search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெறி நாய்"

    • மதுரையில் துரத்திச்சென்று கடிக்கும் வெறி நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • நடவடிக்கை எடுக்காமல் மவுனம் காக்கும் அதிகாரிகள்.

    மதுரை

    மனிதர்களின் உற்ற நண்பனாக வீட்டு விலங்கான நாய் உள்ளது. வீட்டு காவலாளி யாகவும் நன்றியுள்ள பிராணி யாகவும் உள்ள தெரு நாய்கள் தொல்லையால் தற்போது குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சுதந்திரமாக வெளியே சென்று வர முடிவதில்லை.

    மதுரை மாநகராட்சியை பொறுத்த வரை முன்பு நாய்களின் எண்ணிக்கை கட்டுக்குள் இருந்தது. ஆனால் தற்போது நாய்களின் எண்ணிக்கை தெருவுக்கு தெரு குறைந்தது 5 முதல் 10 வரை சுற்றி திரிகிறது. எப்போதும் ஆக்ரோசத்துடன் காணப்படும் தெரு நாய்கள் நடந்து செல்வோரையும், மோட்டார் சைக்கிளில் செல்வோரையும் துரத்து துரத்தி கடிக்கின்றன.

    மேலும் தெருக்கள், சாலைகளில் விளையாடும் குழந்தைகள், சிறுவர்கள் நாள்தோறும் தெருநாய்களால் கடிப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. கும்பலாக சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    மதுரை மாநகராட்சியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாய்களின் இனப் பெருக்கத்தை கட்டுப்படுத்த கருத்தடை வாகனம் வாங்கப் பட்டு வார்டுகள் தோறும் நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது.

    அந்தத் திட்டம் தற்போது முழுவதும் முடங்கி உள்ளது. மாநகராட்சியும், மாவட்ட நிர்வாகம் அதனை கண்டு கொள்ளவில்லை.

    இதனால் மதுரையில் நாய்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.மீனாட்சி அம்மன் கோவில், மாசி வீதிகள், ஜெய்ஹிந்த்புரம், பெரியார் பஸ் நிலையம், சோலை அழகுபுரம், வில்லாபுரம், அவனியாபுரம், வண்டியூர், வில்லாபுரம் ஹவுசிங் போர்டு, பழங்காநத்தம், காளவாசல் என எந்த பகுதி என்று குறிப்பிட முடியாமல் அனைத்து பகுதிகளிலும் நீக்க மற நாய்கள் நிறைந்துள்ளன. மனிதர்கள் நடமாட்டம் இருக்கிறதோ? இல்லையோ? நாய்களின் நடமாட்டம் 24 மணி நேரமும் காணப்படுகிறது.

    மதுரையில் தனியாக நடந்து செல்பவர்களை நாய்கள் குரைத்து அச்சுறுத்தி வருகிறது. இதனால் பீதி அடையும் சிறுவர்கள், பெரியவர்கள் நாய்களிடம் சிக்காமல் இருக்க ஓடுகின்றனர். இந்த செயலால் மேலும் ஆக்ரோஷம் அடையும் நாய் அவர்களை விரட்டி சென்று கடிக்கிறது.

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நாய் கடியால் பாதிக்கப்பட்டு தடுப்பு ஊசி செலுத்த வருபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முகம், கை, கால் களில் கீறி ரத்த காயங்களுடன் சிகிச்சை பெறுவோர்களின் நிலை பரிதாபமாக உள்ளது.

    இதிலும் நாய் கடியால் பாதிக்கப்பட்டு ரேபிஸ் நோய் தாக்கப்படுபவர்களின் நிலை மேலும் பரிதாபத்துக்குரியது. இவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் தனி செல்லில் அடைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ரேபிஸ் நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் உயிர் பிழைப் பது என்பது அரிது. நாய்களின் மூலம் பரவும் ரேபிஸ் வைரஸ் தாக்கி மனித உயிரை காவு வாங்குகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு கொடூரமான தாக இருக்கும்.எனவே நாய் கடித்தால் பாதிக்கப்பட்டவர்கள் உடனே ஆஸ்பத்திரிக்கு சென்று தடுப்பூசியை கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும்.

    மதுரை மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு சுமார் 48 ஆயிரத்து 323 பேரும், 2022-ம் ஆண்டு 46 ஆயிரத்து 962 பேரும் என மொத்தம் 95 ஆயிரத்து 285 பேரை நாய் கடித்துள்ளது. இதேபோல் கடந்த 2021-ம் ஆண்டு நாய் கடித்ததில் சிகிச்சை பலனின்றி ஒருவரும், 2022-ம் ஆண்டு 2 பேரும் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு இதன் பாதிப்பு மேலும் அதிகரித்து உள்ளது.

    இவ்வளவு பாதிப்புகளை கொண்ட வெறி நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சிகள் மாவட்ட நிர்வாகமும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வருத்தத்துக் குரியது.இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால் விலங்குகள் நல அமைப்பு, விதிமுறைகள் என சாக்குப் போக்குகளை கூறி தட்டிக் கழிக்கின்றனர்.

    எனவே இனியும் தாம திக்காமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அச்சு றுத்தும் தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு முன்வர வேண்டும் என்பதே பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    • அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி போட்டு பாதுகாக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.
    • வெறி நாயை உடனடியாக பிடிக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொட்டாரம் சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

    கன்னியாகுமரி:

    கொட்டாரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் கொட்டாரம், அகஸ்தீஸ்வரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள பொது மக்கள் 26 பேரை வெறி நாய் ஒன்று துரத்தி துரத்தி கடித்து உள்ளது. வெறிநாய் கடியினால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி போட்டு பாதுகாக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.

    கொட்டாரம் சுற்று வட்டார பகுதியில் சுற்றி திரியும் அந்தவெறி நாய் சிவப்புநிறம் உடைய தாகவும் வாயில் கருப்பு நிறம் உள்ளதாகவும் கழுத்து பகுதியில் நீல நிறம் உள்ள கயிறு அணியப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.எனவே கொட்டாரம் சுற்று வட்டார பகுதியில் சுற்றி திரிந்து கொண்டிருக்கும் அந்த வெறி நாயை உடனடியாக பிடிக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொட்டாரம் சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

    • மாநகராட்சி ஊழியர்கள் தெருநாய்களை பிடித்து கருத்தடை ஆபரேஷன்
    • விரட்டி விரட்டி பிடித்து சென்றனர்

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன. அவைகள் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளையும், நடந்து செல்லும் பாதசாரிகளையும் இடையூறு ஏற்படுத்துகின்றன. மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளை அச்சுறுத்தி வருகிறது.

    இந்த நிலையில் நேற்று மாலை சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவிலுக்கு ஏராளமா னவர்கள் வந்திருந்தனர். மேலும் அங்கு பஸ் நிறுத்ததிலும் பொதுமக்கள் பலர் நின்றிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த வெள்ளை நிற தெருநாய் ஒன்று திடீரென அங்கிருந்த பொதுமக்களை கடிக்க தொடங்கியது. ஒருவரை அடுத்து ஒருவரை விடாமல் துரத்திச் சென்று அந்த நாய் கடித்தது. இதைப்பார்த்ததும் பயத்தில் அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். சிலர் நாயை அங்கிருந்து விரட்ட முயன்றனர். எனினும் நாய் அவர்களை விடாமல் கடித்தது. நடந்து சென்றவர்கள் மட்டுமில்லாமல் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களையும் பதம் பார்த்தது. பொதுமக்கள் திரண்டு விரட்டியதும் அந்த நாய் அங்கிருந்து சர்வீஸ் சாலை வழியாக ஓடியது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கு சுமார் 30 பேரை கடித்தது.

    பொதுமக்களை நாய் கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து சத்துவாச்சாரி பகுதியில் இன்று மாநகராட்சி சார்பில் நாய்களை பிடிக்கும் பணி நடந்தது.

    சத்துவாச்சாரி கெங்கை அம்மன் கோவில் வளாகம் பெரிய தெரு பள்ளிக்கூட தெரு கானார் தெரு பகுதிகளில் சுற்றித்திரிந்த தெரு நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் வலைகள் மற்றும் சுருக்கு கம்பிகளைக் கொண்டு பிடித்தனர்.

    அப்போது தெரு நாய்கள் அவர்களை கண்டு ஓட்டம் பிடித்தன. நாய்களை விரட்டி விரட்டி பிடித்தனர்.கலெக்டர்அலுவலக வளாகம் மற்றும் அதன் அருகில் நின்றநாய்களை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து சென்றனர். இன்று காலை வரை சுமார் 20 தெருநாய்கள் பிடிக்கப்பட்டன.

    பிடிபடும் தெரு நாய்கள் வேலூர் கோட்டை அருகே உள்ள கால்நடை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு வைத்து தெரு நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் மற்றும் வெறிநாய் கடி தடுப்பூசி செலுத்த நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ள தாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×