search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆருத்ரா"

    • நடராஜருக்கு ஆண்டுதோறும் 6 மகா அபிஷேகங்கள் நடைபெறும்.
    • மார்கழி மாதத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசனம் சிறப்பு வாய்ந்தவை.

    நடராஜர் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது சிதம்பரம் தான். இத்தல நடராஜருக்கு ஆண்டுதோறும் 6 மகா அபிஷேகங்கள் நடைபெறும். இதில் ஆனி மாதம் நடைபெறும் ஆனித் திருமஞ்சனமும், மார்கழி மாதத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசனமும் சிறப்பு வாய்ந்தவை. நடராஜருக்கு அமைந்த மற்றுமொரு சிறப்பு மிகுந்த கோவில்தான், நெய்வேலியில் உள்ள 'அழகிய திருச்சிற்றம்பலமுடையான்' என்னும் நடராஜர் கோவில். இங்கும் நடராஜருக்கு ஆண்டு தோறும் 6 மகா அபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன.

    கோவில் அமைப்பு

    கோவில் நுழைவு வாசலின் வலது புறத்தில் ஆராய்ச்சி மணி என்ற பெயரில் ஆலய மணிமண்டபம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அதன் அருகே மனுநீதி முறைப் பெட்டி ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்களின் குறைகளையும், நியாயமான விருப்பங்களையும் ஒரு தாளில் நடராஜருக்கு கடிதமாக எழுதி, மனுநீதி முறைப் பெட்டியில் போட வேண்டும். பின்னர் ஆராய்ச்சி மணியை 3 முறை ஒலிக்க செய்து விட்டு கோவிலை வலம் வந்து வீட்டிற்குச் செல்கின்றனர்.

    பின்னர் அந்த கோரிக்கை கடிதங்கள், காலை நேர பூஜையில் தீட்சிதர்களால் நடராஜர் முன்பு ரகசியமாக படிக்கப்பட்டு பின்னர் எரியூட்டப்படும். அதைக்கேட்டு பக்தர்களின் குறைகளை இறைவன் நீக்குவதாக நம்பிக்கை நிலவுகிறது. இவ்வாறு குறை நீங்கியவர்கள், இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நன்றி கடிதத்தையும் எழுதி அந்த மனுநீதி முறைப் பெட்டியில் போடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

    நாம் இன்று படிக்கும் `திருவாசகம்' என்னும் நூலானது, மாணிக்கவாசகர் சொல்லச் சொல்ல, சிதம்பரம் கோவிலில் வைத்து சிவபெருமானே தன் கரங்களால் எழுதியது. அந்த நூலின் இறுதியில் `திருச்சிற்றம்பலமுடையான்' என்று இறைவன் கையெழுத்திட்டு இருப்பதே இதற்கு சான்று. அந்த பெயரை நினைவுகூரும் வகையில்தான், நெய்வேலியில் உள்ள ஆலயத்திற்கு `அழகிய திருச்சிற்றம்பலமுடையான் தியானசபை' என்று பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது. நடராஜர்

    இடதுகாலை தூக்கி ஆட, அருகே அவரது நடனத்திற்கேற்ப கையில் தாளத்துடன் சிவகாமி அம்பாள் `ஓசை கொடுத்த நாயகி' என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தில்தான் உலகிலேயே மிக உயரமான ஐம்பொன்னால் ஆன நடராஜர் சிலை உள்ளது. இந்த சிலை 10 அடி ௧ அங்குல உயரமும், 8 அடி 4 அங்குல அகலமும், 2 ஆயிரத்து 420 கிலோ எடையும் கொண்டது.

    நடராஜர் அருகே வீற்றிருக்கும் சிவகாமி அம்பாள் சிலை, 7 அடி உயரமும், சுமார் 750 கிலோ எடையும் கொண்டது. எல்லா கோவில்களிலும் நடராஜரின் பாதத்தில் மாணிக்கவாசகர் இருப்பார். ஆனால், இந்தக் கோவிலில் நடராஜர் பாதத்தில் திருமூலர் இருக்கிறார். மேலும், வலப்புறம் வியாக்ரபாதரும், இடப்புறம் பதஞ்சலி முனிவரும் உள்ளனர். இந்த இரு முனிவர்களின் பெருந்தவத்திற்கு இறங்கிதான் நடராஜர், தனது ஆனந்த நடனத்தை காட்டி அருளினார்.

    நெய்வேலியில் உள்ள நிலக்கரி சுரங்கம் மற்றும் அனல்மின் நிலையங்களில் பணியாற்றிய பக்தர்கள் சிலர், 1980-ம் ஆண்டு சைவத்தை வளர்க்கும் நோக்கத்துடன் பன்னிரு திருமுறை வளர்ச்சிக் கழகம் என்ற அமைப்பை உருவாக்கினார்கள். இதன் தலைவராக அப்போதைய நகர தந்தை ராமலிங்கம் பிள்ளை பொறுப்பேற்றுக்கொண்டார். இக்கழகத்தினர் சிறு அளவிலான வழிபாடுகள், திருமுறை இசை நிகழ்ச்சிகள், திருமுறை பயிற்சிகள், முற்றோதல்கள், தல யாத்திரைகள், உழவாரப்பணிகள் என்று தெய்வீக பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

    பல ஊர்களில் உள்ள கோவில்களுக்கு சென்று வழிபட்டு வந்த பன்னிரு திருமுறை வளர்ச்சிக் கழகத்தினர், தங்கள் ஊரிலும் சிவன் கோவில் ஒன்றை கட்ட முடிவு செய்தனர். பளிங்கு கோவில் ஒன்றை கட்டி, அதில் நடராஜரின் திருமேனியை நிறுவ எண்ணினர். 1986-ம் ஆண்டு சித்திரை மாதம் வளர்பிறையில் மயிலை குருஜி சுந்தரராம் சுவாமிகளால் இக்கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. பலரின் கடுமையான உழைப்பால் ஒரே ஆண்டில் இந்த ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது.

    இக்கோவில் கட்டப்பட்டபின் இப்பகுதி சிவ புரம் என்று அழைக்கப்படுகிறது. சிவபெருமானின் படைத்தல், காத்தல், அழித்தல் என முத்தொழில் புரியும் வடிவமான திரிமூர்த்தி வடிவம், கோவிலின் முகப்பு பகுதியில் உள்ளது. நெய்வேலி பன்னிரு திருமுறை வளர்ச்சி கழகத்தின் வேண்டுகோளை ஏற்று, குடந்தை அருணஜடேஸ்வர ஸ்தபதி உலகிலேயே மிகப்பெரிய அழகிய திருச்சிற்றம்பல முடையானை வடிவமைக்க ஒப்புக்கொண்டார். 8-9-1986 அன்று குடந்தையை அடுத்த மேலக்கொற்கை என்ற ஊரில் போகர் கூறியபடி பலவகையான மூலிகைகளை கொண்டு, ஓதுவாமூர்த்திகளின் தெய்வத்தமிழ் தேவார பாடல்களுடனும், தில்லைவாழ் அந்தணர்களின் வேத கோஷத்துடனும், மயிலை குருஜி சுந்தரராம் சுவாமிகள் மேற்பார்வையில் திருச்சிற்றம்பலமுடையாரின் ஐம்பொன் செப்புத் திருமேனி வார்க்கப்பட்டது. அதுவே, அழகிய திருச்சிற்றம்பல முடையான் ஆலயத்தில் உள்ள தற்போதைய நடராஜர் சிலையாகும்.

    நடராஜப் பெருமானுக்கு `பஞ்ச சபைகள்' என்ற ஐந்து சபைகள் உண்டு. அவை ரத்தின சபை, வெள்ளி சபை, சித்திர சபை, தாமிர சபை, பொற்சபை ஆகியனவாகும். அந்த வகையில் இந்த திருச்சிற்றம்பலமுடையான் கோவிலில் உள்ள நடராஜர் சன்னிதி `பளிங்கு சபை' என்று அழைக்கப்படுகிறது.

    இந்தக்கோவிலுக்குள் நுழைந்தவுடன் நந்தி பகவான் கம்பீரத்துடன் வீற்றிருக்கிறார். அவரை தரிசித்து விட்டு உள்ளே சென்றதும், தியான மண்டபம் என்னும் பளிங்கு சபையில் நடராஜர், சிவகாமி அம்பாளுடன் காட்சி தருகிறார். அவர்களை தரிசனம் செய்துவிட்டு, வெளியே வந்தவுடன் கோவில் சுற்றுச்சுவரில் திருவாவடுதுறை ஆதீனம் வெளியிட்ட `விதியை வெல்வது எப்படி?' என்ற புத்தகத்தில் உள்ள அனைத்து தேவாரப் பாடல்களும், பன்னிரு திருமுறை வளர்ச்சிக் கழகத்தினரால் கல்வெட்டுகளில் பதிக்கப்பட்டிருக்கின்றன.

    பளிங்கு சபையின் மேற்கு புறத்தில் செம்பொற்ஜோதி நாதர் காட்சி தருகிறார். இந்த சிவலிங்கத்தின் பாணமானது நர்மதை ஆற்றில் இருந்து கொண்டு வரப்பட்டது. இந்த சிவலிங்கத்தின் மேற்பகுதியில் இயற்கையாக விபூதி ரேகைகள் அமைந்திருப்பது பக்தர்களை பரவசப்படுத்துகிறது.

    மேலும் இக்கோவிலில், விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, அண்ணாமலையார், அறம் வளர்த்தநாயகி, சனீஸ்வரர், சூரியன், சந்திரன், வள்ளி தெய்வானை முருகன், கால பைரவர் உள்ளிட்ட சாமிகள் தனித்தனி சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர்.

    இந்த கோவிலில் உள்ள நவக்கிரக மண்டபம் சற்று வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரே கல்லில் நவக்கிரக சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தாமரை பீடத்தில், பெரிய வட்ட வடிவிலான தேரில் சூரிய பகவான் நடுநாயகமாக வீற்றிருக்கிறார். இந்த தேரை, பாகன் ஓட்ட, 7 குதிரைகள் இழுத்த நிலையில் உள்ளது. தேரை சுற்றி அஷ்டதிக்கு பாலகர்கள் உள்ளனர். மற்ற கிரகங்கள் எட்டு திசையை நோக்கி, தவக்கோலத்தில் உள்ளனர். இவ்வாலயத்தில் `திருத்தொண்டர் திருக்கோவில்' என்ற பெயரில் 63 நாயன்மார்களுக்கு என்று தனிச் சன்னிதி அமைந்துள்ளது.

    ஆண்டுதோறும் சித்திரை மாதம் 1-ந்தேதி அறுபத்து மூவர் விழா சிறப்பாக நடைபெறும். அன்றைய தினத்தில் சுவாமியும், அம்பாளும் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி வீதிஉலா செல்வர். இவர்களுடன் 63 நாயன்மார்களும் வீதிஉலா வருவது கண்கொள்ளாக்காட்சியாகும். இது தவிர பிரதோஷம், ஆனி திருமஞ்சனம், மார்கழி ஆருத்ரா தரிசனம், ஐப்பசி மாத அன்னாபிஷேகம், கார்த்திகை மாத சோமவார வழிபாடு-சங்கு அபிஷேகம், மாசி மாத சிவராத்திரி வழிபாடு போன்றவை சிறப்பாக நடைபெறுகிறது.

    இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு ௯ மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    கடலூரில் இருந்து 43 கிலோமீட்டர் தொலைவிலும், விருத்தாசலத்தில் இருந்து 29 கிலோ மீட்டர் தொலைவிலும், சிதம்பரத்தில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலும், நெய்வேலி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது.

    • ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி தொடர்பாக 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • நடிகர் ஆர்.கே.சுரேஷ் குறித்து அனைத்து விமான நிலையங்களுக்கும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

    சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம், முதலீட்டாளர்களிடம் முதலீடாக பெற்ற ரூ.2,438 கோடி ரூபாயை மோசடி செய்ததாக பொளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    ஆர்கே சுரேஷ்

    ஆர்கே சுரேஷ்

    இந்த வழக்கில் ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குனர் உள்பட 13 பேரை கைது செய்துள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், இந்த வழக்கில் தொடர்புடைய நபர்களின் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கியுள்ளனர். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. ஆசையம்மாள், ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் இதுவரை ரூ.6.35 கோடி பணம், ரூ.1.13 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி பொருட்கள் மற்றும் 22 கார்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் நடிகர் ஆர்.கே.சுரேஷ் துபாயில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.


    ஆர்கே சுரேஷ்

    ஆர்கே சுரேஷ்

    இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இடைத்தரகர் ரூசோ அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், நடிகர் ஆர்.கே.சுரேஷ் குறித்து அனைத்து விமான நிலையங்களுக்கும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

    • ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி தொடர்பாக 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • உரிய ஆவணங்களுடன் ஆஜராகும்படி நடிகரும் பா.ஜ.க. கட்சி நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷிற்கு பொருளாதார குற்றப்பிரிவினர் சம்மன் அனுப்பியிருந்தனர்.

    சென்னை அமைந்தகரையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வந்த 'ஆருத்ரா கோல்டு' நிறுவனம் தமிழகம் முழுவதும் கிளைகளை தொடங்கி தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக கவர்ச்சிகரமாக அறிவித்தனர். இதனை நம்பி தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் 'ஆருத்ரா கோல்டு' நிறுவனத்தில் முதலீடு செய்தனர். இதன் மூலம் பொதுமக்களிடம் முதலீடாக பெற்ற ரூ.2,438 கோடி மோசடி செய்யப்பட்டது.

    ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி தொடர்பாக 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து, ரூசோ என்பவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இந்த மோசடியில் தொடர்பு இருப்பதாக கூறி போலீஸ் விசாரணைக்கு உரிய ஆவணங்களுடன் ஆஜராகும்படி நடிகரும் பா.ஜ.க. கட்சி நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷிற்கு பொருளாதார குற்றப்பிரிவினர் சம்மன் அனுப்பியிருந்தனர்.

    இந்த சம்மனை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆர்.கே.சுரேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், பட தயாரிப்பு தொடர்பாகவே ரூசோ தன்னை அணுகியதாகவும் அது தொடர்பாக மட்டுமே பண பரிவர்த்தனை நடந்ததாகவும் தன்னுடைய மனைவி, குழந்தைகளை கவனிப்பதற்காக தற்போது வெளிநாட்டில் இருப்பதால் விசாரணைக்கு நேரில் ஆஜராக இயலாது என்றும் அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

    இந்த மனு நீதிபதி சந்திரசேகர் முன்பு விசாரணைக்கு வந்தபோது ஆர்.கே.சுரேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த வழக்கில் தன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளதாகவும் ஆருத்ரா மோசடிக்கும் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று வாதிடப்பட்டது. அப்போது நீதிபதிகள் ஆவணங்களுடன் ஆஜராகும் படி அனுப்பப்பட்டுள்ள அந்த சம்மனில் எந்த மாதிரியான ஆவணங்கள் என்ற விவரம் இல்லாததால் சம்மனை ரத்து செய்யப்போவதாகவும் வேண்டும் என்றால் தேவையான விவரங்களுடன் புதிய சம்மனை அனுப்பும் படியும் காவல் துறையிடம் தெரிவித்தார்.

    இதற்கு ஆட்சேபனை தெரிவித்த காவல் துறை இந்த சம்மனை ரத்து செய்ய வேண்டாம் என்றும் சம்மன் குறித்து விளக்கம் அளிப்பதற்கு அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி காவல் துறை ஏப்ரல் 28-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்ததோடு ஆர்.கே.சுரேஷின் சம்மன் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தது.

    • முசிறி அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆருத்ர தரிசனம் நடைபெற்றது
    • ஆருத்ர தரிசன விழாவை முன்னிட்டு அண்ணாமலையார் மற்றும் நடராஜர பெருமான், சிவகாமி தாயார் உற்சவத்திற்கு 27 விதமான அபிஷேகங்கள் நடைபெற்றன

    முசிறி:

    முசிறி ஸ்ரீ அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆருத்ர தரிசன விழா நடைபெற்றது. ஆருத்ர தரிசன விழாவை முன்னிட்டு அண்ணாமலையார் மற்றும் நடராஜர பெருமான், சிவகாமி தாயார் உற்சவத்திற்கு 27 விதமான அபிஷேகங்கள் நடைபெற்றன. இதனை அடுத்து மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டன.

    தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட நடராஜர் பெருமானை ஆண்களும், சிவகாமி தாயாரை பெண்களும் சுமந்து பிரகார வீதியில் வலம் வந்தனர். பின்னர் மகா தீபாராதனை கட்டப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை பூசாரி கமல் மற்றும் நிர்வாகிகள் மனோகரன், ரவிச்சந்திரன், இளங்கோவன், காஞ்சனா, சேகர் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது
    • நடராஜ மூர்த்திக்கு மகா அபிஷேகம், தரிசனம், சாந்துக்கட்டளையும், காலை 10 மணிக்கு மேல் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடும் நடந்தது

    கரூர்:

    கரூர் அலங்காரவல்லி, சவுந்தரநாயகி சமேத கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கடந்த 28ம் தேதி துவங்கி திருக்கல்யாண உற்சவ விழா நடந்தது.நேற்று அதிகாலை 5 மணிக்கு மேல் 6.30 மணிக் குள் நடராஜ மூர்த்திக்கு மகா அபிஷேகம், தரிசனம், சாந்துக்கட்டளையும், காலை 10 மணிக்கு மேல் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடும் நடந்தது. விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த சிறப்பு பந்தலுக்கு சுவாமி மீண் டும் வந்தார். அங்கு மட்டையடி நிகழ்ச்சியும், சித் சபா பிரவேசமும் நடந்தது.ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெய தேவி, செயல் அலுவலர் சரவணன், சிவாச்சாரியார்கள், உபயதாரர்களான கரூர் ஆயிர வைசியர்கள் மற்றும் கரூர் தைலா சில்க்ஸ் சண்முகசுந்தரம் மற்றும் கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.




    • புதுக்கோட்டை சாந்தநாதசாமி கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது
    • சிறப்பு அலங்காரத்தில் நடராஜர் உடனாய சிவகாமி அம்பாள் மற்றும் மாணிக்க வாசகர் புறப்பாடு திருவீதி உலா நடைபெற்றது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை வேதநாயகி அம்பிகை உடனுறை சாந்தநாதசுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசனம் விழா நடைபெற்றது.ஆருத்ர தரிசன விழாவை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு கோவிலில் திருப்பள்ளி எழுச்சி நடைபெற்றது. பின்பு காலை 5 மணிக்கு ஆலயத்தின் அலங்கார மண்டபத்தில் உற்சவர் நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாள் எழுந்தருளி பால், திருமஞ்சனம், தயிர், மஞ்சள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது

    .அதன் பின் மூலவர் ஆடல்வல்லான் நடராஜருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து மாணிக்கவாசகருக்கு அங்கி மற்றும் மாலைகள் அணிவிக்கப்பட்டு பூஜைகளும், தீபாராதனையும் நடைபெற்றது. அப்போது மாணிக்கவாசகர் 108 திருவாசகம் ஓதுவரால் பாடப்பட்டது. உற்சவர் நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு அலங்காரம் நடைபெற்று பன்முக தீபாராதனை, சோடஷ தீபாராதனை, பஞ்சமுக தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மாணிக்க வாசகருக்கும் தீபாராதனை நடைபெற்றது

    .சிறப்பு அலங்காரத்தில் நடராஜர் உடனாய சிவகாமி அம்பாள் மற்றும் மாணிக்க வாசகர் புறப்பாடு திருவீதி உலா நடைபெற்றது. கீழ ராஜ வீதி தெற்குராஜவீதி மேலராஜவீதி வடக்குராஜவீதி பிருந்தாவனம் வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது.இவ்விழாவில் உபயதாரர் குடும்பத்தார்கள், பல்வேறு பிரமுகர்கள், சிவபக்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் குருக்கள் சிறப்புடன் செய்தனர் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது ஆலயத்தில் வேதநாயகி அம்பிகை சாந்தநாதசுவாமி சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர் ஏராளமான பக்தர்கள் விழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


    • சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் ஆருத்ரா தரிசன விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நள்ளிரவில் தொடங்கி விடிய விடிய 4 கால சிறப்பு அபிஷேகம் நடக்கும்.
    • இந்த கோவிலில் கடந்த 2018-ம் ஆண்டு ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி சிறப்பு அபிஷேகம் அலங்கார ஆராதனைகள் நடந்தது.

    சேலம்:

    சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் ஆருத்ரா தரிசன விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நள்ளிரவில் தொடங்கி விடிய விடிய 4 கால சிறப்பு அபிஷேகம் நடக்கும்.

    இந்த கோவிலில் கடந்த 2018-ம் ஆண்டு ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி சிறப்பு அபிஷேகம் அலங்கார ஆராதனைகள் நடந்தது. அந்த ஆண்டு கும்பாபிஷேக விழாவிற்காக பாலாலயம் செய்யப்பட்டது. இதனால் கடந்த 4 ஆண்டுகளாக ஆருத்ரா தரிசன விழா கொண்டாடப்படவில்லை. கடந்த செப்டம்பரில் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையடுத்து 4 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பாண்டு ஆருத்ரா தரிசன விழா கொண்டாடப்பட உள்ளது.

    இதை ஒட்டி இன்று நள்ளிரவு 12 மணிக்கு நடராஜருக்கு பால், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், நெய், பழங்கள் உட்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இந்த சிறப்பு அபிஷேகம் நாளை காலை 6 மணி வரை நடைபெறுகிறது.

    இதன் தொடர்ச்சியாக சுகவனேஸ்வரருக்கு தங்க நாகாபரணம், அம்மனுக்கு தங்க கவசம் சாத்துபடி நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்கிறார்கள்.

    இதேபோல் அம்மாப்பேட்டை செங்குந்தர் குமரகிரி சுப்பிரமணி சுவாமி கோவில், உத்தமசோழபுரம் கராபுரநாதர் கோவில், வேலூர் தான்தோன்றி ஈஸ்வரன் கோவில், தாரமங்கலம் கைலாசநாதர் கோவில், சிவன் கோவில் உள்பட சேலம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களின் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

    ×