search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Heaven’s gate"

    • திருப்புல்லாணி பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
    • கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் சமேத பத்மாஸனித்தாயார் கோவிலில் இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா கடந்த மாதம் 23ந்தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு ராப்பத்து உற்சவத்தில் முதல் நாள் நிகழ்ச்சியாகும்.

    இந்த நிகழ்ச்சி நேற்று அதிகாலை தொடங்கியது. காலை 10மணிக்கு பெருமாள் சயன திருக்கோலத்தில் காட்சியளித்தார்.

    பின்னர் மதியம் 1மணிக்கு விஸ்வரூப தரிசனம் அளித்தார். இரவு 7.15மணியளவில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண ஜெகநாதப்பெருமாள் உற்சவர்களாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் சீர்பாத தூக்கிகளால் பட்டாபிஷேக ராமர் சன்னதி வழியாக உள்பிரகார வீதி உலா நடந்தது. இதையொட்டி ஆழ்வார்கள் எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது.

    தொடர்ந்து இரவு 7.35மணிக்கு பரமபதவாசல் என்னும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா, ..கோவிந்தா... என பக்தி கோஷமிட்டு தரிசித்தனர். நாலாயிர திவ்ய பிரபந்தப் பாடல்கள் பாடப்பட்டு சாற்று முறை, கோஷ்டி பூஜை முறைகள் நடந்தது. பெருமாள் எதிர்சேவை மூலம் மூலவரின் இருப்பிடம் கொண்டு செல்லப்பட்டார்.

    இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (3ந் தேதி) முதல் வருகிற 11ந்தேதி வரை ராப்பத்து உற்சவம் நடைபெற உள்ளது.

    விழா ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் சேதுபதி ராணி ராஜேஸ்வரி நாச்சியார் ஆலோசனையின் பேரில் திவான் மற்றும் நிர்வாக செயலாளர் பழனிவேல் பாண்டியன் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்திருந்தனர்.

    ராமநாதபுரம் கோதண்ட ராமர் கோவிலில் வை குண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று இரவு சொர்க்கவாசல் வழியாக ராமர், சீதா தேவியுடன் எழுந்தருளினார். தொடர்ந்து கோவிலில் சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • வைகுண்ட ஏகாதசியை யொட்டி சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
    • மார்கழி மாதத்தில் நடக்கும் இந்த உற்சவம் 20 நாட்கள் நடைபெறும்.

    சேலம்:

    வைகுண்ட ஏகாதசியை யொட்டி சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    பெருமாள் கோவில்க ளில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று வைகுண்ட ஏகாதசி விழாவாகும். ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் நடக்கும் இந்த உற்சவம் 20 நாட்கள் நடைபெறும். இந்த விழாவின் முக்கிய மான நிகழ்ச்சியாக மார்கழி

    மாத வளர்பிறை ஏகாதசி திதி அன்று "சொர்க்க வாசல்" என்று அழைக்கப்ப டும் பரமபத வாசல் திறக்கப்படும். இந்த சொர்க்கவாசல் வழியே அன்றைய தினம் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    இதன்படி சேலம் மாநகரில் கோட்டை பெருமாள் கோவில் உள்பட அனைத்து பெருமாள் கோவில்களிலும் இன்று

    அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு உற்சவம்வி மரிசையாக நடைபெற்றது.

    சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சிக்காக, அழகிரிநாத சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன. தொடர்ந்து திருப்பாவை பாடல்கள் பாடப்பட்டு விசேஷ பூஜைகள் நடந்தன. சரியாக அதிகாலை 5.15 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அழகிரி நாத பெருமாள் "பரமபத வாசல்" என்றழைக்கப்படும் சொர்க்க வாசல் வழியாக அழைத்து வரப்பட்டார்.

    அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் "கோவிந்தா... கோவிந்தா" என பக்தி பரவசத்துடன் கோஷம் எழுப்பினார்கள். சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்த பெருமாள், கோவிலின் கிழக்கு வாசல் வழியாக மீண்டும் கோவிலுக்குள் சென்று உற்சவ மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    விழாவை முன்னிட்டு கண்ணாடி மாளிகையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் கோவிலில் மூலவர் அழகிரிநாதபெருமாள், சுந்தரவல்லி தாயார், ஆண்டாள், ஆஞ்சநேயர், கருடாழ்வார், கிருஷ்ணர், விஷ்ணுதுர்க்கை சன்னதி களில் மூலவர்களுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடந்தன.

    சொர்க்கவாசல் திறப்பை காண்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நள்ளிரவு கோவிலுக்கு வந்து காத்திருந்தனர். சேலம் மாநகரில் மட்டுமல்லாது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து குவிந்தனர். கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்ய தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன. மாற்றுத்திறனாளி களுக்கும், முதியவர்க ளுக்கும் சாமி தரிசனம் செய்துவிட்டு வருவதற்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி ஏற்பாடுகளை சுதர்சன பட்டாச்சாரியார் செய்திருந்தார். விழாவை முன்னிட்டு சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோதா உத்தரவின்பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கார்மேகம், மேயர் ராமச்சந்திரன், துணை கமிஷனர் லாவண்யா இந்து அறநிலையத்துறை அதி காரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை தொடர்ந்து கோவிலில் "இராப்பத்து" உற்சவமும் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தின்போது தினமும் இரவு 8 மணிக்கு பெருமாள் திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளல், இரவு 8.30 மணிக்கு திருக்கொட்டாரத்தில் பக்தி உலாவுதல் உற்சவமும் நடைபெறுகிறது.

    பட்டை கோவில்

    இதேபோல் சேலம் டவுன் பட்டைக்கோவிலில் இன்று அதிகாலை 5.15 மணிக்கு வேதமந்திரங்கள் முழங்க சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு

    சொர்க்கவாசல் வழியாக வந்த பெருமாளை தரிசித்த னர். மூலவருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பட்டைக்கோவில் அருகே

    உள்ள ஆஞ்சநேயர் சன்னதி யில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன.

    சேலம் செவ்வாய்ப்பேட்டை பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில் அதிகாலை 5.15 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. விழாவையொட்டி மூலவர், பிரகாரத்தில் சக்கரத்தாழ்வாருக்கு தங்க கவசம் அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் நடந்தன. அங்கும் காலை முதல் மாலை வரை திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அம்மாப்பேட்டை சிங்கமெத்தை சவுந்தரராஜ பெருமாள் கோவில், செவ்வாய்ப்பேட்டை பாண்டுரங்கநாதர் கோவில், சேலம் 2-வது அக்ரஹாரம் லட்சுமி நாராயணசுவாமி கோவில், சின்ன திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில், பெரமனூர் வெங்கடேச பெருமாள் கோவில், பிருந்தாவன் ரோட்டில் உள்ள வெங்கடா

    சலபதி கோவில், மகேந்திர புரியில் உள்ள அலமேலு மங்கை சமேத வெங்கடேச வரதராஜ பெருமாள் கோவில் உள்பட சேலத்தில் உள்ள அனைத்து பெருமாள்

    கோவில்களிலும் இன்று அதிகாலை வைகுண்ட ஏகா தசியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.

    • கள்ளழகர் கோவிலில் இன்று சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் வெள்ளத்தில் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளினார்.
    • கூடலழகர் பெருமாள் கோவிலில் இன்று இரவு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.



    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் பெருமாள் சயன கோலத்தில் காட்சியளித்தார். 

     அலங்காநல்லூர்

    108 வைணவ தேசங்களில் ஒன்றான பிரசித்தி பெற்ற அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் வருடந்தோறும் வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கியது. பகல் பத்து உற்சவத்தை முன்னிட்டு தினமும் சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு இன்று நடந்தது. இதையொட்டி அதிகாலை யில் கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் காலை 6.25 மணிக்கு உற்சவர் சுந்தரராஜ பெருமாள் வண்ணக்குடை, தீவட்டி பரிகாரங்களுடன் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளினர். அப்போது நம்மாழ்வார் எதிர்கொண்டு வரவேற்றார்.

    சொர்க்கவாசல் திறப்பின்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் "கோவிந்தா... கோவிந்தா..." என பக்தி கோஷமிட்டு சாமி கும்பிட்டனர். சொர்க்கவாசல் வழியாக சுவாமி -அம்பாள் சயன மண்டபத்தில் எழுந்தருளி னர்.

    கள்ளழகர் கோவிலின் உப கோவிலான மதுரை தல்லாகுளத்தில் உள்ள பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலில் இன்று காலை சொர்க்க வாசல் திறப்பு நடந்தது. சொர்க்கவாசல் வழியாக பெருமாள் அருள்பாலித்தார். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    மதுரை நகரில் உள்ள கூடலழகர் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். இன்று காலை முதல் திரளான பக்தர்கள் குவிந்து சாமி கும்பிட்டனர். இன்று இரவு 7.15 மணிக்கு மேலவடம்போக்கி தெருவில் உள்ள சொர்க்கவாசல் வழியாக கூடலழகர் பெருமாள் எழுந்தருளுகிறார்.

    இதேபோல் மதுரை தெற்கு கிருஷ்ணன் கோவில் தெருவில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், மதனகோபால சுவாமி கோவிலில் இன்று மாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

    ×