என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசன விழா
Byமாலை மலர்7 Jan 2023 2:09 PM IST
- கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது
- நடராஜ மூர்த்திக்கு மகா அபிஷேகம், தரிசனம், சாந்துக்கட்டளையும், காலை 10 மணிக்கு மேல் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடும் நடந்தது
கரூர்:
கரூர் அலங்காரவல்லி, சவுந்தரநாயகி சமேத கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கடந்த 28ம் தேதி துவங்கி திருக்கல்யாண உற்சவ விழா நடந்தது.நேற்று அதிகாலை 5 மணிக்கு மேல் 6.30 மணிக் குள் நடராஜ மூர்த்திக்கு மகா அபிஷேகம், தரிசனம், சாந்துக்கட்டளையும், காலை 10 மணிக்கு மேல் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடும் நடந்தது. விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த சிறப்பு பந்தலுக்கு சுவாமி மீண் டும் வந்தார். அங்கு மட்டையடி நிகழ்ச்சியும், சித் சபா பிரவேசமும் நடந்தது.ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெய தேவி, செயல் அலுவலர் சரவணன், சிவாச்சாரியார்கள், உபயதாரர்களான கரூர் ஆயிர வைசியர்கள் மற்றும் கரூர் தைலா சில்க்ஸ் சண்முகசுந்தரம் மற்றும் கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.
Next Story
×