என் மலர்
நீங்கள் தேடியது "இரட்டை கொலை வழக்கு"
- மாவட்ட சத்துணவு மண்டல அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் ராகவேந்திரன் கலந்து கொண்டார்.
- கிராம பொதுமக்கள் 80-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
காங்கயம் :
காங்கயம் ஊராட்சி ஒன்றியம் தம்மரெட்டிபாளையம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணி தலைமை தாங்கினார். மாவட்ட சத்துணவு மண்டல அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் ராகவேந்திரன் கலந்து கொண்டார்.
இதில் ஊராட்சிக்குட்பட்ட ரங்கம்பாளையத்தில் கடந்த 14.12. 2021 அன்று நடைபெற்ற இரட்டை கொலை வழக்கு விசாரணையை மத்திய புலனாய்வு குழுவிற்கு மாற்றி உத்தரவிட கோரி பொதுமக்கள் மற்றும் குடும்பத்தினர் அளித்த கோரிக்கை மனுவை அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளப்பட்டது. கோரிக்கையை தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கும், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவருககும் அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் கிராம பொதுமக்கள் 80-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
- சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரித்து இரட்டை கொலை வழக்குப் பதிவு செய்தது.
- சிறையில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் தனக்கு ஜாமீன் கேட்டு மீண்டும் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
மதுரை:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ் அவ ரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020 ஆம் ஆண்டு விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர்.
போலீஸ் நிலையத்தில் இருவரும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் கள் இருவரும் பரிதாபமாக அடுத்தடுத்து இறந்தனர்.
இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரித்து இரட்டை கொலை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தின் அப்போதைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசார் கைதானார்கள். இவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த இரட்டை கொலை வழக்கு மதுரை மாவட்ட கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே கைதான போலீசார் தங்களுக்கு ஜாமீன் கேட்டு மாவட்ட கோர்ட்டு, ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டுகளில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில் சிறையில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் தனக்கு ஜாமீன் கேட்டு மீண்டும் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி முரளி சங்கர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப் போது சி.பி.ஐ. வக்கீல் மற்றும் இறந்த ஜெயராஜின் மனைவி செல்வராணி தரப்பு வக்கீல் ஆகியோர் ஆஜராகி, இந்த வழக்கை விசாரிக்கும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சமீபத்தில் தான் நீதிபதி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். எனவே இன்னும் 3 மாதத்தில் இந்த வழக்கு விசாரணை முடிந்து விடும்.
சி.சி.டி.வி. காட்சிகளுக்காக ஒரு சாட்சியை சேர்த்து உள்ளார். எனவே இந்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதாடினர். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, தீர்ப்புக்காக இந்த வழக்கை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
- 15 பேர் கொண்ட கும்பல் இருவரையும் வெட்டி படுகொலை செய்தது.
- கொலை வழக்கில் ஈடுபட்டவர்களை மேலும் சிலரை ஓசூர் டவுன் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பிஸ்மில்லா நகரை சேர்ந்தவர் பர்கத் (வயது31).
அதேபோல ஓசூர் பழைய வசந்த நகர் பகுதியை சேர்ந்தவர் பொன்வண்ணன் என்ற சிவா (வயது.27). இவர்கள் தமிழக வாழ்வுரிமை கட்சியில் முன்னாள் நிர்வாகிகளாக இருந்தனர்.
இந்நிலையில் கடந்த 19-ந் தேதி நள்ளிரவில் அதே பகுதியைச் சேர்ந்த பக்கா பிரகாஷ் என்பவரை சேலம் மத்திய சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே எடுத்து வந்து ஓசூருக்கு அழைத்து வந்தனர். அப்போது அவர்கள் 3பேரும் பார்வதி நகர் என்ற இடத்தில் வந்தபோது பர்கத் மற்றும் சிவா ஆகிய 2 பேரை 15 பேர் கொண்ட கும்பல் இருவரையும் வெட்டி படுகொலை செய்தது. இதில் இவர்களது நண்பர் பக்கா பிரகாஷ் என்பவர் தப்பித்து ஓடியதில் உயிர் தப்பினார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த ஓசூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில் போலீசார் கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இந்த சம்பவத்தின்போது தப்பித்த பக்கா பிரகாஷ் என்பவர் ஓசூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரில்
முன்விரோதம் காரணமாக ஓசூர் பார்வதி நகரை சேர்ந்த நாகராஜ், ராம்நகரை சேர்ந்த நவாஸ், சாந்தி நகரை சேர்ந்த ராதாகிருஷ்ணன், கனிஞ்சூர் கிராமத்தை சேர்ந்த முனிராஜ், ஓசூர் பார்வதி நகரை சேர்ந்த முனியப்பா மற்றும் கூச்சன் உள்ளிட்ட 15 பேர் தங்களை கொலை செய்ய வந்ததும் இதில் தான் தப்பியதாகவும், இவர்கள் தான் தன்னுடைய நண்பர்கள் பர்கத் மற்றும் பொன்வண்ணன் ஆகியோரை கொலை செய்ததாகவும் புகாரில் தெரிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில் 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் கன்ஞ்சூர் கிராமத்தை சேர்ந்த முனிராஜ் (49) என்பவரை கைது செய்தனர். அதனை தொடர்ந்து அவரை நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 10-க்கும் மேற்பட்ட கொலையாளிகளை போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று மதியம் ஓசூர் ராம் நகர் பகுதியைச் சேர்ந்த நவாஸ் (37), சீதாராம்மேடு பகுதியைச் சார்ந்த ஹமித் (24) ஆகிய 2 பேரும் பாலக்கோடு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
2 பேருக்கும் 15 நாள் சிறை அடைப்பு காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து போலீசார் அவர்களை தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர். பாலக்கோட்டில் சரண அடைந்த 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க ஓசூர் டவுன் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில இரட்டைக் கொலையில் தொடர்புடைய ஓசூர் பெரியார் நகரை சேர்ந்த முபாரக்(27), சானசந்திரம் ஆரிப் (22) மற்றும் ஓசூர் சீதாராம் மேடு பகுதியை சேர்ந்த நிஜாம் (26) ஆகிய 3 பேரை ஓசூர் டவுன் போலீசார் கைது செய்தனர். கைதான 3 பேரையும் நேற்று இரவு ஓசூருக்கு போலீசார் அழைத்து வந்தனர். அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் இதுவரை ஓசூரில் கைதான முனிராஜ், முபாரக், ஆரிப் நிஜாம் மற்றும் கோர்ட்டில் சரணடைந்த நவாஸ், ஹமித் ஆகிய 5 பேரும் சிக்கி உள்ளனர். இந்த கொலை வழக்கில் ஈடுபட்டவர்களை மேலும் சிலரை ஓசூர் டவுன் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- குற்றவாளிகள் யார் என்பதை கண்டறிய அந்த பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினார்கள்.
- தனிப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
ஆவடி அருகே உள்ள பட்டாபிராம் ஆயில் சேரி பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ரெட்டைமலை சீனிவாசன் (வயது 27). அவரது தம்பி ஸ்டாலின் (24). ரெட்டைமலை சீனிவாசன் மீது பூந்தமல்லி, ஆவடி. பட்டாபிராம் ஆகிய போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளும், ஸ்டாலின் மீது பல அடிதடி வழக்குகளும் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மாலையில் இருவரும் மது போதையில் இருந்துள்ளனர். அப்போது அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்களிடம் தகராறில் ஈடுபட்டு உள்ளனர்.
இதனால் ரெட்டைமலை சீனிவாசன், ஸ்டாலின் ஆகியோருக்கும், அப்பகுதியை சேர்ந்த வாலிபர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. பின்னர் அந்த வாலிபர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.
சிறிது நேரத்தில் அந்த வாலிபர்கள் தங்கள் நண்பர்களை அழைத்துக் கொண்டு அங்கு வந்தனர். 7 பேர் கொண்ட அந்த கும்பல், அண்ணன் - தம்பி இருவரையும் பழிவாங்கும் நோக்கத்தில் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் ஓட ஓட விரட்டி வெட்டினார்கள்.
முதலில் ரெட்டைமலை சீனிவாசனை வெட்டிய கும்பல், தொடர்ந்து ஸ்டாலினையும் கண்ணிமைக்கும் நேரத்தில் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே அண்ணன் - தம்பி இருவரும் உயிரிழந்தனர்.
இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து பிடிக்க ஆவடி துணை போலீஸ் கமிஷனர் ஐமன் ஜமால் தலைமையில், பட்டாபிராம் உதவி போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் மேற்பார்வையில் தனிப்படை அமைத்து ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து தனிப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். குற்றவாளிகள் யார் என்பதை கண்டறிய அந்த பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினார்கள். குடிபோதையில் தகராறு செய்ததால் தான் அண்ணன் - தம்பி இருவரையும் தீர்த்து கட்டினார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமாக கொலை நடந்ததா என்று தீவிரமாக துப்பு துலக்கி வருகிறார்கள்.
மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் கொலையாளிகள் உருவம் பதிந்துள்ளதா என்பதையும் ஆய்வு செய்து வருகிறார்கள். தப்பி சென்ற குற்றவாளிகள் 7 பேரையும் பிடிக்க போலீசார் பல இடங்களுக்கும் சென்று தேடுதல் வேட்டையில் ஈடு பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பட்டாபிராம் சட்டம் ஓழுங்கு ஆய்வாளர் ஜெகநாதன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
பட்டாபிராம் சட்டம்- ஒழுங்கு ஆய்வாளர் ஜெகநாதன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பட்டாபிராம் காவல் ஆய்வாளராக, திருவேற்காடு காவல் ஆய்வாளர் கிருஷ்ணா விஜய ராஜ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.