search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகையில்லா போகி"

    • 25-வது வார்டுயில் உள்ள பெண்களுக்கு பிளாஸ்டிக் இல்லா மாநகராட்சி மற்றும் புகையில்லா போகி என்ற தலைப்பில் கோலப்போட்டி நடத்தது.
    • கோலத்திற்கு சிறப்பு பரிசுகளும் கலந்து கொண்டவர்களுக்கு ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாநகராட்சி 25-வது வார்டுக்கு உட்பட்ட தத்தோஜியப்பா சந்தில் பிளாஸ்டிக் இல்லா மாநகராட்சி மற்றும் புகையில்லா போகி என்ற தலைப்பின் கீழ் கோலப்போட்டி நடத்தப்பட்டது.

    இதற்கு 25-வது வார்டு கவுன்சிலர் ஆர்.தெட்சணாமூர்த்தி தலைமை தாங்கினார்.

    மாநகர் நல அலுவலர் சுபாஷ் காந்தி மற்றும் துப்புரவு ஆய்வாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் பெண்கள் விழிப்புணர்வு கோலங்கள் இட்டனர்.

    சிறந்த கோலத்திற்கு சிறப்பு பரிசுகளும் கலந்து கொண்டவர்களுக்கு ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது.

    மேலும் புகையில்லா போகி குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு பிரசுரங்கள் கொடுக்கப்பட்டன.

    • தூய்மை காவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் நகராட்சி சார்பில் புகையில்லா போகி கொண்டாடுவது குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்க நிகழ்ச்சி மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளர் ஜெயராமராஜா தலைமை வகித்து புகையில்லா போகி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி தூய்மை காவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏற்றனர்.

    பின்னர் பஸ் நிலையத்தில் இருந்து புகையில்லா போகி கொண்டாடுவது குறித்து துண்டு பிரசுரங்களை நகராட்சித் தலைவர் சங்கீதா வெங்கடேஷ் வழங்கி தொடங்கி வைத்து பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது;:-

    பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய பாய் தலையணை மற்றும் துணிகளை யாரும் எரித்து போகி கொண்டாட வேண்டாம், அதற்கு பதில் தங்களிடம் உள்ள பழைய துணி மற்றும் பாய் தலையணைகள் தூய்மை காவலர்களிடம் வழங்க வேண்டும், என கூறினார். நிகழ்ச்சியில் நகராட்சி துணைத் தலைவர் சபியுல்லா, நகராட்சி கவுன்சிலர்கள் கே.ஆர். ராஜேந்திரன் என்கின்ற வெள்ளை ராஜா, ஆர். கோமதி ராஜா, உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வமாக முக்கிய வீதிகள் வழியாக புகையில்லா போகி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது அப்போது பொது மக்களிடம் இருந்து பழைய பொருட்களை தூய்மை காவலர்கள் சேகரித்தனர்.

    நிகழ்ச்சியில் தூய்மை காவலர்கள், உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர் இறுதியில் துப்புரவு அலுவலர் இளங்கோ நன்றி கூறினார்.

    • 30 இடங்களில் உபயோகமற்ற பொருள்களைப் பெறுவதற்கு இன்று முதல் 14-ந் தேதி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • கவுண்டம்பாளையம் சுகாதார ஆய்வாளா் அலுவலகம் ஆகிய இடங்களில் வழங்கலாம்.

    கோவை,

    கோவை மாநகராட்சியில் புகையில்லா போகியை கொண்டாடும் வகையில் 30 இடங்களில் இன்று முதல் குப்பைகள் சேகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    போகி பண்டிகையை முன்னிட்டு, புகையில்லா போகியை கடைப்பிடிக்கும் வகையிலும் மக்கள் தங்கள் வீட்டில் உள்ள உபயோகமற்ற பொருள்களை தீ வைத்து எரிப்பதைத் தவிா்ப்பதற்காக, மாநகராட்சியில் உள்ள 5 மண்டலத்துக்கு உட்பட்ட 30 இடங்களில் உபயோகமற்ற பொருள்களைப் பெறுவதற்கு இன்று முதல் 14-ந் தேதி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, கீழ்க்கண்ட இடங்களில் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களிடம் மக்கள் தேவையற்ற பொருள்களை வழங்கலாம்.

    கிழக்கு மண்டலத்தில் சிட்ரா காா்னா், காளப்பட்டி நான்கு சாலை, சந்திர காந்தி நகா் சுகாதார ஆய்வாளா் அலுவலகம், வரதராஜபுரம், சிங்காநல்லூா் பஸ் நிலையம், சிங்காநல்லூா் உழவா் சந்தையும், மேற்கு மண்டலத்தில் பனைமரத்தூா் குப்பை மறுசுழற்சி மையம், வடவள்ளி சுகாதார ஆய்வாளா் வாா்டு அலுவலகம், ஆா்.எஸ்.புரம் சாஸ்திரி மைதானம், கவுண்டம்பாளையம் சுகாதார ஆய்வாளா் அலுவலகம் ஆகிய இடங்களில் வழங்கலாம்.

    வடக்கு மண்டலத்தில் துடியலூா் சந்தை, நுண்ணுயிா் உரம் தயாரிப்பு மையம், சரவணம்பட்டி சுகாதார ஆய்வாளா் அலுவலகம், சின்னவேடம்பட்டி சுகாதார ஆய்வாளா் அலுவலகம், கே.ஆா்.ஜி.நகா், கணபதி சுகாதார ஆய்வாளா் அலுவலகம், ராமசாமி நகா், நுண்ணுயிா் உரம் தயாரிப்பு மையம் மற்றும் கவுண்டம்பாளையம் வாா்டு அலுவலகத்தில் பெறப்படும்.

    தெற்கு மண்டலத்தில் சொக்கம்புதூா் குப்பை மறுசுழற்சி மையம், புல்லுக்காடு குப்பை மறுசுழற்சி மையம், கோவைப்புதூா் சுகாதார ஆய்வாளா் வாா்டு அலுவலகம், கணேசபுரம் தருண் ரெசிடென்சி ஆகிய இடங்கள்.

    மத்திய மண்டலத்தில் காந்திபுரம் பஸ் நிலையம், மத்திய பஸ் நிலையம், கிராஸ்கட் சாலை சுகாதார ஆய்வாளா் வாா்டு அலுவலகம், தியாகி குமரன் மாா்க்கெட், உக்கடம் மாா்க்கெட், ராஜவீதி தோ்த்திடல், செட்டிவீதி, உக்கடம் பஸ் நிலையம், ரேஸ்கோா்ஸ் சுகாதார ஆய்வாளா் வாா்டு அலுவலகம் , ெரயில் நிலையம் அருகில் உள்ளிட்ட இடங்களில், போகி குப்பை வாங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×