என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சடலம் மீட்பு"

    • மாயனூர் அருகே அடையாளம் தெரியாத வாலிபர் சடலம் மீட்கப்பட்டது
    • இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கரூர்:


    மாயனூர் பஞ்சாயத்து மேல மாயனூர் காவிரி ஆற்றில், வெங்கமேடு கூட்டு குடிநீர் நீரேற்று நிலையம் பின்புறம், 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதந்தது தெரியவந்தது. இதுகுறித்து, ரெங்கநாதபுரம் வி.ஏ.ஓ. ஸ்டாலின் பிரபு, மாயனுார் போலீசில் புகார் அளித்தார். அதை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




    • யார்? என அடையாளம் தெரியவில்லை
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த சின்னகுமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார்.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து, உடலை கைப்பாற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை.

    இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் மற்றும் தேவஸ்தான விஜிலென்ஸ் போலீசார் இரவு முழுவதும் வனப்பகுதியில் லக்ஷிதாவை தேடி வந்தனர்.
    • சிறுமியின் உடல் அருகே சிறுத்தையின் எச்சம் கிடந்தது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதையில் நடந்து சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    பக்தர்கள் நடந்து செல்லும் அலிபிரி அடர்ந்த வனப்பகுதி என்பதால் வனவிலங்குகள் அடிக்கடி நடைபாதைக்கு வருகின்றனர்.

    ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், போத்தி ரெட்டி பாலத்தை சேர்ந்தவர் தினேஷ் குமார். அவரது மனைவி சசிகலா. மகள் லக்ஷிதா (வயது 6). நேற்று இரவு திருப்பதி வந்தனர்.

    இரவு 7.30 மணி அளவில் தினேஷ் குமார் மனைவி, மகளுடன் அலிபிரி நடைபாதையில் நடந்து சென்று கொண்டு இருந்தார். நடைபாதையில் கூட்டம் இல்லை பெற்றோர் கைகளை பிடித்து வந்த சிறுமி அவர்களை விட்டு வேகமாக படியேறி சென்றார்.

    நரசிம்ம சாமி கோவில் அருகே நடந்து சென்றபோது லக்ஷிதா திடீரென காணாமல் போனார். சிறுமி காணாமல் போனதால் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    நடைபாதையில் பக்தர்கள் கூட்டத்தில் மகளை தேடி பார்த்தனர்.

    நீண்ட நேரம் ஆகியும் மகளை காணாததால் பதற்றம் அடைந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் மற்றும் தேவஸ்தான விஜிலென்ஸ் போலீசார் இரவு முழுவதும் வனப்பகுதியில் லக்ஷிதாவை தேடி வந்தனர். மலைப்பாதையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது சிறுமி தனது பெற்றோருக்கு முன்பாக தனியாக நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. மேலும் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு தேடினர்.

    இன்று காலை 7 மணி அளவில் லக்ஷிதா நரசிம்ம சாமி கோவில் அருகே ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

    சிறுமியின் உடல் அருகே சிறுத்தையின் எச்சம் கிடந்தது. இதனால் சிறுமியை சிறுத்தை இழுத்துச்சென்று அடித்து கொன்றுள்ளது தெரியவந்தது.

    சிறுமியின் பிணத்தை கண்ட அவரது பெற்றோர் கதறி துடித்தனர். சாமி தரிசிக்க வந்து மகளை இழந்து விட்டதாக அழுது புரண்ட சம்பவம் காண்போரை கண் கலங்க செய்தது.

    இதையடுத்து போலீசார் சிறுமியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மலைப்பாதையில் பலமுறை வனவிலங்குகள் தாக்கியதில் பக்தர்கள் காயம் மட்டும் அடைந்து வந்தனர்.

    தற்போது முதல்முறையாக சிறுத்தை தாக்கியதில் சிறுமி பலியான சம்பவம் பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பதி மலை அமைந்துள்ள சேஷாசலம் வனப்பகுதியில் 100 க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் உள்ளன. இதில் 10 சிறுத்தைகள் பக்தர்கள் நடைபாதை வரை அடிக்கடி நடமாடுகின்றன.

    தேவஸ்தான அதிகாரிகள் பக்தர்கள் நடந்து செல்லும் நடைபாதையில் வனவிலங்குகள் வராதபடி இரும்பிலான தடுப்பு வேலிகள் அமைத்து பக்தர்களின் உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    • வாகனங்களில் சென்று கொண்டு இருந்தவர்கள் சிறுத்தை நடமாடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • நடைபாதையில் 500 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது.

    திருப்பதி:

    திருப்பதியில் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ்குமார், அவரது மனைவி சசிகலா மற்றும் மகள் லக்ஷிதாவுடன் தரிசனத்திற்கு அலிப்பிரி நடைபாதையில் வந்தார்.

    அப்போது தனியாக நடந்து சென்ற சிறுமியை சிறுத்தை இழுத்துச் சென்று கடித்துக் கொன்றது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.சிறுமியை கொன்ற சிறுத்தை ஆவேசமாக சுற்றி வருகிறது.

    இந்த நிலையில் நேற்று அலிபிரியில் இருந்து திருமலைக்கு செல்லும் மலைப்பாதையில் 38-வது வளைவில் சிறுத்தை நடமாடிக் கொண்டு இருந்தது.

    வாகனங்களில் சென்று கொண்டு இருந்தவர்கள் சிறுத்தை நடமாடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

    இதைத் தொடர்ந்து சிறுத்தையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சிறுமியை சிறுத்தை அடித்து கொன்றது சம்பந்தமாக நேற்று திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு தர்மா ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    சிறுமியை கொன்ற சிறுத்தையை பிடிக்க வனப்பகுதியில் கூண்டு வைக்கப்பட்டு உள்ளது.

    அலிப்பிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதையில் 40 அடி தூரத்திற்கு ஒரு பாதுகாவலர் என 100 பேர் கொண்ட குழுவினர் அமைக்கப்பட்டு உள்ளனர். மேலும் நடைபாதையில் 500 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது.

    டிரோன் கேமரா மூலமும் நடைபாதையை கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. காளி கோபுரம் முதல் நரசிம்ம சாமி கோவில் வரை 2 மீட்டருக்கு ஒரு பாதுகாவலர் நிறுத்தப்பட உள்ளனர்.

    நடைபாதையில் செல்லும் பக்தர்கள் இனி தேவஸ்தான விஜிலென்ஸ் பாதுகாவலர்கள் முன்பாக குழுக்களாக செல்ல அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    சிறு குழந்தைகளுடன் வரும் பக்தர்கள் தங்களது குழந்தைகளை தங்களுடன் பாதுகாப்பாக அழைத்து வர வேண்டும். குழுக்களாக வரும் பக்தர்கள் சாமி பாடல்களை பாடியபடியும் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டபடியும் நடைபாதையில் வரவேண்டும்.

    இதனால் வன விலங்குகள் நடைபாதையில் வருவதை தடுக்க முடியும். அலிப்பிரி மலைப்பாதையில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை பைக்கில் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    நடைபாதையில் வனவிலங்குகள் வருவதை தடுப்பது குறித்து நிபுணர் குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் அறிக்கையை சமர்ப்பித்த பிறகு வனத்துறையினருடன் இணைந்து கம்பி வேலிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    சிறுத்தை தாக்கி இறந்த லக்ஷிதா குடும்பத்திற்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ரூ.5 லட்சமும், வனத்துறை சார்பில் ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ.10 லட்சம் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மலைப்பகுதியில் இருந்த ராஜ்குமார் என்பவருடைய வீடு மண் சரிவில் முற்றிலுமாக புதைந்தது.
    • போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    திருவண்ணாமலையில் புயல் மழை காரணமாக நேற்று மிக கனமழை பெய்தது. அதிகபட்சமாக 37 சென்டிமீட்டர் மழை பதிவானது. சாலைகளில் மழை வெள்ளம் ஆறு போல பெருக்கெடுத்து ஓடியது.

    இந்த நிலையில் திருவண்ணாமலை வ. உ. சி. நகர் பகுதியில் மகா தீப மலையின் சுமார் 100 மீட்டர் உயரத்தில் இருந்து திடீரென மண் சரிவு ஏற்பட்டது. அங்கிருந்து ராட்சத பாறை ஒன்றும் உருண்டது. மலைப்பகுதியில் இருந்த ராஜ்குமார் என்பவருடைய வீடு மண் சரிவில் முற்றிலுமாக புதைந்தது. வீட்டில் இருந்த 7 பேர் வெளியே வர முடியாமல் உள்ளே சிக்கினர்.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கனமழை நின்ற பிறகு அந்த பகுதிக்கு செல்ல முடிந்தது.

    தொடர்ந்து மண் சரிவு ஏற்பட்டதால் இடிபாடுகளில் சிக்கியவர்கள் வீட்டிற்கு அருகே செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. மண் சரிவினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் இருந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். ராஜ்குமார் (32), மீனா (26), கவுதம் (9), இனியா (7), மகா (12), வினோதினி (14), ரம்யா (12) ஆகியோர் உள்ளே சிக்கினர். கவுதம், இனியா ஆகியோர் ராஜ்குமார், மீனா தம்பதியின் குழந்தைகள் ஆவர்.

    இதனை தொடர்ந்து அந்த இடத்தில் மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.

    போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மீட்பு படை வீரர்கள் 30-க்கும் மேற்பட்டோர் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் தீயணைப்பு துறையினர் எந்திர உதவியுடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இன்று காலையில் தொடர்ந்து மீட்பு பணி நடந்தது.

    இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் மண்ணில் புதைந்திருக்கலாம் என்று அஞ்சப்பட்டது.

    இந்நிலையில், திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய 7 பேரில் குழந்தைகள் உள்பட 6 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது. மீதமுள்ள ஒரு நபரின் உடலை மீட்கும் பணி நடந்து வந்தது.

    இந்த நிலையில், ஏழாவது நபரின் உடலும் மீட்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மண் சரிவில் சிக்கி உயிரிழந்த 7 பேரையும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


    • பேரிடர் மீட்புப் படைகளைத் தயார் நிலையில் வைத்திருப்பது அவசியமாகும்.
    • புதையுண்ட மூன்று வீடுகளில் சிக்கியவர்கள் சடலமாக மீட்கப்பட்டச் செய்தி, நெஞ்சைப் பதற வைக்கிறது.

    சென்னை:

    திருவண்ணாமலையில் புயல் காரணமாக நேற்று மிக கனமழை பெய்தது. மகா தீப மலையின் சுமார் 100 மீட்டர் உயரத்தில் இருந்து திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதில் 7 பேர் சிக்கிய நிலையில் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் உயிரிழந்த குடும்பத்திற்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து எக்ஸ் தள பதவில் அவர் கூறியிருப்பதாவது:-

    திருவண்ணாமலை தீப மலையில் ஏற்பட்ட திடீர் மண்சரிவால் பாறைகள் உருண்டு விழுந்ததில், புதையுண்ட மூன்று வீடுகளில் சிக்கியவர்கள் சடலமாக மீட்கப்பட்டச் செய்தி, நெஞ்சைப் பதற வைக்கிறது.

    உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

    கடந்த காலத்திலும் சரி, தற்போதும் சரி, தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களின் உயிரைக் காக்கும் பேரிடர் மீட்புப் படையினரின் அர்ப்பணிப்புடன் கூடிய பணி என்பது அளப்பரியதாகும். இருப்பினும் புயல், மழை, வெள்ளப் பெருக்கு ஆகிய காலங்களில் ஒன்றிய, மாநில அரசுகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, அதிக அளவில் ஆபத்து நேரிட வாய்ப்புள்ள பகுதிகளில் பேரிடர் மீட்புப் படைகளைத் தயார் நிலையில் வைத்திருப்பது அவசியமாகும்.

    தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, பெரம்பலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் அங்கு மலையடிவாரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களையும், ஆற்றங்கரையோரம் வசிப்பவர்களையும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து, அவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைத் தமிழக அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
    • உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    திருவண்ணாமலையில் ஃபெஞ்சல் புயல் காரணமாக அதி மிக கனமழை பெய்தது. இதனால் மகா தீப மலையின் சுமார் 100 மீட்டர் உயரத்தில் இருந்து திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதில் 7 பேர் சிக்கிய நிலையில் அவர்களின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டது.

    இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    அவரது எக்ஸ் பதிவில், "பெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் 7 பேர் பலியாகியுள்ள சம்பவம் நெஞ்சத்தை உருக்குகிறது.

    உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரணம் விரைந்து கிடைக்க தமிழக அரசு ஆவன செய்யவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    ×