search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மண்பானை"

    • அட்சயா என்ற சொல்லுக்கு ஒருபோதும் குறைவில்லாதது என்று பொருள்.
    • அட்சய திருதியை நாளில் விஷ்ணுவின் பாதங்களில் சங்கு சமர்ப்பித்து வழிபடலாம்.

    இந்த ஆண்டு அட்சய திருதியை வருகிற 10-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. புதிய வணிகம், தொழில் தொடங்குவதற்கும், தங்கம், வெள்ளி பொருட்களை வாங்குவதற்கும் முக்கியமான நாளாக கருதப்படுகிறது.

    அட்சயா என்ற சொல்லுக்கு ஒருபோதும் குறைவில்லாதது என்று பொருள். இந்த நாளில் வாங்கும் பொருட்கள் மென்மேலும் வளரும், இந்த நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து நன்மையைக் கொடுக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. பண நெருக்கடி காரணமாக தங்கம், வெள்ளி போன்ற மதிப்புமிக்க பொருட்களை வாங்க முடியாத நிலையில் அதற்கு மாற்றாக வாங்க வேண்டிய பொருட்கள் குறித்து பார்ப்போம்.


    தானியங்கள்:

    வெண் கடுகு, அதாவது மஞ்சள் நிற கடுகு, பார்லி போன்ற தானியங்கள் அட்சய திருதியை அன்று லட்சுமி தேவியை வழிபட பயன்படுத்தப்படுகிறது. எனவே இந்த பொருட்களை அன்றைய தினம் வாங்குவது நல்லது. அரிசி போன்ற தானியங்கள், வளத்தின் அடையாளமாக விளங்கும் பருப்பு வகைகள், பசுமை மற்றும் ஆரோக்கியத்தின் அடையாளமான காய்கறிகள், புனிதப்பொருளான நெய் போன்றவற்றையும் வாங்கலாம்.

    சோழி:

    அட்சய திருதியை அன்று சோழி வாங்கலாம். லட்சுமி தேவியின் பாதங்களில் சோழிகளை காணிக்கை செலுத்தி வழிபடலாம். மறுநாள் அந்த சோழிகளை சிவப்பு துணியில் பொதிந்து பாதுகாப்பாக வைக்கவும். இது பொருளாதார வளர்ச்சி அடைய உறுதி செய்யும் என நம்பப்படுகிறது.


    மண்பானை:

    அட்சய திருதியை நாளில் வீட்டில் மண்பானை இருப்பது லட்சுமி தேவியை மகிழ்விக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. அன்றைய தினம் மண்பானை வாங்கி வைப்பது வீட்டில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் அதிகரிக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது.

    சங்கு:

    அட்சய திருதியை நாளில் விஷ்ணுவின் பாதங்களில் சங்கு சமர்ப்பித்து வழிபடலாம். அவ்வாறு செய்வதன் மூலம் விஷ்ணுவும், லட்சுமி தேவியும் மகிழ்ச்சி அடைவார்கள், வீட்டில் மகிழ்ச்சி தங்குவதும் உறுதி செய்யப்படும் என்ற கருத்தும் நிலவுகிறது.


    ஸ்ரீசக்கரம்:

    அட்சய திருதியை அன்று ஸ்ரீசக்கரம் வரைபடமும் வாங்கலாம். அதனை வீட்டின் பூஜை அறையில் வைக்க வேண்டும். இதன் மூலம் விஷ்ணு மற்றும் லட்சுமி தேவியின் தெய்வீக இருப்பிடம் உங்கள் வீட்டில் தங்கும் என்பது ஐதீகம்.

    • மண்பாண்ட தொழிலாளர்கள் பல்வேறு விதமான பொங்கல் பானைகளை உற்பத்தி செய்து வருகின்றனர்.
    • பொங்கல் தொகுப்புடன் சேர்த்து மண்ணால் செய்யப்பட்ட அடுப்பு மற்றும் மண்பானை வழங்க முன்வர வேண்டும்.

    உடுமலை:

    தமிழா்களின் பாரம்பரியம்,பண்பாட்டை வெளிப்படுத்தும் பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் தை மாதம் முதல் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது அரிசி, வெல்லம், நெய் சேர்த்து புதுப்பானையில் பொங்கலிட்டு சூரிய பகவானுக்கும், கால்நடைகளுக்கும் படைத்து கொண்டாடுவது தமிழா்களின் மரபாகும்.

    முன்னோர்கள் காலத்தில் இருந்தே புதிய பானையில் பொங்கலிடுவது வழக்கம். இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு சில நாட்களே உள்ள நிலையில் பொங்கல் வைக்க பயன்படுத்தப்படும் மண்பானைகள் தயாரிக்கும் பணி திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக மண்பாண்ட தொழிலாளர்கள் பல்வேறு விதமான பொங்கல் பானைகளை உற்பத்தி செய்து வருகின்றனர்.

    மண் பானையில் செய்யப்படும் பொங்கல் சத்தானதாகவும், சுவையானதாகவும் இருக்கும் என்பதால் மண்பானைகளும் தற்போது முக்கியத்துவம் பெற்று வருகிறது. இதனால் வியாபாரம் அதிகரிக்கும் என்பதால் மண்பானை உற்பத்தி செய்வதில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசு பொங்கலுக்கு தேவையான கரும்பு, பச்சரிசி, சக்கரை உள்ளிட்டவைகளை இலவசமாக வழங்கி வருகின்றது. இந்நிலையில் பொங்கல் தொகுப்புடன் சேர்த்து மண்ணால் செய்யப்பட்ட அடுப்பு மற்றும் மண்பானை வழங்க முன்வர வேண்டும். இதனால் மண்பானை தொழில் மேம்படும் என்று மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கலெக்டர் அலுவலகத்தில் மண்பாண்ட தொழிலாளர்கள் மனு
    • மழைக்கால நிவாரண நிதியை ரூ.8 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டுகோள்

    கோவை,

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் இன்று நடந்தது.

    கூட்டத்தில், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் மனுக்களை கலெக்டரிடம் நேரடியாக அளித்தனர்.

    தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கத்தி னர் மண்பானை, அடுப்புடன் வந்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    பொங்கல் விழாவின் போது விவசாயிகளின் நலனுக்காக அரிசி, பருப்பு, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களும், நெசவாளர்கள் நலன் காக்க வேட்டி, சேலையும் தமிழக அரசு கொள்முதல் செய்கிறது. இதேபோன்று, அழிந்து வரும் மண்பாண்ட தொழிலை காக்கவும், மண்பாண்ட தொழிலாளர்கள் நலன் காக்க அரிசியை புது பானையில் பொங்கலிட களிமண்ணால் ஆன ஒரு பானையும், ஒரு அடுப்பும் தமிழக அரசு கொள்முதல் செய்து இலவசமாக அளிக்க வேண்டும்.

    எங்கள் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைக்கிறோம்.

    மேலும், மழைக்கால நிவாரண நிதியை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரமாக உயர்த்தி வழங்கவும் ஆணை வழங்க வேண்டும். மண்பாண்ட தொழிலா ளர்கள் மண் பாண்டங்கள் செய்வதற்குரிய களி மண்ணை எடுத்துக் கொள்ள கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை என்ற அரசாணை வெளியிட்டுள்ள தமிழக அரசிற்கும், முதல்-அமைச்சருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    கோவை மாநகராட்சி 41-வது வார்டு கவுன்சிலர் சாந்தி தலைமையில் பொதுமக்கள் அளித்த மனுவில், கோவை பி.என்.புதூர் மருதமலை ரோட்டில் மயானத்திற்கு பின்புறம் பொதுமக்கள் எதிர்ப்பை மீறி புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்.

    நீலிகோணம்பாளையம் விநாயகர் நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், தட்சன் தோட்டம் விநாயகர் நகர் ெரயில்வே லைன் அருகே அதிகளவில் குப்பைகளை கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் முதியோர், குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் குப்பை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    • உடல்நலத்திற்கு கேடு விளைவிக்காதபடி குளுமையை அளிப்பது மண்பானைகள்.
    • 200 முதல் 500 ரூபாய் வரை விற்பனை மண்பானை செய்யப்படுகிறது.

    உடுமலை :

    கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கம் அனைவரையும் வாட்டி வதைக்கும் நிலையில் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்காதபடி குளுமையை அளிப்பது மண்பானைகள் தான்.பொருளாதார வசதியில்லாத மக்களும், மண்பானை பயன்படுத்த முடிவதால் இவை ஏழைகளின் ஏ.சி., என அழைக்கப்படுகிறது.இத்தகைய பானைகளுக்கு கோடை காலம் துவங்கி விட்டதால் விற்பனையும் அதிகரித்துள்ளது. உடுமலையில் பஸ் நிலையம், ராஜேந்திரா ரோடு, பழநி ரோடு, தளிரோடு உள்ளிட்ட பகுதிகளில் மண்பானைகள் விற்கப்படுகிறது.அங்கு 200 முதல் 500 ரூபாய் வரை, அதன் அளவுகளுக்கு ஏற்றபடி விற்பனை செய்யப்படுகிறது.

    பானைகளிலும் வசதிகளை மேம்படுத்தும் வகையில் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. மண்பாண்ட ஜக்குகள், குவளைகள் என பலவி தமான வடிவங்களிலும் உள்ளன.மடத்துக்குளம், கணியூர், கணக்கம்பா ளையம், பூளவாடி, உள்ளி ட்ட பகுதிகளிலிருந்து பானைகள் மொத்தமாக பெறப்பட்டு இங்கு சந்தை ப்படுத்தப்படுகின்றன. பொதுமக்களும் பானை களை பயன்படுத்துவதில் அதிகஆர்வம் காட்டுகின்றனர்.

    • குழாய் பொருத்திய மண் பானை என பல்வேறு வடிவங்களில், விற்பனைக்கு வந்துள்ளது.
    • ரூ. 250 முதல் ரூ.500 வரை விற்று வருகிறது.

    உடுமலை :

    உடுமலை பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. கோடை வெயிலுக்கு இயற்கையான, குளிர்ச்சியான குடிநீர் வழங்கும் மண் பானைகள் விற்பனை அதிகரித்துள்ளது.

    தண்ணீர் பானைகள், கூஜா, ஜாடி, உருண்டை வடிவம், பழைய செம்பு பானை வடிவத்திலான மண் பானை, குழாய் பொருத்திய மண் பானை என பல்வேறு வடிவங்களில், விற்பனைக்கு வந்துள்ளது. 10 லிட்டர் முதல் 30 லிட்டர் கொள்ளளவு கொண்ட பானைகள் வடிவம், கொள்ளளவு அடிப்படையில் ரூ. 250 முதல் ரூ.500 வரை விற்று வருகிறது.

    மண்பானை விற்பனையாளர்கள் கூறுகையில், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் வீடு, அலுவலகம், நிறுவனங்களுக்கு என பொதுமக்கள் மண் பானைகள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். தினமும் 100 பானைகள் விற்பனையாகிறது என்றனர்.

    • களிமண் தட்டுப்பாடு காரணமாக பானைகள் ரூ.100 முதல் 250 வரை விற்பனை செய்யப்படுகிறது.
    • ஏரிகளில் மண் எடுக்க அரசு அனுமதித்தால் விலை குறையும் விற்பனையும் அதிகரிக்கும்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் மண்பானை, சட்டி உள்ளிட்ட மண்பாண்டங்கள் தயாரிக்கும் குடும்பத்தினர் உள்ளனர். பொங்கல் திருநாள் விற்பனைக்காக ஒரு மாதமாக பொங்கல் பானை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

    நேற்று முதல் பானைகளை சந்தைகளில் விற்க துவங்கினர். களிமண் தட்டுப்பாடு காரணமாக பானைகள் ரூ.100 முதல் 250 வரையும், அடுப்புகள் ரூ.150 முதல் 200 வரையும் விலை சற்று அதிகமாக வைத்து விற்கப்பட்டது.

    இதனால் மண்பானை விற்பனை குறைந்தது, ஏரிகளில் மண் எடுக்க அரசு அனுமதித்தால் விலை குறையும் விற்பனையும் அதிகரிக்கும் என மண்பாண்டங்கள் தயாரிக்கும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

    • கரும்பு, மஞ்சள், இஞ்சி கொத்து, அகப்பை ஆகியவற்றை கலெக்டரிடம் கொடுத்து விழிப்புணர்வு.
    • அனைவரும் மண்பானை பயன்படுத்தி பொங்கலிட வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    தைத்திருநாள் பொங்கலை முன்னிட்டு மக்கள் அனைவரும் மண்பானையில் பொங்கலிட வலியுறுத்தி திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்வி நிறுவனம் மற்றும் மகரிஷி சி.பி.எஸ்.இ பள்ளி மாணவ-மாணவிகள் இணைந்து நேற்று மண்பானை, கரும்பு, மஞ்சள், இஞ்சி கொத்து, அகப்பை ஆகியவற்றை திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணனிடம் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதில் கல்லூரி இயக்குநர் பேசுகையில், நமது முன்னோர்கள் மண்பானையில் பயன்படுத்தி உணவுகள் உண்டதால் அவர்கள் நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வமாக வாழ்ந்து வந்தனர் என்றார்.

    கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் பேசும்போது, தற்போது இருக்கும் சூழ்நிலையில் இந்த விழிப்புணர்வு மிகவும் ஏற்றதக்க வகையில் இருக்கிறது. மண்பானை செய்யக்கூடிய தொழிலாளர்கள் நலமும் வளமும் பெற அனைவரும் மண்பானையினை பயன்படுத்தி பொங்கலிட வேண்டும் என்றார்.

    இந்நிகழ்வில் கல்லூரியின் தலைவர் தாளாளர் வெங்கட்ராஜுலு, செயலர் சுந்தர்ராஜீ, முதன்மை செயல் அதிகாரி நிர்மலா ஆனந்த், இயக்குனர் விஜயசுந்தரம், நிர்வாக அலுவலர் சீதா கோபாலன், முதல்வர்கள் சிவகுருநாதன், கலைமகள், சுமித்திரா மற்றும் துறை தலைவர்கள் ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ×