூடி இருப்பதாலும் சிவபெருமான் குளிர்ச்சி பிரியர்.
    • சிவபுராணம், தேவாரம், திருவாசகத்தை பக்தியுடன் படிக்க வேண்டும்.

    கைலாயத்தில் இருப்பதாலும், கங்கை, சந்திரனை சடாமுடியில் சூடி இருப்பதால் சிவப்பெருமான் குளிர்ச்சி பிரியர்.

    அதனாலதான் அவரை குளிர்விக்க 32 பொருட்களால் அபிசேகம் செய்விப்பர்.

    அடர்பனிக்காலமான மார்கழியில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தில் மேலும் அவரை குளிர்விக்கும் பொருட்டு அதிகாலையிலேயே எல்லா சிவன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கும்.

    சிவன் ஆடிய நடனங்கள் மொத்தமும் 108 .

    இதில் அவர் தனியாய் நடனம் புரிந்தது மொத்தமும் 48.

    ஆடல்வல்லானாகிய நடராஜப்பெருமானுக்கு ஒரு ஆண்டில் ஆறுமுறை அபிஷேகம் செய்ய வேண்டும் என்று ஆகமவிதிகள் கூறுகின்றன.

    மூன்று முறை திதியிலும், மூன்று முறை நட்சத்திர நாளிலும் அபிஷேகங்கள் நடக்கின்றன.

    இதில் மிகச்சிறப்பானது மார்கழி திருவாதிரை.

    மற்றவை சித்திரை திருவோணம் மற்றும் ஆனி உத்திர நட்சத்திர நாட்களாகும். ஆவணி, புரட்டாசி மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதிகளிலும் அவருக்கு அபிஷேகம் செய்யப்படும்.

    இதில் முக்கியமானதுதான் திருவாதிரை நட்சத்திரத்தன்று ஆடிய, ஆனந்த தாண்டவ நடனம்.

    இந்த ஆனந்த தாண்டவ தரிசனத்தை காண்பது பெரும் பேறாகும். சிதம்பரத்தில் இவர் ஆடும் ஆனந்த தாண்டவத்தை தரிசிப்பவர்கள் முக்திநிலையை அடைவர்.

    அதனாலதான், சிதம்பரத்தை தரிசித்தால் முக்தின்னு சொல்றாங்க.

    அதுக்காக, கோவிலுக்கு போய் சும்மா நின்னு கும்பிட்டு வரக்கூடாது, உள்ளன்போடு, கிட்டத்தட்ட, நம்மோட ஆன்மாவை பார்வதிதேவியாக்கி இறைவனை வழிபடனும். அப்பதான் முக்தி கிடைக்கும்.

    ஆடல்வல்லானாகிய நடராஜப்பெருமானுக்கு ஒரு ஆண்டில் ஆறுமுறை அபிஷேகம் செய்ய வேண்டும் என்பது ஆகமவிதி.

    மூன்று முறை திதியிலும், மூன்று முறை நட்சத்திர நாளிலும் அபிஷேகங்கள் செய்ய வேண்டும்.

    இதில் மிகச்சிறப்பானது மார்கழி திருவாதிரை. மற்றவை சித்திரை திருவோணம் மற்றும் ஆனி உத்திர நட்சத்திர நாட்களாகும். ஆவணி, புரட்டாசி மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதிகளிலும் அவருக்கு அபிஷேகம் செய்யப்படும்.

    இந்நாளில், அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து நீராடி, சிவநாமம் ஜெபித்து திருநீறு பூசி. சிவாலயம் சென்று நடராஜரையும், சிவகாமி அம்மனையும் தரிசிக்கனும்.

    காலையில் நடக்கும் தாண்டவ தீபாராதனையை பார்க்கனும்.

    சுவாமிக்கு திருவாதிரை களியோடு, ஏழு வகை கறிகாய்களை சமைத்து நிவேதானம் செய்து குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். ஆருத்ரா தரிசன நாளன்று பகலில் சாப்பிடக்கூடாது.

    சிவபுராணம், தேவாரம், திருவாசகத்தை பக்தியுடன் படிக்க வேண்டும்.

    இரவில் எளிய உணவு சாப்பிட்டு விரதம் முடிக்கலாம்.

    இந்த விரதத்தை ஒவ்வொரு மாதமும் திருவாதிரை நட்சத்திரத்தன்று செய்யலாம்.

    இப்படி ஒரு வருடம் திருவாதிரை விரதமிருந்தால், வாழ்வுக்குப் பின் கயிலாயத்தில் வாழும் பேறு பெறலாம் என்கிறது பெரிய புராணம்.

    • நடத்தரையர் இங்கு அறையில் ஆடிய பின்னர்தான சிதம்பரத்தில் அம்பலத்தில் ஆடினார்
    • திருவிளையாடற் புராணத்தில் வரும் வலைவீசி மீன் பிடித்த படலம் இக் கோவில் வாயிலில் நிகழ்ந்தது.

    1) சிதம்பரம் கோவிலுக்கு முன்பே தோன்றியது. எனவே உத்திர கோச மங்கைக்கு ஆதி சிதம்பரம் என்ற ஒரு பேரும் உண்டு

    2) நடத்தரையர் இங்கு அறையில் ஆடிய பின்னர்தான சிதம்பரத்தில் அம்பலத்தில் ஆடினார்

    3) இது அம்பிகைக்கு பிரணவப் பொருள் உபதேசித்த இடம். ஓசம் என்றால் இரகசியம். உத்தர என்றால் விடை. மங்கைக்கு உபதேசித்ததால் இது உத்தர கோச மங்கை.

    4) இங்குள்ள மங்களநாதர் கருவறையில் வடச் சுவற்றை ஒட்டிப் பாணாசுரன் வழிபட்ட பாண லிங்கம் ஒன்று உள்ளது. பார்த்திருக்கிறேன். தனியாக அத்தாயமாக்க் கிடக்கும் உருண்டைக் கல் காலவெள்ளத்தில் காணாமல் போகாமல் இருக்க வேண்டும்.

    5) மணிவாசகரின் பாடல் பெற்ற தலம்.

    6) மிகமிகத் தொன்மையானதும் இன்று வரை உயிருடன் உள்ளதும் பல அருள் தலைமுறைகளையும் முனிவர்களையும் பார்த்த தல விருட்சம் இலந்த மரம் உள்ள இடம்.

    7) உலகிலேயே மாப் பெரிய மரகதக் கல் அதுவும் சிலை வடிவில், இன்னும் சொல்லப் போனால் நடராசப் பெம்மானின் அருட்சீவ ஒளிசிந்த ஆடும் திருக் காட்சி இங்குதான்.

    8) வேதவியாசரும் பாராசரும் பூசித்த தலம்

    9) உலகில் உள்ள 1087 சிவாலயங்களிலும் உள்ள அருட் சக்திகளைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் சகஸ்ர லிங்கம்.

    10) திருவிளையாடற் புராணத்தில் வரும் வலைவீசி மீன் பிடித்த படலம் இக் கோவில் வாயிலில் நிகழ்ந்தது.

    11) மணிவாசக வள்ளலுக்குச் சுத்த பிரணவ ஞான தேகம் கிடைத்த இடம் இன்றளவும் ஒளி உருவில் அவர் அமர்ந்துள்ள இடம். மற்ற கொவில்களில் எல்லாம் மணி வாசகரின் திருமேனித் துறவு நிலையில் மழித்த தலையோடு வடிக்கப் பட்டிருக்கும். இங்கே அவருக்குத் தனிச் சன்னிதியே உண்டு,அதுவும் தவழும் சடாமுடிளோடு கன கம்பீரமாய்.

    12) விழா இல்லாத ஊரா, ஆண்டுக்கு இரண்டு உண்டு. ஒன்று சித்திரைத் திருவிழா, இன்னொன்று மார்கழித் திருவாதிரைத் திருவிழா

    13) இக்கோவிலில் குடிகொண்டு அருள் பாலிக்கும் முருகப் பெம்மானின் மீது அருணகிரிநாதர் கூட ஒரு திருப் புகழ் பாடி உள்ளார்.

    • மணி வாசகர் இந்தப் பொன் ஊசல் 9-பாடல்களிலும் உத்தர கோச மங்கையைப் பாடுகிறார்.
    • இதைவிட உன்னதமான தாலாட்டுப் பாடல் வேறு எதுவும் இல்லை.

    மணி வாசகர் இந்தப் பொன் ஊசல் 9-பாடல்களிலும் உத்தர கோச மங்கையைப் பாடுகிறார்.

    இன்றைநாள் வரைக்கும் எல்லா முக்கியச் சிவாலயங்களிலும காலியில் எம்மானைப் பள்ளி அனுப்பும் போது இந்தப் பொன்னூசல் பாடலப் பாடி உத்தரகோச மங்கைக்கு அரசே என்று அனுதினம் இறைவனை விளிக்கிறார்கள்.

    இந்த 9-பாடல்களையும் பாடி  பிறகு தால் ஆட்டிப் பாருங்கள் குழந்தை உயரமாக மட்டும் இல்லை உன்னதமாகவும் வளர்வான்.

    'சீர் ஆர் பவழம் கால் முத்தம் கயிறாக

    ஏர் ஆரும் பொற் பலகை ஏறி இனிது அமர்ந்து

    நாராயணன் அறியா நாண்மலர்த் தாள் நாய் அடியேற்கு

    ஊராகத் தந்து அருளும் உத்தர கோச மங்கை

    ஆரா அமுதின் அருள் தாள் இணை பாடி

    போர் ஆர் வேற் கண் மடவீர் பொன் ஊசல் ஆடாமோ . . .?'

    இதைவிட உன்னதமான தாலாட்டுப் பாடல் வேறு எதுவும் இல்லை.

    • உத்திர கோசமங்கைக் கோவிலிலும் சுரங்கம் இருந்தது.
    • அது மெக்காவின் பெருங்கல் தீர்த்த நீர்நிலை வரை சென்றிருக்கும் செய்திதான் வியப்பைத் தருகிறது.

    உத்திர கோசமங்கைக் கோவிலிலும் சுரங்கம்  இருந்தது.

    ஆனால் அவைகள் மனிதரால் ஏற்படுத்தப் பட்டவை அல்ல.

    அப்படி ஏற்படுத்தல் சாத்தியமும் இல்லை. இங்கிருந்து, சரியாகச் சொல்லப் போனால் உமாமகேஸ்வர சன்னதிக்குக் கீழே இருந்து அதாவது பெருமாள் சன்னதியில் இருந்து தில்லைக்கும், இராமேஸ்வரத்துக்கும், ஏன் மெக்காவுக்கும் கூடச் சுரங்க வழிகள் இருந்தன.

    நடத்தரையன் மனத்தளவில் நினைக்க பூமி உள்ளே விரிந்து கொடுக்கச் சாதாரண மக்களுக்காக உருவாக்கப் பட்டவை அல்ல அவை.

    அவைகள் அந்தக்கால முனிவர்களால் மட்டுமே பயன்படுத்தப்பட்டன.

    காடுகள் நாடுகள் இனங்கள் போர்கள் முதலிய பல்வேறுதடைகளில் சிக்காவண்ணம் நேரிடையாகச் செல்ல எம்மானின் திருக் கூட்டத்தார்க்கு மட்டும் அறிவிக்கப் பட்டு இருந்தவை இப்போது நவீன காலத்தின் இடர்பாடற்ற இனிய பயணங்களால் அவனாலேயே செயல் இழந்தன.

    இந்தச் சீவ உயிர் ஓட்டமும், வழித் தட ஓட்டமும் தில்லைக்கும், இராமேச்வரத்திற்கும் என்னில் அதிசயம் இல்லை எனக்கு.

    அது மெக்காவின் பெருங்கல் தீர்த்த நீர்நிலை வரை சென்றிருக்கும் செய்திதான் வியப்பைத் தருகிறது.

    • உலகில் முதன் முதலாக கி.பி. 2-ம் நூற்றாண்டு வாக்கில்தான் முதல் நடராசர் வழிபாடே தோன்றியது.
    • நடராசர் சிலை உத்திர கோசமங்கையின் ஏன் தனிப்பெரும் சொத்தாக கருதப்படுகிறது.

    உலகில் முதன் முதலாக கி.பி. 2-ம் நூற்றாண்டு வாக்கில்தான் முதல் நடராசர் வழிபாடே தோன்றியது.

    அதற்கு முன் சிவ வழிபாடு என்பது வெறும் லிங்க வழிபாடே

    நடராசர் சிலை உத்திர கோசமங்கையின் ஏன் தனிப்பெரும் சொத்தாக கருதப்படுகிறது.

    நல்ல வேளை, இந்த மரகதச் சிலையை நிறுவியவர்கள் இதற்குச் சந்தனக் காப்பு இடும் முறைமையை ஏற்படுத்தினார்கள்.

    யார் கண்ணையும் இது உறுத்தாமல் தப்பித்தது. களப்பரர்கள், ஆங்கிலேயர் என்று எத்தனையோ படை எடுப்புக்களைச் சந்தித்த போதும் யாருக்கும் தெரியாமல் இது தப்பித்துக் கொண்டது.

    இது மரகதம். விருப்பாட்சி சேர்த்து ஏழடி உயரம் இருக்கும்.

    மரகதம் மிகவும் மென்மையான கல். சாதாரண ஒலி அலைகள் கூட மரகதத்தை உதிர வைக்கும் என்பதால், ' மத்தளம் கொட்ட மரகதம் உதிரும்' எனும் வழக்கு மொழி எழுந்தது.

    கோவில் என்றால் மத்தளம் மேற்படி கொட்டு முழக்கு மேற்படி இல்லாமலா?

    இவ்வாறு எல்லாம் மரகதச் சிலைக்கு ஊறு ஏற்பட்டு விடக்கூடாது என்று எண்ணித்தான் சந்தனக் காப்பிடும் முறையை உண்டாக்கியதாக கூறப்படுகிறது.

    மரகதக் கல் ஒலிக்கே உதிரும் என்னில், செதுக்கும் உளிக்குமுன் எப்படித் தாங்கும் என்று பலருக்கும் சந்தேகம் எழுக்கூடும்.

    இந்தச் சிலையை வடித்த விதம் ஓர் அற்புதம். உளி கொண்டு பொளிக்கப் பட்டதல்ல இச்சிலை.

    மனத்தால் நினைத்து உருவாக்கப்பட்டது. இந்த விவரம் தெரியாத நம்மவர்கள் இதைச் சுயம்பு என்கின்றனர்.

    இங்குள்ள நடராஜருக்கு நித்திய அபிஷேகம் எதுவும் கிடையாது. காரணம், வருடம் பூரா, சிலை சந்தனக் காப்பு தரித்தே இருக்கும்.

    ஆண்டுக்கு ஒருமுறை மார்கழித் திங்கள் திருவாதிரைத் திருநாள் அதற்கு முதல்நாள் சந்தனக் காப்பு களையப்படும்.

    அன்றுபகல் முழுக்க எம் தனிச் சபைத் தலைவனைக் காப்புக் களைந்த திருக் கோலத்தில் தரிசிக்கலாம்.

    அன்று முழுவதும் ஒன்பது வகை அபிஷேகங்கள் நடைபெறும்.

    இரவு மறுபடியும் காப்பு இட்டபின் அடுத்த அபிஷேகம் என்பது அடுத்த திருவாதிரைக்குத்தான்.

    ஆண்டுமுழுக்க மரகதச் சிலையில் காப்பிடப் பட்டிருந்த சந்தனத்தைப் பெற பக்தர்களிடையே பெரிய போட்டாப் போட்டி நடக்கும்.

    இப்பொழுதெல்லாம் தேவஸ்தானத்திலேயே அதைப் பாக்கெட் போட்டு விற்க ஆரம்பித்து விட்டார்கள்.

    • இராமாயண காலத்துக்கும் முன்பு, கந்தப் புராண காலத்திற்கும் முன்பு இந்துமாக் கடல் தெற்கே இல்லை.
    • இது சங்கம் கடந்து, கால வெள்ளம் கடந்து யுகம் கடந்து நிற்கும் கோவில்.

    29 உத்திரகோசமங்கைக் கோவிற் குளத்தில் வாழும் மீன்கள் நல்ல நீரில் வாழும் மீன்கள் இல்லையாம், உப்பு நீரில் அதாவது கடல் நீரில் வாழும் மீன் வகையைச் சார்ந்தவையாம்.

    இராமாயண காலத்துக்கும் முன்பு, கந்தப் புராண காலத்திற்கும் முன்பு இந்துமாக் கடல் தெற்கே இல்லை.

    எல்லாம் ஒரே நிலப் பரப்பாக இருந்தது. இலங்கை என்றொரு தீவு எல்லாம் இல்லை.

    ஆஸ்திரேலியா முதல் ஆப்பிரிக்கா வரை ஒரே நிலபரப்பாக, ஒரே கண்டமாக இருந்தது. அதை இலெமூரியாக் கண்டம் என்பது தான் என்பார்கள்.

    இலை மேற்படி மூரி என்றால் சோற்றுக் கற்றாலை.

    இலை மூரிக்கண்டம் என்பது தான் இலெமூரியாக் கண்டம் ஆனது.

    சோற்றுக் கற்றாலையின் இன்னொரு பேர் குமரி.

    எனவே கற்றாலை மிகுந்த பெருநிலப் பரப்பு குமரிக் கண்டம் ஆயிற்று...

    ஏழ்பனை நாடு, ஏழ் தெங்க நாடு முதலிய 49 நாடுகள் இருந்ததாகவும் தெரிகிறது.

    பஃறுளி ஆறு இருந்தது. பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடு என்ற மா மலை இருந்தது.

    இவை எல்லாம் ஆழிப் பேரலையால் மூழ்கிப் போயிற்று என்று இளங்கோஅடிகள் சிலப்பதிகாரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    முதற்சங்க காலத்தில் கபாட புரம் இருந்தது. தமிழின் தலைச் சங்கம் இருந்தது.

    அதற்கெல்லாம் முன்னே மலயத்துவச பாண்டியன் அரசாண்ட போது, அவன் செல்வத் திருமகளாய் மதுரை மீனாட்சி அவதரித்த போதிலேயே இந்தக் கோவில் இருந்திருக்கிறது என்றால் இதன் தொன்மையை எதிர்த்து கொள்ளலாம்.

    ஆகவே இது சங்கம் கடந்து, கால வெள்ளம் கடந்து யுகம் கடந்து நிற்கும் கோவில்.

    மீனாட்சி காலத்துக் கோவில் என்றதும் இப்போதுள்ள கோவில் என்று நினைத்து விடாதீர்கள்.

    இது பின்னால் எழுந்தது. பழைய மீனாட்சி கோவிலையும் கடல் கொண்டு விட்டது.

    குமரிக் கண்ட காலத்தில் இந்த உத்திர கோசமங்கைக் கோவிலில் இப்போது இருக்கிற மாதிரித் தனியாக நடராசர் சன்னிதி எல்லாம் இல்லை இலிங்க வழிப்பாடும், அம்பிகை வழிபாடும் மட்டுமே இருந்தது.

    சைவமும், வைணவமும் அக்காலத்தில் எவ்வளவு ஒற்றுமையாக இருந்தன என்பதற்கு எடுத்துக் காட்டு இது.

    தற்போதைய கோவிலில் நடராசர் சன்னதிக்கு மேற்கேஉள்ள இடத்தில் பெருமாளின் கிடந்த திருக் கோலம் இருந்திருக்கிறது.

    குமரிக் கண்ட காலத்தில் அதற்கு வழிபாடும் நடந்து வந்திருக்கிறது.

    என்ன காரணமோ தெரியவில்லை.

    இப்போது அந்த இடம் மேலே கட்டப்பட்டு உமா மகேச்வரர் சன்னிதியாகக் கால வெள்ளத்தில் மாறி விட்டது.

    உள்ளே மூடப் பட்ட நிலையில் பெருமாள் சிலை இருப்பதாக சொல்கிறார்கள்.

    • விவேகானந்தர் அமெரிக்க நாட்டில் உள்ள சிகாகோ சென்று ஆன்மீக சொற்பொழிவாற்ற அனுமதி கிடைத்தது.
    • கடைசியில் ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதியை விவேகானந்தர் சந்தித்தார்.

    18ம் நூற்றாண்டில் விவேகானந்தர் அமெரிக்க நாட்டில் உள்ள சிகாகோ சென்று ஆன்மீக சொற்பொழிவாற்ற அனுமதி கிடைத்தது.

    விவேகானந்தர் இந்திய மன்னர்கள் பலரை சந்தித்து பேசி உதவி கேட்டார். ஆனால் யாரும் உதவி செய்யவில்லை.

    கடைசியில் ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதியை விவேகானந்தர் சந்தித்தார்.

    சிகாகோவில் சொற்பொழிவு ஆற்ற செல்வதற்கு வேண்டி உதவி கேட்டார்.

    அவர் உதவியும் செய்தார். சேதுபதி சிவபக்தர். ஆங்கிலத்தில் புலமை பெற்றவர்.

    பாஸ்கர சேதுபதி, உத்திரகோச மங்கை திருத்தலத்தில் தனது குலதெய்வமான ஈசன் ஈஸ்வரியிடம் அருள் பெற்று சிகாகோவுக்கு செல்லும்படி விவேகானந்தரிடம் கேட்டுக்கொண்டார்.

    அதன்படி விவேகானந்தர் உத்திரகோசமங்கை சென்று பூஜைகள் செய்து பெற்றார்.

    பிறகு பாஸ்கர சேதுபதி, சுவாமி விவேகானந்தரை இராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை சீனா வழியாக சிகாக்கோவிற்கு சுவாமியை அனுப்பி வைத்தார்.

    விவேகானந்தர் சிகாகோ மேடையில் சகோதர, சகோதரிகளே என்று ஆரம்பித்து சொற்பொழிவாற்றத் தொடங்கினார்.

    சுவாமியை பற்றி உலகம் முழுவதும் தெரியவந்தது.

    உலக நாடுகள் முழுவதும் சுவாமிக்கு வரவேற்பு கொடுத்து வெற்றி விழா கொண்டாட அழைத்தார்கள். ஆனால் சுவாமி எந்த நாட்டுக்கும் செல்லவில்லை.

    உலகப்புகழ் பெறும் வகையில் தனக்கு காரணமாக இருந்த உத்திரகோச மங்கை திருத்தலத்தில் உள்ள ஈசன், ஈஸ்வரி மற்றும்பாஸ்கர சேதுபதியைபார்க்க வேண்டும் என்று சுவாமி விவேகானந்தர் கடித வரைவு ஒன்றை மன்னர் சேதுபதிக்கு எழுதினார்.

    இதன்மூலம் விவேகானந்தரின் பேரும் புகழும் உலகம் முழுவதும் பெருகக் காரணமாக இருந்தது உத்திரகோச மங்கை ஈசன் ஈஸ்வரி தான் என்பது தெளிவாகிறது.

    • அதை கேட்ட மலைக்கள்ளன் நாகமணியை கொள்ளையடிக்க திட்டம் தீட்டினான்.
    • நாகமணியை திருடினால் எந்த வழியில் தப்பிக்கலாம் என்று நினைத்து கோவிலை பலமுறை வலம் வந்தான்.

    சில நூற்றாண்டுகளுக்கு முன்பு மலைக்கள்ளன் என்பவன் ராமநாதபுரம் பகுதியில் வசித்து வந்தான்.

    அவன் முனிவர்களிடம் நல்லவன் போல் நடித்து அவர்கள் ஏமாறும் சமயத்தில் அவர்களைக் கொன்று களவாடி வந்தான்.

    சிவன் கோவில்களில் கொள்ளையடித்தவன் நாடுவிட்டு சென்றுபாண்டிய நாட்டு கொள்ளையடித்த பொருள்களை மலைபோல் குவித்து வைத்திருந்தான்.

    என்றாலும் அவனுக்கு நிம்மதியில்லை. கொலை, கொள்ளையடிக்கும் தொழிலைவிட்டு நல்ல மனிதனாகத் திருந்தி வாழ வேண்டும் என்று நினைத்தான்.

    அதற்கு முன்பு சேதுக் கடற்கரையில் தீர்த்தமாடி தொழிலை விடவேண்டும் என்று நினைத்து தீர்த்தமாட சேதுக்கரை புறப்பட்டான்.

    வழியில் உத்திரகோச மங்கை குளத்தின் மதகுகளில் படுத்து ஒய்வெடுத்துக் கொண்டிருந்தான்.

    அப்போது உத்திரகோச மங்கை சிவபெருமான் தலத்தில் மார்கழி மாதம் எட்டாம் திருவிழாவை மக்கள் பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார்கள்.

    அவர்கள் சிவன் கோவிலில் நாகமணி ஜொலிப்பதையும், அதன் வெளிச்சம் கோவில் முழுவதும் பிரகாசமாக தெரிவதையும் பெருமையாகப் பேசிக்கொண்டே வந்தனர்.

    அதை கேட்ட மலைக்கள்ளன் நாகமணியை கொள்ளையடிக்க திட்டம் தீட்டினான்.

    நாகமணியை திருடினால் எந்த வழியில் தப்பிக்கலாம் என்று நினைத்து கோவிலை பலமுறை வலம் வந்தான்.

    இறுதியில் மேற்கு புறவாசலின் வழியாக தப்பித்து விடலாம் என்று வழியைக் கண்டு பிடித்தான்.

    அன்றிரவு மக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு கோவிலின் கருவறைக்கு சென்றடைந்தான். திடீரென அவனது வலது காலில் படிக்கட்டு இடறி தடுமாறி அவன் தலை சிவபெருமான் பீடத்து முனையில் முட்டி சிவன் காலடியிலேயே இறந்தான்.

    எமன் மின்னல் வேகத்தில் வந்து மலைக்கள்ளனுடைய விதியின் ஓலை செல்லரித்துவிட்டது என்று சிவனிடம் கேட்க, சிவ தலத்தில் இறந்ததினால் இவனை சொர்க்கத்திற்கு அனுப்பும்படியும் ஈசன் உத்தரவிட்டார்.

    அதன்படி மலைக்கள்ளனைச் சொர்க்கத்திற்கு எமன் அனுப்பி வைத்தான்.

    உத்தரகோசமங்கை மண்ணில் நல்லவனோ, கெட்டவனோ பிறந்து இறந்தால் சொர்க்கத்திற்கு போவார்கள் என்பது ஐதீகம்.

    • இராமநாதபுரத்திற்கு தெற்கே எட்டு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது திருப்புல்லாணி.
    • நல்ல ஆரோக்கியமுள்ள வாரிசு உண்டாகும். மன நிம்மதி கிடைக்கும்.

    உத்தரகோசமங்கை மங்களநாதர் கோவிலில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் ஆலயம் உள்ளது.

    108 திவ்ய தேசங்களில் இத்தலம் 44 வது ஆகும்.

    எத்தனையோ பிரச்சினைகள் கவலைகள் அன்றாடம் வந்தாலும் நிரந்தரமான கவலை என்பது குழந்தை இல்லாதது தான்.

    இந்த குறை எல்லோருக்கும் ஏற்படுவதில்லை. ஒரு சிலருக்கு மட்டும்தான் உண்டு.

    ஏன் இப்படி ஏற்படுகிறது என்பதை மருத்துவக் குறிப்பு பலவாறு சொன்னாலும் தெய்வ அருள் இருப்பின் இந்த குறையை வென்று விடலாம் என்பதுதான் உண்மை.

    அப்படிப்பட்ட குறை தீர்க்கும் ஒரு தலம் உண்டு. அதுதான் திருப்புல்லாணி.

    இராமநாதபுரத்திற்கு தெற்கே எட்டு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது திருப்புல்லாணி.

    இதற்கு புல்லாரண்யம், ஆதிசேது, புல்லணை, திருவணை, தர்ப்ப சயனம், நளசேறு, ரத்தினாகர ஷேத்திரம், சரணாகதி ஷேத்திரம், புல்லாங்காடு என்று வேறு பெயர்களும் உண்டு.

    இரண்டு பிராகாரங்கள் கூடிய சுமார் 2 ஏக்கர் நிலப்பரப்பளவில் 120 அடி உயர ராஜகோபுரம் உடையது.

    மூலவர் ஆதி ஜகந்நாதன் நின்ற கோலம். உத்ஸவர் கல்யாண ஜகந்நாதன். தாயார் ஸ்ரீபத்மாஸனி தாயார்.

    சுவாமி சன்னதிக்கு வடக்கே தனி சன்னிதியில் மூலவர் தர்ப்ப சயன இராமன் பட்டாக்கத்தியுடன் சயனத் திருக்கோலம்.

    தர்ப்பை புற்கள் மீது ஸ்ரீராமன் பள்ளி கொண்டதால் புல்லனை என்று பெயர்.

    இராமன், இத்தலத்து பெருமானை பூஜித்து, ஆதி ஜெகந்நாதப் பெருமாளால் கொடுக்கப்பட்ட வில்லைப் பெற்று இராவணனை வதம் செய்ததாக வரலாறு.

    விபீஷணன் இங்குதான் சரண் அடைந்தான். இலங்கை வேந்தனாக முடி சூட்டப்பட்டதும் இங்குதான்.

    கடலரசனுக்கு பகவான் மன்னிப்பு வழங்கிய இடம். புல்லர், கண்ணுவர் போன்ற ரிஷிகளுக்கு பகவான் மோட்சம் தந்த புனித இடம்.

    புத்திரப்பேறு இல்லாதவர்கள் நாகப்பிரதிஷ்டை செய்து இங்கு தரப்படும்பால்பாயாசத்தை அருந்தினால் மலட்டுக்குறை நீங்கும்.

    சர்ப்பசாந்தி ஹோமம் செய்தால் முன்வினைப்பாவம் விலகும்.

    நல்ல ஆரோக்கியமுள்ள வாரிசு உண்டாகும். மன நிம்மதி கிடைக்கும்.

    இத்தலத்தின் அரச மரத்தடியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான நாகர் சிலைகளே இத்தலத்தின் மகத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது.

    உத்தரகோசமங்கை தலத்துக்கு செல்பவர்கள் இங்கும் சென்று வந்தால் நல்லது.

    • ‘‘திருப்பொன்னூஞ்சல்’’ மாணிக்கவாசகரால் இவ்வாலயத்தில் வைத்து, இயற்றிப் பாடப்பெற்ற சிறப்பையும் பெற்றது.
    • மாணிக்கவாசகரால் பாடல் பெற்ற இத்தலம் அவரது திருவாசகத்தில் 38 இடங்களில் சிறப்புறப் புகழப்பட்டுள்ளது.

    மாணிக்கவாசகர் திருவாசகத்தில் நீத்தல் வண்ணம், திருப்பொன்னூஞ்சல் பாடியது மட்டுமல்லாமல்,

    பல்வேறு இடங்களுக்கு சென்றாலும் அங்கும் உத்தரகோசமங்கை மன்னா என்றும் பாடியுள்ளார்.

    இறைவனும், இறைவியும் பள்ளியறையில் அமர்ந்து பூஜை செய்யும்போது பள்ளியறை பாடல் திரு உத்தரகோசமங்கையில் பாடப் பெற்ற பாடலாகும்.

    சிவாலயங்கள் அனைத்திலும் பள்ளியறை பூஜை சமயம் தினந்தோறும் பாடப்பட்டுவரும் ''திருப்பொன்னூஞ்சல்''

    மாணிக்கவாசகரால் இவ்வாலயத்தில் வைத்து, இயற்றிப் பாடப்பெற்ற சிறப்பையும் பெற்றது.

    மாணிக்கவாசகரால் பாடல் பெற்ற இத்தலம் அவரது திருவாசகத்தில் 38 இடங்களில் சிறப்புறப் புகழப்பட்டுள்ளது.

    ×