search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்ப்பவனி"

    • மாலை நேரங்களில் தமிழ், ஆங்கிலம், மலையாள மொழிகளில் சிறப்பு திருப்பலி
    • பொதுமக்கள் நேர்த்திக்கடனாகவும், வேண்டுதலை நிறைவேற்றவும் கடலை மிளகை ஆரோக்கிய அன்னை மீது தூவி வழிபாடு

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற தூய ஆரோக்கிய அன்னையின் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

    மிகவும் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த ஆலயத்தில் வருடந்தோறும் செப்டம்பர் மாதம் வேளாங்கண்ணியில் திருவிழா தொடங்கப்பட்டதுடன் அதனை அடுத்து இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை கோத்தகிரியில் உள்ள தூய ஆரோக்கிய அன்னையின் ஆலயத்தில் வருடாந்திர திருவிழா நடைபெறும்.

    கடந்த 1 -ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. இதனையடுத்து கடந்த ஒரு வாரம் முழுவதும் மாலை நேரங்களில் அன்பியம் சார்பாக தமிழ், ஆங்கிலம், மலையாளம் மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து காலை மிக விமரிசையாக பெருவிழா கொண்டாட்டம் நடைபெற்றது. காலை 6,7,8 மணி சிறப்பு திருப்பதிகம் நடைபெற்றது.

    இதனைத்தொடர்ந்து 10 மணிக்கு ஊட்டி மறை மாவட்ட முதன்மை குரு கிருஸ்டோபர் லாரன்ஸ் தலைமையில் கோத்தகிரி பங்கு தந்தை அமிர்தராஜ் முன்னிலையில் ஆடம்பர பாடல் திருப்பலி நடைபெற்றது. மாலை 5 மணிக்கு புனித மரியன்னை உயர்நிலைப்பள்ளி தாளாளர் ஜெயகுமார் தலைமையில் திருப்பலியும், அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு வண்ண விளக்கு களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஆரோக்கிய அன் னையின் ஆடம்பர தேர்பவனி தொடங்கியது. அன்னையின் ஆடம்பர தேர்பவனி நகரின் முக்கிய பிரதான வீதிகளான பஸ் நிலையம், கடைவீதி, காம்பாய் கடை,காம ராஜர் சதுக்கம்,ராம்சந்த் உள்ளிட்ட வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.

    தேர்பவனியின் போது பொதுமக்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறியதற்கும், வேண்டுதல்கள் நிறைவேறவும் கடலை மிளகை ஆரோக்கிய அன்னையின் மீது தூவி வழிபட்டனர். பின்னர் நற்கருணை ஆசீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த திருவிழாவிற்கு நீலகிரி மாவட்டம் மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு கருதி நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு பிரபாகர்,குன்னூர் டி.எஸ்.பி. குமார், கோத்த கிரி இன்ஸ்பெக்டர் வேல்மு ருகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் யாதவ் கிருஷ்ணன், ரமேஷ்,பப்பிலா ஜாஸ்மின் தலைமையில் காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    • இரவு 12 மணிக்கு புனித அந்தோணியார் தேரில் எழுந்தருளி ரத வீதிகளில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
    • 10-ம் திருவிழாவான இன்று காலை 6.30 மணிக்கு அருள் பிரபாகரன் தலைமையில் திருவிழா கூட்டுத் திருப்பலி நடைபெற்றது.

    வள்ளியூர்:

    வள்ளியூர் அருகே உள்ள தெற்குபுதூர் புனித அந்தோணியார் ஆலயதிருவிழா கடந்த 21-ந் தேதி பங்குதந்தை லூர்துசாமி மற்றும் தெற்கு கள்ளிகுளம் அவர் லேடி ஆப் ஸ்னோஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் எஸ்.கே. மணி ஆகியோர் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    தேர்ப்பவனி

    திருவிழா நாட்களில் தினமும் காலையில் திருயாத்திரை, திருப்பலி, மறையுறை, நற்கருணை ஆசீர் வழிபாடுகள் நடைபெற்றது. 9-ம் திருவிழாவான நேற்று மாலை பாதிரியார் போஸ் தலைமையில் பாதிரியார்கள் சந்தியாகு, செல்வின், கோட்டார் ஷிபு ஆகியோர் முன்னிலையில் பெருவிழா மாலை ஆராதனை மற்றம் நற்கருணை ஆசீர் நடைபெற்றது.

    நிகழ்ச்சியின் போது வி.பி.எஸ். மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து அசனவிருந்து வழங்கப்பட்டது. பின்னர் இரவு 12 மணிக்கு புனித அந்தோணியார் தேரில் எழுந்தருளி ரத வீதிகளில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    10-ம் திருவிழா

    10-ம் திருவிழாவான இன்று காலை 6.30 மணிக்கு அருள் பிரபாகரன் தலைமையில் திருவிழா கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. விழாவில் பல்வேறு ஊர் பங்குகளை சேர்ந்த பங்கு தந்தையர்கள், சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை தெற்குபுதூர் பங்குதந்தை லூர்துசாமி, சி.எம். அடிகளார், தெற்குபுதூர் புனித அந்தோணியார் ஆலய நிர்வாகிகள், இளைஞர்கள், பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனர்.

    • காரைக்கால் புனித செபஸ்தியார் ஆலய தேர்ப்பவனி நடந்தது.
    • தருமபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் வலம் வந்த தேர் நள்ளிரவில் மீண்டும் ஆலயத்தை சென்றடைந்தது.

    புதுச்சேரி

    காரைக்கால் திருநள்ளாறு சாலை தருமபுரம் அருகே, பழைமை வாய்ந்த புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. தருமபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில், சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய வறட்சி மற்றும் காலரா நோய் பாதிப்பு நீங்க வேண்டி, ஆண்டுதோறும் தை மாத அறுவடையின்போது தேர் பவனி நடத்துவதாக பக்தர்கள் வேண்டிக் கொண்டதாகவும், அதன்படி பாதிப்பு நீங்கியதால், புனித செபஸ்தியாரை மகிழ்விக்கும் வகையில், ஆண்டுதோறும் இந்த தேர் பவனி நடத்தப்படுகிறது.

    அறுவடை தொடங்கவுள்ள நிலையில், செபஸ்தியார் ஆலயத்தில் தேர்பவனி நடைபெற்றது. முன்னதாக, பக்தர்கள் முன்னிலையில் புனித செபஸ்தியாருக்கு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பிரதான தேரில் புனித செபஸ்தியாரும், மைக்கேல் அந்தோணியார், சம்மனசு சொரூபத்துடன் தேர் பவனி நடைபெற்றது. தருமபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் வலம் வந்த தேர் நள்ளிரவில் மீண்டும் ஆலயத்தை சென்றடைந்தது. இதில், திரளான கிறிஸ்தவர்கள் மற்றும் கிராம மக்கள் பங்கேற்று செபஸ்தியாரை வழிபட்டனர்.

    ×