என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புத்தாண்டு 2023"
- விராட் கோலி 2023 புத்தாண்டை தனது மனைவியும், பாலிவுட் முன்னணி நடிகையுமான அனுஷ்கா சர்மாவுடன் கொண்டாடினார்.
- கிறிஸ் கெயில் தனது ஸ்டைலில் புத்தாண்டை கொண்டாடிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கிரிக்கெட் வீரர் விராட் கோலி 2023 புத்தாண்டை தனது மனைவியும், பாலிவுட் முன்னணி நடிகையுமான அனுஷ்கா சர்மாவுடன் கொண்டாடினார். இருவரும் இடம்பெறும் ஃபோட்டோவை விராட்கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு 6 மில்லியன் அதாவது 60 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்கள் கிடைத்துள்ளன. விராட் கோலியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 229 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர்.
முன்னதாக தோனி தனது மகள் ஜிவாவுடன் புத்தாண்டை கொண்டாடினார். இதுதொடர்பான வீடியோவை தோனியின் மனைவி சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவும் வைரலாகி வருகிறது.
தனது மகளை மகிழ்ச்சிப்படுத்தி தந்தையாகவும் தோனி முன் மாதிரியாக இருக்கிறார் என்று ரசிகர்கள் கமென்ட்டில் கூறியுள்ளனர்.
சமீபத்தில் ஜிவா தோனிக்கு லியோனல் மெஸ்ஸி ஆட்டோகிராஃப் அளித்த டி ஷர்ட் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
மேலும் தனது நீண்ட நாள் காதலியும், பாலிவுட் நடிகையுமான அதியா ஷெட்டியுடன் இந்திய கிரிக்கெட் வீரர் கே எல் ராகுல் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இருவருக்கும் இந்த மாதமோ அல்லது மார்ச் மாதமோ திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. பாலிவுட் நடிகையுமான அதியா ஷெட்டியும், இந்திய கிரிக்கெட் வீரருமான கே எல் ராகுல் இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வருகின்றனர்.
தற்போது ஓய்வில் இருக்கும் ரோகித் சர்மா, மனைவி மற்றும் மகளுடன் ஓய்வு நேரத்தை நன்றாக செலவிட்டு வருகிறார். தற்போது மாலத்தீவு சென்றுள்ள ரோகித் சர்மா அங்கு நன்றாகவே என்ஜாய் பண்ணுகிறார்.
இதேபோன்று சச்சின் டெண்டுல்கரும் வித்திசாயசமான முறையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளார். இந்த பதிவும் கவனம் ஈர்த்து வருகிறது.
இந்த நிலையில், யுனிவர்ஸ் பாஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ் கெயில் தனது ஸ்டைலில் புத்தாண்டை கொண்டாடிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- சென்னை, கோவை, மதுரை, கன்னியாகுமரி உள்பட பல்வேறு பகுதிகளில் உற்சாக கொண்டாட்டம்
- சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டிருந்தது.
ஆங்கில புத்தாண்டு 2023 நள்ளிரவு 12 மணிக்கு பிறந்துள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறி மகிழ்ந்தனர்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் புத்தாண்டுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இரவு 8 மணிக்கு மேல் கடற்கரைகளில் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலை மூடப்பட்டது. இதனால் சென்னை மெரினாவில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறவில்லை.
இந்நிலையில் நட்சத்திர ஹோட்டல்கள், மால்களில் நடைபெற்ற கொண்டாட்ட நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் கோவை, மதுரை, கன்னியாகுமரி உள்பட பல்வேறு பகுதிகளில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது.
2023 புத்தாண்டு பிறந்ததையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அனைத்து கிறிஸ்தவ சபைகளிலும் இரவு 10 மணி முதல் புத்தாண்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
- கொரோனா தொற்றிலிருந்து உலகம் மீண்டதை போல இங்கிலாந்தும் இந்த நெருக்கடியிலிருந்து மீளும்.
- ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு முழு ஆதரவளிக்கிறோம் என்றார் பிரதமர் ரிஷி சுனக்.
லண்டன்:
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அந்நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் கூறியதாவது:
2022-ம் ஆண்டு ஒரு நெருக்கடியான ஆண்டு. கொரோனா தொற்றிலிருந்து இந்த உலகம் மீண்டதை போல இங்கிலாந்தும் இந்த நெருக்கடியிலிருந்து மீளும்.
தற்போதுள்ள நெருக்கடி அனைவரையும் பாதித்துள்ள நிலையில் இதிலிருந்து மக்களை மீட்க பிரிட்டன் அரசு நியாயமான மற்றும் கடினமான முடிவுகளை மேற்கொண்டுள்ளது.
இந்த கடினமான முடிவின் காரணமாகதான் எரிபொருளின் விலை அதிகரித்தது. ஆனாலும் நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்.
அடுத்த 12 மாதங்களிலும் இங்கிலாந்தின் பிரச்சினை தீர்வுக்கு வராது. 2023-ம் ஆண்டும் இங்கிலாந்து மக்களுக்கு நெருக்கடியான ஆண்டாகதான் இருக்கும். இந்த நெருக்கடியான 12 மாதங்களைக் கடந்த பின் இங்கிலாந்து மிகச் சிறந்ததாக இருக்கும்.
ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு முழு ஆதரவளிக்கிறோம்.
அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள சார்லஸ் மன்னரின் முடிசூட்டுவிழா இங்கிலாந்தை மீண்டும் ஒன்றிணைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
- உலகின் முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது.
- ஹேப்பி நியூ இயர் சொல்லி ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
சிட்னி:
உலகின் முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது. 2023 ஆம் ஆண்டு பிறந்ததை ஒட்டி கண்ணை கவரும் வகையில் வான வேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிலையில், ஆஸ்திரேலியா நாட்டிலும் புத்தாண்டு பிறந்தது. நள்ளிரவு 12 மணி ஆனவுடன் அந்நாட்டு மக்கள் ஆட்டம், பாட்டம், வாணவேடிக்கை என கோலாகலமாக புத்தாண்டை கொண்டாடினர்.
கண்ணைக் கவரும் வகையில் நடைபெற்ற வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் காண்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஹேப்பி நியூ இயர் என சொல்லி ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்து புத்தாண்டை வரவேற்றனர்.
- உலகிலேயே சூரியன் முதலாவதாக உதிக்கும் நியூசிலாந்து நாட்டில் 2023 புத்தாண்டு பிறந்துள்ளது.
- வாணவேடிக்கையுடன் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர்.
வெல்லிங்டன்:
உலகிலேயே நியூசிலாந்து நாட்டில்தான் முதன்முதலாக புத்தாண்டு பிறக்கும்.
இந்நிலையில், நியூசிலாந்தில் 2023 புத்தாண்டு பிறந்தது. நியூசிலாந்து மக்கள் வாணவேடிக்கையுடன் புத்தாண்டை வரவேற்றனர்.
உலகின் முதல் இடமாக மத்திய பசிபிக்கில் உள்ள கிரிபால்டி தீவில் 2023 புத்தாண்டு பிறந்தது.
2023 புத்தாண்டு இனிய ஆண்டாக அமைய வேண்டும் என மக்கள் புத்தாண்டை வரவேற்றுள்ளனர்.
- உலகம் முழுவதும் 2023 புத்தாண்டை வரவேற்க மக்கள் தயாராக உள்ளனர்.
- மத்திய பசிபிக்கில் உள்ள கிரிபால்டி தீவில் 2023 புத்தாண்டு பிறந்தது.
கிரிபால்டி தீவு:
உலகம் முழுவதும் 2023 புத்தாண்டை வரவேற்க மக்கள் தயாராக உள்ளனர்.
இந்நிலையில், உலகின் முதல் இடமாக மத்திய பசிபிக்கில் உள்ள கிரிபால்டி தீவில் 2023 புத்தாண்டு பிறந்தது. இதனை தொடர்ந்து இன்னும் சில மணிநேரங்களில் இந்தியாவிலும் 2023 புத்தாண்டு பிறக்க உள்ளது.
இந்த ஆண்டின் கடைசி நாளான இன்று மக்கள் 2022-க்கு குட்பை சொல்லியும், வரும் 2023 புத்தாண்டு இனிய ஆண்டாக அமைய வேண்டும் எனவும் சமூக வலைதளங்களில் புத்தாண்டை வரவேற்று பதிவிட்டு வருகின்றனர்.
- நமது குடும்பம், சமுதாயம் மற்றும் நாட்டிற்கு நம்மால் முடிந்த பங்களிப்பை வழங்க உறுதியுடன் நம்மை மீண்டும் அர்ப்பணிப்போம்.
- புத்தாண்டு-2023 நம் அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம், நல்லிணக்கம் மற்றும் வெற்றியைக் கொண்டு வரட்டும்.
சென்னை:
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-
எனது அன்புக்குரிய தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது தேசத்தின் அமுத கால பயணத்தில் உலக நாடுகளின் விஸ்வ குரு நிலையை அடைய மக்கள் அனைவரும் அர்ப்பணிப்புடனும், பக்தியுடனும் கைகோர்ப்போம். உலகில் நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காக உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள ஜி-20 தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள நமது தேசம் 2023-ம் புத்தாண்டில் நம்பிக்கையுடனும், அபரிமிதமான தைரியத்துடனும் நுழைகிறது.
நமது குடும்பம், சமுதாயம் மற்றும் நாட்டிற்கு நம்மால் முடிந்த பங்களிப்பை வழங்க உறுதியுடன் நம்மை மீண்டும் அர்ப்பணிப்போம். சில நாடுகளில் அதிகரித்து வரும் கோவிட்-19 பெருந்தொற்றைக் கருத்தில் கொண்டு நாம் விழிப்புடன் இருந்து கோவிட் நெறி முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
புத்தாண்டு-2023 நம் அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம், நல்லிணக்கம் மற்றும் வெற்றியைக் கொண்டு வரட்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்