search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எரிந்து சேதம்"

    • ஆம்னி வேன் எதிர்பாராத விதமாக தீ பிடித்து எரிந்தது.
    • பங்களாப்புதூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அடுத்த அரக்கன் கோட்டை நேதாஜி நகரை சேர்ந்தவர் சாமிய ப்பன் (48). இவர் சொந்தமாக ஆம்னி வைத்துள்ளார். இந்த வேனில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டு உள்ளது.

    இதனை சரி செய்வதற்காக கள்ளிப்பட்டி பகுதிக்கு ஆம்னி வேனை சாமியப்பன் ஓட்டி சென்றார். இதையடுத்து வேன் கள்ளிப்பட்டி சின்னாரி தோட்டம் அருகே வந்து கொண்டு இருந்தது.

    அப்போது திடீரென அந்த ஆம்னி வேன் எதிர்பாராத விதமாக தீ பிடித்து எரிந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சாமியப்பன் வேனை அருகே இருந்த மின் கம்பத்தில் மோதி நிறுத்தி விட்டு காரை விட்டு இறங்கி உயிர் தப்பினார்.

    இது குறித்து தகவலறி ந்து கோபி தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் ஆம்னி வேன் முழுமையாக எரிந்தது.

    இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ஆம்னி வேனில் ஏற்பட்ட பெட்ரோல் கசிவே தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என தெரிய வந்தது.

    • அம்மனுக்கு மாவிளக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லும் போது வானவெடி வெடித்தனர்.
    • ராஜி (வயது 72) என்பவரின் வீட்டின் மீது தீப்பொறி விழுந்ததில் வீடு முழுவதும் தீ பற்றி எரிந்தது.

    அருர்,

    தருமபுரி மாவட்டம் அரூர் பேரூராட்சிக்குட்பட்ட மாரியம்மன் கோவில் தெருவில் கோவில் திருவிழா நடைபெற்று வந்தது. நேற்று மாலை அம்மனுக்கு மாவிளக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லும் போது வானவெடி வெடித்தனர். அப்போது ராஜி (வயது 72) என்பவரின் வீட்டின் மீது தீப்பொறி விழுந்ததில் வீடு முழுவதும் தீ பற்றி எரிந்தது.

    இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கபட்டது. உடனே விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்ததால் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் நிறுத்தப்பட்டது.

    கூரை வீடு தீப்பற்றி எரிந்ததால் அந்த பகுதி முழுவதும் புகைமூட்டம் காணப்பட்டதால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கபட்டது.

    • காமராஜ் குடும்பத்துடன் கூரை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்‌.
    • 1.20 லட்சம் பணம், 2 பவுன் நகை மற்றும் ஆவணங்கள் ,பொருட்கள் முழுவதும் எரிந்து நாசமானது.

    கடலூர்:

    நெல்லிக்குப்பம் பெரிய சோழவல்லியை சேர்ந்தவர் காமராஜ் (வயது 38). இவர் சம்பவத்தன்று தனது குடும்பத்துடன் கூரை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காமராஜ் தனது குடும்பத்துடன் அலறி அடித்துக் கொண்டு வெளியில் வந்து பார்த்தபோது, கூரை வீடு முழுவதும் எரிந்து கொண்டிருந்தது. காமராஜ் மற்றும் அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர்.

    இதில் காமராஜுக்கு தீக்காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இந்த தீ விபத்தில் வீட்டிலிருந்த 1.20 லட்சம் பணம், 2 பவுன் நகை மற்றும் ஆவணங்கள் ,பொருட்கள் முழுவதும் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு 2 லட்சம் ஆகும். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாலை 5 மணியளவில் பணி முடித்துவிட்டு ஊழியர்கள் செல்ல இருந்தனர்.
    • போச்சம்பள்ளி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த ஜே.பாப்பானூர் கிராமத்தில் தென்னை நார் மில் நடத்தி வருபவர் சரஸ்வதி. இவரது நார் மில்லில் 15-ற்கும் மேற்பட்டோர் பணி புரிந்து வரும் நிலையில் மாலை 5 மணியளவில் பணி முடித்துவிட்டு ஊழியர்கள் செல்ல இருந்தனர்.

    அப்போது மின்கசிவு காரணமாக தீப்பொறி ஏற்பட்டு நார் தீ பிடித்து எரிய தொடங்கியது. அடுத்தடுத்து குவித்து வைத்துள்ள நார் குவியல்கள் தீ பிடித்து எரியத்துங்கியது. விபரமறிந்து வந்த போச்சம்பள்ளி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள்ளாக நார்மில்லின் மோட்டார், பெல்ட், இயந்திரங்கள் உள்ளிட்ட சுமார் 20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.

    • தீ மளமள வென பரவி அருகில் இருந்த பழனியம்மாள், பச்சமுத்து ஆகியோரின் 2 வீடுகளிலும் பற்றி கொண்டது.
    • தீ விபத்தில் வீடுகளிலும் இருந்த பொருட்கள், மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை எரிந்து சேதம் அடைந்தன.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஒலகடம், நாகிரெட்டி பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனியம்மாள் (80). அவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் குலசேகரன் (43), பச்சமுத்து (60).இவர்களுடைய 3 வீடுகளும் தகரம் வேயப்பட்ட கூரை வீடாகும்.

    இந்நிலையில் குணசேகரன் வீட்டில் இருந்து திடீரென புகை வந்துள்ளது. இதனால் அவரது குழந்தைகள் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டவாறு வெளியே ஓடி வந்தனர்.

    உடனே அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்தபோது தீப்பிடித்து வீடு எரிந்து கொண்டிருந்தது.

    இதனையடுத்து தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ மளமள வென பரவி அருகில் இருந்த பழனியம்மாள், பச்சமுத்து ஆகியோரின் 2 வீடுகளிலும் பற்றி கொண்டது.

    இதுகுறித்து அந்தியூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அதிகாரி ராபர்ட் தலைமையில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை தண்ணீரைப் பீச்சி அணைத்தனர்.

    இருப்பினும் இந்த தீ விபத்தில் 3 வீடுகளிலும் இருந்த பொருட்கள், 2 வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை எரிந்து சேதம் அடைந்தன. இதன் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

    தீ விபத்து நடந்ததும் வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் வெளியே ஓடி சென்று விட்டதால் உயிரி ழப்பு தவிர்க்கப்பட்டது. தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×