என் மலர்
நீங்கள் தேடியது "கத்திரிக்கோல்"
- 2008 ஆம் ஆண்டு சந்தியா என்ற பெண் சிசேரியன் முறையில் குழந்தை பெற்றெடுத்தார்.
- பல ஆண்டுகளாக சந்தியாவிற்கு தீராத வயிற்றுவலி இருந்துள்ளது
உத்தரபிரதேசத்தில் பிரசவத்தின்போது மருத்துவரின் கவனக்குறைவால் பெண்ணின் வயிற்றுக்குள் கத்தரிக்கோல் வைத்து தைக்கப்பட்ட சம்பவம் 17 ஆண்டுகளுக்கு பின் எக்ஸ்ரே மூலம் தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோவில் 2008 ஆம் ஆண்டு சந்தியா என்ற பெண் ஷி மெடிக்கல் கேர் என்ற மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்தார். அதன்பின் பல ஆண்டுகளாக சந்தியாவிற்கு தீராத வயிற்றுவலி இருந்துள்ளது. இதற்காக பல மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
சமீபத்தில் லக்னோ மருத்துவக் கல்லூரியில் சந்தியா எடுத்த எக்ஸ்ரேயில் அவரது வயிற்றுக்குள் கத்தரிக்கோல் இருப்பது தெரியவந்தது. மார்ச் 26 ஆம் தேதி அவரது வயிற்றிலிருந்த கத்திரிக்கோலை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றினர்.
இதனையடுத்து தனது மனைவி சந்தியாவிற்கு பிரசவம் பார்த்த மருத்துவர் புஷ்பா ஜெய்ஸ்வால் மீது கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், 17 ஆண்டுகளாக தனது மனைவி வேதனைப்பட்டதற்கு மருத்துவர் புஷ்பா ஜெய்ஸ்வாலின் அலட்சியம் தான் காரணம் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
- மதுபோதையில் பேசிக்கொண்டிருந்தபோது நண்பர்கள் இருவருக்கும் இடையே திடீரென்று தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது.
- கன்னியாகுமரி போலீசில் புகார் செய்யப்பட்டதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சலூன் கடைக்காரரை கைது செய்தனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அருகே உள்ள ஒற்றையால்விளை அம்மன் கோவில் கிழக்கு தெருவை சேர்ந்தவர் பிரபு (வயது 34).
இவரும், தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த இசக்கிமுத்து (வயது 34). என்பவரும் நண்பர்கள். இசக்கி முத்து ஒற்றையால்விளையில் தங்கியிருந்து சின்னமுட்டம் பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இருவரும் ஒற்றையால்விளை சமுதாய நலக்கூடம் அருகே மதுபோதையில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே திடீரென்று தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த இசக்கிமுத்து தனது கையில் வைத்திருந்த கத்திரிக்கோலால் பிரபுவை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த பிரபுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து கன்னியா குமரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இசக்கி முத்துவை கைது செய்தனர்.
- தாயை கத்திரிக்கோலால் மகன் சரமாரியாக குத்தினார்.
- தலைமறைவாக உள்ள ஜெயகுமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் தாட்கோ காலனியைச் சேர்ந்தவர் அபிராமி (வயது35). இவரது கணவர் வைரமுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை குறைவால் இறந்து விட்டார். இவர்க ளது மகன் ஜெயக்குமார் (19).
இந்த நிலையில் அபிராமிக்கும், மகனின் நண்பர் ஆரோக்கியம் என்பவருக்கும் கள்ள தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மகன் பலமுறை தாயை கண்டித்தார். அதே சமயம் தனது நண்பரையும் கண்டித்தார். ஆனாலும் அவர்களது கள்ள தொடர்பு நீடித்தது.
இந்த நிலையில் நேற்றிரவு அபிராமிக்கும், ஆரோக்கியத்திற்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது வீட்டிற்கு வந்த ஜெயகுமார் நண்பரை கண்டித்தார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த ஜெயக்குமார் வீட்டில் இருந்த கத்திரிக்கோலால் தாய் அபிராமியை சரமாரி யாக குத்தினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த அபிராமி கொடுத்த புகாரின்பேரில் வடக்கு காவல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தலைமறைவாக உள்ள ஜெயகுமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- செல்போன் மூலம் கணவன் மனைவிக்கு இடையே கூட தற்போது தகராறு ஏற்பட்டு வருகின்றன.
- போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்போன் நவீன காலத்தில் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. எந்த நேரத்திலும் செல்போனோடு தான் பொழுதை கழிக்கிறார்கள்.
செல்போன் மூலம் கணவன் மனைவிக்கு இடையே கூட தற்போது தகராறு ஏற்பட்டு வருகின்றன.
சினிமா பாடல் கேட்பதற்காக செல்போன் கேட்ட கணவர் கண்ணை மனைவி குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹவுசிங் டெவலப்மென்ட் காலனியை சேர்ந்தவர் அங்கித். இவருடைய மனைவி பிரியங்கா. வீட்டில் இருந்த பிரியங்கா செல்போனில் சினிமா பாடல் கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அங்கித் மனைவியிடம் தான் பாடல் கேட்க வேண்டும் என கூறி செல்போனை கேட்டார்.
அப்போது பிரியங்கா நான் இன்னும் சில பாடல்களை கேட்க வேண்டும். அதனால் செல்போனை தர முடியாது என தெரிவித்தார். இதனால் கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது .
ஆத்திரமடைந்த பிரியங்கா வீட்டில் இருந்த கத்திரிக்கோலை எடுத்து அங்கித்தின் கண்ணில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவர் அலறி துடித்தார்.
சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அங்கித் தனது மனைவி பிரியங்கா மீது போலீசில் புகார் அளித்தார். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.