search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சரவை"

    • கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என விஜய் அறிவித்தார்.
    • தங்கள் கட்சி, தொடங்கிய காலம் முதல் கூட்டணி கட்சியின் ஆதரவில் தான் ஆட்சிக்கு வந்துள்ளீர்கள்.

    விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நேற்று விக்கிரவாண்டியில் வைத்து நடந்து முடிந்தது. இதில் மற்ற அரசியல் கட்சிகளை மறைமுகமாக விமர்சித்து விஜய் பேசிய விஷயங்கள் பேசுபொருளாகி வருகிறது. மேலும் கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என விஜய் அறிவித்தார்.

    திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவனின் விசிக சார்பில் சமீபத்தில் இந்த கோரிக்கை ஒலிக்கத் தொடங்கிய நிலையில் தற்போது விஜய் கூறியுள்ளது அதை மீண்டும் தூண்டுவதாக அமைந்துள்ளது. இந்நிலையில் அமைச்சரவையில் இடம் வேண்டும் என்று திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி   பொதுச்செயலாளர் சரவணன் முதல்வர் ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்,

    தமிழக முதல்வரும் இந்தியா கூட்டணி கட்சி தமிழக தலைவருமான மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு வணக்கம். தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்கள் நேற்று நடைபெற்ற அவர்களது கட்சி மாநாட்டில் 2026 இல் நடைபெறுகின்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் தங்கள் கட்சி கூட்டணி ஆட்சிக்கு தயார் என பேசி உள்ளார்.

    ஆகவே தாங்கள் தற்பொழுது நமது கூட்டணி கட்சிகளுக்கு மந்திரி சபையில் இடம் அளிக்க வேண்டும். தங்கள் கட்சி, தொடங்கிய காலம் முதல் கூட்டணி கட்சியின் ஆதரவில் தான் ஆட்சிக்கு வந்துள்ளீர்கள்.

    எனவே தமிழகத்தில் தங்கள் தலைமையில் கூட்டணி ஆட்சி மலர்ந்தால் நல்லது. இதை தான் தமிழக மக்களும் எதிர்பார்க்கிறார்கள். எனவே தமிழக மக்களின் எண்ணத்தை நிறைவேற்றி தமிழகத்திற்கு தாங்கள் முன் உதாரணமாகத் திகழ வேண்டும் என்று தமிழக மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் இது தனது சொந்த கருத்து என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    • சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக முதல்வர் பதவி ஏற்றார்.
    • பவன் கல்யான் துணை முதல்வராக பதவி ஏற்றார்.

    ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம்,ஜனசேனா, பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது.

    175 பேரவை தொகுதிகளில் 164 தொகுதிகளையும், 25 மக்களவை தொகுதிகளில் 21 தொகுதிகளிலும் தெலுங்கு தேசம் கூட்டணி வெற்றி பெற்றது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக முதல்வர் பதவி ஏற்றார்.

    அந்த வகையில், ஆந்திரப் பிரதேசத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அமைச்சரவையின் இலாக்கா அறிவிக்கப்டட்டுள்ளது.

    முதல்வர் சந்திரபாபு நாயுடு பொது நிர்வாகத் துறை, சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட துறைகளை தன்வசம் வைத்துள்ளார்.

    அதன்படி, பவன் கல்யாண் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சித் துறை, ஊரக குடிநீர் விநியோகம், வனத்துறை, சுற்றுச்சூழல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகள் பவன் கல்யானுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷ், அமைச்சரவையில் 3வது இடத்தில் உள்ளார். அவருக்கு, மனிதவள மேம்பாடு, ஐ.டி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

    அச்சன் நாயுடுவுக்கு விவசாயம், கூட்டுறவு உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு.

    உள்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் அனிதாவிற்கு ஒதுக்கீடு.

    சுகாதாரத்துறை அமைச்சர் சத்திய குமார் யாதவுக்கு ஒதுக்கீடு.

    ஆந்திரா நிதியமைச்சராக பையாலுவா கேசவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    டாக்டர் நிம்மலா ராம நாயுடுவுக்கு நீர்வளத்துறை ஒதுக்கீடு.

    • புதிய அமைச்சரவையில் இதற்கு முன் இல்லாத அளவுக்கு கூட்டணி கட்சிகளுக்கு 11 இடங்கள் வரை கொடுக்கப்பட்டுள்ளது.
    • கடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்த பாஜகவின் மோடி 1.0 அமைச்சரவையில் 48 அமைச்சர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தனர்.

    மக்களவைத் தேர்தலில் 292 இடங்களை கைப்பற்றி பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. நேற்று இரவு நரேந்திர மோடி மீண்டும் இந்தியப் பிரதமராக 3 வது முறையாக பதவியேற்றார். அவருடன் 72 புதிய அமைச்சர்களும் பதவியேற்றனர்.

     

     

    புதிய அமைச்சரவையில் இதற்கு முன் இல்லாத அளவுக்கு கூட்டணி கட்சிகளுக்கு 11 இடங்கள் வரை கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தல்களை போல் அல்லாது இந்த தேர்தலில் தனிப்பெரும்பான்மையை இழந்துள்ள பாஜக ஆட்சியமைப்பதற்கு கூட்டணி கட்சிகளின் தயவை எதிர்நோக்கியது.

    குறிப்பாக 16 சீட் வைத்துள்ள சநதிரவிபாபு நாயுடுவின் தெலுங்குதேசமும், 12 சீட் வைத்துள்ள நிதிஷ் குமாரின் ராஷ்டிரிய ஜனதா தளமும் இந்த தேர்தலில் கேம் சேஞ்சர்களாக செயல்பட்டன. இந்நிலையில் இதற்கு முன் இல்லாத அளவுக்கு இந்த முறை அதிகபட்சமாக 72 பேரைக் ககொண்ட அமைச்சரவையை பாஜக உருவாகியுள்ளது கவனம் பெற்றுள்ளது.

    கடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்த பாஜகவின் மோடி 1.0 அமைச்சரவையில் 48 அமைச்சர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தனர். அதன்பின்னர் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவின் எம்.பி எண்ணிக்கை சற்றே குறைந்த நிலையில் 2.0 வில் 58 நபர்களைக் கொண்ட அமைச்சரவையை மோடி உருவாக்கினார். தற்போது அந்த எண்ணிக்கை மேலும் உயர்ந்து மோடி 3.0 வில் 72 ஆக மாறியுள்ளது.

     

    நாட்டில் நடக்கும் ஒரு ஆட்சியில் அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது என்பது ஆட்சியில் பலவீனத்தை குறிப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கிடையே இந்த முறை பாஜக ஆட்சி 1 வருடம் கூட நீடிக்காது என்று எதிர்க்கட்சியினர் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

    • இணையமைச்சர் பதவியை ஏற்க முடியாது என்பதை பாஜக தலைமைக்கு தெரிவித்துவிட்டேன்
    • மோடி அமைச்சரவையில் அஜித் பவார் கட்சி இடம்பெறவில்லை

    மகாராஷ்டிராவில் உள்ள 48 தொகுதிகளில் பாஜக 17 இடங்களில் மட்டும் தான் வென்றது. அதில் 1 இடத்தில் மட்டும் தான் அஜித் பவார் கட்சி வென்றது. அக்கட்சியின் பிரஃபுல் படேல் எம்.பி.யாக தேர்வானார்.

    இந்நிலையில், மத்திய அமைச்சரவையில் பிரஃபுல் படேலுக்கு வழங்கப்பட்ட இணையமைச்சர் பதவியை ஏற்க அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. அதனால் மோடி அமைச்சரவையில் அஜித் பவார் கட்சி இடம் பெறவில்லை.

    இது தொடர்பாக பேசிய மராட்டிய துணை முதல்வர் அஜித் பவார், "பிரஃபுல் படேல் ஏற்கனவே ஒன்றிய அமைச்சராக பதவி வகித்துள்ளார். அப்படி இருக்கும்போது இணையமைச்சர் பதவியை ஏற்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. எங்களுக்கு ஒன்றிய அமைச்சர் பதவி வேண்டும் என கேட்டுள்ளோம். அமைச்சர் பதவிக்காக காத்திருக்க தயார் என பாஜக தலைமையிடம் தெரிவித்து உள்ளோம்" என்று கூறியுள்ளார்.

    • புதிய அமைச்சரவையில் இணை அமைச்சர்களுடன் சேர்த்து 78 முதல் 81 பேர் இடம்பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • முக்கிய துறைகளில் பாஜகவினரே இடம்பெறுவர் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த ஜூன் 4 ஆம் தேதி வெளியான நிலையில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களை கைப்பற்றியது. கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. நேற்று முன் தினம் நடைபெற்ற என்.டி.ஏ புதிய எம்.பி.க்கள் கூட்டத்தில் கூட்டணியின் பாராளுமன்ற தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    கூட்டம் முடிந்த பின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்த மோடி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை வழங்கினார். இதனை தொடர்ந்து இன்று (ஜூன் 9) இரவு 7.15 மணிக்கு பிரதமராக மோடி 3-வது முறையாக பதவியேற்கிறார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மோடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். 7.15 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்வி 8.00 மணி வரை சுமார் 45 நிமிடங்கள் நடைபெறும்.

    முன்னதாக இன்று மோடியுடன் கேபினட் அமைசகர்களும் பதிவியேற்க அதிகம் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. அதன்படி புதிய அமைச்சரவையில் இணை அமைச்சர்களுடன் சேர்த்து 78 முதல் 81 பேர் இடம்பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுள் முக்கிய இலாகாக்களான நிதி, பாதுகாப்பு, வெளியுறவு ஆகிய துறைகளை சேர்த்து மொத்தம் 30 அமைச்சர்கள் இன்று மோடியுடன் பதவியேற்க உள்ளதா தகவல் வெளியாகியாகியுள்ளது. முக்கிய துறைகளில் பாஜகவினரே இடம்பெறுவர் என்று கூறப்படுகிறது.

    அமையவுள்ள புதிய அமைச்சரவையில் யார் யார் இடம்பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்புகளும் யூகங்களும் எழத் தொடங்கியுள்ளன. இந்த முறை பாஜக ஆட்சியமைக்க 12 சீட் வைத்துள்ள நிதிஷ் குமாரின் ஆர்.ஜே.டி கட்சியும், 16 சீட் வைத்துள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் முக்கிய காரணமாக உள்ளதால் அமைச்சரவையில் முக்கிய இலாகாக்கங்களுக்கு இந்த இரண்டு கட்சிகளும் அடிபோடுவதாக தெரிகிறது.

     

    தற்போது வெளியாகியுள்ள யூகங்களின்படி, விவசாயம், பழங்குடியின நலன், சிறுபான்மையினர் நலன், கல்வி, சிறு குறு தொழித்துறை ஆகியவை தெலுங்கு தேசம் கட்சிக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் எல்.பி.ஜெவுக்கும், ஜவுளித் துறை, கனிம வளம் மற்றும் சுரங்கத் துறை ஜே.டி.யுவுக்கும், திறன் மேம்பாட்டுத் துறை ஏக்நாத் ஷிண்டே அணிக்கும் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது.

    ஒதுக்கப்பட்ட இலாக்காக்களில் தெலுங்குதேசம் கட்சியை சேர்ந்த ராம் மோகன், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த குமாரசாமி, உத்தர பிரதேச மாநிலம் அப்னா தளம் கட்சியை சேர்ந்த அனுபிரியா பட்டேல், ராஷ்டிரிய லோக் தளம் கட்சி தலைவர் ஜெய்ந்த சவுத்ரி, பீகார் மாநிலம் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் லாலன் சிங், லொக் ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பஸ்வான், ஜித்தமன் ராம் மஞ்சி, சிவசேனாவின் பிரதாப்ராவ் ஜாதவ், ஷிராங் பர்னே ஆகியோர் கேபினட் மந்திரிகளாக பதவி ஏற்க வாய்ப்புள்ளது.

    • சிம்லாவில் உள்ள கவர்னர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடந்தது.
    • கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    இமாச்சல பிரதேச மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று பா.ஜனதாவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது.

    மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் காங்கிரஸ் 40 இடங்களில் வெற்றி பெற்றது. பா.ஜனதாவுக்கு 25 இடங்கள் கிடைத்தன.

    இமாச்சல முதலமைச்சர் சுக்வீந்தர் சிங் சுகு கடந்த மாதம் 11ம் தேதி பதவியேற்றார். அவருடன் முகேஷ் அக்னி கோத்ரி துணை முதலமைச்சராக பதவியேற்றார்.

    இந்தநிலையில் இமாச்சல பிரதேச அமைச்சரவை இன்று விஸ்தரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது.

    அதன்படி சிம்லாவில் உள்ள கவர்னர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடந்தது. 7 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். அவர்களுக்கு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    3 முறை எம்.எல்.ஏ.வான தானிராம் சண்டில், ஹர்ஷ்வர்தன் சவுகான், முன்னாள் துணை சபாநாயகர் ஜகத்சிங் நெகி ரோகித் தாகூர், விக்ரமாதித்யசிங் 3 முறை எம்.எல்.ஏ.வான அணிருதா சிங் சந்தர் குமார் ஆகிய 7 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

    இதில் விக்ரமாத்திய சிங் முன்னாள் முதலமைச்சர் வீர்பத்ரசிங்கின் மகன் ஆவார். இதன் மூலம் இமாச்சலபிரதேச அமைச்சரவை எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

    முதலமைச்சருடன் சேர்த்து 12 பேர் அமைச்சராகலாம். இதனால் 3 பேர் இன்னும் அமைச்சரவையில் இடம் பெறலாம்.

    ×