என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "போகி பண்டிகை"
- மக்கள் பழைய பயனற்ற பொருட்களை எரித்து போகி பண்டிகையை வரவேற்றனர்.
- போகி பண்டிகை எதிரொலியால் இன்று அதிகாலை முதல் புகைமூட்டம் ஏற்பட்டது.
சென்னை:
போகிப்பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை விமான நிலையம் உள்ள பகுதியில் வசிப்பவர்கள் அதிக புகைதரும் பொருட்களை எரிக்கவேண்டாம் என்று ஏற்கனவே விமான நிலையம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் போகிப் பண்டிகையை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே சென்னை விமான நிலையத்தைச் சுற்றி உள்ள கவுல் பஜார், பம்மல், அனகாபுத்தூர், மீனம்பாக்கம், தரைப்பாக்கம், மணப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் பழைய பொருட்கள், பிளாஸ்டிக் டயர்கள் போன்றவைகளை தெருக்களில் எரித்தனர்.
இதனால் கடும் புகை மூட்டம் ஏற்பட்டது. மேலும் பனிமூட்டமும் அதிகமாக இருந்ததால் புகையும் சேர்ந்து மூழுவதும் புகை மூட்டமாக மாறியது. விமான நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் சாலையே தெரியாத அளவுக்கு புகையாகக் காட்சி அளித்தது. விமான நிலையத்தில் ஓடுபாதையும் தெரியாத அளவுக்கு இதன் தாக்கம் இருந்தது.
இதனால் சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலை முதல் விமான சேவை பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, அதிகாலை 4.35 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து 164 பயணிகளுடன் சென்னைக்கு வந்து கொண்டிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், அதிகாலை 5.45 மணிக்கு 260 பயணிகளுடன் லண்டனில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், டெல்லியில் இருந்து 117 பயணிகளுடன் அதிகாலை 5.20 மணிக்கு சென்னையில் தரையிறங்க வந்த விமானம் மற்றும் இலங்கையில் இருந்து வந்த பயணிகள் விமானம் ஆகிய 4 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் ஐதராபாத் விமான நிலையத்திற்கு திருப்பி விடப் பட்டன.
இதேபோல் மஸ்கட், துபாய், குவைத், மும்பை, ஐதராபாத், கொல்கத்தா, பெங்களூர் உள்ளிட்ட 20 வருகை விமானங்கள், மேலும் துபாய், மஸ்கட், குவைத், சிங்கப்பூர், லண்டன், மும்பை, டெல்லி, அந்தமான், தூத்துக்குடி, மதுரை, திருவனந்தபுரம், புனே உள்ளிட்ட 24 புறப்பாடு விமானங்கள் புகை-பனிமூட்டம் காரணமாக தாமதமானது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். இன்று காலை 9.25 மணிக்கு சென்னையில் இருந்து அந்தமான் செல்ல இருந்த விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
புகைமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் வருகை, புறப்பாடு விமானங்கள் என சுமார் 44 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. காலை 8 மணிக்கு பின்னர் புகைமூட்டம் மெல்ல மெல்ல விலகத் தொடங்கியது. இதைத்தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் காலை 9 மணிக்கு பிறகு விமான சேவை சீரானது.
- சென்னை நகர் முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்துள்ளது.
- மணலி, பெருங்குடியில் காற்றின் தரக்குறியீடு 277 என்ற அளவில் மோசமான அளவில் உள்ளது.
சென்னை:
பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதையொட்டி போகிப் பண்டிகை இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
போகி பண்டிகை அன்று பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதை உணர்த்தும் வகையில் பழைய பொருட்களைத் தீயிட்டு கொளுத்துவது வழக்கமாக இருந்துவந்தது. ஆனால் நாளடைவில் பழைய பொருட்களோடு டயர், டியூப் உள்ளிட்ட பொருட்களையும் தீயில் போட்டு மக்கள் எரிக்கத் தொடங்கி விட்டார்கள்.
இதனால் போகி பண்டி கை அன்று காற்று மாசு ஏற்படுவது தவிர்க்க முடியாததாக மாறிப் போய் இருக்கிறது.
அந்த வகையில் இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போகி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதனால் சென்னை மாநகர பகுதிகளும், புறநகர் பகுதிகளும் புகை மண்டலமாக காட்சி அளித்தன. காலை 6 மணியில் இருந்து 8 மணி வரையில் 2 மணி நேரத்துக்கு புகை மூட்டம் நீடித்தது.
பனிப்பொழிவுடன் புகைமூட்டமும் சேர்ந்து கொண்டதால் முன்னால் யார் செல்கி றார்கள்? என்ன நடக்கிறது? என்பதே தெரியவில்லை. இதனால் சாலைகளில் சென்றவர்கள் முகப்பு விளக்கு களை எரிய விட்டபடியே சென்றனர். பெரிய கனரக வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தில் பின்புற விளக்குகளையும் எரிய விட்டபடியே வாகனங்களை ஓட்டிச் சென்றனர். இதன் காரணமாக சாலையில் சென்ற மோட்டார்சைக்கிள்கள், கார்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் மெதுவாகவே சென்றன. 20-ல் இருந்து 30 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே வாகனங்களை ஓட்டிச் செல்ல முடிந்தது.
இப்படி மெதுவாகவே செல்ல முடிந்ததால் பயண நேரம் அதிகமானது. 30 நிமிடத்தில் செல்ல வேண்டிய பயண நேரம் ஒரு மணி நேரமானது.
சென்னையில் அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, மெரினா காமராஜர் சாலை உள்ளிட்ட மாநகர பகுதிகள் அனைத்திலும் புகை மூட்டம் நிறைந்து காணப்பட்டது. அதே நேரத்தில் புறநகர் பகுதிகளான தாம்பரம், செங்குன்றம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் புகைமூட்டம் அதிகமாக இருந்தது. மின்சார ரெயில்கள் இயக்கப்படும் வழித்தடங்களிலும் புகைமூட்டம் நிரம்பி காணப்பட்டது.
இதனால் மின்சார ரெயில் ஓட்டுனர்கள் ஒலி எழுப்பியபடியே ரெயிலை இயக்கிச் சென்றனர். சென்னை மாநகரில் போகி புகையால் பெருங்குடி பகுதியில் காற்று மாசு மிக அதிக மாக காணப்பட்டது.
பெருங்குடி பகுதியில் காற்றின் தர குறியீடு 289-ஐ எட்டி இருந்தது. இந்த அளவு மணலியில் 272 ஆக பதிவாகி இருந்தது.
எண்ணூரில் 232 ஆகவும், அரும்பாக்கம் பகுதியில் 216 ஆகவும், ராயபுரம் சுற்றுவட்டாரத்தில் 207 ஆகவும் காற்றின் குறியீட்டு அளவு அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது.
போகி புகை மூட்டத்துடன் டயர், டியூப்களை எரித்ததால் ஏற்பட்ட நச்சுப் புகையும் கலந்தது. இதனாலேயே காற்று மாசு அதிகரித்து உள்ளது. முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
சளித் தொல்லையால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் கூடுதல் சிரமத்தை சந்தித்தனர். மூச்சுத் திணறலால் அதிக பாதிப்புகளை அவர்கள் சந்தித்தனர். போகி பண்டிகையின்போது காற்று மாசு ஏற்படுவதை தவிர்ப்பதற்காக டயர், டியூப் உள்ளிட்ட மாசு ஏற்படும் பொருட்களை எரிக்க வேண்டாம் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அதனை கண்டு கொள்ளாமல் பொதுமக்கள் டயர், டியூப் உள்ளிட்ட பொருட்களை தீயில் போட்டு எரித்து நச்சுப்புகையை பரவ விட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
- இயற்கை பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தி வந்து உள்ளனர்.
- சென்னை மாநகரம் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
சென்னை:
போகிப் பண்டிகை தினமான நாளை டயர், டியூப் போன்ற பொருட்களை தீயிட்டு கொளுத்த வேண்டாம் என்று மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்று வெளியிட்டு உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினைக் கொண்டாடி வந்துள்ளனர். இயற்கை பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தி வந்து உள்ளனர். இதனால் காற்று மாசு படாமல் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் இருந்து வந்துள்ளது.
ஆனால் இன்றைய சூழலை எடுத்துக்கொண்டால், போகி பண்டிகையின் பொழுது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசாயணம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுகிறது. போகி அன்று எரிக்கப்படும் பொருட்களால் ஏற்படும் அடர்ந்த புகையின் காரணமாக விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடுகளில் தாமதம் ஏற்படுகிறது. சென்னை நகரில் போகி அன்று எரிக்கப்படும் மேற்படி பொருட்களால் புகை மண்டலம் ஏற்பட்டு வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது.
பழைய பிளாஸ்டிக் பொருட்கள், டயர் மற்றும் டியூப் போன்றவற்றை எரிப்பதால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இத்தகைய செயல்கள் பொது மக்களிடம் விழிப்புணர்வு இல்லாமையால் ஏற்பட்டு வந்தது. இதனை தவிர்க்க, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கடந்த 19 ஆண்டுகளாக போகி பண்டிகைக்கு முன் பொது மக்களிடைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றது. இதன் காரணமாக கடந்த வருடங்களில் பழைய ரப்பர்பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் டயர், டியூப் போன்றவற்றை எரிப்பது பெரும்பாலும் குறைந்து உள்ளது.
அதன்படி இந்த சுற்றுச்சூழல் மாசு குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில், சென்னை மாநகரம் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
போகிப்பண்டிகையின் போது சென்னை மாநகரத்தின் சுற்றுச்சூழல் காற்று தரத்தினை கண்காணிப்பு செய்யும் பொருட்டு, வாரியம் போகிப்பண்டிகையின் முந்தைய நாள் மற்றும் போகிப்பண்டிகை நாளிலும், 15 இடங்களில் 24 மணிநேரமும் காற்றுத்தரத்தினை கண்காணிக்க காற்று மாதிரி சேகரிப்பு செய்து ஆய்வு செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளது. மேலும் காற்றின்தர அளவுவாரிய இணையதளத்தில்வெளியிடப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- மதுரையில் இன்று போகி பண்டிகை கொண்டாட்டப்பட்டது.
- இந்த நாளில் வீட்டில் இருந்த தேவையற்ற பொருட்களை எடுத்து வந்து தெருக்களில் போட்டு தீ வைத்து எரித்தனர்.
மதுரை
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை, போகி, தைப்பொங்கல், மாட்டு பொங்கல் என்று 3 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதில் முதல் நாளான இன்று போகி பண்டிகை அதிகாலை முதல் உற்சாகமாக அனுசரிக்கப்பட்டது. போகி பண்டிகை என்பது பழையன கழிதலும், புதியன புகுதலும் ஆகும். அதாவது பழையனவற்றை வெளியேற்றும் நாளாக கருதப்படுகிறது.
இந்த நாளில் வீட்டில் இருந்த தேவையற்ற பொருட்களை எடுத்து வந்து தெருக்களில் போட்டு தீ வைத்து எரித்தனர். அதன் பிறகு தீயை சுற்றிலும் நின்று சிறுவர்கள் மேளம் கொட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போகி பண்டிகையின் ஒரு பகுதியாக 'நிலைப் பொங்கல்' அனுசரி க் கப்பட்டது. அப்போது பெரியவர்கள் வீட்டின் நிலைகளுக்கு மஞ்சள் பூசி, திலகமிட்டு, கூரையில் வேப்பிலை, கூரைப்பூ, ஆவாரம்பூ சொருகியும், மா இலை தோரணம், தோகையுடன் கூடிய கரும்பு வைத்தும் அழகுபடுத்தினர். இதனைத்தொடர்ந்து தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு வைத்து நிலைப்பொங்கல் வழிபாடு நடத்தப்பட்டது. அடுத்தபடியாக வடை, பாயாசம், சிறுதானியங்கள், போளி, மொச்சை, பருப்பு வகைகள் உள்ளிட்டவற்றை இறைவனுக்கு படைத்து, மதுரை மாவட்டத்தில் நிலை பொங்கல் அனுசரிக்கப்பட்டது.
- போகி பண்டிகை தமிழ்நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
- தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது.
சென்னை:
வீட்டில் உள்ள தேவையில்லா பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை நமது முன்னோர் கொண்டாடி வந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான போகி பண்டிகை தமிழ்நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டிகையை முன்னிட்டு மக்கள் பழைய பயனற்ற பொருட்களை எரித்து போகி பண்டிகையை வரவேற்று வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக சென்னை, மயிலாப்பூரில் போகி கொண்டாடி தைத்திருநாளை வரவேற்கும் பொருட்டு பழைய பயனற்ற பொருட்களை எரித்து போகி கொண்டாடி வருகின்றனர். போகி பண்டிகையை முன்னிட்டு மேளம் அடித்து சிறுவர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
- போகித் திருநாளில் நம் வாழ்வும் வளமும் மேம்பட, பழைய பொருட்களை எரிப்பதனை தவிர்க்க வேண்டும்.
- நச்சு வாயுக்களால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொதுமக்களுக்கு பாதிப்பும் ஏற்படுகிறது.
நாகர்கோவில்:
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர். ஆனால் தற்பொழுது போகி பண்டிகையின்போது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள் பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு இதனால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொது மக்களுக்கு பாதிப்பும் ஏற்படுகிறது.
எனவே குமரி மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) அனுசரிக்கப்படும் இந்த போகித் திருநாளில் நம் வாழ்வும் வளமும் மேம்பட, பழைய பொருட்களை எரிப்பதனை தவிர்க்க வேண்டும். எனவே புகையில்லா போகி கொண்டாடுவோம். சுற்றுச்சூழலை பேணிக் காப்போம். அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையை கொண்டாடி வந்துள்ளனர்.
- பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்ற வற்றை எரிப்பதால் காற்று மாசுபடுகிறது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன்பு வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையி ல்லாத பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையை கொண்டாடி வந்துள்ளனர். ஆனால் தற்பொழுது போகி பண்டிகையின் போது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்க ப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்ற வற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு இதனால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொதுமக்களுக்கு பாதிப்பும் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படு வதோடு விபத்து களுக்கும் காரணமாக உள்ளது. மேலும், விமானங்கள் வருகை மற்றும் புறப்படு வதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே, போகிப்ப ண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பொதுமக்கள் பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து புகையில்லா போகி பண்டிகை கொண்டாட வேண்டும்.
- போகி பண்டிகை பழைய பொருட்கள், குப்பைகளை எரிக்க வேண்டாம் என்று திருத்தணி நகர்மன்ற தலைவர் சரஸ்வதிபூபதி, நகராட்சி கமிஷனர் ராமஜெயம் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
செங்கல்பட்டு:
மறைமலைநகர் நகராட்சி கமிஷனர் லட்சுமி வெளியிட்டு உள்ள அறிவிப்பில், பொதுமக்கள் பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து புகையில்லா போகி பண்டிகை கொண்டாட வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
இதேபோல் திருத்தணி நகர்மன்ற தலைவர் சரஸ்வதிபூபதி, நகராட்சி கமிஷனர் ராமஜெயம் ஆகியோரும் போகி பண்டிகையின்போது பொதுமக்கள் பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து புகையில்லா போகி கொண்டாட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
- பேட்டரியால் இயங்கும் 3 சக்கர வாகனங்கள் மூலம் தெருக்களில் மாநகராட்சி ஊழியர்கள் காற்று மாசு இல்லாத போகிக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.
- மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலமாக விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை:
தமிழர் திருநாளான தை பொங்கல் திருநாள் கொண்டாட்டங்கள் தொடங்குவதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது.
14-ந்தேதி போகி பண்டிகை, 15-ந்தேதி தைப்பொங்கல், 16-ந்தேதி திருவள்ளுவர் தினம், மாட்டுப்பொங்கல், 17-ந்தேதி உழவர் திருநாள், காணும் பொங்கல் என்று 4 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் இல்லங்களில் விழாக்கோலம் பூண்டு இருக்கும்.
பொங்கல் பண்டிகையின் முதல் நாளாக கடைபிடிக்கப்படும் போகி பண்டிகை தினத்தன்று பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் தேவையில்லாத பழைய பொருட்களை எரிப்பார்கள். இதன் உண்மையான அர்த்தம் மருவி போனதால் வீடுகளில் இருக்கும் பழையப் பொருட்கள் தேவையில்லாத சாமான்களை வீட்டை விட்டு வெளியே எறியும் நாளாக மாற்றி விட்டனர்.
கடந்த சில ஆண்டுகளாக போகி தினத்தன்று பழைய பொருட்களை அதிகாலை நேரத்தில் தீ வைத்து எரிக்கும் பழக்கமும் வந்து விட்டது. ஆண்டுக்கு ஆண்டு பழைய துணிகள், டயர்கள், டியூப்புகள், பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றை எரிப்பது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
பழைய துணிகள், பிளாஸ்டிக் பொருட்களை அளவுக்கு அதிகமாக எரிப்பதால் சென்னையில் காற்று மாசு எச்சரிக்கை அளவை கடந்து மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மாறி விடுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 1 கோடியே 30 லட்சம் பேர் வசிக்கிறார்கள். மக்கள் அடர்த்தி காரணமாக ஏற்கனவே காற்று மாசு உள்ளது.
இதற்கிடையே வாகனங்கள் மூலம் வெளியாகும் புகை மாசும் சேர்ந்துக் கொள்கிறது. வழக்கமாக போகி கொண்டாடப்படும் நாளில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். இந்த நிலையில் பழைய துணிகள், பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதால் அது காற்றில் நச்சு துகள்களை பரவ செய்து விடுகிறது.
பனிப்பொழிவு அதிகமாக இருக்கும்பட்சத்தில் பிளாஸ்டிக் எரிக்கப்படும் போது மக்களிடம் மூச்சு திணறல் அபாயம் ஏற்படும். ஏற்கனவே ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு கூடுதல் பாதிப்பு உண்டாகும். எனவே இத்தகைய பாதிப்புகளை தடுத்து நிறுத்தும் வகையில் காற்று மாசு இல்லாத போகி பண்டிகையை கொண்டாடுமாறு கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு போகி கொண்டாட்டம் களை கட்ட உள்ளது. இதை கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சி புதிய நடவடிக்கை ஒன்றை எடுத்து உள்ளது. பொதுமக்கள் தேவையில்லாத பொருட்களை எரிப்பதற்கு பதில் அவற்றை தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
போகிப் பண்டிகையை முன்னிட்டு சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 13-ந்தேதி, 14-ந்தேதி ஆகிய நாட்களில் பொதுமக்கள் தங்களிடையே பயன்பாட்டில் இல்லாத பொருட்களான பழைய துணி, டயர், ரப்பர் டியூப் மற்றும் நெகிழி ஆகியவற்றை எரிப்பதை தவிர்த்திடும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சியின் 1 முதல் 15 வரையிலான மண்டலங்களில் உள்ள அனைத்து வார்டுகளிலும் மக்கள் தங்களிடையே உள்ள தேவையில்லாத பொருட்களை எரிப்பதை தவிர்த்து, அவற்றைத் தனியாக மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களிடம் நாளை (ஞாயிற்றுக் கிழமை) முதல் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாநகராட்சி அறிவித்துள்ளபடி நாளை முதல் தூய்மை பணியாளர்கள் வீடு வீடாக வர உள்ளனர். அவர்களிடம் பழைய துணிகள், டயர்களை பொதுமக்கள் ஒப்படைக்கலாம். இதற்காக மாநகராட்சி விழிப்புணர்வு பிரசாரத்தையும் இன்று (சனிக்கிழமை) தொடங்கி உள்ளது.
பேட்டரியால் இயங்கும் 3 சக்கர வாகனங்கள் மூலம் தெருக்களில் மாநகராட்சி ஊழியர்கள் காற்று மாசு இல்லாத போகிக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள். ஆடியோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலமாக விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆட்டோக்களில் ரேடியோ கட்டிவிழிப்புணர்வு செய்யப்படுவதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலாளர் ஆர்.கண்ணன் தெரிவித்தார்.
சமூக வலைதளங்களில், எப்.எம். ரேடியோக்கள் மூலமாகவும் காற்று மாசு இல்லாத போகி பண்டிகை பற்றி சொல்லப்பட்டு வருகிறது. இதற்கிடையே 13-ந்தேதி இரவு தொடங்கி பொதுமக்கள் பழைய துணிகள், டயர்களை எரிக்க வாய்ப்புள்ள உள்ளதால் அதை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
13-ந்தேதி இரவும், 14-ந்தேதி அதிகாலையிலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றி வந்து கண்காணிக்க உள்ளனர். இதன் மூலம் சென்னையில் காற்று மாசு ஏற்படுவதை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என்று கருதுகிறார்கள்.
கடந்த 2021-ம் ஆண்டு சென்னையில் போகி தினத்தன்று 2.6 டன் தேவையற்ற பழைய துணிகள், டயர்களை சென்னை மாநகராட்சியினர் பறிமுதல் செய்தனர். கடந்த ஆண்டு அந்த அளவு அதிகரித்தது. இந்த ஆண்டு சுமார் 3 டன் பழைய துணிகள், டயர்கள் சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுமக்கள் வழங்கும் பழைய துணிகள், டயர்கள், ரப்பர் டியூப்கள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றை மணலியில் நவீன ஆலையில் எரியூட்ட உள்ளனர்.
- விழிப்புணர்வு விளம்பர பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- தேவையில்லாத பொருட்களை மாநகராட்சியின் தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
சென்னை :
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
போகிப் பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலுள்ள பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் மாநகராட்சி மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் வருகிற 13 மற்றும் 14-ந்தேதிகளில் பொதுமக்கள் தங்களிடையே பயன்பாட்டில் இல்லாத பொருட்களான பழைய துணி, டயர், ரப்பர் டியூப் மற்றும் பிளாஸ்டிக் ஆகியவற்றை எரிப்பதை தவிர்த்திடும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே சென்னையிலுள்ள 1-வது முதல் 15-வது வரையிலான மண்டலங்களில் உள்ள அனைத்து வார்டுகளிலும், மக்கள் தங்களிடையே உள்ள தேவையில்லாத பொருட்களை எரிப்பதை தவிர்த்து, அவற்றை தனியாக மாநகராட்சியின் தூய்மை பணியாளர்களிடம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதுதொடர்பாக, பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர வாகனங்களில் ஆடியோ மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு விளம்பர பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்