என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈரோடு கிழக்கு தொகுதி"

    • தி.மு.க. ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டுகளில் வரும் முதல் இடைத்தேர்தல் என்பதால் இது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
    • பா.ஜனதாவுக்கும், அ.தி.மு.க.வுக்கும் இடையே சமீப காலமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா திடீர் மரணம் அடைந்ததால் தொகுதி காலியானதாக சட்டசபை செயலாளர் அறிவித்தார். மேலும் இது தொடர்பாக அவர் தமிழக தேர்தல் அதிகாரிக்கு தகவல் தெரிவித்து உள்ளார். அவர் மூலம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

    ஒரு தொகுதி காலியானால் 6 மாத காலத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தவேண்டும். அதன்படி மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்று தெரிகிறது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் முறைப்படி அறிவிக்கும்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டுகளில் வரும் முதல் இடைத்தேர்தல் என்பதால் இது முக்கியத்துவம் பெற்றுள்ளது. எனவே மக்கள் மத்தியில் ஆட்சியின் மீது உள்ள நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் இந்த தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்பதால் தி.மு.க. போட்டியிடும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    அதே நேரத்தில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டால் பிரபலமான ஒரு வேட்பாளர் தேர்வு செய்யப்பட வேண்டும். எனவே தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர் தற்போதே தங்களுக்கு தெரிந்த தலைவர்கள் மூலம் காய் நகர்த்தி வருகின்றனர்.

    அதேபோல் கடந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. சார்பில் யுவராஜா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அ.தி.மு.க.வின் கோட்டையாக விளங்கிய ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 2021 தேர்தலுக்கு முன்பு 2011, 2016 தேர்தல்களில் தொடர்ந்து 2 முறை அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வெற்றி பெற்றது. இதில் 2011 தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட சந்திரகுமார் வெற்றி பெற்றார். 2016-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த கே.எஸ்.தென்னரசு வெற்றி பெற்றார். ஆனாலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டும் யுவராஜா கடந்த தேர்தலில் தோல்வி அடைந்தார்.

    எனவே இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வே நேரடியாக போட்டியிடும் என்று கூறப்படுகிறது. ஈரோடு கிழக்குதொகுதி மாநகராட்சி மற்றும் சில கிராம பகுதிகளை உள்ளடக்கியது ஆகும்.

    கடந்த தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க. அதிக தொகுதிகளை கைப்பற்றியது. குறிப்பாக ஈரோட்டில் உள்ள 8 தொகுதிகளில் கோபி செட்டிபாளையம், பவானி சாகர், பெருந்துறை, பவானி ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க.வும், மொடக்குறிச்சி தொகுதியில் கூட்டணி கட்சியான பா.ஜ.கவும் வெற்றி பெற்றது.

    மொத்தம் உள்ள 8 தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி 5 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி ஈரோடு கிழக்கு, மேற்கு, அந்தியூர் ஆகிய 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. எனவே இந்த இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தனது செல்வாக்கை காட்ட அ.தி.மு.க. சார்பில் வேட்பாளரை நிறுத்தலாம் என்று தெரிகிறது.

    அ.தி.மு.க. இடைத்தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவர்களை எதிர்க்க தி.மு.க.வும் தயாராகி வருகிறது. கொங்கு மண்டலம் அ.தி.மு.க. கோட்டை அல்ல அது தி.மு.க.வின் கோட்டை என்று நிரூபிக்கும் வகையில் இந்த தேர்தல் அமையும்.

    அ.தி.மு.க. போட்டியிடும் பட்சத்தில் அவர்களை எதிர்கொள்ள தி.மு.க.வினர் தயாராகி வருகின்றனர். இதனால் இந்த இடைத்தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கிடையே பா.ஜனதாவும் கொங்கு மண்டலம் தங்களது கோட்டை என்று கூறி வருகிறது. இங்கு தான் பா.ஜனதாவுக்கு 2 பெண் எம்.எல்.ஏக்கள் ( வானதி சீனிவாசன், சரஸ்வதி) உள்ளனர். மேலும் புத்தாண்டு அன்று பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை ஒரு டுவிட்டர் பதிவு வெளியிட்டார். அதில் கடந்த காலங்களில் தமிழக பா.ஜ.க., தனித்துப்போட்டியிட்டதுண்டு. இனி வரும் காலங்களில் மீண்டும் இதை செய்ய தயங்காது என்றும், தி.மு.க. கூட்டணி இல்லாமல் போட்டியிட தயாரா? என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

    மேலும் பா.ஜனதாவுக்கும், அ.தி.மு.க.வுக்கும் இடையே சமீப காலமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருகிறது. அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி என்று பேசினார். மேலும் சில அ.தி.மு.க.வினரும் பா.ஜனதாவினருடன் கருத்து மோதலில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் வருகிற 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வருகிறது. எனவே அதற்கு முன்னோட்டமாகவும், கொங்கு மண்டலத்தில் உள்ள தங்களது செல்வாக்கை நிரூபிக்கவும் சரியான வாய்ப்பாக இந்த இடைத்தேர்தலை பயன்படுத்த பா.ஜனதா தனித்து போட்டியிட திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. தங்கள் ஆட்சியின் மக்கள் செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதே போல் கொங்கு மண்டலம் தங்களது கோட்டை என்பதை நிருபிக்க எடப்பாடி பழனிசாமியும் அ.தி.மு.க.வை வெற்றி பெற வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு உள்ளது.

    எனவே தி.மு.க., அ.தி.மு.க.வே நேரடியாக மோதுமா? அல்லது கடந்த தேர்தல் போல் கூட்டணி கட்சிகளுக்கே போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்குமா? என்று தேர்தல் தேதி அறிவித்தப்பின் தெரியவரும்.

    இதற்கிடையே ஈரோடு கிழக்கு தொகுதியின் நிலவரம் குறித்து உளவுப்பிரிவு போலீசாரும் விவரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • ஈரோடு கிழக்கு தொகுதியில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 140 பெண் வாக்காளர்கள் உள்ளனர்.
    • ஈரோடு கிழக்கு தொகுதியில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் 5 ஆயிரத்து 427 பேர் அதிகமாக உள்ளனர்.

    ஈரோடு:

    தேர்தல் ஆணையம் சார்பில் கடந்த 5-ந் தேதி வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 713 ஆண் வாக்காளர்களும் 1 லட்சத்து 16 ஆயிரத்து 140 பெண் வாக்காளர்களும் மற்றவர்கள் 23 பேர் என மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 876 வாக்காளர்கள் உள்ளனர்.

    இந்த தொகுதியில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் 5 ஆயிரத்து 427 பேர் அதிகமாக உள்ளனர்.

    • அ.தி.மு.க. சார்பில் கடந்த முறை தேர்தலில் கூட்டணி கட்சியான த.மா.கா.வுக்கு இடம் ஒதுக்கப்பட்டது.
    • இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட பலர் முயற்சி செய்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4-ந் தேதி மரணமடைந்தார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து இன்னும் 6 மாதத்திற்குள் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. உள்பட பல்வேறு கட்சிகள் களம் இறங்க முடிவு செய்துள்ளனர்.

    அ.தி.மு.க. சார்பில் கடந்த முறை தேர்தலில் கூட்டணி கட்சியான த.மா.கா.வுக்கு இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட பலர் முயற்சி செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக வாக்காளர் பட்டியல் பணி குறித்த ஆலோசனை கூட்டம் மற்றும் பூத் கமிட்டி கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.தென்னரசு, ராமசாமி, முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கிழக்கு தொகுதியில் ஒவ்வொரு வார்டுகளுக்கும் பூத்து கமிட்டி அமைப்பது தொடர்பாகவும், வார்டு செயலாளர்களுக்கு வாக்காளர் பட்டியலை வழங்கி தேர்தல் பணியாற்றுவது தொடர்பாக ஆலோசனை வழங்கப்பட்டது.

    கூட்டத்தில் கே.வி.ராமலிங்கம் பேசியதாவது:-

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் துர்திஷ்டவசமானது என்றாலும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கை காட்டும் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். தி.மு.க. அரசு தேர்தலின் போது கூறிய வாக்குறுதிகளை காப்பாற்றவில்லை.

    அ.தி.மு.க. கொண்டு வந்த பல்வேறு திட்டங்களையும் நிறுத்தி விட்டனர். மின் கட்டணம், சொத்து வரி உயர்வு, குப்பை வரி, பால் விலை உயர்வு என பல பொருட்கள் விலை உயர்ந்து விட்டன. இதை மக்களிடம் எடுத்து சொல்லுங்கள் என்றார்.

    இதில் பகுதிச்செயலாளர் கேசவமூர்த்தி, ஜெயராஜ், மாவட்ட வக்கீல் அணி தலைவர் துரை சக்திவேல், பெரியார் நகர் பகுதி அவை தலைவர் மீன் ராஜா, முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார், அண்ணா தொழிற்சங்கல் மாவட்ட இணை செயலாளர் மாதையன் உள்பட கலந்து கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. இதனால் அ.தி.மு.க.வினர் உற்சாகமடைந்துள்ளனர்.

    • ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் த.மா.கா.வும் போட்டியிட தயாராக இருப்பதாக தெரிய வந்துள்ளது.
    • அ.தி.மு.க.-த.மா.கா இடையே எந்த ஒரு போட்டியோ மோதலோ ஏற்படவில்லை.

    ஈரோடு:

    அ.தி.மு.க. பூத் கமிட்டி அமைத்து தேர்தல் பணி தொடங்கியது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் விடியல் சேகரிடம் கேட்டபோது கூறியதாவது:-

    கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டது. த.மா.கா சார்பில் போட்டியிட்ட யுவராஜ் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

    இந்த சூழ்நிலையில் இடைத்தேர்தல் வந்துள்ளது. கூட்டணி தர்மபடி தமிழ் மாநில காங்கிரசுக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட வேண்டியது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இந்த சூழ்நிலையில் அ.தி.மு.க. கூட்டணி பொருத்தவரை தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலம் அவகாசம் இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தலைவர் ஜி.கே.வாசன் முறைப்படி கூட்டணி கட்சித் தலைவர்களுடன் பேசி முடிவு செய்வார். நாங்கள் தொடர்ந்து அ.தி.மு.க.வுடன் இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். அ.தி.மு.க.வை பொருத்தவரை அவர்கள் தேர்தல் பணி தொடங்கி விட்டார்கள். கூட்டத்தில்கூட கூட்டணி வேட்பாளர் வெற்றிக்கு பாடுபடுவோம் என்று முடிவு செய்துள்ளனர். இதனால் அ.தி.மு.க.-த.மா.கா இடையே எந்தஒரு போட்டியோ மோதலோ ஏற்படவில்லை.

    அ.தி.மு.க, தமிழ் மாநில காங்கிரஸ், பாரதி ஜனதா ஆகிய எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து பலமான எதிர்கட்சியாக உள்ளது. ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் அதிருப்தியில் உள்ளனர். கடந்த 18 மாதமாக பல்வேறு பிரச்சினைகள் மக்கள் சந்தித்து வருகின்றனர். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

    இந்த தேர்தலை பொருத்தவரை நாங்கள் அ.தி.மு.க. தலைமையில் தி.மு.க. அரசின் விரோத போக்கை எடுத்து கூறுவோம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு இரண்டு தலைவர்கள் கூடி பேசி முடிவு செய்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதன் மூலம் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் த.மா.கா.வும் போட்டியிட தயாராக இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதனால் இப்போதே தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி விட்டது.

    • எடப்பாடி பழனிசாமியின் கட்சி தலைமைக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் இந்த தொகுதியில் அ.தி.மு.க.வே போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
    • எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா போல் எடப்பாடி பழனிசாமியும் வேட்பாளரை நிறுத்துவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4-ந்தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதியில் கடந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவெரா போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதேபோல் அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. சார்பில் யுவராஜ் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

    இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட த.மா.கா. விருப்பம் தெரிவித்து உள்ளது. ஆனால் அ.தி.மு.க.வினர் இந்த தொகுதியில் பூத் கமிட்டி அமைத்து தேர்தல் பணியை தொடங்கி விட்டனர். அ.தி.மு.க. தொடர்பான வழக்கு கோர்ட்டில் இருந்து வரும் நிலையில் அ.தி.மு.க.வினர் இடைத்தேர்தல் பணிகளை தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம் அல்லது முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு ஆகியோரில் ஒருவருக்கு இந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் தெரிகிறது.

    எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கிய 6 மாத காலத்தில் 1973-ல் திண்டுக்கல் தொகுதி இடைத்தேர்தலில் மாயத்தேவரை நிறுத்தி வெற்றி பெற்றார். எம்.ஜி.ஆரின் வழியை பின்பற்றி 1989-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜெயலலிதா அணி 27 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமியும் ஒருவர் ஆவார். எனவே எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும் துணிச்சலாக ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற செய்வார் என்று கட்சியினர் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

    எடப்பாடி பழனிசாமியின் கட்சி தலைமைக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் இந்த தொகுதியில் அ.தி.மு.க.வே போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    எனவே எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா போல் எடப்பாடி பழனிசாமியும் வேட்பாளரை நிறுத்துவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடக்கிறது.
    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடக்கிறது.

    அவிநாசி:

    கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய 3 மாவட்டத்தை உள்ளடக்கி அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. 98 சதவீதம் பணிகள் முடிந்துவிட்ட நிலையில் திட்டத்தை வெள்ளோட்டம் பார்த்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்படுகிறது.இருப்பினும் வருகிற ஏப்ரல் மாதம் திட்டம் வெள்ளோட்டம் பார்க்கப்படும் என நீர்வளத்துறையினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடக்கிறது.

    60 ஆண்டு கனவு திட்டமான அத்திக்கடவு- அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டம் அ.தி.மு.க., ஆட்சியில் அதுவும் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போதுதான் நிதி ஒதுக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது.எனவே, அக்கட்சியினருக்கு இத்திட்டம் தேர்தல் பிரசாரத்தின் போது துருப்புச் சீட்டாக இருக்கப்போகிறது.

    அ.தி.மு.க., ஆட்சியின் போது திட்டம் கொண்டு வரப்பட்டாலும் திட்டம் எவ்வித தொய்வுமின்றி நடந்து முடிய தி.மு.க., அரசு தான் காரணம் என தி.மு.க.,வினர் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளனர். பல்வேறு கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ள விடுபட்ட குளம், குட்டைகளை இணைப்பது தொடர்பான வாக்குறுதி களையும் அவர்கள் அளிக்கக்கூடும்.

    அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக் குழுவினர் கூறுகையில், ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை, ஈரோடு கிழக்கு, மேற்கு மாவட்டங்களில் பயன் குறைவு. மாறாக பெருந்துறை, சென்னிமலை, நம்பியூர், கோபி, பவானிசாகர் வட்டாரங்கள் தான் அதிகம் பயன் பெறும்.இருப்பினும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அத்திக்கடவு திட்டம் சார்ந்து அரசியல் கட்சியினர் பிரசாரம் செய்வர் என்பதால் திட்டத்தை விரைந்து முடிப்பதற்கான வாய்ப்பு ஏற்படும் என்றனர்.

    • தி.மு.க.வே ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ளது.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மரணம் அடைந்ததை தொடர்ந்து அத்தொகுதிக்கு பிப்ரவரி மாதம் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த 3½ ஆண்டுகளில் 3-வது தேர்தலை சந்திக்க உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் மீண்டும் காங்கிரஸ் கட்சி போட்டியிடுமா? இல்லை தி.மு.க. களம் இறங்குமா? என்பது 2 கட்சிகளை சேர்ந்தவர்கள் மத்தியிலும் பலத்த கேள்வியாகவே இருந்து வருகிறது.

    ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மகனான சஞ்சய்க்கு மேல்சபை எம்.பி. பதவியை கொடுத்து விட்டு தி.மு.க.வே ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் ஆலோசித்து வருகிறார்கள். இதுபற்றி விரைவில் முடிவு எடுத்து போட்டியிடும் வேட்பாளரையும் அறிவிக்க உள்ளனர்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ளது. கடந்த முறை இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு மீண்டும் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    அதே நேரத்தில் ஈரோடு மாவட்ட அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகளான வீரகுமார், ஆற்றல் அசோக் குமார் ஆகியோரது பெயர்களும் அடிபடுகின்றன.

    இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசித்து வருகிறார். நிர்வாகிகளுடன் கலந்து பேசி அ.தி.மு.க. வேட்பாளர் யார்? என்பதை அவர் விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஈரோடு களஆய்வின் போது மக்கள் ஆதரவை பார்க்கும் போது 200 தொகுதிகளையும் தாண்டி தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி.
    • 2026 தேர்தலில் 200 தொகுதியில் வெற்றி என இலக்கு நிர்ணயித்தோம். ஆனால் 200ஐ தாண்டி வெற்றி பெறுவோம்.

    கோவை :

    கோவையில் முன்னாள் எம்.பி. மோகன் உயிரிழந்த நிலையில், அவருடைய குடும்பத்தாரை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

    * ஈரோடு கிழக்கு தொகுதியில் மீண்டும் தி.மு.க. கூட்டணி போட்டியிடும்.

    * ஈரோடு களஆய்வின் போது மக்கள் ஆதரவை பார்க்கும் போது 200 தொகுதிகளையும் தாண்டி தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி.

    * 2026 தேர்தலில் 200 தொகுதியில் வெற்றி என இலக்கு நிர்ணயித்தோம். ஆனால் 200ஐ தாண்டி வெற்றி பெறுவோம்.

    * ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றிபெறும் என்றார். 

    • ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
    • மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களது அடையாள அட்டையை போலீசாருக்கு காண்பித்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் 14-ந்தேதி உடல் நலக்குறைவால் இறந்தார். இதைத்தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

    இந்நிலையில் வரும் பிப்ரவரி 5-ந்தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. உடனடியாக ஈரோடு கிழக்கு தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்தது. பறக்கும் படையினர் நேற்று இரவு முழுவதும் விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் இன்று ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் கட்டுப்பாடு அறை திறக்கப்பட்டது.

    இந்த தேர்தல் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜகோபால் சுன்கரா, ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் டாக்டர்.மணிஷ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    கட்டுப்பாட்டு அறையில் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவினரின் கண்காணிப்பு பணிகள், தேர்தல் தொடர்பான புகார்கள் மற்றும் விதிமீறல்கள் பதிவு செய்து அவற்றிற்கு நடவடிக்கை எடுப்பது, பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்யப்படும் ரொக்கம் மற்றும் பரிசுகள், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைப்பது போன்ற பணிகள் நடைபெறும்.

    மேலும் சி-விஜில் செயலி மூலம் பெறப்படும் புகார்களுக்கு இங்கிருந்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க பறக்கும் படைக்கு உத்தரவிடப்படும் என அதிகாரிகள் தெரிவி த்தனர். இதையடுத்து ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களது அடையாள அட்டையை போலீசாருக்கு காண்பித்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

    • பெரும்பாலான அ.தி.மு.க. தலைவர்கள் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருவதாக தெரிகிறது.
    • விக்கிரவாண்டியை போல இந்த தேர்தலையும் அ.தி.மு.க. புறக்கணிக்கவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக அந்த கட்சி வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் வேட்பாளர் தேர்வு சுமூகமாக நடக்க தொடங்கி உள்ள நிலையில் அ.தி.மு.க. போட்டியிடுமா? போட்டியிடாதா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    தமிழக சட்டசபைக்கு 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலுக்கு பிறகு விக்கிரவாண்டி, ஈரோடு கிழக்கு ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்துள்ளது. இந்த 2 இடைத்தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியே வெற்றி பெற்றது.

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடந்த போது தி.மு.க. கூட்டணிக்கும், அ.தி.மு.க. கூட்டணிக்கும் நேரடி பலப்பரீட்சை நடந்தது. தி.மு.க. தலைவர்கள் அங்கு வெற்றிக்கனியை பறிக்க வேண்டும் என்பதை கவுரவ பிரச்சனையாக மனதில் கொண்டு தீயாக வேலை பார்த்தனர்.

    இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட இளங்கோவன் 66.82 சதவீத வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். ஆனால் அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசு 25.75 சதவீத வாக்குகளே பெற முடிந்தது.

    இந்த தோல்வி காரணமாக அ.தி.மு.க. செல்வாக்கு இழந்து விட்டதாக கருதப்பட்டது. ஆனால் அ.தி.மு.க. தலைவர்கள் கூறுகையில், "தி.மு.க. கூட்டணியினர் அதிகார பலத்தையும், பணப் பலத்தையும் பயன்படுத்தி வெற்றி பெற்று விட்டனர்" என்று கூறினார்கள்.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடந்த போது அ.தி.மு.க. புறக்கணித்தது. தேர்தல் நியாயமாக நடக்காது. பணத்தை அள்ளி வீசி வாக்காளர்களை திசை திருப்புவார்கள் என்று கூறி அ.தி.மு.க. போட்டியிடாமல் ஒதுங்கி கொண்டது.

    விக்கிரவாண்டி தொகுதியில் வன்னியர்கள் அதிகம் என்பதால் பா.ம.க.வை மறைமுகமாக ஆதரிக்கும் வகையில் புறக்கணிப்பு முடிவை அ.தி.மு.க. மேற்கொண்டது. எடப்பாடி பழனிசாமியின் அந்த முடிவு மாறுபட்ட விமர்சனங்களை உருவாக்கியது.

    இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மீண்டும் தேர்தல் வந்து இருப்பதால் அ.தி.மு.க. என்ன முடிவு எடுக்கும் என்ற சூழல் நிலவுகிறது. இதில் இறுதி முடிவு எடுக்க 11-ந்தேதி மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். இதில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடலாமா? வேண்டாமா? என்று விவாதித்து முடிவு எடுக்க உள்ளனர்.

    பெரும்பாலான அ.தி.மு.க. தலைவர்கள் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருவதாக தெரிகிறது. ஈரோடு கிழக்கில் மீண்டும் தோல்வியை தழுவினால் அது கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க.வுக்கு இருக்கும் இமேஜை பாதிக்கும் என்று அவர்கள் கூறி வருகிறார்கள்.

    எனவே விக்கிரவாண்டியை போல இந்த தேர்தலையும் அ.தி.மு.க. புறக்கணிக்கவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக அந்த கட்சி வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

    ஆனால் சில மூத்த தலைவர்கள் அ.தி.மு.க. கண்டிப்பாக போட்டியிட வேண்டும் என்று கூறி வருகிறார்கள். விக்கிரவாண்டியில் வன்னியர்கள் அதிகம் இருந்ததால் அங்கு கள நிலவரம் வேறுவிதமாக இருந்தது. எனவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலுடன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ஒப்பிடக்கூடாது என்று அவர்கள் கூறி வருகிறார்கள்.

    மேலும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதற்கு நியாயமான எந்த காரணமும் தற்போது இல்லை என்றும் கூறி வருகிறார்கள். ஈரோடு கிழக்கில் வெற்றி பெற்றால் 2026 சட்டசபை தேர்தலை புத்துணர்ச்சியுடன் எதிர்கொள்ள முடியும் என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

    அ.தி.மு.க. தலைவர்களின் இந்த மாறுபட்ட கருத்துக்களை எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்து வருகிறார். எனவே 11-ந்தேதி ஆலோசனைக்கு பிறகு அவர் இறுதி முடிவை வெளியிட வாய்ப்புள்ளது.

    இதற்கிடையே இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 6 பேரிடம் ஆவணங்களை பெற்று ஆய்வு செய்து வருகிறது. வருகிற 13-ந்தேதி இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் முடிவை வெளியிட இருக்கிறது.

    எனவே அந்த முடிவை பார்த்து விட்டு அ.தி.மு.க. போட்டியிடுவது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி இறுதி முடிவு எடுப்பார் என்றும் சொல்கிறார்கள்.

    • வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி 17-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
    • பிப்ரவரி 5-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி வருகின்ற 17-ந் தேதி வரை நடைபெற உள்ளது. தொடர்ந்து, விடுமுறை நாட்கள் தவிர மீதமுள்ள 13, 17-ந் தேதிகளில் என மொத்தம் 3 நாட்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் நடைபெறும்.

    இதையடுத்து 18-ந் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. 20-ந் தேதி வேட்புமனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளாகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

    தொடர்ந்து பிப்ரவரி 5-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 8-ந் தேதி சித்தோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி இன்று வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது. தி.மு.க. உள்ளிட்ட பிரதான கட்சிகள் வேட்பாளரை அறிவிக்காத நிலையில், சுயேட்சை வேட்பாளர்கள் சிலர் மட்டும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தனர்.

    முதல் நபராக தேர்தல் மன்னன் சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த பத்மராஜன் (64) என்பவர் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்தார்.

    நான் இதுவரை 246 தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதற்காக இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். இது 247-வது தேர்தலாகும்.

    நான் இதுவரை 6 ஜனாதிபதி தேர்தல், 6 துணை ஜனாதிபதி தேர்தல், 33 பாராளுமன்றத்தேர்தல், 76 எம்.எல்.ஏ.க்கள் தேர்தல், மாநகராட்சி மேயர் தேர்தல், கவுன்சிலர் தேர்தல் என போட்டிட்டு உள்ளேன்.

    வாஜ்பாய், நரசிம்மராவ், கருணாநிதி, ஜெயலலிதா, சினிமா நடிகர் சரத்குமார் என பலரை எதிர்த்து போட்டியிட்டு உள்ளேன்.

    கடைசியாக கேரளா மாநிலம் வயநாட்டில் நடந்த எம்.பி. தேர்தலில் பிரியங்கா காந்தியை எதிர்த்துப் போட்டியிட்டு 286 வாக்குகள் பெற்றேன். தமிழகத்தில் கடைசியாக விக்கிரவாண்டியில் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு 16 வாக்குகள் பெற்றேன்.

    கடந்த முறை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு 8 வாக்குகள் பெற்றேன். தேர்தலில் அதிக முறை போட்டிட்டதற்காக கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளேன்.

    இன்னும் இந்தியாவில் எத்தனை தேர்தல் வந்தாலும் நான் உயிரோடு இருக்கும் வரை அனைத்து தேர்த லிலும் போட்டியிடுவேன்.

    தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்து அதற்காக பிரசாரம் எல்லாம் செய்ய மாட்டேன். எனது நோக்கம் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பது மட்டும்தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து இன்னும் சில சுயேச்சை வேட்பாளர்கள் இன்று மதியம் வரை தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளர்களிடமிருந்து, தேர்தல் அலுவலர்கள் வேட்பாளர் படிவம், இணைக்கப்பட்டுள்ள ஆவணங்கள் மற்றும் டெபாசிட்தொகை ஆகியவற்றை சரி பார்த்தனர்.

    அதன்பின்னர், ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான மனிஷ், வேட்பாளர்களிடமிருந்து வேட்புமனுக்களை பெற்றுக்கொண்டார்.

    இந்த நடைமுறைகள் முழுவதும் மாநகராட்சி அலுவலக வளாகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்பட்டது.

    மேலும், வேட்புமனு தாக்கலை முன்னிட்டு மாநகராட்சி அலுவலக நுழைவு வாசல் மற்றும் வளாகம் முழுவதும், ஈரோடு டவுன் டி.எஸ்.பி. முத்துக்கு மரன், இன்ஸ்பெக்டர் அனுராதா ஆகியோர் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

    • ஈரோடு கிராமடையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
    • சந்திரகுமார் தி.மு.க.வில் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி தி.மு.க. வேட்பாளரான வி.சி.சந்திரகுமார் (வயது 57) ஈரோடு கிராமடையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். வி.சி.சந்திரகுமாரின் மனைவி அமுதா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    வி.சி.சந்திரகுமார் ஜவுளி மொத்த வியாபாரம் செய்து வருகிறார். 1987-ம் ஆண்டு ஈரோடு அ.தி.மு.க வார்டு பிரதிநிதியாக இருந்தார். பின்னர் நடிகர் விஜயகாந்த் மீது கொண்ட பற்றால் விஜயகாந்த் ரசிகர் மன்ற தலைவராக செயல்பட்டார்.

    பின்னர் விஜயகாந்த் 2005-ம் ஆண்டு தே.மு.தி.க.வை தொடங்கிய போது வி.சி.சந்திரகுமார் தே.மு.தி.க.வில் இணைந்து அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக பணியாற்றினார்.


    2008-ம் ஆண்டு ஈரோடு தொகுதி மறுசீரமைக்கப்பட்டு ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு என பிரிக்கப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதியில் முதலியார் பிரிவினருக்கு கணிசமான ஓட்டு வங்கி உள்ளது.

    இதன் காரணமாக 2011-ம் ஆண்டு ஈரோடு கிழக்கு தொகுதியில் நடந்த தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் வி.சி. சந்திரகுமார் போட்டியிட்டார்.

    அப்போது அந்த தேர்தலில் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து தி.மு.க சார்பில் தற்போதைய அமைச்சர் சு.முத்துசாமி போட்டியிட்டார். அந்த தேர்தலில் வி.சி.சந்திரகுமார் 69 ஆயிரத்து 166 வாக்குகள் பெற்றார்.

    அவரை எதிர்த்து போட்டியிட்ட முத்துசாமி 58 ஆயிரத்து 522 வாக்குகள் பெற்றார். இந்த தேர்தலில் சந்திரகுமார் 10 ஆயிரத்து 644 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஈரோடு கிழக்கு தொகுதியின் முதல் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    பின்னர் 2016-ம் ஆண்டு வி.சி.சந்திரகுமார் தே.மு.தி.க தலைமையிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தி.மு.க.வில் இணைந்தார். அவருக்கு தி.மு.க.வில் மாநில கொள்கை பரப்பு அணி இணை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

    2016-ம் ஆண்டு நடந்த ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் தி.மு.க சார்பில் வி.சி.சந்திரகுமார் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அ.தி.மு.க சார்பில் கே.எஸ்.தென்னரசு போட்டியிட்டார்.

    இந்த தேர்தலில் சந்திரகுமார் 57 ஆயிரத்து 85 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தென்னரசு 64 ஆயிரத்து 879 வாக்குகள் பெற்று 7 ஆயிரத்து 794 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    பின்னர் சந்திரகுமார் தி.மு.க.வில் தீவிரமாக பணியாற்றி வருகிறார். 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் சேலம் தொகுதி பொறுப்பாளராக பணியாற்றினார். 2021 சட்டமன்ற தேர்தலில் குமாரபாளையம் தொகுதி பொறுப்பாளராகவும் 2023-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராகவும் பணியாற்றினார். அரவக்குறிச்சி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் முழு நேரமாக தேர்தல் பணியாற்றியதும் குறிப்பிடத்தக்கது.

    ×