search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உணவு டெலிவரி"

    • இவரை "ஆர்டர் கிங்" என்று அன்பாக அழைப்பார்கள்.
    • யுவானின் மறைவு குறித்து அறிந்த பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    சீனாவில் தொடர்ந்து 18 மணிநேரம் உணவு டெலிவரி வேலை பார்த்துவிட்டு களைப்பில் பைக்கிலேயே தூங்கியபோது 55 வயதுடைய நபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பைக்கிலேயே அவர் சடலமாக கிடந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதால் இந்த துயர சம்பவம் தெரியவந்துள்ளது.

    இந்த மாத தொடக்கத்தில் கிழக்கு சீனாவில் உள்ள ஹாங்ஷோவில் நடைபெற்றுள்ளது. உயிரிழந்தவரின் பெயர் யுவான். யுவான் இடைவிடாமல் செய்த வேலைக்காரணமாக ஒரு நற்பெயரை பெற்றுள்ளார். இவரை "ஆர்டர் கிங்" என்று அன்பாக அழைப்பார்கள்.

    யுவானின் மறைவு குறித்து அறிந்த பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒருவர், 'ஆர்டர் கிங்' விழுந்துவிட்டார். உண்மையில் இந்த அவலங்களைத் தவிர்க்க வழி இல்லையா?" என்றும் மற்றொருவர், "அவர் தனது 50 களில், தனது குடும்பத்தின் ஒரே ஆதாரமாக இருந்தார், இரவும் பகலும் உழைத்து, அவர் நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும். அவரது அடுத்த வாழ்க்கையில், அவர் இதுபோன்ற காலத்தை எதிர்த்து ஓட வேண்டியதில்லை" என்றும் கருத்து தெரிவித்து இருந்தனர்.

    இந்த சம்பவம் நாடு முழுவதும் டெலிவரி செய்பவர்களின் நலன் மற்றும் சட்ட உரிமைகள் பற்றிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    • உணவு டெலிவரி நிறுவனமாக நிகழ்ந்துவரும் சொமேட்டோ நிறுவனம் சினிமா டிக்கெட் முன்பதிவுத் தொழிலில் கால்பதிக்க உள்ளது.
    • சினிமா, விளையாட்டு மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான ஆன்லைன் டிக்கெட்டிங் பிஸ்னஸ் கைமாறுகிறது

    இந்தியாவில் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமாக நிகழ்ந்துவரும் சொமேட்டோ நிறுவனம் சினிமா டிக்கெட் முன்பதிவுத் தொழிலில் கால்பதிக்க உள்ளது.சொமேட்டோவின் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன் Ltd நிறுவனம் பிரபல ஆன் லைன் பணப்பரிவார்த்தை செயலியான பே.டி.எம். இல் உள்ள சினிமா மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் டிக்கெட் முன்பதிவு பிசினஸ் கட்டமைப்பை ரூ.2,048 கோடி ரூபாய்க்கு வாங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    இந்த பரிவர்த்தனையால் வாடிக்கையாளர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இடைப்பட்ட காலத்தில் 12 மாதங்களுக்கு மட்டும் பே.டி.எம். செயலியிலேயே டிக்கெட் முன்பதிவு நடைபெறும் என்று ஒன் 97 கம்யூனிகேஷன் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஒன் 97 நிறுவனம் மற்றும் பே.டி.எம். நிறுவனத்திற்கு இடையில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

    அதன்படி சினிமா, விளையாட்டு மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான ஆன்லைன் டிக்கெட்டிங் பிசினஸ் கைமாறுகிறது. டிஜிட்டல் யுகத்தில் அதிக லாபம் கொழிக்கும் தொழிலாக ஆன்லன் டிக்டிங் தொழில் உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தத்க்கது.

    • தினமும் மதியம் 12.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை கடும் வெயிலில் வேலை செய்து வரும் தொழிலாளர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும்.
    • டெலிவரி செய்யும் ஊழியர்கள் வெயில் காரணமாக பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த ஓய்வறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    அமீரகத்தில் தற்போது கோடைக்காலம் காரணமாக சுட்டெரிக்கும் வெயில் நிலவுகிறது. இதனை கவனத்தில் கொண்டு மோட்டார் சைக்கிளில் டெலிவரி செய்யும் ஊழியர்களின் உடல்நலன் கருதி அவர்கள் ஓய்வெடுப்பதற்கு வசதியாக அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் 6 ஆயிரம் ஓய்வறைகள் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக துபாயில் இந்த ஓய்வெடுக்கும் அறைகள் அரேபியன் ரேஞ்சஸ், இன்டர்நேசனல் சிட்டி, பிசினஸ் பே, அல் கூஸ், அல் கராமா, அல் சத்வா, அல் ஜதாப் மற்றும் மிர்திப் போன்ற பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறைகள் 24 மணி நேரமும் சுய சேவை முறையில் செயல்படுகிறது.

    இந்த அறைகள் முற்றிலும் குளிரூட்டப்பட்ட ஓய்வறையில் அமரும் இருக்கைகள், குளிர்ந்த தண்ணீர், செல்போன் சார்ஜ் ஏற்றும் வசதி, காற்றின் ஈரப்பதத்தில் இருந்து தண்ணீர் தயாரிக்கும் எந்திரம், சிற்றுண்டி வினியோகம் ஆகிய வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. இதன் வெளிப்புறத்தில் நிழலான பகுதியில் மோட்டார் சைக்கிள்களை வரிசையில் நிறுத்திக்கொள்ளலாம். இடத்தை பொறுத்து இந்த அறையில் ஒரே நேரத்தில் 10 பேர் வரை ஓய்வெடுக்கலாம்.

    கடும் கோடை நிலவும் நேரத்தில் அல்லது ஆர்டருக்காக காத்திருந்து மிகவும் சோர்வடையும்போது டெலிவரி ஊழியர்கள் இங்கு வந்து சிறிது நேரம் ஓய்வெடுத்து செல்லலாம். இதன் மூலம் களைப்பு மற்றும் சோர்வு நீக்கப்பட்டு சாலைகளில் விபத்துகள் ஏற்படாமல் தடுக்கவும் பயனுள்ளதாக உள்ளது.

    இந்த வசதி துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம், அபுதாபி ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் உள்ளிட்ட அரசுத்துறை நிறுவனங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் டெலிவரியில் ஈடுபட்டு வரும் பல்வேறு தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் செய்யப்பட்டுள்ளது. அமீரகத்தில் கட்டாய மதிய இடைவேளை வருகிற 15-ந்தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் 15-ந்தேதி வரை நடைமுறைக்கு வருகிறது.

    தினமும் மதியம் 12.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை கடும் வெயிலில் வேலை செய்து வரும் தொழிலாளர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும். இந்த நேரங்களில் டெலிவரி செய்யும் ஊழியர்கள் வெயில் காரணமாக பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த ஓய்வறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    • வெப்ப அலையால் ஏற்படும் ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக இந்தியாவில் உயிரிழப்ப்பு எண்ணிக்கை 250 ஐ கடந்துள்ளது.
    • நாடு முழுவதும் உள்ள பெரு நகரங்கள் முதல் டவுன்கள் வரை இந்த டெலிவரி தொழிலாளர்கள் நாள் முழுவதும் சாலைகளின் குறுக்கும் நெடுக்குமாக அழைத்த வண்ணம் உள்ளனர்.

    இந்தியாவில் வழக்கத்தை மீறி இந்த வருடம் அளவுக்கு அதிகமான வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. வாடா மாநிலங்களான டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா உள்ளிட்ட இடங்களில் வரலாறு காணாத வெயில் பதிவாகியுள்ளது.

    வெப்ப அலையால் ஏற்படும் ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக இந்தியாவில் உயிரிழப்ப்பு எண்ணிக்கை 250 ஐ கடந்துள்ளது. முக்கியமாக மதியம் 12 மணி முதல் 4 மணி வரை நிலவும் அதீத வெப்ப அலையால், குழந்தைகள், பெண்கள், உடல் நலம் குன்றியோரர், இணை நோய்கள் உள்ளோர், நாள் முழுவதும் வெயிலில் வேலை செய்யக்கூடிய கட்டுமானப் பணிகள் உள்ளிட்டவற்றில் ஈடுபடும் தொழிலாளர்கள் ஆவர்.

     

    இந்த வகை தொழிலாளர்களில் கிக் ஒர்க்கர்ஸ் என்று அழைக்கப்படும் உணவு டெலிவரி, பொருட்கள் டெலிவரி செய்யும் தொழிலாளர்களும் அடங்குவர். டிஜிட்டல் மயமான உலகில் மக்கள் கடைகளுக்கு செல்வத்தைத் தவிர்த்து வீட்டிலிருந்தபடியே அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று விரும்புவதால் நாடு முழுவதும் உள்ள பெரு நகரங்கள் முதல் டவுன்கள் வரை இந்த டெலிவரி தொழிலாளர்கள் நாள் முழுவதும் சாலைகளின் குறுக்கும் நெடுக்குமாக அழைத்த வண்ணம் உள்ளனர்.

     

    இந்த நிலையில் சமாளிக்க முடியாத வகையில் அதிகரித்து வரும் வெயில் காரணமாக இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமான ஸோமாட்டோ வாடியளர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. ஸோமாட்டோ நிறுவனம் தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, இந்தியா முழுவதும் உள்ள நகரங்களில் வெப்பம் அதிகரித்து வருவதால், மிகவும் அத்தியாவசியமாக தேவைப்படாத பட்சத்தில் மதிய நேரங்களில் உணவு ஆர்டர் செய்வதை வாடிக்கையாளர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது

    தொழிலாளர்கள் மீது அக்கறை கொண்டு ஸோமாட்டோ வெளியிட்டுள்ள இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் தங்களின் ஆதாராவை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் உண்மையாகவே தொழிலாளர்கள் மீது அக்கறை இருந்தால் மதிய நேரங்களில் உணவு ஆர்டர்களை ஏற்காமாட்டோம் என்று ஸ்வ்மாடோ அறிவித்திருக்க வேண்டும் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. 

     

    • செல்போனில் பேசிக் கொண்டே வேகமாக செல்லக்கூடாது.
    • விதிமுறைகளை மீறினால் கண்டிப்பாக கடும் நடவடிக்கை பாயும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

    சென்னை:

    சென்னையில் சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த 6 மாதங்களில் வாகன விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்துள்ளது.

    இருப்பினும் சென்னை போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.

    இதன்படி முக்கிய இடங்களில் போக்குவரத்து உதவி கமிஷனர்களின் தலைமையில் உணவு விநியோகம் செய்யும் ஸ்விக்கி, சுமோட்டா, டன்சோ போன்றவை ஓட்டுனர்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

    600 உணவு விநியோக ஓட்டுனர்களுக்கு முறையற்ற வகையில் வாகனத்தை இயக்குவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    அப்போது உணவு டெலிவரி ஊழியர்கள் ஒரு வழிபாதையில் பயணம் செய்யக்கூடாது, செல்போனில் பேசிக் கொண்டே வேகமாக செல்லக்கூடாது என்பது போன்ற கட்டுப்பாடுகளை விதித்து போக்குவரத்து போலீசார் கடிவாளம் போட்டுள்ளனர்.

    இந்த விதிமுறைகளை மீறினால் கண்டிப்பாக கடும் நடவடிக்கை பாயும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

    • ஐ.பி.எல். ஒட்டுமொத்த சீசனில் மட்டும் 1 கோடியே 20 லட்சத்திற்கும் அதிகமான பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
    • ஒரு சைவ பிரியாணிக்கு சமமாக, 20 அசைவ பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    2 மாத காலமாக நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவின் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் குஜராத்தை வீழ்த்தி சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது.

    ஐ.பி.எல். தொடரில் ஒவ்வொரு போட்டிகளும் ரசிகர்களுக்கு விறுவிறுப்பாக இருந்தது. போட்டிகளை வீட்டில் இருந்தே டி.வி., செல்போன்கள், இணையதளங்கள் மூலம் கண்டுகளித்த ரசிகர்கள், தங்களை உற்சாகப்படுத்தி கொள்ள பல்வேறு உணவு பொருட்களையும் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வாங்கி உள்ளனர்.

    போட்டிகளை பிரியாணி விருந்துடனும், பல்வேறு சுவையான உணவு பொருட்களை ஆர்டர் செய்து வாங்கி சுவைத்தும், திருவிழா போல கொண்டாடியது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக ஆன்லைன் உணவு டெலிவரி செயலியான ஸ்விகி டுவிட்டரில் வெளியிட்டுள்ள தகவல் வைரலாகி வருகிறது.

    அதில், ஐ.பி.எல். ஒட்டுமொத்த சீசனில் மட்டும் 1 கோடியே 20 லட்சத்திற்கும் அதிகமான பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    அதாவது நிமிடத்திற்கு 212 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒரு சைவ பிரியாணிக்கு சமமாக, 20 அசைவ பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஸ்விகியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளில் பிரியாணி முதலிடம் பிடித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

    இந்த சீசனில் கொல்கத்தாவில் ஒருவர் ஆர்டர் செய்த உணவை 77 வினாடிகளுக்குள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் நகரங்களை பொறுத்தவரை பெங்களூருவில் தான் அதிகளவு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. பிரியாணி மட்டுமல்லாமல் சமோசா, ஷாக்கர், தாகி, ஜிலேபி உள்ளிட்ட பல்வேறு உணவு பொருட்களும் ஸ்விகியில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.

    ஸ்விகி இன்ஸ்டா மார்ர்ட் மூலம் 2,423 காண்டங்களும் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை 3,641 யூனிட் தாகி மற்றும் 720 யூனிட் ஷக்கர் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. டெல்லியை சேர்ந்த ஒரு ரசிகர் மட்டும் 701 சமோசாக்களை ஆர்டர் செய்துள்ளார்.

    இது, இந்த சீசனில் தனி நபர் ஒருவர் அதிகம் ஆர்டர் செய்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது. ஸ்விகியின் உணவு வினியோகிப்பாளர்கள் மொத்தம் 33 கோடி கிலோ மீட்டர்கள் இந்த சீசன் முழுவதும் பயணம் செய்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஸ்விகி உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு.
    • ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னை, வேலூர், ஆரணி, குடியாத்தம் மாவட்டங்களை சேர்ந்த ஸ்விகி மூலம் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர்.

    உணவு மற்றும் இதர பொருட்கள் வினியோகிக்கும் ஊழியர்கள் சங்கம் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக சென்னை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உணவு டெலிவரி சேவை பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

    ஸ்விகி சேவையில் புதிதாக அறிவிக்கப்பட்டு இருக்கும் ஸ்லாட் முறையை திரும்ப பெற்று, ஏற்கனவே வழங்கிவந்த "டர்ன் ஒவர்" தொகையை மீண்டும் வழங்க வேண்டும் என்று ஸ்விகி உணவு டெலிவரி ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 10 நாட்களுக்கு முன்பு மாணவி திடீரென்று மாயமானார்.
    • ஏழுமலை ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்தி சென்றது தெரியவந்தது.

    ஈரோடு:

    சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (21). இவர் ஈரோட்டில் உணவு சப்ளை செய்யும் நிறுவன ஊழியராக பணியாற்றி வந்தார்.

    அப்போது ஈரோட்டில் உள்ள தனியார் மருத்து வமனை லேப் டெக்னீசியன் படிப்பு படித்து வரும் 17 வயது மாணவியுடன் ஏழுமலைக்கு பழக்கம் ஏற்பட்டது.

    இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மாணவி திடீரென்று மாயமானார். இது குறித்து அவரது பெற்றோர் வீரப்பன் சத்திரம் போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் உணவு டெலிவரி நிறுவன ஊழியர் ஏழுமலை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்தி சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து ஏழுமலை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வந்த நிலையில் 2 பேரும் மீட்கப்பட்டனர். இதனையடுத்து ஏழுமலை கைது செய்யப்பட்டு கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப் பட்டார்.

    • ஓ.டி.பி. எண்ணை சொன்ன அடுத்த நொடியே வங்கி கணக்கில் இருந்து பணம் பறி போயுள்ளது.
    • தேவையில்லாமல் வரும் அழைப்புகளை உதாசீனப்படுத்தி விடுவதுதான் நல்லது என்றும் சைபர்கிரைம் போலீசார் தெரிவித்திருக்கிறார்கள்.

    சென்னை:

    செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை கேட்டுப் பெற்று பணத்தை பறிக்கும் வட மாநிலத்தவர்கள் ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அந்த வகையில் பிரபலமான உணவு டெலிவரி நிறுவனங்களின் பெயரைச் சொல்லி பொதுமக்களின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசும் வடமாநில வாலிபர்கள் உங்கள் செல்போன் எண்ணில் இருந்து உணவு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது என்று கூறி வலை விரிக்கிறார்கள்.

    எதிர்முனையில் பேசும் பொதுமக்கள், நாங்கள் உணவு ஆர்டர் செய்யவில்லையே என்று கூறியதும்... என்ன சார் இப்படி சொல்றீங்க... உங்கள் செல்போனில் இருந்துதானே ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. நீங்கள் இப்படி சொன்னால் எப்படி? என்று எதிர்கேள்வி கேட்கும் வடமாநில வாலிபர் சரி... உணவை நான் கேன்சல் செய்து கொள்கிறேன். உங்கள் நம்பருக்கு ஓ.டி.பி. வரும் அதை சொல்லுங்கள் என்பார்.

    அதேபோன்று சம்பந்தப்பட்ட நபரின் சொல்போனுக்கு ஓ.டி.பி. எண் வந்ததும் எதிர்முனையில் பேசிக் கொண்டு இருக்கும் வட மாநில வாலிபர் அதனை கூறுமாறு சொல்வார்.

    ஓ.டி.பி. எண்ணை சொன்ன அடுத்த நொடியே வங்கி கணக்கில் இருந்து பணம் பறி போயுள்ளது.

    இப்படி ரூ.20 ஆயிரம் ரூபாயை ஒருவர் பறி கொடுத்துவிட்டு போலீசில் புகார் அளித்துள்ளனர்.

    இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் பொது மக்களை உஷார்படுத்தி உள்ளனர். உங்கள் செல்போனுக்கு இதுபோன்று யாராவது தொடர்பு கொண்டு பேசினால் அதனை கண்டு கொள்ளாமல் தொடர்பை துண்டித்து விடுங்கள்.

    அதுதான் நல்லது. இல்லையென்றால் நீங்கள் பணத்தை இழப்பது உறுதி என்று போலீசார் தெரிவித்தனர். எப்போதுமே தேவையில்லாமல் வரும் அழைப்புகளை உதாசீனப்படுத்தி விடுவதுதான் நல்லது என்றும் சைபர்கிரைம் போலீசார் தெரிவித்திருக்கிறார்கள்.

    ×